• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இயற்கையை மீறி சில செயற்கை தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முகபூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ். அழகாக இருக்க வேண்டுமென நீங்கள்விரும்பினால், செயற்கை அழகினை நீங்கள் பின்பற்றாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக் கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனை த்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப் படும்.

தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.

அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்தி ற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.

குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.


உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம்மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.

பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top