• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 3 - ர/ற வேறுபாடு - 1 - சொற்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் எழுத்தாளீர்...

ரகர றகர வேறுபாடு அறிதல் நமக்கு எப்போதுமே சிக்கலான ஒன்றுதான்...

அடுத்தடுத்த ‘உதிரி’ பதிவுகளில் ரகர/றகர, நகர/ணகர/னகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவோம்...

இப்போதைக்கு நான் ஒரு ரகர/றகர வேறுபாடுள்ள சொற்களின் பட்டியலைத் தயாரித்துள்ளேன், அதனைத் தருகிறேன்.

அடுத்தப் பதிவில் ரகர/றகர வேறுபாட்டை மொழியியல் / இலக்கண அடிப்படையில் பேசுவோம்!

[கோரா (Quora) என்ற வினா-விடைத் தளத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி ஒரு விரிவான விடை எழுதியுள்ளேன், அதன் இணைப்பைக் கருத்தில் தருகிறேன், ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பார்க்கவும். அதே கருத்துகளையும் மேலும் சில புதிய தகவல்களையும் திரட்டி அடுத்த இடுகையாக இங்குத் தமிழிலேயே இடுகிறேன்... நன்றி!]

ரகர-றகர வேறுபாடு

அரம் (இரம்பம்) - அறம் (தருமம்)
அரன் (சிவன்) - அறன் (தருமம், ‘அறம்’ என்பதன் எழுத்துப்போலி)
அரா (பாம்பு, அரவு) - அறா (இடையறா, வெட்டுப்படாத)
அரி (வெட்டு, திருமால், [பல பொருள்]) - அறி (உணர், தெரிந்துகொள்)
அரு (அருமை, அரிதானது) - அறு (வெட்டு, 6 என்ற எண்ணிக்கை)
அரை (பாதி) - அறை (இடம், வீட்டின் பகுதி, கன்னத்தில் அடித்தல், உறுதியாகச் சொல்லுதல் / தெரிவித்தல்)

ஆரம் (வட்டத்தின் அளவு, விட்டத்தில் பாதி) - [’ஆறம்’ என்று சொல் இல்லை!]
ஆரா(வமுதன்) (தெவிட்டாத) - ஆறா(த) (ஆறாத புண்!)
[’ஆரு’ என்று சொல் இல்லை!] - ஆறு (வழி, நதி, 6 என்ற எண்)

இரவு (பிச்சை, பகல் அல்லாத பொழுது) - இறவு (எல்லை)
இரப்பு (யாசித்தல்) - இறப்பு (உயிர்நீங்கல், எல்லை மீறுதல்)
இரு (அமர்தல், வாழ்தல், இருத்தல்) - இறு (நெருக்குதல், இற்றுப்போதல்)
இருக்க (அமர, தங்க, வாழ) - இறுக்க (நெருக்க, உடைக்க)
இரை (உணவு) - இறை (கடவுள், இதயம்)

ஈரல் (உடலுருப்பு) - ஈறல் (துன்பம், நெருக்கம்)
ஈரு (பல்லீரு, தலையில் இருக்கும் ஈரு) - ஈறு (இறுதி, கடைசி)
ஈர் (இரண்டாகப் பிள) - (’ஈற்’ என்று வராது!)

[’உர’ என்ற சொல் இல்லை!] - உற (அடைய, சேர, பெற)
உரம் (வலிமை)
உரல் (கல்லுரல்)
உரவு (வலிமை, மனத்திட்பம், அறிவு) - உறவு (சொந்தம், உறவினர்)
உரி (உரிச்சொல், ஒன்று உடைமையாகுதல், தோலை உரித்தல்) - உறி (உத்திரத்தில் பானையை மாட்டி வைத்தல், உறிஞ்சுதல்)
உரு (உருவம்) - உறு (அடை, மிகுதி)
உரை (பாட்டின் உரை, பேசு) - உறை (தங்கு, மூடும் போர்வை, உறைந்துபோதல், பாலுக்கு உறைவிடுதல்...)

ஊரல் (ஊர்தல்) - ஊறல் (நீர் ஊறுதல், ஊறுகாய் ஊறுதல் போன்றன)
ஊரு (ஊர் - மேல்செல்) - ஊறு (துன்பம், தடை, ஒன்றில் மூழ்குதல்)

எரி (நெருப்பு) - எறி (தூக்கியெறி)
எரு (உரம்) - [’எறு’ சொல் இல்லை!]

ஏரி (நீர்நிலை) - ஏறி (மேலேறி)
ஏர் (அழகு, உழும் கருவி, பலபொருள் சொல்) - [’ஏற்’ என்று சொல் அமையாது!]
[’ஏரு’ சொல் இல்லை!] - ஏறு (சிங்கம், காளை போன்ற விலங்குகளின் ஆண், மேலே ஏறு)

ஒரு (ஒன்று) - ஒறு (தண்டித்தல்)
ஓர் (1 என்ற எண்ணிக்கை, சிந்தித்து அறிதல் - ஓர்தல்) - [’ஓற்’ என்று சொல் அமையாது!]

இதில் நிறைய சொற்கள் விட்டுப்போயிருக்கும், உங்களுக்கு ஏதேனும் நினைவிற்கு வந்தால் கருத்தில் சுட்டுக, உங்கள் பெயருடன் அதை இப்பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்...

-----
கொசுறு - 1:

நாம் அடிக்கடி நமது தொடரமைப்பில் கையாளும் ஒன்று ‘முதல்-வரை’ அமைப்பு.

‘காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை...’
‘திருச்சிமுதல் சென்னைவரை...’
’ஏழைமுதல் பணக்காரன்வரை...’

சரியா?

இந்த அமைப்பில் வரும் ‘முதல்’ ‘வரை’ ஆகியன தனிச் சொற்கள் அல்ல, அவை இலக்கணப் பொருளைக் குறிக்க வரும் உருபுகள், எனவே அவற்றைத் தனியாக எழுதக் கூடாது!

நான் மேலே எழுதியுள்ளபடி முன்னுள்ள சொல்லோடு சேர்த்து எழுதுதல்தான் முறை!

இப்பிழையை ஆசிரியர்முதல் மாணவர்வரை, தேர்ந்த எழுத்தாளர்முதல் புதியவர்வரை அனைவரும் பெரும்பான்மையாய்ச் செய்கின்றனர்... இனி நீங்கள் செய்யாதீர்!

கொசுறு - 2:

மேலே சுட்டிய ‘முதல்’ ‘வரை’ போலவே ‘தான்’ என்ற ஒரு உருபும் உள்ளது. இது சொல்லில் ஒரு இடத்தில் அழுத்தம் (emphasis) கொடுக்க பயன்படுகிறது.

’ராசுதான் வீட்டில் இருந்தான்’ / ‘ராசு வீட்டில்தான் இருந்தான்’

ஆனால், ‘தான்’ என்று தனியாக எழுதினால் அது படர்க்கைச் சுட்டு (இது ஒரு தனி சொல்!)

‘ராசு தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான்’
‘முகிலன் தான்தான் திருடியதாக ஒத்துக்கொண்டான்’ (இதில் இருவகை ‘தான்’உம் வந்துள்ளன!)

(இந்தப் படர்க்கைத் ‘தான்’இன் பன்மை வடிவம் ‘தாம்’ என்பது.

‘மரங்கள் தாம் கரியமில வாயுவை உட்கொண்டு நமக்கு உயிர்வாயுவைத் தருகின்றன!’)

எனவே நீங்கள் எந்தத் ‘தான்’னைக் கையாள்கின்றீர் என்று உணர்ந்து அதற்கு ஏற்ப சேர்த்தோ தனித்தோ எழுதுங்கள்...
---

நன்றியோ நன்றி...

--வி:cool::cool:
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரகர/றகர வேறுபாட்டைப் பேசும் எனது ஆங்கிலக் கோரா விடைக்கான இணைப்பு: https://qr.ae/TWpeI8
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இதுல இருக்குற வார்த்தைகள் பல புதிதாக தான் இருக்கு ஆசிரியரே. கொசுறு மிக நன்று. நன்றி.

லிங்க் போய் பார்த்தேன் ஆனால் படிக்க சற்று கடினமாக இருந்தது. தமிழில் படிக்க காத்திருக்கிறேன் ஆசிரியரே.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அலை, அழை, அளை
வழக்கை- வலக்கை
தொன்மை-தொண்மை
துறை- துரை
பன்மை-பண்மை
படையல்-- படையள்
இவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அலை, அழை, அளை
வழக்கை- வலக்கை
தொன்மை-தொண்மை
துறை- துரை
பன்மை-பண்மை
படையல்-- படையள்
இவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்
அக்கா.. இது உயிர் எழுத்துகள் மட்டும் கொண்ட பட்டியல்.. ?? ர / ற மட்டும்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அலை, அழை, அளை
வழக்கை- வலக்கை
தொன்மை-தொண்மை
துறை- துரை
பன்மை-பண்மை
படையல்-- படையள்
இவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்
நகர/னகர/ணகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளுக்குப் பின்னர் வருவோம்...

என்னடா பட்டியல் சட்டென முடிந்துவிட்டதே என எண்ணி இருந்தேன், இப்போதுதான் புரிகிறது, நான் உயிர்மெய்யில் தொடங்கும் சொற்களைப் பட்டியலிட மறந்துவிட்டிருக்கின்றேன் என்பது... சுட்டியமைக்கு நன்றி, நாளை அவற்றையும் இப்பட்டியலில் சேர்க்கிறேன்... :):)(y)(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அக்கா.. இது உயிர் எழுத்துகள் மட்டும் கொண்ட பட்டியல்.. ?? ர / ற மட்டும்.
நகர/னகர/ணகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளுக்குப் பின்னர் வருவோம்...

என்னடா பட்டியல் சட்டென முடிந்துவிட்டதே என எண்ணி இருந்தேன், இப்போதுதான் புரிகிறது, நான் உயிர்மெய்யில் தொடங்கும் சொற்களைப் பட்டியலிட மறந்துவிட்டிருக்கின்றேன் என்பது... சுட்டியமைக்கு நன்றி, நாளை அவற்றையும் இப்பட்டியலில் சேர்க்கிறேன்... :):)(y)(y)
நானும் கவனிக்க மறந்தேன் வார்த்தைகளின் அர்த்தங்களை படித்த அவசரத்தில் தானாய் தட்டச்சு தட்டி விட்டேன்:love::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top