• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
13
1557917224713.png


கரிகலனுக்காக காத்திருப்பது கூட மனதை கனக்க செய்யவில்லை. எல்லோரும் அவள் மீது வீசும் பரிபாதபப்பார்வை, சுயபச்சாதாபத்தை கிளறி, கோபத்தீயை மூட்டியது, கரிகலான் மேல். அவள் கோபம், வெப்பத்தில பட்ட, பனிக்கட்டியின் ஆயுள்தான் என்பதை கரிகாலன் அறிவான்.

“காதலே!! காதலே!! தனிபெருந் துணையே!! கூடவா கூடவா போதும்..போதும்..”

தாத்தாவின் மொபைல் ரிங்கியது. இந்த ஜெனரேஷன் யூத்கள் கூட இத்தனை அட்டகாசம் செய்யமாட்டார்கள். ஓல்டிக்களும், அங்கிள், ஆண்டிகளும் செய்யும் ரொமேன்ஸில் மணிமேகலைக்கு மயக்கமே வந்தது.

ஹனிமூன் என்றும் சொல்லலாம், ட்ரிப் என்றும் வைத்துக்கொள்ளலாம். கரிகாலனின் அன்னையும், தந்தையும், வயநாட்டிற்கும், தாத்தாவும், பாட்டியும் கொடைக்கானலுக்கு செல்வதாகவும் தீர்மானமாகியது.

‘பிரைவசி இல்லை’ என்று அவர்கள் சலித்துக்கொண்டது தான் வியப்பின் உச்சம்!

**************************************************************************

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் 93 லிட்டர் பால் சப்ளை ஆகிக்கொண்டிருந்தது அந்த தொழிற்சாலைக்கு. கழிவுகளை சரிவர வெளியேற்றாமல், சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க விட்டதால், நீர்நிலை மாசாகிவிட்டது.

எத்தனை எடுத்து சொல்லியும், மனுக்கள் கொடுத்தும் அதை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளவேயில்லை.

அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது கரிகாலனின் கிராமம் என்பதால், சொசைட்டி மீட்டிங்கில் ஒரு முடிவுக்கு வந்தனர் மக்கள். இனி, தங்கள் கிராமத்தில் இருந்து ஒருவரும், அந்த தொழிற்சாலைக்கு பால் சப்ளை செய்வதில்லை என கரிகாலன் முன்மொழிய, எல்லோரும் ஆட்சேபனை இல்லாமல் ஏற்றுக்கொண்டனர்.

கரிகாலனுக்கு தொல்லை கொடுக்கும் அந்த எம்.எல்ஏ தான், தன் பினாமி பெயரில் அந்த தொழிற்சாலையை நடத்திக்கொண்டிருந்தான். ஊர் மக்களும் அதை அறிந்தே வைத்திருந்தனர்.

பெரும்பாலனவர்கள் பால் சப்ளையை நிறுத்திக்கொண்டதால், ஆத்திரமான தொழிற்சாலை அதிபர்... அதாவது, எம்.எல்.ஏவின் பினாமியாகப்பட்டவர், ஒரு வழக்கு தொடுத்தார்.

அதில், கலப்பட பாலைக்கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், ஒப்பந்தப்படி பால் சப்ளை செய்யாமல் நிறுத்தியதால் இவ்வளவு நஷ்டம் ஆகிவிட்டது என்றும் சொல்லி, பால் உற்பத்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விட்டார்.

இந்த செய்தி அறிந்து ஆவேசம் கொண்ட விவசாயிகள், தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். கரிகாலனைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த மாறனே அவனை அழைக்கும்படி ஆகிவிட்டது.

“உன்னைத்தவிர விவரமா பேச ஆளில்லைடா.. எல்லோரையும் தூக்கி உள்ள வச்சிருவோம்னு பயமுறுத்துறாங்க..எனக்கு பதட்டமா இருக்கு. நீ வாடா..” என்றான் மாறன்.

அவனைத்தவிரவும் தெளிவாக பேச சிலர் அங்கே இருக்கிறார்கள். என்றாலும், ஏனோ கரிகாலன் முன்நின்றால் அதில் எல்லோருக்குமே ஒரு தைரியம், நிம்மதி, ஆசுவாசம்.

எந்த பிரச்சனைக்காக இருந்தாலும், மக்களும் அவனையே முன்நிறுத்த விரும்பினர். அவன் பூர்விகமும், பாரம்பரியமும் கொடுத்த கம்பீரம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

கானல் நீர் உற்பத்தியாகும், அந்த தார்சாலையில் மக்கள் கூட்டம் தர்ணாவில் ஈடுபட்டிருந்தது.

“கலைஞ்சு போய்டுங்க. தேவையில்லாமல் பிரச்சனை செய்தால், உங்களை நாங்களே கலைஞ்சு போக வைப்போம்.” காவலதிகாரி ஒருவர் ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

அந்த மாவட்டத்தின் கலெக்டரும் அவசரமாக அங்கே வந்துவிட்டிருந்தார்.

“கேஸ் கொடுத்திருந்தால், கோர்டில் ஆர்கியூ பண்ணி ஜெயிக்கணும். இப்படி நேஷனல்ஹைவேசில் ட்ரேபிக்கை முடக்குவது தவறு. நாங்கள் உங்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும். சீக்கிரம் கலைஞ்சு போங்க.” கலெக்டர் என்னவோ இறங்கி வந்து, மக்களிடம் தன்மையாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்.

எல்லோராலும் வஞ்சித்தே பழக்கப்பட்டவர்கள், கலெக்டரையும் நம்ப மறுத்து போராட்டத்தை நீட்டித்தனர்.

கரிகாலன் ஸ்பாட்டிற்கு வரும்வரை, ஒரு பதற்றமான சூழலே அங்கு நிலவியது. கரிகாலன் வந்தான். தன் சொற்களை நிதானமாக உள்வாங்க, ஒரு மனிதன் வந்ததில் கலெக்டருக்கும் மகிழ்ச்சி.

“கலைஞ்சு போக சொல்லுங்க கரிகாலன். ஷூட்டிங் ஆர்டரும் இருக்கு எங்களிடம். பிரச்சனை பெரிதாவதில் எனக்கு விருப்பமில்லை.” என்றார் சாதுவான அந்த மனிதர்.

இப்போது விட்டால், இந்த மனிதரையும் பிடிக்க முடியாது என்பதால், “சார்!! எத்தனை மனு கொடுத்தோம். நீங்கள் கண்டுகொண்டீர்களா?” என்று அனாயாசமாக, செக்மேட் வைத்தான்.

“இன்று நிச்சயம் பேசலாம் கரிகாலன்!! என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வேன். நீங்கள் என்னை நம்பலாம்.” என்று உறுதி கொடுத்தார்.

“ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் உங்களுக்காக!! இனியும் நீங்கள் தாமதித்தால், எங்களை கட்டுப்படுத்துவது கஷ்டம்.” கூர்மையான பார்வையுடன், மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தான் கரிகாலன்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவன் பேச வேண்டியிருந்தது. சுற்றுப்புற கிராம மக்களுக்கும், கரிகாலன் மீது நம்பிக்கையும், மதிப்பும் உண்டானது. ஒரு வழியாக கலைந்துபோக சம்மதித்தனர்.

கலெக்டரை சந்திக்கசெல்லும்போது மாலையாகிவிட்டது. அவனைக்கண்டதுமே பெரிதான புன்னகையோடு வரவேற்றார். எழுந்து வந்து கைகுலுக்கினார்.

“ப்ரோடஸ்ட் பண்றவங்களை, அரெஸ்ட் செய்து, ஈவ்னிங் வரை வச்சிருந்து ரிலீஸ் செய்வதாக தான் ப்ளேன் இருந்தது. நீங்கள் ஸ்பாட்டுக்கு வந்ததும் தான், எனக்கு ரிலாக்ஸ் ஆச்சு கரிகாலன்.” என்றார் நிம்மதியாக.

“அவங்க என்ன சார் செய்வாங்க. எல்லா நேரமும் வெறும் நம்பிக்கையை மட்டும் கொடுக்குறீங்க..” என்றான் அலுப்பாக.

“உங்க பிரச்சனையை சொல்லுங்க கரிகாலன். என்னால் என்ன செய்ய முடியுமோ, செய்கிறேன்” அவர் நேர்மையாக பேசுகிறார் என்றே தோன்றியது கரிகாலனுக்கு.

“சார்!! பேக்டரி, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையே பாக்கி இருக்கு. இதில் அவங்க தப்பிக்க, எங்க மேல் கேஸ் கொடுக்கிறாங்க.”

நிதனமாக கரிகாலன் சொல்வதை உள்வாங்கினார்.

இறுதியாக, “சார்!! எங்களோட ரெக்வெஸ்ட் ஒண்ணே ஒண்ணு தான். பேக்டரிக்கு ஒழுங்கான இன்ப்ராஸ்டரக்சர் இல்லை. கழிவு நீரை சுத்திகரிச்சு வெளியேத்துற வரைக்கும், அதுக்கு சீல் வச்சிடுங்க. மற்ற எல்லா பிரச்சனையும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.” என்றான் முடிவாக.

“உன்னைப்போல தெளிவா பேசுறவங்களை நான் இங்கே, மீட் பண்ணதில்லை மேன்.. என்னால் முடிந்த ஸ்டெப்பை நிச்சயம் எடுப்பேன். கொஞ்சம் டைம் கொடுங்க. அதுவரை எந்த பிரச்சனையும் செய்யாதீங்க.” என்றார்.

“நீங்க பேக்டரி மேல் கேஸ் பைல் பண்ணுங்க.. ஏன் அமைதியா இருக்கணும்?” என்று கூடுதல் ஆலோசனையும் கொடுத்தார்.

பேச்சுக்கு மத்தியில் மாறன், கரிகாலன் இருவருக்கும் டீயும், ஸ்னேக்கும் கொடுக்கப்பட்டது.

“ஹே!! என்ன மேன் இது??” கரிகாலன், கால்விரலில் இருந்த மெட்டியை சுட்டிக்காட்டி உற்சாகமாக கேட்டார் அவர்.

“தாலி கட்டி முடிச்சதும், நேரா இங்கே வந்துட்டான்..ஹாஹா..” என்றான் மாறன்.

“கங்க்ராட்ஸ் யங் மேன்!! உன் தோரணையை பார்த்தே சந்தேகம் வந்தது. பிரச்சனையில் கேட்க முடியவில்லை.” அவரும் இலகுவாக, சிரிப்பில் இணைந்துகொண்டார்.

“வாட்எவர், ஷி இஸ் அன்லக்கி.. முதல் நாளே, பலமா இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க மிஸ்டர்.கரிகாலன்...”

அவர்கள் கேலிசெய்து சிரிக்க, கரிகாலன் லேசாக சிவந்து, பின் கழுத்தை தேய்த்தான். சிரித்த முகமாக விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தனர் மாறனும், கரிகாலனும். அங்கே அருள்மொழி அவர்களுக்காக காத்திருந்தான்.

“மணிமேகலை கோபமா இருக்காங்களாடா?” அதிமுக்கியமான கேள்வியை கேட்டான் மாறன்.

“நீங்க என்ன எதிர்பாக்குறீங்க?? இந்த சண்டியனைப் பார்த்ததும் இழுத்துபிடிச்சி கொஞ்சுவாங்கன்னா? ஹாஹஹா..” என்றான் AV, நக்கலாக..

“எல்லாரும் உங்க மேல், காண்டில் சுத்திட்டு இருக்காங்க. பெட்டெர் வீட்டு பக்கம் வராதீங்க.” மாறனை எச்சரித்தான் AV.

AV யின் காரில் செல்வதா? கரிகாலனுக்கு ஈகோ எட்டிப்பார்க்க, மணிமேகலையின் முகம் நினைவில் எழுந்து ஈகோவை பின்னுக்கு தள்ளியது.

இந்தப்பிரச்சனையில் அவளை சுத்தமாகவே மறந்துவிட்டிருந்தான் கரிகாலன். இத்தனை மணிநேரங்கள், அவளை மறந்து விட்டிருந்தது மட்டும் அவளுக்கு தெரியுமானால்???

காற்று எழுப்பும் மெல்லோசையாக, பூக்களின் மணமாக, இதமான பாடலாக மணிமேகலையின் நினைவுகள் எப்போதுமே அவனுக்கு இதத்தை கொடுக்கிறது.

அவள் எடுத்துக்கொண்ட உரிமையை வேறு யாரும் எடுத்துக்கொண்டதில்லை. அவனும் வேறு யாருக்கும், இந்த இடத்தை கொடுத்ததில்லை.

முதல் நாள் சந்திப்பிலிருந்தே அவனுக்கு தோன்றுவது இது..

‘இருந்தாலும் அவளுக்கு, நிறைய இடம் கொடுக்கிறாய்?’

இடம் மட்டுமில்ல, இதயத்தையும் சேர்த்தே எடுத்துக்கொண்டு விட்டாள், இப்போது. வீட்டிற்கு சென்றதும் கண்கள் சல்லடையிட்டு அவளைத்தான் தேடின, ஆர்வத்துடனும், காதலுடனும்.

கரிகாலனுக்கு இணையாக வந்த AV, உதட்டை குவித்து நக்கலாக விசிலடித்த வண்ணமே, அவனைக்கடந்து போனான்.

‘என்னென்ன செய்யக் காத்திருக்கிறாளோ இந்த பெண்??’
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top