• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! -23(b)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவர்கள் செல்லும் வரையில் பொறுமையாக இருந்த ருக்மணி, “பிரபா அண்ணா இவ்வளவு அன்பானவர் என்று எனக்கு தெரியாதுடி..” என்று ‘அண்ணா’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறினாள்..

அவளின் பேச்சில் நிமிர்ந்த ஜெயா, “உன்னால வந்தது எல்லாம்.. சாப்பிடவான்னு கூட்டிட்டு வந்து என்னோட உயிரையே வாங்கிட்ட..” என்றவள் எரிந்து விழுந்தாள்..

அவளைக் கேள்வியாக பார்க்க, “என்னை தப்பா நினைக்கிறீயா ருக்கு..” என்று கண்கள் கலங்க கேட்ட ஜெயாவை புன்னகையுடன் பார்த்தாள் ருக்மணி..

“உன்னைப்பற்றி எனக்கு நல்ல தெரியும் ஜெயா.. நீ மனசைப் போட்டு குழப்பிக்காதே..” என்று புரிதலோடு கூறிய ருக்மணியைப் பார்த்து புன்னகைத்தாள் ஜெயா..

மறுநொடியே, “பிரபா அண்ணாவின் நரசிம்ம அவதாரம் தான் பார்த்திருக்கிறேன்.. ஆனால் கோபியரின் மனதை மயக்கும் கண்ணனாக இருப்பார் என்று இன்னைக்குதாண்டி தெரிந்தது..” அவள் அவனை கேலி செய்ய, “என்னடி இப்படியெல்லாம் பேசற..” என்று கேட்டாள் ஜெயா..

“நான் பிரபா அண்ணாவின் அன்பு தங்கை இல்லையா..? அதுதான் இப்படியெல்லாம் பேசறேன்..” என்றவள் சொல்ல, “நீ முடிவே பண்ணிட்டீயா.. இனி என்னோட கதை அம்பேல்..” என்றாள் எழுந்து சென்று கைகழுவிவிட்டு வந்தாள்.. இருவரும் பில்லைக் கட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினர்..

கம்பெனி செல்லும் வரையில் ருக்மணி அவளை கிண்டலடித்தவண்ணம் வர தோழியின் குறும்பு மனம் புரிந்தவள் புன்னகையுடன் நடந்து வந்தாள்..

ஜெயா ஆபீஸ் வந்தும், “ருக்கு சாயந்திரம் சீக்கிரம் வந்துவிடு லேட் பண்ணிராதே..” என்றவளுக்கு நினைவு படுத்திட, “சரிடி.. நான் சீக்கிரம் வருகிறேன்..” என்றவள் திரும்ப அவளின் முன்னே பைக்கில் வந்து நின்றான் சீனிவாசன்..

அவனைப் பார்த்தும், “ஏய் லூஸா நீ.. நான் வருவது கூட தெரியாமல் வந்து பைக்கை நிறுத்திற..” அவள் கோபத்தில் கேட்டாள்.. சீனிவாசன் மெல்ல நிமிர்ந்து அவளையும், அவளின் பின்னோடு நின்ற ஜெயாவையும் ஒரு பார்வை பார்த்தான்..

பிறகு பைக்கில் இருந்து இறங்கியவன், “ஜெயா இந்த லூஸா உன்னோட க்ளோஸ் பிரெண்ட்..” என்று கேட்க அவளோ அவனை முறைத்தாள்..

“அண்ணா அப்படியெல்லாம் பேசாதே.. இவ ரொம்ப நல்ல பொண்ணு.. எங்களோட நட்பு இப்போ தொடங்கியது இல்ல.. 17 வருஷம் முன்னரே தொடங்கிவிட்டது.. சோ இனிமேல் நீ அவளை பேசக்கூடாது..” என்று சீனிவாசனை மிரட்டினாள் ஜெயா..

இருவரும் பேசுவதைப் பார்த்தவள், “ஏய் இவன் எப்போ உனக்கு அண்ணா ஆனான்.. அன்னைக்கு கோவிலில் ஒரு ஜந்துவை பார்த்தேன்னு சொன்னேன் இல்ல அது இந்த ஜந்துதான்..” என்று சீனிவாசனை வாரினாள் ருக்மணி.. இப்பொழுது அவளை முறைப்பது அவனின் முறையானது..

“ருக்கு இவரு என்னோட அண்ணா.. பெயர் சீனிவாசன்..” அவள் அவனை ருக்மணிக்கு அறிமுகப்படுத்திட, “மேடம் பெயர் எல்லாம் தெரியும்..” என்றவன் தொடர்ந்து,

“இவள் என்ன பண்ணினால் தெரியுமா ஜெயா அன்னைக்கு மீட்டிங் ஹாலில் புக் படிச்சிட்டு இருந்தா..?” அவன் ருக்மணியை முறைத்தகொண்டே

“அந்த புக் இவள் ஏற்றி தந்ததுதான்.. அது மட்டும் இல்ல.. இவள் இல்லாமல் நான் முதல் மீட்டிங் அட்டன் செய்ததே அன்னைக்குதான்.. எங்க இருவருக்கும் சின்ன வயதில் இருந்தே இந்த பழக்கம் இருக்கு..” என்று அழுத்தமாகக் கூறினாள் ருக்மணி..

“உனக்கு இருக்குன்னு சொல்லு.. அவளை இதில் கூட்டு சேர்க்காதே.. என்னோட தங்கைக்கு சின்சியாரிட்டி அதிகம்.. வேலை நேரத்தில் மற்றதைப்பற்றி யோசிக்க மாட்டா..” என்றவன் ஜெயாவிற்கு சப்போர்ட் பண்ணினான்..

“யார் அவள் வேலை நேரத்தில் மற்றத்தை யோசிக்க மாட்டாளா.. உன்னை நல்ல ஏமாத்திட்டு இருக்கிற.. அவள் வேலை நேரத்தில் தான் கதையே டைப் பண்ணுவ.. கவிதை எழுதுவா..” அவள் ஜெயாவைப் பற்றி கூறினாள்..

“அதெல்லாம் வேலையை முடிச்சு வெச்சிட்டுதான் செய்வ.. அதனால நீ அவளைப்பற்றி பேசாதே..” என்றவன் அவளைக் கண்டிக்கத்தான்..

“நல்ல வாரனம் மாதிரி இருந்துட்டு இது பேசற பேச்சை பாரு..” என்றவள் முணுமுணுத்தவள், “ஜெயா நான் கிளம்பறேன்..” என்றவள் கோபத்தில் சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்..

அவள் செல்வதைக் கவனித்தவன், “இந்த வானரம் என்னை வானரம்ன்னு சொல்லிட்டு போகுது.. எல்லாம் என்னோட விதி..” என்றவன் தலையில் அடித்துக்கொண்டு ஆபிஸிற்குள் சென்று மறைந்தான்..

இருவரும் சண்டை போடுவதை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தவள், “இது என்ன எனக்கே தெரியாதா புது டுவிஸ்ட்..” என்றவள் வேலையைக் கவனிக்க சென்றாள்..

அவனுடன் சண்டை போட்டுவிட்டு ஆபீஸ் உள்ளே நுழைந்த ருக்மணியை இண்டர்காமில் அழைத்த பிரபா, “ருக்மணி என்னோட அறைக்கு வாங்க..” என்றான்..

அவன் அழைத்ததும் மற்றது எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட அவனின் கோபம் அறிந்தவள், ‘ஐயோ இன்னைக்கு நல்ல மாட்டினேன்..’ என்று பயத்தில் முகம் எல்லாம் வேர்க்க அவனின் அறைக்குள் நுழைந்தாள் ருக்மணி.. அங்கே மதனும், பிரபாவும் பேசிகொண்டிருந்தனர்..

ருக்மணியை நிமிர்ந்து பார்த்த பிரபா, “டைம் பார்த்து ஆபீஸ்க்கு வரணும் என்று தெரியாதா..” என்று அவளிடம் சீறிவிட்டு, “இனிமேல் லேட்டா வரக்கூடாது..” என்று எச்சரிக்க அவளோ சரியென தலையை மட்டும் அசைத்தாள்.. அவளின் முகம் பார்த்த மதனுக்கு சிரிப்புதான் வந்தது..

‘அண்ணா எதுடா உன்னோட உண்மையான முகம்.. அங்கே அப்படி பேசிட்டு இங்கே வந்து இப்படி பேசற..’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

“சரி நீங்க போய் வொர்க்கை கவனிங்க..” என்றவன் சொல்ல அவள் விட்டால் போதுமென கதவைத்திறந்து ஓடிவிட்டாள் ருக்மணி.. அவள் தன்னுடைய சீட்டில் அமர்ந்து வேலையைத் தொடங்க மின்மினி மதனிடம் கொடுத்த பைலை வாங்க அவனின் அறைக்கு சென்றாள்..

அந்த பைல் வைத்த இடத்திலேயே இருக்க, ‘இவரிடம் எல்லாம் ஒரு வேலை சொன்னால் இப்படித்தான் இருக்கும்..’ என்று நினைத்தவண்ணம் பைலை எடுத்துகொண்டு பிரபாவின் கேபினுக்கு வந்தாள் மின்மினி..

அவள் சென்றதும் பைலுடன் பிரபாவின் அறைக்குள் நுழைந்த மின்மினி, “நான் கொடுத்த பைலை நீங்க செக் பண்ணவே இல்லையா..?” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தான் மதன்..

ஏனென்றால் அவன் வந்ததும் அந்த பைலை செக்பண்ணி வைத்துவிட்டுத்தான் பிரபாவிடம் ஒரு சந்தேகம் கேட்க வந்தான்.. அதற்குள் ருக்மணி வந்துவிட்டாள்.. அவள் சென்றதும் மின்மினி வந்துவிட்டாள்..

“நான் எல்லாம் ஃபைலும் செக் பண்ணிட்டேன்.. நீதான் சரியாக பார்க்கல..” என்றவன் பிரபாவின் பக்கம் திரும்பி, “நான் என்னோட கேபினுக்கு போறேன் பிரபா..” என்றவன் அவளை முறைத்தவண்ணம் சென்றான்..

அவனின் கோபம் மினியை கொஞ்சம் பாதிக்க, “அவன் வேலையில் கரெக்டாக இருப்பான்.. சோ நீ உன்னோட வொர்க் மட்டும் பாரு..” என்று அவளை கேபினுக்கு அனுப்பி வைத்தான் பிரபாகரன்..

எல்லோரின் மனதிலும் சின்ன சலனம்.. யாரின் மனம் யாரிடம் தஞ்சமடையும்..?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top