• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
43526421_276370816339017_1052534856040316928_n.jpg
ஐந்து வருடங்களுக்கு பிறகு.....


ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் மேல் திடீரென்று யாரோ வந்து விழவும் பதறியடித்து கொண்டு எழுந்து அமர்ந்து கொண்டவன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட அங்கே அவனது வயிற்றில் காலை போட்டு கொண்டு தூங்கி கொண்டு இருந்தான் நான்கு வயது நிரம்பிய அஸ்வந்த் சரோஜா மற்றும் அஜயின் செல்ல மகன்.


"இவனோட அம்மா தான் நம்ம தூங்க விடாமல் இத்தனை வருஷம் சதி பண்ணுணானு பார்த்தால் இவன் அதற்கும் மேல போயிடுவான் போலவே...என்ன கொடுமை ஸார் இது?" என்று புலம்பிக் கொண்டு இருந்த கணேஷின் முன்னால் வந்து நின்ற சரோஜா


"என்னடா கணேஷ் இவ்வளவு சீக்கிரமாக எந்திரிச்சுட்ட? ஒரு வேளை காலையில் ஜாக்கிங் போக போறியா?" என்று கேட்கவும்


அவளை முறைத்து பார்த்த கணேஷ்
"ஏன் கேட்கமாட்ட...என் பொண்டாட்டியை என்னை விட்டு பிரித்து அனுப்பி வைத்ததும் இல்லாமல் உனக்கு நக்கல் வேற கேட்குதா?" என்று கேட்க அவனைப் பார்த்து சிரித்துக்கொண்ட சரோஜா அஸ்வந்தின் புறமாக சென்று நின்றாள்.


"அஸ்வந்த் கண்ணா...இன்னைக்கு பாட்டி வீட்டுக்கு போகணுமா? வேண்டாமா? எழுந்திருங்கடா குட்டி..." என சரோஜா அஸ்வந்தை தட்டி எழுப்ப மெல்ல கண் திறந்து பார்த்தவன்


கணேஷை திரும்பி பார்த்து
"மாமா உன்னை இன்னும் டைனோசர் சாப்பிடலயா?" என்று கேட்க


சரோஜா
"டைனோசரா?" என்று
குழப்பமாக கேட்டாள்.


"ஆமா ம்மா...மாமாவை காட்டுக்கு உள்ளே ஒரு டைனோசர் விரட்டி போயிட்டு இருந்துச்சா...அப்போ மாமா ஒரு பள்ளத்தில் விழுந்தாறா...நீங்க வந்து என்னை எழுப்பிட்டீங்க..." கண்களை உருட்டி பாவனையோடு கூறிய தன் மகனின் அழகில் சொக்கிப் போனவள் அவன் கன்னத்தில் முத்தமிட கணேஷ் காதில் புகை வராத குறையாக சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.


அஸ்வந்த் சரோஜாவின் கையை சுரண்ட
"என்ன கண்ணா?" என்றவாறே அவனைப் பார்த்தவள் அஸ்வந்த் கணேஷின் புறம் கை காட்ட


கணேஷைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகைத்து கொண்டே
"கணேஷ் உனக்கு டீ போடவா? இல்லை காஃபி போடவா?" என்று கேட்கவும்


"முதல்ல உன்னை போட்டு தள்ளுறேன்...அம்மாவுக்கும், மகனுக்கும் என் உயிரோடு விளையாடுறதே வேலையா போயிடுச்சுலே..." என்று கூறி கொண்டே கணேஷ் கட்டிலில் இருந்து இறங்க சரோஜா அஸ்வந்தை தூக்கி கொண்டு ஓடி சென்றாள்.


அஜயை கண்டதும் அவன் பின்னால் சரோஜா மற்றும் அஸ்வந்த் மறைந்து கொள்ள வித்யா இவர்களைப் பார்த்து புன்னகத்து கொண்டார்.


"ஏன்டா கல்யாணம் பண்ணி குழந்தையும் பிறந்தாச்சு...இன்னுமா இரண்டு பேரும் அடிச்சுட்டு இருக்கீங்க?" என வித்யா கேட்கவும்


அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா மற்றும் கணேஷ்
"நாங்க பேரன், பேத்தியோடு இருந்தாலும் சரி...எப்போதும் இப்படி தான் இருப்போம்...இல்லையா?" என்று ஒருமித்த குரலில் கூறவும் தன் பிள்ளைகளின் ஒற்றுமையை எண்ணி மனம் குளிர்ந்து போன வித்யா யாரும் அறியாமல் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.


"சரி சரி நேரமாகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க...அங்க எல்லோரும் காத்துட்டு இருப்பாங்க..." என்று வித்யா எல்லோரையும் துரிதப்படுத்த பத்து, பதினைந்து நிமிடங்களில் அனைவரும் தயாராகி வந்தனர்.


அஜய் காரின் முன்னால் அமர்ந்து கொள்ள சரோஜா மற்றும் அஸ்வந்த் அஜயின் அருகில் அமர்ந்து கொண்டனர்.


பின் இருக்கையில் வித்யா மற்றும் கணேஷ் அமர்ந்து கொண்டதும் அஜய் காரை ஸ்டார்ட் செய்தான்.


ஐந்து வருடங்களுக்குள் எத்தனை நிகழ்வுகள் நடந்து விட்டது என்று எண்ணிக் கொண்ட சரோஜா புன்னகையோடு அஜயை பார்த்து கொண்டு வந்தாள்.


ஹாஸ்பிடலில் முழுமையாக ஒரு வாரம் சிகிச்சை முடித்து விட்டு வந்த சரோஜா பழைய படி தன் வேலைக்கு செல்ல தொடங்க வாஞ்சிநாதன் வழக்கை முடித்து வைத்ததற்காக அஜய்க்கு பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டே இருந்தது.


அதன் பிறகு அஜய் வழக்கம் போல தன் வேலையில் கவனத்தை செலுத்தினாலும் ருத்ரா மற்றும் சித்ராவினை பற்றிய எண்ணங்கள் அவன் மனதின் ஓரமாக இருந்து கொண்டே இருந்தது.


சரோஜா அஜயின் நடவடிக்கைகளை கவனிக்க ஒரு நாளும் தவறியது இல்லை.


வெளியே வழக்கம் போல தன்னை காட்டி கொண்டாலும் அஜயின் மனதிற்குள் ஏதோ ஒரு சிந்தனை இருக்கிறது என்பதை கண்டு கொண்டவள் அஜயே அதை தன்னிடம் கூறட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள்.


இரண்டு, மூன்று மாதங்கள் இப்படியே கடந்து இருக்க அஜயிடம் இருந்து எந்த விடயத்தையும் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.


அன்று வழக்கம் போல ஸ்டேஷனில் இருந்து வந்த அஜய் பார்வையாலேயே ஹாலில் சரோஜாவைத் தேடினான்.


அங்கே அவள் இல்லாமல் போகவே அவர்களது அறையில் சரோஜா இருக்கக் கூடும் என்று நினைத்து கொண்டு அவர்களது அறையை நோக்கி அஜய் சென்றான்.


அங்கே சரோஜா வந்ததற்கான தடயமே இல்லாது இருக்கவும் குழப்பமடைந்த அஜய் யோசனையோடு நின்று கொண்டிருந்தான்.


அப்போது சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக அஜய் மேலே மொட்டை மாடியை நோக்கி செல்ல அவனது எண்ணத்தை பொய்ப்பிக்காமல் சரோஜா அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் உலவிக் கொண்டிருந்த நிலவை ரசித்து கொண்டிருந்தாள்.


வானத்தில் இருந்த நிலவை விட தன் மனைவியின் வதனம் ஜொலித்து கொண்டிருப்பதை பார்த்து ரசித்த வண்ணம் அவளை நெருங்கி சென்ற அஜய் அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.


அஜய் வந்து அமர்ந்ததை பார்த்த சரோஜா எதுவும் பேசாமல் மீண்டும் தன் பார்வையை வானத்து நிலவின் மேல் வைக்க அஜய் யோசனையோடு சரோஜாவை நெருங்கி அமர்ந்து அவளது கழுத்து வளைவில் தன் முகம் பதித்தான்.


சரோஜாவின் உடல் அவனது ஸ்பரிசத்தில் கூசி சிலிர்க்க கண்களை மூடி அந்த தருணத்தை ரசித்து கொண்டவள் உடனே கண்களை திறந்து அஜயை முறைத்து பார்த்து விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.


புருவங்கள் யோசனையில் முடிச்சிட மீண்டும் சரோஜாவை நெருங்கி அமர்ந்த அஜய் அவள் கைகளை பற்றி கொண்டான்.


சரோஜா அவன் கைகளை தட்டி விட்டு எழுந்து கொள்ள போக அவளை எழுந்து கொள்ள விடாமல் அவள் இடையை வளைத்து பிடித்து கொண்டவன்
"ரோஜாவுக்கு என்ன கோபம்?" என அவள் காதில் மெல்லிய குரலில் கேட்டான்.


"ஒண்ணும் இல்லை...எனக்கு தூக்கம் வருது விடுங்க நான் போகணும்..." என்று விட்டு சரோஜா எழுந்து கொள்ள போக


மேலும் இறுக்கமாக அவள் இடையை அழுத்தி பிடித்து கொண்டவன்
"என்ன ஆச்சு டா? ஆபீஸ்ல எதுவும் பிரச்சினையா?" என்று கேட்டான்.


"பிரச்சினை என் பக்கத்தில் தானே இருக்கு..." சரோஜா முணுமுணுத்துக் கொள்ள


"என்ன சொன்ன? என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு..." என்றவாறு அவள் உதட்டருகில் அஜய் தன் காதை வைக்க


கோபமாக அவனை பார்த்தவள்
"பிரச்சினையே நீங்க தான்..." என சத்தமிட்டு கூற சரோஜாவின் சத்தத்தில் அஜய் தன் காதுகளை தேய்த்துக் கொண்டான்.


"யப்பா....என்ன சவுண்ட்...ச...ரோஜா..." வேண்டுமென்றே அஜய் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணடிக்க கோபமாக அவன் தோளில் தட்டியவள் மறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.


"இப்போ என்ன ஆச்சு சொல்லு சரோஜா..." சமாதானமாக போகும் எண்ணத்தோடு அஜய் கேட்கவும்


தன் கண்களை ஒரு முறை மூடி திறந்து கொண்டவள் அஜயின் புறம் திரும்பி
"நீங்க ஏன் என் கிட்ட அந்த விஷயத்தை மறைத்து வைச்சீங்க?" என்று கேட்டாள்.


"எந்த விஷயம்?" அஜய் புரியாமல் குழப்பமாக கேட்கவும்


ஆழமாக அவனைப் பார்வையிட்ட சரோஜா
"சித்ராவைப் பற்றி..." என்று கூறினாள்.


"சித்ராவா?" என்று யோசனையோடு அஜய் சரோஜாவை பார்க்க


"சும்மா நீங்க ஒண்ணும் தெரியாத மாதிரி யோசிக்க வேண்டாம்...நீங்க கொஞ்ச நாளாகவே ஏதோ யோசனையோடு இருந்தீங்க எனக்கு தெரியும்...நீங்களாகவே சொல்லுவீங்கனு நினைச்சேன்...நீங்க சொல்லல...அப்புறம் நான் தனியா உட்கார்ந்து யோசித்து பார்த்தேன்...அப்போ தான் நீங்க சித்ரா பேசிட்டு போனதுக்கு அப்புறமாக இருந்து யோசனையோடு இருக்குறது எனக்கு புரிந்தது...சித்ரா உங்க கூட பிறக்காத தங்கை மாதிரி...அவளுக்கு ஒரு நல்ல லைஃப் அமைத்து கொடுக்கணும்...அது தானே உங்க யோசனை?" என்று சரோஜா கேள்வியாக அஜயை நோக்க அஜய் ஆச்சரியமாக சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.


"நீங்க சொல்லாமலே உங்க மனசில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்..." என சரோஜா கூறவும்


அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட அஜய்
"நீ சொன்னது நூறு வீதம் உண்மை தான் சரோஜா...சித்தார்த் இறந்ததை இப்போ கூட என்னால நம்ப முடியல...அதற்காக அவனை நான் சரியானவன்னு சொல்லல...அவன் செய்த தப்புக்கு ருத்ராம்மாவும், சித்ராவும் என்ன பண்ணுவாங்க? யாரும் இல்லாமல் தனியாக அவங்க இருக்குறதை பார்த்து கஷ்டமாக இருந்தது...சித்ரா இனிமேலாவது சந்தோஷமாக இருக்கணும்...அதற்காக என்ன பண்ணலாம்னு தான் எனக்கு யோசனையே தவிர வேற எதுவும் இல்லை..." என்று கூற


அவனைப் பார்த்து புன்னகத்த சரோஜா
"கையில் நெய்யை வைத்து கொண்டு வெண்ணெயை தேடி அலையுறீங்களே..." என்று கூறவும் அஜய்க்கு சரோஜா கூறியதன் அர்த்தம் பிடிபடவில்லை.


சிறிது நேரம் யோசித்து பார்த்தவன்
"ஹேய்...கணேஷா?" என்று ஆச்சரியமாக கேட்கவும்
சரோஜா ஆமென்று தலை அசைத்தாள்.


"நானும் கணேஷைத் தான் மனதில் வைத்து இதை பற்றி பேசுனேன்...ஆனா நான் சுயநலத்திற்காக என்னோட ஒரு ஆசைக்காக உன்னை கட்டாயப்படுத்திடக் கூடாதுனு தான் இதை சொல்லல...ஆனா இப்போ நீயும் அதே எண்ணத்தோடு தான் இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்குடா..." என்று அஜய் கூறவும்


அவன் தோளில் சாய்ந்து கொண்ட சரோஜா

"உங்களோட ஆசை தான் என்னோட ஆசையும்...நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
உங்களுக்கு ஞாபகம் இருக்கா? எப்போதும் எனக்கு நிழலாக நீங்க இருப்பேன்னு சொன்னீங்க...நிழல் வேற நிஜம் வேற இல்லையே..." என்று கூற அஜய் புன்னகையோடு சரோஜாவின் நெற்றியில் இதழ் பதித்தான்.


"சரி வா உள்ளே போகலாம்...ரொம்ப லேட் ஆச்சு..." என்றவாறே சரோஜாவின் கை பற்றி அஜய் எழுப்ப


தயக்கத்துடன் எழுந்து நின்ற சரோஜா
"அஜய்...." என தயக்கமாக அவனை அழைத்தாள்.


"என்ன டா?" என்ற அஜய் சரோஜாவின் முகம் பார்க்க தயங்கியபடியே அஜயின் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்த சரோஜா வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள்.


சரோஜாவையே பார்த்து கொண்டு நின்ற அஜய் சரோஜா அவனது கையை அவளது மணி வயிற்றில் வைக்கவும் ஒரு நொடி அஜய்க்கு சுற்றிலும் இருந்த எல்லாம் மறந்து போனது.


"நி...நிஜமாகவா?" ஆர்வத்தோடும், காதலோடும் கேட்ட தன் கணவனை பார்த்து புன்னகத்து கொண்டவள் அவன் மார்பில் சாய அஜய் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.


சிறிது நேரம் கழித்து அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி பார்த்தவன் அவள் பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்ட படியே அவள் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் தன் இதழ் முத்திரையை பதித்தான்.


சரோஜா மேலும் அவனோடு ஒன்றிக் கொள்ள காதலோடும், தாபத்தோடும் அவள் இதழ்களை நெருங்கியவன் தன் ஒட்டுமொத்த காதலையும் தேக்கி அவள் இதழ்களில் கவி பாடினான்.


நிலவின் குளிர்மை அந்த இடத்தை சூழ்ந்து கொள்ள அவர்களது அழகிய காதல் சந்தோஷமாக அந்த இடத்தை நிறைத்து கொண்டது.


அதன் பிறகு சிறிது நாட்களின் பின்னர் அஜய் மற்றும் சரோஜா பெரியவர்கள் அனைவரிடமும் கணேஷ் மற்றும் சித்ரா பற்றி தங்கள் மனதில் இருந்த விடயத்தை பற்றி கூற பெரியவர்கள் மட்டுமின்றி சித்ரா மற்றும் கணேஷ் கூட அவர்களது முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.


சித்ரா தான் சொன்னது போல தன் உழைப்பில் ஒரு வீடு கட்டி அங்கே ருத்ராவை எந்த குறையும் இன்றி தங்க வைத்து விட்டு கணேஷை திருமணம் செய்து கொண்டாள்.


விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி சித்ரா மற்றும் கணேஷ் ருத்ராவோடு தங்கி இருந்து கொண்டு வந்தனர்.


தற்போது சித்ரா ஏழு மாத கர்ப்பிணி.


வளைகாப்பு தன் தாய் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டதற்கு இணங்க இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சித்ரா ருத்ராவின் வீட்டிற்கு சென்று இருக்க இன்று வளைகாப்பு நிகழ்வுக்காக அனைவரும் ருத்ராவின் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தனர்.


வீட்டை வந்து சேர்ந்ததும் கணேஷ் தன் மனைவியை பார்க்க ஆவலாக வேகமாக வீட்டினுள் நுழைந்து கொள்ள அவனது செய்கையை பார்த்து புன்னகையோடு அஜய் மற்றும் சரோஜா அவனை பின் தொடர்ந்து சென்றனர்.


சித்ராவை அங்கும் இங்கும் அசைய விடாமல் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கும் தன் தம்பியை பார்த்து பெருமிதம் அடைந்த சரோஜா அப்போது வீட்டிற்குள் வந்து கொண்டிருந்த நவீன் மற்றும் கார்த்திகாவைப் பார்த்து புன்னகையோடு கை அசைத்தாள்.


நவீன் பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்த பின் கார்த்திகா முற்றிலும் உடைந்து போனாள்.


இனி அவனை பற்றி நினைக்கவே கூடாது என மனதிற்குள் கார்த்திகா நினைத்து இருந்தாலும் அவளால் உண்மையாக அப்படி இருக்க முடியவில்லை.


கார்த்திகாவின் மனநிலையை புரிந்து கொண்ட சரோஜா கார்த்திகாவிடம் பேசி அவளது மனநிலையை பற்றி அவளுக்கு புரிய வைத்தது மட்டுமின்றி அவர்கள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தாள்.


தற்போது மனமொத்த தம்பதிகளாக இருக்கும் கார்த்திகா மற்றும் நவீனுக்கு மூன்று வயதில் யாழினி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.


வளைகாப்பு நிகழ்வு சந்தோஷமாக நிறைவடைந்ததும் கணேஷ் அங்கேயே சித்ராவோடு தான் இருப்பேன் என்று அடம்பிடித்து தங்கி விட அஜய் மற்றும் சரோஜா வித்யாவை அவரது வீட்டில் இறக்கி விட்டு தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.


அஸ்வந்த் சரோஜாவின் மடியில் அசந்து தூங்கி இருக்க கனகா அஸ்வந்தை தங்களோடு இருக்கட்டும் என்று விட்டு தூக்கி சென்றார்.


காலையில் இருந்து வேலை செய்த அலுப்பு போக நன்றாக குளித்து விட்டு வந்த அஜய் சரோஜாவை தேட சரோஜா பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்.


சரோஜாவின் பின்னால் வந்து நின்ற அஜய் அவளை பின்னால் நின்றவாறே அணைத்துக் கொள்ள சரோஜா புன்னகையோடு அவனை திரும்பி பார்த்தாள்.


"மேடம் ரொம்ப சந்தோஷமாக இருக்குறீங்க போல..." என அஜய் கேட்கவும்


புன்னகையோடு அவனை பார்த்தவள்
"இந்த ரோஜாவின் ராஜா கூடவே இருக்கும் போது என்ன கவலை?" என்று கேட்க காதலோடு தன் மனைவியை அஜய் அணைத்துக் கொண்டான்.


மின்னல் போல தன் வாழ்வில் நுழைந்து தன் நிழலாக வலம் வருபவனை காதலோடு ரோஜா அணைத்துக் கொள்ள ரோஜாவின் மனம் கவர்ந்த ராஜா அவள் காதலில் கரைந்து போய் நின்றான்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top