• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாப்பிலக்கணம் (கவிதை மரபிலக்கணம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் தோழமைகளே,

உங்களில் பலர் கவிதைக்கான தமிழின் மரபிலக்கணமான யாப்பிலக்கணத்தைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுகின்றீர்கள், அவர்களுக்கானது இப்பதிவு:

இன்றைய நிலையில் தமிழ் மரபுக்கவிதைகளின் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் போன்றவை) இலக்கணத்திற்கு அடிப்படை ‘யாப்பருங்கலக் காரிகை’, ‘யாப்பருங்கலம்’ என்ற நூல்கள்தான்.

இவை இரண்டும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகப் பிரிவில் உரையுடன் கிடைக்கின்றன:

யாப்பருங்கலம்: http://www.tamilvu.org/ta/library-l0200-html-l0200ind-117825
யாப்பருங்கலக் காரிகை: http://www.tamilvu.org/ta/library-l0300-html-l0300ind-117993

ஆனால், இவற்றுக்கும் ‘எளிமை’க்கும் கொஞ்சம் தொலைவு அதிகம்!

தமிழறிஞர் கி.வா.ஜ. அவர்கள் ‘கவி பாடலாம்’ என்று எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத்தரும் நூலை இயற்றியுள்ளார்:
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kJMy&tag=கவி பாடலாம்#book1/

மேலும் பலரும் எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத் தரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

வெண்பா எழுதலாம் வாங்க http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ என்ற வலைப்பூவும்,

பேரா. பசுபதியாரின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’ பதிவுகளும் (பின் இது நூலாக வெளியிடப்பட்டுள்ளது) அவற்றில் குறிப்பிடத்தக்கவை. (கூகுள்க!)

அடியேனும் ஒரு வலைப்பூ தொடங்கினேன்: http://learn-yaappu.blogspot.com/

இவற்றில் உங்களுக்கு தோதானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்குக!

வெண்பாவிற்குத் தேவையான இலக்கணத்தை மட்டும் ஒரு ‘கிராஷ் கோர்ஸ்’ போலக் கற்றுத் தரும் ஒரு முயற்சியாக நான் இந்தக் காணொளிகளை உருவாக்கினேன்:

வெண்பா கவிப்போம் - 1:
வெண்பா கவிப்போம் - 2:

(இரண்டும் சேர்த்து மொத்தமே முக்கால் மணிநேரந்தான்!)

யாப்பிலக்கணத்தை ஒரே நாளில் கற்றுக்கொள்ள இயலாது, அப்படியே இயன்று நீங்கள் அனைத்து இலக்கணங்களையும் விதிகளையும் மனப்பாடம் செய்துவிட்டீர்கள் என்றாலும், அவற்றை அமைத்து பாடல்கள் யாப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அதிலும் நல்ல பாடல்கள் யாக்க வாழ்நாள் தவம் கூடத் தேவைப்படலாம் (ஆண்டுக் கணக்காய் கவிதை என்று கிறுக்கியும் ஒன்றும் தேராத பலரை நான் அறிவேன்!)

இதை உங்களைச் சோர்வடையச் செய்வதற்காகச் சொல்லவில்லை, கற்கத் தொடங்கிச் சில நாள்களில் ’நமக்கு இது சரிப்படாதோ’ என்று நீங்கள் நின்றுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்...

இலக்கணத்தோடு சேர்த்து இலக்கியத்தையும் படித்தல் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கவிதை - இலக்கிய மரபை உடையவர்கள் நாம், அந்த மரபில் ஆயிரமாயிரம் தலைச்சிறந்த புலவர்கள் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான அழகான ஆழமான பாக்களை நமக்காகக் கொடுத்துச் சென்றுள்ளனர்...

அந்தப் இலக்கியப் புதையலை அறியாமல் இருப்பது எத்தனை பெரும் பிழை? அதிலும், கவிதை எழுதுகிறேன் என்று சொல்லும் ஒருவர் கட்டாயம் அந்தத் தமிழ்க்கடலில் காலையேனும் நனைத்திருக்க வேண்டுமல்லவா?

’ஒரு வெண்பா எழுதும் முன் குறைந்தளவு நூறு வெண்பாக்களையேனும் படித்துவிடுங்கள்’ என்பது நான் அடிக்கடி சொல்லும் ஒன்று... அதையேதான் இங்கும் சொல்ல விழைகிறேன்...

தொடங்குங்கள்...

உங்கள் யாப்பிலக்கணப் பயணம் இனிதாய் அமையட்டும்...

இடையில் உங்களுக்கு ஏற்படும் தடைகளைக் கடக்க நான் இயன்றவரை உதவ ஆர்வமாய்க் காத்திருக்கிறேன்... தயங்காது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்...

கணக்கின்றி வினாக்கள் எழுப்புங்கள்...

கற்போம், கவிப்போம்...


நன்றி :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
யாப்பிலக்கணமா.... கடவுளே மீ எஸ்கேப்.

கவிதை என் கையில் மிகவும் கஷ்டப்படும்.
'கவிதை - கையில் - கஷ்டப்படும்’ அதையே எவ்ளோ அழகா மோனையோட சொல்லிருக்கீங்க?!

உங்களுக்குள்ளயும் ஒரு கவிதாயினி இருக்கா சிஸ்... அவளை தரதரனு வெளில இழுத்துட்டு வாங்க... :):)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமையான பதிவு ஆசிரியரே... இதை படிக்க ஆர்வம் சற்று குறைவே எனக்கு... ஆனாலும் மெதுவாய் பார்க்க படிக்க முயற்சிக்கிறேன்.... படைப்பாளிகளுக்கு பயனுள்ள இணைப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்...
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
மிக்க மிக்க நன்றி ண்ணா ????
எனக்கு மரபு கவிதை எழுதனும் என்ற ஆசையெல்லாம் இல்லண்ணா, ஒரு தமிழ் மாணவியாக பாவகைகளை இதுதான் என்று விளங்கும் வகையில் தெளிவு வேண்டும் அவ்வளவுதான்.
மனப்பாடம் செய்து வைத்து சலிச்சு போச்சுண்ணா, புரிந்து தெளிய வேண்டும். நான் கேட்டதும் தந்ததற்கு மிக்க நன்றி ண்ணா ????
இனிமேல் என்னுடைய குருட்டுத்தனமான சந்தேகங்கள் எல்லாம் தங்கள் மீது படையெடுத்து வரும்??
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
கடலில் கால் நனைக்க ஆசை தான்.. ஆழத்தை அளக்க அல்ல.. ஆனால், நீச்சல் சொல்லி தருபவர்களை பாராட்டியே ஆக வேண்டும் அல்லவா?

வாழ்த்துகள் நண்பா!
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்! ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top