• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
வணக்கம் தோழமைகளே,

நான் சில நாள்களாகவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இன்றுதான் அமைந்தது.

பெக்டெல் சோதனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

இது திரைப்படங்கள், கதைப்புத்தகங்கள் முதலியவற்றில் பெண்கள் எந்தளவிற்குப் பங்களிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படை சோதனையாக இன்று அமைந்துள்ளது.

இவ்வுலகின் பெரும்பான்மையான சமூகங்கள் ‘ஆணாதிக்க’ நிலையில் இருப்பதை நாம் அறிவோம். (’ஆணாதிக்கம்’ என்பதில் ஆண்களைப் போலவே பெண்களின் பங்கும் உள்ளது என்றே நான் கருதுகிறேன், அது வேறு கதை, அதை இன்னொரு நாள் விவாதிப்போம்!)

அதாவது, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கான முறையான வாய்ப்பும் பங்கும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை!

திரைப்படங்கள், கதைகளிலும் இதே நிலைதான்!

பெரும்பான்மையான கதைகள் ஆண்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. தமிழ்த் திரப்படங்களில் பெண்களை (கதாநாயகி) முதன்மையாகக் கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

இக்குறையைச் சுட்டிக்காட்டும் வகையில் எழுந்ததுதான் இந்த பெக்டெல் சோதனை.

அலிசன் பெக்டெல் என்ற கேலிச்சித்திரக்காரர் (கார்ட்டூனிஸ்ட் ) ‘டைக்ஸ் டு வாட்ச் அவுட் பார்’ என்ற தான் நடத்திய ஒரு கேலிச்சித்திர வரிசையில் 1985-இல் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் (காண்க படம்).

View attachment 12997

அதில் இரண்டு பெண்கள் திரைப்படம் பார்க்கச் செல்ல விழைந்து எந்தப் படத்திற்குப் போகலாம் என்று சிந்திக்கின்றனர்.

அதில் ஒருத்தி சொல்கிறாள் ‘நான் சில நிபந்தனைகள் வைத்துள்ளேன், அவற்றில் தேறும் படங்களைத்தான் நான் பார்ப்பேன்’ என்று.

அவள் குறிப்பிடும் அந்த நிபந்தனைகளைத்தான் இன்று ‘பெக்டேல் சோதனை’ (Bechdel test) என்கிறோம்.

என்ன நிபந்தனைகள்?

1. திரைப்படத்தில் குறைந்தது இரண்டு பெண் கதாப்பாத்திரமாவது இருக்க வேண்டும்,
2. அந்த இருவரும் தமக்குள் உரையாட வேண்டும்,
3. அவ்வுரையாடல் ஒரு ஆணைப் பற்றியதாக இருக்கக் கூடாது!

இதுதான் அவளின் நிபந்தனைகள். (எந்தப் படமும் இதில் தேறவில்லை என அவர்கள் திரைப்படம் பார்க்காமலே வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். ‘நான் கடைசியாகப் பார்த்த படம் ‘ஏலியன்ஸ்’!’ என்கிறாள் அவள்!)

மேலே சொன்ன நிபந்தனைகள்தான் பெக்டெல் சோதனை. இது திரைப்படங்களுக்கு மட்டுமன்றிப் புனைகதைகளுக்கும் (fictions / novels) பொருந்தும் (நாடகங்கள், பாப் இசை என்று பல்வேறு துறைகளிலும் கூட இதைப் பொருத்திப் பார்க்கின்றனர்!)

சிலர் மேலே சொன்ன நிபந்தனைகளை இன்னும் கொஞ்சம் நீட்டிப்பர்:

1. இரண்டு பெண் கதாப்பாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
2. அவர்கள் உரையாடல் குறைந்தது 60 நொடியாவது (திரைப்படத்தில்) இருக்க வேண்டும்

இப்படி!

இதை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்:

1. திரைப்படங்கள், கதைகளில் அவ்வளவாக பெண் கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை
2. அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆண் கதாப்பாத்திரங்களின் துணைப்பாத்திரமாகவே வருகிறார்கள், கதையில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாலும் அவர்களின் பேச்சு ஒரு ஆணைப் பற்றியதாகவே இருக்கிறது!

(இந்தச் சோதனை பிரபலமடைந்த பின் ஆங்கிலத் திரைப்படங்களில் பெண்களுக்கான சரியான அங்கீகாரம் பல படங்களில் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான படங்கள் இச்சோதனையில் தேறுகின்றன என்று விக்கிப்பீடியா கட்டுரை சொல்கிறது!)

ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்வோம், இது ஒரு அடிப்படையான சோதனைதான். திரைப்படங்களில், கதைகளில் பெண்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட எழுந்த ஒரு கேலிச்சித்திரமே இது. இதில் தேறும் படங்களில் வேறு காட்சிகளில் பெண்களை மட்டமாகக் குறைவாகக் காட்டும் நிலை இருக்கலாம், அல்லது படமே குப்பையாக இருக்கலாம். சில சமயம், நல்ல படங்கள் இச்சோதனையில் தேறாமல் இருக்கலாம்! (அதற்கு அதன் கதையமைப்பு காரணமாக இருக்கும்!)

சரி, விஷயத்துக்கு வருவோம், பெண் எழுத்தாளர்களும் பெண் வாசகர்களும் அதிகம் இருக்கும் இத்தளத்தில் உள்ள கதைகளில் எத்தனை கதைகள் இந்தச் சோதனையில் தேறும் என்று பார்ப்போமா?

நீங்கள் படித்த கதைகளில் எவையெல்லாம் இச்சோதனையில் தேறின என்பதைக் கருத்தில் குறிப்பிடுங்கள்.

இயன்றால் அக்கதையில் வரும் பெண் கதாப்பாத்திரங்களையும், ஒரு ஆணைச் சாராமல் / ஆணுக்குத் துணையாக இல்லாமல் அவர்கள் செய்த / பேசிய பகுதிகளையும் குறிப்பிடுங்கள்.

நான் மீண்டும் நினைவூட்டுகிறேன், இது கதைகளில் பெண்களின் அங்கீகாரம் குறித்த ஒரு அடிப்பதைச் சோதனை, அவ்வளவுதான். இதில் தேறினால்தான் நல்ல கதை, தேறாததெல்லாம் மோசமான கதை, அல்லது ஆணாதிக்கத்தை ஆதரித்து வளர்க்கும் கதை என்று பொருள் அல்ல! கதைகளில் பெண்களுக்கான பங்களிப்பு சரியாக இருக்கிறதா என்பதற்கான ஒரு முதற்கட்ட சோதனை இது! அவ்வளவே!

ஆனால், ஒன்று நிச்சயம், இதில் கூட தேறாத திரைப்படங்கள் / கதைகளை அதிகம் நம் சமூகத்தில் இருக்கவிடுவதன் மூலம் நாம் நம்மையே அறியாமல் நமது இளந்தலைமுறைப் பெண்/ஆண்களிடம் ஒருவித ஆழ்மன ஆணாதிக்க ஆதரவு / ஏற்புச் சூழலை உருவாக்குகிறோம்!

விவாதிப்போம்... நன்றி :)(y)
சகோ நீங்கச் சொன்ன அறிவிப்பு வரக்கூடிய கதைப்பாத்திரங்கள் என்றால் @KPN dear அன்பென்னும் இதழ் மலரட்டுமே, அணிமா மலர் கதாபாத்திரம் fantastic chr
சின்னக் குழந்தைகளை கடத்திலிருந்து பாதுகாப்பது, அவளுடையச் சிந்தனையே அவளை தனித்துக் காட்டும் அப்படி ப்பட்ட கதைப்பாத்திரத்தை வடிவமைச்சுயிருப்பார் கதை ஆசிரியர்.

@Monisha dear அவள் திரெளபதி அல்ல கதை யின் வீரமாகாளி chr fantastic chr. கதையின் கடைசியில் அவள் பெயரைப்போலவே வீரமாகாளி யாவே அவதார எடுக்குறக் காட்சியை கதையின் ஆசிரியர் அப்படித் தத்துருபமாக காட்டி இருப்பாங்க.

சகோ நீங்க குறிப்பிட்ட விதி முழுமையாக வராவிட்டாலும் (நம் நாட்டிற்கு இந்த விதி முழுமையாக பொருந்தாது, பிற்காலத்தில் வேண்டுமென்றால் பொருந்தலாம்)
என் ஞாயபகத்தில் என்னைப் பாதித்தக் கதைகள் சகோ

ஞாபகம் வரும்போது திரும்பச் சொல்கிறேன்
 
KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai

Thank you dear❤
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
wowww super :)

கலக்கறீங்க ஆசிரியரே ... கொஞ்சம் வேலைய முடிச்சுட்டு வரேன் :)
நன்றி ஷஷிக்கா... பொறுமையா வாங்க, நீங்க ஆயிரம் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்துட்டு இருக்கீங்கனு பார்த்துட்டுதானே இருக்கேன் (வாட்சப்ல, டெலிகிராம்ல, பேசுபுக்ல... நான்லாம் என் கதைகளுக்குத்தான் விளம்பரம் கொடுத்துப்பேன், நீங்க உங்க தளத்தில் எழுதும் அனைவரின் கதைகளுக்கும் விளம்ப்ரம் கொடுக்குறீங்க... செம்ம... )

:):):)(y)(y)(y)
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நன்றி ஷஷிக்கா... பொறுமையா வாங்க, நீங்க ஆயிரம் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்துட்டு இருக்கீங்கனு பார்த்துட்டுதானே இருக்கேன் (வாட்சப்ல, டெலிகிராம்ல, பேசுபுக்ல... நான்லாம் என் கதைகளுக்குத்தான் விளம்பரம் கொடுத்துப்பேன், நீங்க உங்க தளத்தில் எழுதும் அனைவரின் கதைகளுக்கும் விளம்ப்ரம் கொடுக்குறீங்க... செம்ம... )

:):):)(y)(y)(y)
நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.
நன்றி சஷி.??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சகோ நீங்கச் சொன்ன அறிவிப்பு வரக்கூடிய கதைப்பாத்திரங்கள் என்றால் @KPN dear அன்பென்னும் இதழ் மலரட்டுமே, அணிமா மலர் கதாபாத்திரம் fantastic chr
சின்னக் குழந்தைகளை கடத்திலிருந்து பாதுகாப்பது, அவளுடையச் சிந்தனையே அவளை தனித்துக் காட்டும் அப்படி ப்பட்ட கதைப்பாத்திரத்தை வடிவமைச்சுயிருப்பார் கதை ஆசிரியர்.

@Monisha dear அவள் திரெளபதி அல்ல கதை யின் வீரமாகாளி chr fantastic chr. கதையின் கடைசியில் அவள் பெயரைப்போலவே வீரமாகாளி யாவே அவதார எடுக்குறக் காட்சியை கதையின் ஆசிரியர் அப்படித் தத்துருபமாக காட்டி இருப்பாங்க.

சகோ நீங்க குறிப்பிட்ட விதி முழுமையாக வராவிட்டாலும் (நம் நாட்டிற்கு இந்த விதி முழுமையாக பொருந்தாது, பிற்காலத்தில் வேண்டுமென்றால் பொருந்தலாம்)
என் ஞாயபகத்தில் என்னைப் பாதித்தக் கதைகள் சகோ

ஞாபகம் வரும்போது திரும்பச் சொல்கிறேன்
கதைகளைக் குறிப்பிட்டதற்கு நன்றி அக்கா...

நம் நாட்டிற்குத்தான் இது அதிகம் பொருந்த வேண்டும்!

சிவனில் பாதி சக்தி, திருமாலின் மார்பில் இலக்குமி, பிரம்மனின் நாவில் சரசுவதி, மலைகள் பெண் தெய்வம், ஆறுகள் பெண் தெய்வம், மரங்கள் பெண் தெய்வம், நாடே பெண் தெய்வம் என்றெல்லாம் தொழுத ஒரு நாட்டில் நிஜப் பெண்கள் ஓரங்கட்டப்பட்டது எப்படி?

இதைத்தான் ‘கண்டிஷனிங்’ என்கிறோம்! இதை உடைத்து வெளியே வர வேண்டும்...

உடைத்து வெளியேற நம் கதாசிரியர்கள் சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டும், அந்த உடைத்து வெளியேறல் தாறுமாறாயச் சென்றுவிடாமல் நெறிபடுத்தும் கடமையும் அவர்களுக்கே...

சின்ன வயதில் வீட்டில் பெற்றோரோடு அமர்ந்து ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கையில் முத்தக் காட்சிகள் வந்தால் நாங்களும் நெளிவோம், பெற்றோரும் சங்கடமாக உணருவர், சில சமயங்களில் சேனலை மாற்ற வேண்டியிருக்கும்... இன்று எந்தச் சங்கடமும் இல்லாமல் எங்களால் ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது... படங்கள் மாறிவிட்டனவா?

அல்ல, எங்கள் மனநிலை மாறிவிட்டது! அது அவர்கள் கலாச்சாரம் என்று புரிந்துகொண்டோம்... அதில் ஒரு அழகும் இருப்பதை உணர்ந்து கொண்டோம்...

அப்படித்தான் இதுவும்... மாற்றம் வரும்... வரவழைப்போம்... :):)(y)(y)
 
(y)(y):) மாற்றம் (நல்லவிதமாக) வரும் என்று நம்புவோம் சகோ:)
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நிறைய பதில்களைக் கொண்ட ஒற்றைக் கேள்வி…

திரைப்படங்களிலோ கதைகளிலோ, பெண்கள், ஆண்களின் பங்களிப்பு என்பது, அவர்கள் கதாபாத்திரங்கள் எந்த வகையில் சித்தரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துதான் முடிவு செய்யமுடியும்…

60 நொடிகள் ஒரு பெண் கதாபாத்திரம் பேசுவது, ஆணாதிக்கம் இல்லாத இடமாகப் உணரப்படுகிறது என்றால்,
ஒரு ஆண் கதாபாத்திரம், பெண் கதாபாத்திரத்தைப் பார்க்கும் பார்வையிலும், மரியாதைப் பேச்சிலும் கூட , அது உணரப்படும்..
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அப்புறம், எனக்குப் பசிக்கும்ல... சாப்டனும்ல... :cry::cry:

View attachment 12999

:LOL::LOL::LOL:
இங்கும், பெண்ணை 'சமையல், சாப்பாடு' என்ற ஒற்றைப் புள்ளியில் வைத்துப் பார்க்கிறீர்கள்... இதுவும் ஆணாதிக்கம்...

Sorry, if I overreacted...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top