• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 28 (b)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காலையில் அவள் கண்விழிக்கும் பொழுதே மழை பொழிய அந்த அறை முழுவதும் சிலுசிலுவென்று இருந்தது.. கண்ணைவிட்டு கலையாத தூக்கத்துடன் போர்வையைத் தேடியெடுத்து போர்த்துக்கொண்டு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் ருக்மணி..

அதெல்லாம் கவனிக்காமல் காலையிலேயே எபியை டைப் பண்ணி போஸ்ட் பண்ணிவிட்டு குளிக்க சென்றாள்.. அவள் சென்ற சில நிமிடங்களில் கண்விழித்த ருக்மணி அருகிலிருந்த லேப்டாப் பார்த்ததும், ‘யூடி போஸ்ட் பண்ணிட்டாளா..?’ என்று ஆர்வமாக முகநூலைத் திறந்து கதிரழகி கதையைப் படித்தாள்..

“அழகிக்கு அழகாக பெண் குழந்தை பிறந்திருந்தது.. அவளின் குழந்தையை பார்த்திபன் மற்றும் பார்கவி இருவரும் தூக்கிக்கொண்டே சுற்றினார்.. ஆனால் அழகியோ குழந்தையின் மழலை முகத்தை மட்டும் பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்..

அந்த குழந்தையைப் பார்த்து கணவன் பூரித்து போகும் தருணம் கண்ட பொழுதெல்லாம் அவளின் மனதில் வலி மட்டுமே மிஞ்சியது.. அப்பொழுதுதான் கதிர் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அவளாக குழந்தையை தூக்கவே இல்லை.. அதற்கான விளக்கத்தை அவளிடமே கேட்டான்..

“அழகி நம்ம குழந்தையை நீ ஏன் தூக்குவதே இல்ல..” என்ற கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னோட முட்டாள்தனமான புத்தி அவளுக்கு வரக்கூடாதுன்னுதான் நான் குழந்தையைத் தூக்குவதே இல்ல..” என்றவள் விரக்தியாக..

“என்ன அழகி இப்படி பேசற..” என்றவன் கேள்வியெழுப்ப, “வேற எப்படி பேசணும்.. முட்டாளுக்கு யோசிக்கவே தெரியாது.. அப்புறம் எப்படி பேசறது..” என்று அவனிடமே கேட்டாள்.. அவளின் பேச்சில் இருந்த மாற்றத்தை அவன் உணர்ந்தான்..

“அன்பு..” என்றவன் தயக்கத்துடன் அவளின் அருகில் வர, “அன்பு அது எல்லாம் என்னிடம் இல்ல.. மனசு முழுக்க ரணம்தான் இருக்கு..” என்றவளை அவன் இமைக்காமல் பார்த்தான்.

“நீங்க உங்களோட குழந்தையைத் தூக்கிட்டு கிளம்புங்க.. அவளை வளர்க்க உங்களால் முடியாத பட்சத்தில் நீங்களும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருங்க..” என்றதும் அவனுக்கு கோபம் வந்துவிட அவனின் முகம் செந்தணலாக மாறியது.

“ஏன் என்று காரணம் சொல்லு அழகி..” அவன் கேட்டதும், “அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீங்க என்னை முட்டாள் என்று சொன்னதுதான் ஞாபகம் வருது.. என் கண்முன்னாடி பஞ்சாயத்தில் வேறொரு பெண்ணை நீங்க கைபிடித்துதான் ஞாபகம் வருது..” என்று சுவற்றில் சரிந்து அமர்ந்து அழுதாள்..

அவளின் மனதிலிருக்கும் காயம் அவன் உணர்ந்தாலும், “அன்பு நான் செய்து தவறுதான் அதற்காக இப்படியெல்லாம் பேசாதே.. செய்த தவறுக்கு மன்னிப்பு என்ற ஒன்று இருக்குதானே..” என்றவன் அவளின் அருகில் சென்றான்..

அவனின் மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும், “நான் படிக்காத பொண்ணு என்னை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காதுன்னு என்று நல்ல தெரிந்தும் கூட நீங்க எதற்காக என்னோட கழுத்தில் தாலிகட்டினீங்க..” என்றவளின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை..

“அப்பொழுது உங்க வீட்டில் இருக்கிறவங்க மானம் மரியாதை போகக்கூடாது என்று கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. அவங்களுக்காக என்னோட வாழ்ந்தீங்க.. அதன்பிறகு காதலியைப் பார்த்தும் என்னை மறந்து போச்சு.. அவளுக்காக என்னை உதறிவிட்டு அவள் பின்னாடி போனீங்க..” அவளின் பேச்சில் வெளிப்பட்ட உண்மையில் திகைத்து நின்றான் கதிர்.

“தவறு செய்தது எல்லாம் நீங்க.. கடைசியில் உங்களோட சுயநலத்திற்கு நான் பலியாடு.. ஊருக்குள் அத்துவிட காரணம் கேட்டதும் கண்ணை மூட்டிட்டு முட்டாள் என்று முத்திரை குத்தி அனுப்பிடிங்க.. இங்கே எந்தவிதமான தவறும் செய்யாமல் என்னோட வாழ்க்கை அநியாயமாக போச்சு..” என்றவள் கதறி அழுதாள்.

“நீ சொன்னது எல்லாம் நிஜம்தான் அன்பு.. ஆனால் இப்பொழுது எல்லோரையும் வேண்டாமென்று சொல்லிட்டு உன்னோட வந்து இருக்கும் என்னை நீ யோசிக்கவே மாட்டாயா..?” என்றவனின் கேள்விக்கும் அவளிடம் பதில் இருந்தது.

“அதுவும் உங்களோட சுயநலம்தான். உங்களோட குழந்தை என்னோட வயிற்றில் இருந்ததால் நீங்களே வந்து தாலிகட்டினீங்க. அனைத்து தவறும் செய்த உங்களுக்கு உத்தமன் என்ற பட்டமும், எந்த தவறும் செய்யாத எனக்கு முட்டாள் என்ற பட்டமும் கிடைச்சிருக்கு.” என்றவள் தொடர்ந்தாள்.

“நீங்க சொல்றீங்களே தாலிகட்டி ஏற்றுக்கொண்டேன் என்று.. அதை உங்களோட ஊரில் எந்த ஊர்காரங்க முன்னாடி நான் எல்லாம் இழந்து வந்தேனோ அங்கே செய்திருக்க வேண்டும்.. இந்த ஊரில் நான் உங்களோட வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்ல..” என்றவளின் பேச்சில்தான் எத்தனை முதிர்ச்சி என்று உணர்ந்தான் கதிர்..

“சரி வா நாம் நம்மோட ஊருக்கே போகலாம்.. நான் அங்கே வைத்து இதே தாலியை கட்டுக்கிறேன்..” என்றவன் மீண்டும் தொடங்கி இடத்திற்கே வர, “அதை நான் சொல்லி செய்யற நீங்கதான் படிச்ச முட்டாள்.. நான் முட்டாள் இல்ல..” என்றவள் அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

அவள் அவனின் முன்னே தலைநிமிர்ந்து நிற்க அவனோ திகைப்பில் இருந்து வெளிவராமல் நின்றிருக்க இருவருக்கும் இடையே குழந்தை வீரிட்டு அழுதுக் கொண்டிருந்தது.. எந்த பாவமும் அறியாத பச்சிளம் குழந்தை முகம் பார்த்த கதிர், “இந்த குழந்தை பார்த்து கூட உன்னோட மனசு மாறவில்லையா..?” என்று கேட்டான்..

அவள் திரும்பி குழந்தையின் முகம் பார்த்துவிட்டு, “அவளுக்காக இத்தனை நாள் வாழ்ந்தேன்.. இனிமேல் எப்படியோ..? அது தெரியல.. ஆனால் அவள் என்னிடம் வளர வேண்டாம்.. நீங்க தூக்கிட்டு போங்க..” என்றாள் அவள் முடிவாக..

இருவரும் இருவேறு துருவமாக நின்றிருக்க இருவரின் இடையே கதறி அழுகும் மழலையின் சத்தம் மட்டுமே அந்த வீடென்று பரவிருக்க குழந்தையின் சத்தம்கேட்டு ஓடிவந்த பார்கவி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்தது..

இருவரும் இந்த குழந்தைக்காக வாழ்க்கையில் இணைவார்களா..?” என்ற கேள்வியுடன் எபியை முடித்திருந்தாள் தமிழரசி.

அதற்குள் ஜெயா குளித்துவிட்டு வெளிவந்து, “என்னடி எபி படித்துவிட்டாய் போல..” என்றவளின் குரல்கேட்டு நிமிர்ந்தாள் ருக்மணி.. அவளின் விழியிரண்டும் கலங்கியிருக்க, “என்னடி சின்ன பிள்ளை போல அழுதுட்டு இருக்கிற..” என்று அவளின் விழிகளைத் துடைத்துவிட்டாள் ஜெயா..

‘கீன்..’ என்ற அழைப்பில் இருவரின் கவனம் திசைதிரும்பிட லேப்டாப்பின் திரையைப் பார்க்க, ‘கதை வேகமாக நகரும் நேரத்தில் எபி கொடுக்காமல் எங்கே இருக்கீங்க மேடம்..’ என்றவனின் கேள்விதான் அவளை மீண்டும் எழுத தூண்டியது..

“ஹாய் மலர். இன்று நான் எபி படித்தேன். அழகி குழந்தையிடம் பேசியது ஒருவகையில் மனதில் பாதித்தது என்றால் கதிரின் மறுப்பக்கம் அறிந்தும் மனதில் வலி ஏற்படுகிறது. பிடிக்காத பெண்ணை மணந்து அவளை காதலிப்பது போல ஆயிரம் கதைகள் படித்திருக்கிறேன்.

ஆனால் இங்கோ வேறுமாதிரி இருக்கு. பஞ்சாயத்தில் இவள் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு காதலியைக் கரம்பிடிக்கும் ஒரு சராசரி ஆண் மகனாக கதிரின் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை.

திருமண பத்திரிக்கையுடன் நாமக்கல் சென்று அழகியை மீண்டும் திருமணம் செய்து அவளுடன் தன் வாழ்க்கையை புதிதாக தொடங்குகிறான். ஆனால் அவன் செய்த செயலுக்கு அவள் கொடுத்த வலிகள் போதுமே. வாழ்க்கையில் விழுவதும் மீண்டும் எழுவதும் இயல்பான ஒன்றுதானே? அவனின் மனதில் மட்டும் காயங்கள் இருக்காதா..? அவனின் காயங்கள் மாற ஒரு வழி இல்லையா?

ஒரு ஆணின் கர்வத்தையே உடைக்கும் பெண்ணாக அழகி. கதிர் பாவம் செய்யவில்லையே.. அவளை அவன் சந்தேகப்படவில்லையே.. மன்னிக்கும்படிதானே கேட்கிறான். அவளை முட்டாள் என்று சொன்னதற்கு பழிவாங்கும் அவளுக்கு ஒரு மனம் இருப்பது எனக்கு புரிகிறது.

ஆனால் ஒரு ஆணாக தன் மனைவி, தன் மகள் என்று அவன் எதிர்பார்க்கும் ஆசைகள் எல்லாம் இயல்பான ஒன்றுதானே. அவன் பாசத்தை காட்டும் பொழுதெல்லாம் தேளாக கொட்டுகிறாள் அழகி. அவனும் மனிதன்தானே. அவனுக்கென்று ஒரு மனம் இருக்கிறது என்று அவள் ஏன் யோசிக்க மறந்தாள்.

கதிர் – அழகி இருவரின் மீதும் தவறில்லை. நாளை அந்தக் குழந்தைக்காக அவர்கள் ஒன்றிணைய வேண்டும். இது என் வேண்டுகோள். இருவரின் கதாபாத்திரமும் உயிரோட்டமாக இருக்க காரணம் என்ன..? இந்த கதைக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு..? சீக்கிரம் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க மலர்.” என்றவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஒவ்வொரு வரியிலும் அவன் உணர்வுகளை அவன் வார்த்தைகளாக வடித்திருக்க திகைத்தாள் ஜெயா. அதுவும் அவனின் கடைசி வரி படிக்கும் பொழுது அவளின் இதயம் துடித்த துடிப்பு அவளுக்கே கேட்டது.

அவள் சிலையென அமர்ந்திருக்க, “ஜெயா இதற்கு ஒரு பதிலை சொல்லுடி.. நான் கேட்க நினைத்த கேள்வி எல்லாம் அவரே கேட்டுவிட்டார்.. இதற்கு முடிவுதான் என்ன..?” என்று கேட்டவளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தாள்..

அவளிடம் பதில் வராமல் போக, “ஜெயா..” என்றதும் நிமிர்ந்தவளின் விழியிரண்டும் கலங்கியிருந்தது..

“ஜெயா இது ஒரு கதைதானே.. இதுக்கு போய் ஏன் நீ அழுகிற..” என்று அவளை சமாதானம் செய்தாள்.. அவளை திசைதிருப்ப நினைத்த ருக்மணி, “ஜெயா வாடி கோவிலுக்கு போய் பாவாவைப் பார்த்துவிட்டு வரலாம்..” என்றவள் குளிக்க சென்றாள்..

அதற்குள் அவள் தன்னை சாமாளித்து நிமிர, “ம்ம் சரிடி சீக்கிரம் குளிச்சிட்டு வா..” என்றவள் சொல்ல ருக்மணி குளிக்க சென்றாள்.. அவள் வந்தும் இருவரும் சேர்ந்து அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்றனர்..

எங்கிருந்தோ கேள்வி கேட்ட அவளை ஆட்டிப் படைத்து கொண்டிருந்தவனின் நினைவுடனே கோவிலுக்கு சென்றாள். அடுத்து என்ன நடக்குமோ..?
 




Last edited:

GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai Sis,

Very Very Nice Update Sis..........:):cool:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top