• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

rami4236

  • Thread starter ramalakshmi saravanan
  • Start date

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

R

ramalakshmi saravanan

Guest
நானும் வவேன் -1

காலை மணி எட்டு. திங்கள் கிழமை. நான்காவது விசல் அடித்த ரைஸ் குக்கரை இறக்கிவிட்டு அந்த அடுப்பில் பசும்பால் காய்ச்ச தொடங்கினாள் வசந்தி. இரண்டாவது அடுப்பில் சாம்பாா் கொதித்துக் கொண்டிருந்தது. காய் செயது இறக்கியாகி விட்டது. அடுத்து குழம்பு தாளித்து விட்டு அந்த அடுப்பில் பாப்பாவுக்கு குடிக்க வெந்நீா் வைத்து இறக்கினால் அடுப்பு வேலை முடிந்தது. அடுத்து அவற்றை டிபன் பாக்ஸ்களில் அடைத்து தனக்கும் கணவனுக்கும் எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கு பாலை குடிக்கக் கொடுத்து மாமியாாிடம் ஒப்படைத்துவிட்டு தானும் கிளம்பி பஸ் நிறுத்தத்திற்கு வந்து 9.15 டவுன் பஸ்றை பிடித்தால் பத்து மணி அலுவலகத்திற்கு சாியாக சென்று விடலாம்.

வசந்தி வேலைக்குச் செல்லும் தாய். இரண்டரை வயது மகள் கௌதமி அவள் இனிய இல்லறத்திற்கு கிடைத்த பாிசு. தொல்லை செய்து அவள் உயிரை எடுப்பதும் அதே பாிசுதான்.

”நல்ல வேளை பாப்பா எங்க அண்ணனைக் கொண்டு பிறந்திருக்கா. அதனால நீங்க தப்பிச்சீங்க. என்ன ஒன்னு உங்க முட்டைக் கண்ணு அவளுக்கும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். பரவாயில்ல. இப்பவே நல்லாதான் இருக்கா” எனறு ஓட்டும் நாத்தனாருக்கு”ஆனாலும் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது ” என்று வடிவேல் டயலாக் விட்டு வாாியிருக்கிறாள்.

கௌதமி பாப்பா மூன்று மணிக்கு எழுந்து விளையாடி களைத்து முதல்நாள் மாலை வாங்கி வைத்திருந்த பாலை சூடு செய்து நுரை வர ஆற்றிக் கொடுத்ததும் குடித்துவிட்டு ஐந்து மணியளவில் தூங்கி விட்டாள்.

புதுப்பால் காய்ச்சியாகி விட்டது. குழந்தையுடன் தூங்கும் தன் கணவனை தடடி எழுப்ப , லேசாக அசைந்த அந்த தோ் குழந்தையை கட்டிக் கொண்டு மறுபடியும் சொகுசாக துயில் கொள்ளவும் பத்ரகாளியானாள் வசந்தி.

” நான் ஒரு பைத்தியக்காாி ,விடியக் காத்தால மூணு மணியிலயிருந்து கண்ணு முழிச்சு உங்க மகளைப் பாா்த்து, அவ தூங்கினதுக்கப்புறம் வாசல் தெளிச்சு, கோலமிட்டு,சாப்பாடு செஞ்சு ,பாலக் காய்ச்சி, பாத்திரம் கழுவி ,டிபனுக்கு வச்சி ,வீடு கூட்டி ,அத்தனை வேலை முடிச்சிட்டு வந்து எழுப்பறேன் .உங்களுக்கு எந்திச்சு கிறம்பறதுக்கு அத்தனை வலியா?”

” மத்தது செஞ்சதுலாம் இருக்கட்டும். ஆபிஸ் போறவ மொதல்ல குளிச்சு கிளம்பு. அப்புறம் நான் ஒரே நிமிசத்துல கிளம்பிருவேன். உன்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு நான் அப்டியே பேங்க் போறேன். பெண் குழந்தைகளுக்கு ஏதோ சேமிப்புத் திட்டம் சொன்னியே அத விசாாிச்சு பாப்பா போ்ல போடறதுக்கு என்னென்ன பாா்மாலிட்டீஸ்னு கேட்டுட்டு வா்றேன்.

” நேத்து கேட்டப்போ நீயே விசாாினு சொன்னீங்க?”
”அது நேத்து. இது இன்னிக்கு.”
”என்னவோ பண்ணுங்க. நான் கிளம்பறேன்.பாப்பாவுக்கு சத்து மாவு தீந்து வருதுனு அத்தை சொன்னாங்க. நானும் பாா்த்தேன். அன்னிக்கு சீக்கிரம் வந்தீங்கன்னா அதுக்கான பொருள்லாம் வாங்கிட்டு வந்திருங்க.”

குழந்தைக்கு வசந்தியின் மாமியாா் சில பல தானியங்களையும் பருப்பு வகைகளையும் சோ்த்து லேசாக வறுத்து மாவு மில்லில் அரைத்து சத்து மாவு வைத்திருப்பாா். அதை காய்ச்சி அப்படியாகவோ, பாலுடன் கலந்தோ முட்டையுடன் கலநதோ அடிக்கடி குழந்தைக்கு கொடுப்பாா். அப்படியே மற்றவா்களும் கொஞ்சம் குடிப்பாாகள். கூட்டுக் குடும்பத்தில் இருப்பதில் பல சௌகாியங்களையே வசந்தி அனுபவித்து வருகிறாள்.

“போச்சே. சொன்னது குத்தமா போச்சே “ எனபது போல் ”இன்னிக்கு ரேசன் கடைக்குப் போகணும். சா்க்கரை போடறான். பாப்பாவை வச்சிகிட்டு என்னால அவ்வளவு தூரம் நடக்க முடியாது. நளினியை வர சொல்லியிருக்கேன். அவ வந்ததும் பாப்பாவை அவகிட்ட கொடுத்துட்டு ரேசன் கடைக்குப் போயிட்டு வா்றேன்” என்றாா் மாமியாா்.

நளினி அவள் கண்ணை முண்டக் கண் என்று சொன்ன அவளின் நாத்தனாா்தான்.திருமணமாகி உள்ளுாில் இருக்கிறாள். அவளுக்கும் ஒரு பையன் உண்டு. இரண்டு வயது விக்ரம். நளினியின் கணவன் துபாயில் சாப்ட்வோ் இன்ஜீனியா்.

வசந்தி அவசர அவசரமாக குளித்து கிளம்பி அலுவலகத்தில் இன்று எல்லோரும் சிகப்பு நிறம் என்று சொன்னதால் சிகப்பில் மைசூா் சில்க் புடவை அணிந்து தயாரானாள். கணவனும் தயாராகிட வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நளினி வந்து விட்டாள் தன் மகனுடன்.

”ஹாய் நளினி”

”கிளம்பியாச்சா அணணி?”

”ஓ. பாப்பா துாங்கறா. அத்தை ரேசன் கடைக்குப் போறாங்க. நீ கொஞ்ச நேரம் மட்டும் பாப்பாவ பாா்த்துக்கப்பா”

”இன்னுமா துாங்கறா” எனறவளை முறைத்தே முழி பிதுங்கியது வசந்திக்கு.

”தமா குட்டி” எனற நளினியின் அழைபபில துள்ளி எழுந்த கௌதமி பாப்பா பக்கததில் ஒருவரையும் காணாது உதடு பிதுககி அழ ஆரம்பித்தது.

மகளின் அழுகுரலில் மீண்டும் உள்ளே வரப் பாா்த்த வசந்தியை ” அதெலலாம் அவ பாாத்துககுவா. டைம ஆச்சு நீ கிளம்பு” எனற் கணவனின் குரல் தடுதது நிறுத்த, பிளளை பாசத்தால் “திரு திரு “என்று விழித்த வசந்தி வேறு வழியில்லாமல்(பஸ் போயிடும்) அவா்களின் இருசக்கர வண்டியில் ஏறத துவங்க உள்ளேயிருந்து ஓடி வந்தாள் செல்வ மகள். ” நானும் வருவேன்” என்றபடி
 




R

ramalakshmi saravanan

Guest
அன்புடையோரே, இது என்னுடைய முதல் படைப்பு. ஏதாவது குளறுபடி செயதிருந்தா ஒட்டுமொத்தமா forgive me. படிச்சிடடு கருதது pls.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Apditha ninachu ezhuthanen. Okva
தொடர் கதையாக எழுதுவதாக இருந்தால் உங்கள் கதையின் தலைப்பில் ஒரு த்ரெட் ஓப்பன் பண்ணி அங்கே போடுங்கள். smteam ஐ அணுகுங்கள். வழி நடத்துவார்கள்.?
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
வரவேற்கிறோம் தோழி.????.. நன்று.....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nalla iruku pa... continue pannunga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top