• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன்- Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஆறுமாதங்ளுக்கு பிறகு....
பேக்கிங்கில் மும்முரமாக இருந்தனர் ரேஷ்மியும் வினயும். இன்னும் இரண்டு நாட்களில் இருவரும் யூ.எஸ் கிளம்புகின்றனர். வினயிற்கு அவனது பணியில் இரண்டு வருடங்கள் யூ.எஸ் இல் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்க அதை ரேஷ்மியின் உயர்கல்வியை தொடரும் சந்தர்ப்பமாக மாற்றியிருந்தான் வினய்.
அன்றொருநாள் ரேஷ்மியை வெளியே அழைத்து சென்றான் வினய். வழமைக்கு மாறாக அவளை சேலையில் வரச்சொன்னவன் அவளை அழகுபடுத்தல் பணியிலும் பங்கெடுத்திருந்தான்.
“வினய் எதுக்கு இப்படி பண்ணுறீங்க.... இந்த ராத்திரியில யாரு என்னை பார்க்க போறா??? அதுவும் சேலையில....” என்று சலித்தவளிடம்
“நான் இருக்கும் போது வேறு யாரும் உன்னை பார்த்திருவாங்களா??? பார்க்க தான் விட்டுருவேனா??” என்றவனை பார்த்து சிரித்தவள்
“இப்படி போனா யாரும் பார்க்க தான் செய்வாங்க...” என்று அவனை மேலும் கேலி பண்ண அவளது கண்ணில் மை வரைவதில் மும்முரமாக இருந்தவன் அந்த வேலையை முடித்துவிட்டு உதட்டு சாயத்தை கையில் எடுத்தான்.
“ லிப்ஸ்டிக் வேணாம் வினய்... நான் லிப் பாம் பூசுறேன்... என்னை க்ரூம் பண்ணுறதை விட்டுட்டு நீங்க கிளம்புற வழியை பாருங்க...” என்று கிளப்ப முயல அவனோ
“ஹேய் நான் இன்னும் என் வேலையை முடிக்கலை..” என்று நெருங்க
“யப்பா சாமி... இதுவரைக்கும் பண்ணதே போதும்... நீங்க போய் கிளம்புங்க... வெளியில யாராவது பார்த்தா அவ்வளவு தான்... நீங்க நடையை கட்டுங்க....”
“என் பொண்டாட்டிக்கு நான் செய்றேன்... யாரு என்ன சொல்லமுடியும்... சேலை கட்டிவிடுறேன்னு சொன்னேன்.... நீ தான் வேணாம்னு சொன்னேன். சரி மேக்கப்பாச்சு போட்டுவிடலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்டேன்குற....”
“ஆஹான்... நீங்க சேலை கட்டிவிடுறேன் பேர்வழினு என்னென்ன செய்வீங்கனு எனக்கா தெரியாது???...” என்று அன்றொருநாள் சேலை கட்ட உதவி பண்ணுறேன் பேர்வழினு அவன் பண்ண சில்மிஷங்கள் நியாபகம் வர பெண்ணவள் வதனம் செம்மையை கொள்வனவு செய்திருந்தது....
அதற்கு காரணமானவனோ தன் மாயப்புன்னகையில் தன்னவளை கவர முயல அவனது முயற்சியினை அறிந்த மனையாளோ அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
நேரமாவதை உணர்ந்து வினயோ
“சரி டைம் ஆச்சு... நானும் ரெடியாகனும்.. அதுனால இப்போ நீ தப்பிச்ச...இப்போ நீ பண்ண சேட்டைக்கு நைட்டுக்கு வந்து உனக்கு பனிஷ்மண்ட் தரேன்..” என்று கூறியவன் குரலோ சீரியசாக இருக்க கண்களோ கண்களை வாரியிறைத்தது.. வினயோ குளியலறைக்குள் புகுந்துகொள்ள அவனது துணைவியோ அவனது செய்கையை எண்ணி ரசித்தவாறே தயாராகினாள்.
தயாராகி முடித்தவள் வெளியே ஹாலில் காத்திருக்க வினயும் தயாராகி வந்தான்.
வெளியே வந்த வினயை பார்த்து ரேஷ்மி குழம்பிவிட்டாள். பட்டு வேட்டியில் படு அட்டகாசமாக இருந்தான் வினய். முழுக்கை சட்டையும் பட்டுவேட்டியுமாய் மணமகன் போல் வந்தவனை இமைக்கு மறந்து பார்ப்பதற்கு பதிலாக குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ரேஷ்மி...
அவளது பார்வையிலேயே அவளது மனவோட்டத்தை புரிந்து கொண்டவன் அவளை பார்த்து சிரிக்க அதில் கடுப்பானவள்
“எதுக்கு இந்த சிரிப்பு??? எதுக்கு இப்படி ஒரு கெட்டப்.. ஏதோ கல்யாண மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி வந்திருக்கீங்க.... இப்போ நாம எங்க தான் போறோம்???” என்ற ரேஷ்மி கேட்க
“எதுக்கு ஷிமி அவசரப்படுற?? நாம அந்த இடத்துக்கு போனதும் உனக்கே தெரிஞ்சிடும். கொஞ்ச நேரம் பொறுமை அவசியம் தேவி...” என்றுவிட்டு ப்ரிஜ்ஜில் இருந்த நெருக்கி தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ மாலையை எடுத்தவன் அதனை ரேஷ்மியின் தலையில் வைத்துவிட்டான். அவனது செயலில் என்றும் போல் மனமுருகியவள் வினயை இருக்கியணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன பேபி அடிப்பனு பார்த்தா கிஸ் குடுக்குற?? சரியில்லையே..”
“என் புருஷனுக்கு காதல் கிறுக்கு முத்தி போய்ருச்சு... அதனால் ஏதேதோ செய்றாரு...ஆனா என்னை சப்ரைஸ் பண்ண தான் இதெல்லாம் செய்றாருனு தெரியும்... அதான் இப்படி கிப்ட்...”
“பார்டா.. என் பொண்டாட்டி நல்லாவே தேறிட்டா...” என்று சிரிக்க அவன் மார்பில் முகம் புதைத்துகொண்டாள் ரேஷ்மி...
இருவரும் கிளம்பி நேரே வெங்கடாச்சலபதியை தரிசிக்க சென்றனர்.
வெகு நாட்களுக்கு பிறகு தம்பதிகளாக கோயிலுக்கு சென்றவர்கள் இறைவனை தரிசித்தனர். தங்களது இந்த நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறிய இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
ரேஷ்மியோ சற்று நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என்று கூற வினயோ வேறொரு இடத்திற்கு செல்லவேண்டியிருப்பதாக கூறி அவளை கிளப்பி சென்றான்.
காரில் செல்லும் வழி நெடுக ரேஷ்மி எங்கே செல்கிறோம் என்று வினவ வினயோ அவளது பேச்சை மாற்றுவதிலேயே குறியாய் இருந்தான்.
கடைசியில் கார் ஒரு பீச் ரிசாட்டின் முன் நின்றது...
ரேஷ்மி வினயை கேள்வியை நோக்க அவனோ காரிலிருந்து இறங்கி வந்து அவளை அழைத்துக்கொண்டு ரிசாட்டினுள் சென்றான்.
ரிசாட்டின் பின்புறம் அதாவது கடலுக்கு அண்மையான பகுதிக்கு அழைத்து சென்றான் வினய். அங்கு வந்த ரேஷ்மி அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தில் பிரம்மித்துவிட்டாள்.
அந்த பரந்த கடற்கரை மண்வெளியின் தொடக்கத்தில் வரவேற்புக்காக ஒரு ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது..அது முழுதும் நெட் ரக துணியால் சுற்றப்பட்டு சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது... அங்கிருந்து ஒரு சிவப்பு நிற கார்பெட் தொடங்கி தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குடியில் அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த மணமேடை வரை சென்றது...பாதைநெடுகிலும் ரோஜாப்பூ தூவப்பட்டு இருக்க இருமருங்கிலும் ரோஜாப்பூங்கொத்துக்கள் ஸ்டான்டின் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது...
இவற்றை பார்த்து திகைத்த ரேஷ்மி நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்க வினயே அவளை அந்த மணமேடைக்கு அழைத்து சென்றான்.
கைபிடித்து அழைத்து சென்றவன் நான்கு தூண்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்றும் முழுதாக ரோஜாப்பூக்களினாலும் வண்ண வண்ண ஒளி விளக்குதளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த கூரையில்லாத குடில் போன்ற மணமேடையில் ரேஷ்மியை நிறுத்தினான். இதுவரை நேரம் வினயின் செயலின் காரணம் புரியாமல் இருந்தவள் வினய் எடுத்து வந்த அந்த மென்சிவப்பு ரோஜாப்பூ மாலைகளை கண்டவளுக்கு அவனது சப்ரைஸும் அதற்கான காரணமும் புரிந்தது....
என்றோ ஒரு நாள் தான் கூறியதை நினைவில் வைத்து அதை செயலில் செய்தவனை நினைத்தவளுக்கு காதல் பெருகியது... அந்த கணத்தில் காதலை முழுவதாய் உணர்ந்தாள் ரேஷ்மி....காமம் கடந்ததே காதல் என்று அனுபவத்தில் அறிந்து கொண்டாள் ரேஷ்மி... அவளுக்காக காத்திருந்து அவளுக்காக வாழும் ஒரு ஜீவன். எத்தனை துன்பம் வந்த போதிலும் அவளுக்காய் அதை தாங்கியவன்.... அவள் துன்பத்தை தன் துன்பமாய் எண்ணி கலங்கியவன். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சிருஷ்டித்தவன்... அவளின் மனம் கவர்ந்த இறுதிநொடிவரை கவரப்போகும் அவளது கணாளன்......
காதலில் மூழ்கித்திழைத்தவளுக்கு நா எழவில்லை... ஆனால் அதற்கு மாறாக விழிகளோ மனதின் வார்த்தைகளை வெளியிட்டிருந்தது...அதை கண்டவனுக்கும் காதல் பெருக கையில் இருந்த ஒரு மாலையை அவளிடம் கொடுத்தவன் அவளை அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டான். அவனது இதழொற்றல் அவனது காதல் மொழியை அவளுக்குணர்த்தியது...
ரேஷ்மியின் கழுத்தில் தான் வைத்திருந்த மாலையை அணிவித்தவன் அவள் தன் கையில் இருந்த மாலையை அணிவிப்பதற்கு ஏதுவாக தலைகுனிந்திருந்தான் வினய்.ரேஷ்மியோ வெட்கத்தோடு குனிந்த தலை நிமிராது வினயிற்கு மாலையிட்டாள். அவள் மாலை அணிவித்ததும் நிமிர்ந்தவன் அவள் புறம் தன் இடக்கையை நீட்ட அதில் தன் வலக்கையை இணைத்தவள் வெட்கம் தந்த வனப்பில் வினயை நிமிர்ந்து பார்க்கவில்லை... தலை குனிந்தபடி இருந்த ரேஷ்மியிடம்
“ஷிமி நீ விருப்பப்பட்ட படி நம்ம கல்யாணம் நடக்கப்போகுது... பஞ்சபூதங்களும் சாட்சியாக வைத்து உன்னை நான் என்னில் பாதியாக மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்போறேன். ஆனா சூரியனுக்கு பதிலாக நான் நிலவை சாட்சியாக்கியதுக்கு காரணம் எனக்கு சுட்டெரிக்கும் சூரியனை விட தானும் குளிர்ந்து காதலர்களின் செய்தி தூதுவனாக இருந்து அவர்களது பிரிவினை ஆற்றும் அந்த வெண்ணிலவு தான் நம்ம இந்த பந்தத்துக்கு முக்கியமான சாட்சியாக தோன்றியது... கடல் தரையின் மேல் கடல்காற்று மோத அந்த ஆகாசத்திற்கு அப்பால் நின்றிருக்கும் முக்கோடி முப்பத்து தேவர்கள் சாட்சியாக உன்னை என் சரிபாதியாக ஏற்றுக்கொள்கின்றேன்....” என்று கூறிவிட்டு தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த மோதிர பெட்டியை எடுத்தவன் ரேஷ்மியின் முன் முழந்தாளிட்டு நின்றான்.ரேஷ்மியோ அவனது செயலில் உள்ளம் குளிர்ந்து போனாள். அவளது உவகையின் வெளிப்பாடாக அவளது கண்களில் இருந்து நீர் வந்தது.. கண்களில் நீருடன் நடுங்கும் தன் கரத்தினை வினய் புறம் நீட்டினாள். அவளது கையை மென்மையாக பற்றியவன் அவளது புறக்கையில் இதழ் பதித்துவிட்டு அவன் வைத்திருந்து அந்த தங்க மோதிரத்தை ரேஷ்மியின் கையில் அணிவித்தான் வினய். அணிவித்ததும் எழுந்தவன் அவளது கையை மறுபடியும் பற்றிக்கொண்டு அவர்களுக்கு முன் எழுந்து நின்ற அக்கினி குண்டச்சுவாலையை மூன்றுமுறை வலம் வரத்தொடங்கினான்.

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா...
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அழகே... அழகே... வியக்கும் அழகே....
அழகே... அழகே... வியக்கும் அழகே....
 




Last edited:

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
மனையாளின் கையினை தன்னுள் புதைத்து நீ எந்தன் உயிரின் சரிபாதி என்று செய்கையால் உணர்த்தியவன் அக்னியை வலம் வந்து தன் உள்ளத்தின் உறுதிமொழியை எடுத்துரைத்தான். அக்னி வலம் முடிந்ததும் மனையாளை திரும்பி பார்த்து புன்னகைத்தவனின் நளினத்தில் மயங்கி நின்றாள் பேதையவள்.
புன்னகையால் வசியம் செய்தவன் அதோடு நிறுத்தாமல் அவள் எதிர்பாரா நேரத்தில் பற்றியிருந்த அவளது கையை இழுக்க பஞ்சுப்பொதியாய் அவன் மீது மோதியவளின் வதனத்தை கையில் ஏந்தி கண்களில் காதல் படிக்க முயன்றுகொண்டிருந்தான் வினய். நில்லாது துறுதுறுத்துக்கொண்டிருந்த அந்த இரு விழிகளும் அவனிடம் பல கதைகள் பேசத்துடித்திட அதன் அலைப்புறுதலை புரிந்து கொண்டபோதிலும் அந்த அலைப்புறுதலை ரசிக்க விரும்பிய வினயின் மனமோ மௌனமாய் இருக்க கூறிட தனக்கான அலைப்புறுதலை கண்ட காதல் மனம் நொடிக்குநொடி அந்த அலைபுறுதலை தன்னுள் உள்வாங்கிக்கொண்டிருந்தது. காதலை பெறவிரும்புபவரிடம் இருந்து காதலை பெறுவது ஒரு சுகமெனில் காதலில் விழுந்தவரிடம் இருந்து இருமடங்கு காதலை பெறுவது இரட்டிப்பு சுகம். எந்த நொடி தன் வாழ்நாளில் ஒரு நாளாவது வரமாக கிடைக்கவேண்டுமென வினய் காத்திருந்தானோ அந்த நொடி அவனுக்கு வரமாய் அவனது மனையாளிடம் இருந்துகிட்டியது. எந்தவித எதிர்பார்ப்புக்களோ எந்தவித நிபந்தனைகளோயின்றி கண்டநொடியில் அவனுள் பூத்த அந்த காதலை இன்று தன் மனம் கவர்ந்தவளிடம் இருந்து பரிசாய் பெற்றுக்கொண்டான். அவனை அவனுக்காக மட்டுமே விரும்பும் ஜீவனவள். இந்தநொடி அன்பையும் அவன் மீதான எல்லையற்ற காதலையும் மட்டும் தாங்கிநிற்கும் பெண்ணவள்.
இவர்களது காதலில் பொறாமைக்கொண்ட தென்றலோ சற்றுப்பலமாக இவர்களை தீண்டிச்செல்ல அதன் வேகத்தை தன் அசைவால் உணர்த்திக் கொண்டிருந்தது தென்னையோலைகள். கரையிடம் காதல் கொண்ட அலைகளோ தன் காதலனிடம் இருந்து நொடிக்கு நொடி விலகும் துன்பத்தால் உழன்று கொண்டிருக்க அதனை தன் இரைச்சலால் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.மானிடரின் காதல் பரிமாற்றத்தையும் அதை கண்டு பொறாமைக்கொண்ட இயற்கையின் படைப்புக்களின் செயல்களையும் வானம் தனக்கான இடத்திலிருந்து ரசித்துக்கொண்டிருந்தது வெண்ணிலவு. பல காதலர்கள் தூதுவனாய் பலநூற்றாண்டுகளாக சேவகம் செய்த அந்த வெண்ணிலவிற்கு இந்த காதல் காவியம் ஒன்றும் புதிதல்லவே....
ரேஷ்மியின் வதனத்தை ஏந்தியபடியிருந்தவனுக்கு ஏனோ இந்தநொடி இன்னும் நீளாதா என்றிருந்தது. காதலை கோடிகோடியாய் கொட்டியிறைத்துக்கொண்டிருந்த அந்த கண்களை வாழ்நாள் முழுவதும் நொடி தவறாது கண்டுகளிக்க அவனது மனம் மன்றாடிக்கொண்டிருந்தது... உணர்வுகளை தெள்ளத்தெளிவாய் உணர்த்துவதற்காக அடிக்கடி மேலெழும்பி கீழிறங்கும் இயற்கையாகவே சீர்செய்யப்பட்ட அந்தவிரு புருவங்களுக்கிடையில் சிக்கித்தவித்தது அவனது காதல் மனம். செவ்விதழ்களும் அடிக்கடி செம்மையை கொள்வனவு செய்யும் அந்தவிரு கன்னங்களும் அவனை மண்டியிடவைத்தது.
கணாளனோ மனைவியிடம் சிக்கித்தவிக்க மனம் கவர்ந்தவளோ தன்னவனின் காதல் தனக்கு மட்டும் கிடைக்கப்பெற்றதில் பேரானந்தம் கொண்டிருந்தாள். நொடிக்கொரு தடவை அவர் காதல் மனம் உரைத்த என்னவன் என்ற சொல் அவளது கர்வத்தை அதிகரித்தது. அந்த கர்வம் அவளை அந்த வார்த்தையை சொல்ல உந்தியது.
“வினய் ஐ லவ் யூ சோ மச்.... உங்களை எவ்வளவு லவ் பண்றேனா... அது சொல் முடியாது... நான் உறவை காதல் என்கின்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது... நீங்க என்னுடைய ஹஸ்பண்ட் அப்படினு சொல்வதை விட என்னுடைய இன்னொரு அப்பா... இன்னொரு அம்மா... ஒரு பையனுக்கு தாய்க்கு பிறகு தாரம்னு சொல்லுவாங்க... ஆனா ஒரு பொண்ணுக்கு அவளோர பெத்தவங்களுக்கு பிறகு அவளோட கணவன் தான் எல்லாமேனு உங்ககூட வாழ்ந்த இந்த கொஞ்ச நாளில் புரிஞ்சுக்கிட்டேன். நான் அழுதா எனக்காக கலங்கி நான் சிரிக்கும் போது என்னோடு சிரித்து என்னோட கண்ணாடியாக நீங்க இருந்திருக்கீங்க... கொஞ்ச காலமாக இருந்தாலும் ஏதோ உங்களோடு பல ஜென்மங்கள் வாழ்ந்த மாதிரி தோனுது... ஒருபொண்ணுக்கு ஒரு அம்மாவா அப்பாவா ஒரு நண்பனா ஒரு கணவன் கிடைப்பது வரம். அப்படி ஒரு வரம் நீங்க... நான் உங்களை எவ்வளவு கஷ்படுத்தியபோதும் என்னோட நிலையில் இருந்து யோசிச்சு எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சீங்க... உங்க அன்பை புரிஞ்சிக்காம உங்களை கஷ்டப்படுத்துனதுக்கு என்னை மன்னிச்சிருங்க....”
“ஹேய் எதுக்கு ஷிமி மன்னிப்பு எல்லாம். நீ என்னோட வைப். பெட்டர் ஹாப்... நீ உன்னுடைய சுகத்தையோ கஷ்டத்தையோ கோபத்தையோ காதலையோ என்கிட்டதான் காண்பிக்க முடியும். உன்னுடைய உணர்வுகளுக்கு ஒரே வடிகால் நான். அதனால நான் எதையும் பெரிசாக எடுத்துக்கலை.... ஆனா நீ அப்படி இருந்தது தான் நம்ம காதலை இன்னும் வலுவாக்கியது... இப்போ மட்டும் இல்லை.. நம்ம வாழ்க்கை முழுவதும் நான் உனக்காக எப்பவும் இருப்பேன். எல்லாமா... இது இப்போ நான் உனக்கு பண்ணித்தர ப்ராமிஸ்...”
“இது போதும் வினய்... இந்த ஒரு வார்த்தை போதும். இந்த நொடி எனக்கு போதும்... இந்த நொடி என் உயிர் என்னைவிட்டு பிரிஞ்சாகூட நான் கவலைப்படமாட்டேன்” என்றவளது வாயினை தன் கைகளால் அரணிட்டவன்
“ஸ்.... என்ன பேசுற ஷிமி... நாம இப்போ தான் நம்ம லைப்பை ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். அதுக்குள்ள சாவை பற்றி பேசுற... இன்னும் நம்ம லைப்பில் எவ்வளவு இருக்கு... நமக்கு குட்டி பாப்பா பொறக்கணும். அதை நம்ம வளர்க்கனும்.அதோடு உன்னை நான் இன்னும் திகட்ட திகட்ட காதலிக்கனும் .... இப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு... அதைவிட்டு சாகப்போறியா...” என்று சற்று கோபமாக பேசி அவளை விட்டு விலக முயன்றவனை கைபற்றி தடுத்த ரேஷ்மி
“டேய் புருஷா... ஏதோ கொஞ்சம் இமோஷனல் ஆகி அப்படி பேசிட்டேன்... அதை ஏன் சீரியசாக எடுத்துக்கிட்டு கோவிச்சிக்கிற??? உன்னை மாதிரி எனக்காக ஜொல்லுவிடத்தெரியாதுபா... அதான் கொஞ்சம் சொதப்பிட்டேன்...நெக்ஸ் டைம் இப்படி சொதப்பமாட்டேன்... சரியா?” என்று கேட்டுவிட்ட கண்ணடிக்க அதில் மொத்தமாய் கவிழ்ந்தான் வினய்.
அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை கையில் ஏந்தியவன் அங்கு அமைக்கப்பட்டிருந்த இன்னொரு குடிலுக்கு அழைத்து சென்றான்.
அந்த குடிலும் முழுவதுமாய் அலங்கரிக்கப்பட்டிருக்க அதன் ஒருபுறம் புப்பே முறையில் உணவு ஒழுங்கமைக்கப்பட்டிருக்க மறுபுறம் மேசையுடன் இரண்டு கதிரைகள் போடப்பட்டிருந்தது. குடிலின் இரண்டு வாசல்களும் திரையின்றி திறந்திருந்தது.பின்புற வாசல் கடலை பார்த்தபடி இருக்க அங்கிருந்த பார்க்கும் கடலின் அழகு கண்களுக்கு விருந்தாகியது. அதனுடன் தென்றலின் வருகையும் கடலலைகளின் நாதமும் சேர்ந்து கொள்ள ரொமேண்டிக் லொக்கேஷன் ஒன்று உருவாகியது. ரேஷ்மியை தூக்கியபடி வந்தவன் அவளை இருக்கையில் அமர்த்திவிட்டு அவளுக்கு உணவு எடுத்து வந்தான்.
இருவரும் பேசியபடி உணவருந்தி முடித்ததும் வினய் ரேஷ்மியிடம்
“ஷிமி உனக்கொரு சப்ரைஸ்...”
“அப்போ இவ்வளவு நேரம் நீங்க செய்ததுக்கு பெயரென்ன வினய்??”
“அதுவும் சப்ரைஸ் தான் மா... ஆனா அதை நீ ஏதோ கொஞ்சமாவது கெஸ் பண்ணியிருப்ப... ஆனா நான் இப்போ சொல்லப்போற விஷயம் நீ எதிர்பார்க்காதது??”
“அது என்ன வினய்???” என்று ரேஷ்மி கேட்க அவனது மொபைலை எடுத்தவன் அதிலிருந்து ஏதோ எடுத்து அதை ரேஷ்மி காட்டினான். அதை பார்த்தவளுக்கு மகிழ்ச்சி...
“ஹேய்... கண்கிராஜ் வினய்... இட்ஸ் அன் அன் எக்ஸ்பெக்டட் சப்ரைஸ் பா.. எப்படி வினய்??”
“இது ஆல் ரெடி கிடைத்த ஆப்பர் தான்... நான் தான் கொஞ்ச நாள் டிலே பண்ணேன். நான் லாஸ்ட் டைம் யூ.எஸ் போனப்போதே என்னை அங்க வந்து டூ இயர்ஸ் வர்க் பண்ண சொன்னாங்க... நான் தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். நீயும் அப்போ முடியாமல் இருந்த அதான் அப்போ போகலை... மறுபடியும் கூப்பிட்டாங்க... நல்ல ஆப்பர்...மிஸ் பண்ண விரும்பலை அதான் ஓகே சொல்லிட்டேன்.”
“ஓ.. அப்போ டூ இயர்ஸ் யூ.எஸ் தானா?? எப்போ கிளம்புறீங்க...??” என்று உற்சாகம் குறைந்த குரலில் கேட்டவளிடம்
“டூ இயர்ஸ் தான்.. நான் மட்டும் இல்லை நீயும் என்கூட வர்ற... வந்து நீ ஆசைபட்டபடி உன்னோட மாஸ்டர்ஸை அங்க கண்டினியூ பண்ணப்போற....” என்று மேலதிக தகவலையும் கூற திகைத்துவிட்டாள் .
“என்ன வினய் சொல்லுறீங்க??”
“ஆமா பேபிமா... நீங்களும் என்கூட வர்றீங்க உங்க மாஸ்டர்ஸை கண்டினியூ பண்ண... உன்னை ஆல்ரெடி மாஸ்டர்ஸிற்கு யூ.எஸ் அனுப்பியிருப்பேன்.பட் நான் அப்படி செய்திருந்த நான் ஆசைப்பட்ட மாதிரி எனக்கு உன்னோட காதல் கிடைச்சிருக்காது... ஒரு நன்றிக்கடனாகத் தான் கிடைச்சிருக்கும். இது சுயநலமாக தெரிஞ்சாக்கூட நீ எனக்காக மட்டும் என்னவளாகனும்னு என் மனம் விரும்பியது.. அதுக்கு காலமும் நேரமும் சாதகமாக அமைய நாம இரண்டு பேரும் இப்போ யூ. எஸ் போறோம். இன்னும் வன் மன்த்தில்...” என்ற வினயின் வார்த்தையில் உருகிநின்றாள் ரேஷ்மி. காதல் என்ற வார்த்தையில் சுயநலமும் அடக்கம் என்று எவ்வளவு அழகாக உரைத்துவிட்டான்.
தன்னிருக்கையிலிருந்து எழுந்து வினயருகில் வந்தவள் அவளை இறுக அணைத்து முகம் முழுதும் தன் இதழால் முத்திரை பதித்தாள். அவனது காதல் அவளது நாவினை கட்டிவிட்டது... அவனது காதல் அவளது மனதை கவர்ந்துவிட்டது... அவனது காதலை அவளது ஐம்புலனையும் வேலைநிறுத்தம் செய்துவிட்டது...
காதல் என்ற வார்த்தைக்கு எவ்வளவு சக்தி.... உணர்வாகியபோதும் அதன் பலம் வாள் சுழற்றும் வீரனிடமோ பகைவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தனித்து நிற்கும் அரசனின் அஞ்சாநெஞ்சத்திற்கு உள்ள பலத்திலும் உறுதியானது...

காதலாய் கசிந்துருகி
காதலாய் கரைந்து
காதலால் கதைபேசும்
காதல் நெஞ்சங்களுக்கு தேவையில்லை கடிதங்களும் மொழியும்...

வினயும் ரேஷ்மியும் தத்தமது காதலை உணர்ந்த நிமிடமே அவர்களது காதல் பூத்துவிட்டது.. அது காயாகி பழமாகி விருட்சமாகி படர்ந்து நிற்கும் காலத்தில் அவர்களது காதலின் ஆழம் கூடுமே தவிர குறையாது.
அவனுக்காக அவளும் அவளுக்காய் அவனும் ஏங்கும் நாட்கள் இருக்கும் வரை காதல் பெருகியே செல்லும்.
இரண்டு நாட்களில் யூ.எஸ் கிளம்பியவர்களது கனவு நினைவேறவும் அவர்களது காதல் இன்று போல் என்றும் மெருகேறி ஜொலிக்கவும் இறைவனை வேண்டி நாமும் விடைபெறுவோம்.

உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி
எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
ஒருவாட்டி
என உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை
மெத்தையும் ராத்திரி
பூத்திரி ஏத்துற வேளையில
கருவாட்டு பான
கெடச்சாக்க பூன விடுமா
சொல்லடி சுந்தரி நெத்திலி
வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம்
உட்காந்து மாவாட்டும்
நேரம்தான் உன் கைய
நீட்டாத முந்தானை
ஓரம்தான்
பூவாடை
தூக்காத பூபாளம்
தாக்காத
நீ முத்தி
போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி
நான் முந்தாநாளு
ஆளானதா என்னுது உன்
நெஞ்சு
உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம
இருப்பேனே பகல் இரவா
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி

★★★★★★★★★★★★★★★★★★★

வணக்கம் நட்பூக்களே...
இவ்வளவு நாட்களாக என்னுடன் பயணித்த அனைத்து வாசக பெருமக்களுக்கும் எனது நன்றிகள்... கதையின் குறைநிறைகளை இதுவரைகாலம் தெரித்த அனைத்து நட்புக்களுக்கும் என்னுடைய நன்றிகள். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை... யாரும் இதை சீரியசாக எடுக்க வேண்டாம். இது நடைமுறையில் இருக்கானு எனக்கு தெரியலை.. ஆனா நடைமுறையில் இருப்பதையே கதையில் சொல்லனும்னு இல்லையே... அதான் எனக்கு சரினு தோன்றியதை எழுதுனேன்...
நன்றி நட்பூக்களே....

இப்படிக்கு,
அனு சந்திரன்❤❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top