• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். எபிசோட் 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Screenshot_2019-08-09-07-17-28.jpeg


கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் ….
- சாரல்


அத்தியாயம் 27

விடிந்தும் விடியாததுமாய் இருந்தது அந்தக் காலைப் பொழுது…
தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தாள் ரோஜா…

“ஏய் … ஜா… என்னடி பண்ணுது…? ஏன் இப்படி உருளுற…? அம்மாவைக் கூப்பிடட்டா…?”

“இல்லை கிருஷ்… எங்கம்மாப்பா இருந்திருந்தா, இந்நேரம் வளைகாப்பு முடிஞ்சு ஊர்ல எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க தான…? எல்லாரும் வந்தாங்க, சாப்பிட்டுட்டு போயிட்டாங்க…அவ்வளவு தான் இல்லை…?”

“என்ன ஆச்சுடி உனக்கு…இங்க என்ன குறை…? எங்கம்மாக்கு நீன்னாதான் உசிரு…நீயே இப்படி ஃபீல் பண்ற…?”

“ஏன்டா இப்படி மீ கூட என்னை கோர்த்து விடற…? எனக்கும் மீ மட்டும் தான் உலகம்… இந்த உலகத்திலேயே உனக்கு அப்புறம் அவங்கதான் எனக்கு எல்லாம்… இன்ஃபேக்ட் சில டைம் உன்கிட்ட ஷேர் பண்ண முடியாத விஷயங்களை கூட அவங்க கிட்ட ஷேர் பண்ண முடியும்… ஆனா இது வேறடா…”
“இப்படி நான் ஒரு குழந்தைய சுமக்குற நேரத்துல, நான் கருவாகி பிறந்து வளர்ந்த என் வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்…என் அம்மாவை இல்ல… இப்ப புரிஞ்சுதா…?”

மூக்கை பிடித்து ஆட்டியவள் கிருஷின் நெஞ்சிலேயே உறக்கம் கொள்ள, புரிந்தும் புரியாமலும் கிருஷ் முழித்து கொண்டிருந்தான்…

அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு, கீழே வந்தவன், நேராக சென்றது கிட்செனை உருட்டி கொண்டிருந்த வேதாவிடம் தான்…

“ஆளே இல்லாத ஊருல யாருக்கும்மா டீ ஆத்துற…?”

“ம்…….நான் பெத்து போட்ட எரும கிடாவும், வளர்த்து விட்ட எருமை கன்னுகுட்டியும் காலையில எழுந்ததுமே , கழநித் தண்ணி முகத்துலதான் முழிக்குங்க… அப்ப காலா காலத்தில கழநித் தண்ணியை காய்ச்சி வச்சாத்தானே ரெண்டு எருமைங்களையும் மேய்க்க முடியும் அதான்….”

“எப்படியோ நீ போடுற டீ கழநித் தண்ணின்னு ஒத்துகிட்டியே….”
“இது போதும் எனக்கு இது போதுமே…
வேறென்ன வேண்டும் , கழுவிய தண்ணி போதுமே…” பாடிக்கொண்டே நகர,


“காலையிலேயே வம்பு வளர்த்துகிட்டு… போட்டென்னா பாரு…”
“ரோ எங்கடா…? இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே…? உடம்பு சரியில்லையா…? எதுவும் பிரச்சனையா இருந்தா என்ன கூப்பிட வேண்டியது தானே… தண்டத்துக்கு பிறந்திருக்கு பாரு…முதல்ல மேயரது முக்கியம் உனக்கு”

மாடிக்கு செல்ல எத்தனித்தவரை நிறுத்தி….,

“தாய்க்கிழவி நில்லு… இன்னும் உனக்கு பதினாறு வயசு பருவ மங்கைன்னு நினைப்பா …. பாய்ஞ்சுகிட்டு படியேர்ற…? சொல்றதை கேளு ஃபர்ஸ்ட்….”
“அவள நாம இவ்வளவு கவனிச்சும் ,சொந்த ஊர சொந்த வீட்டை ரொம்ப மிஸ் பன்றாளாம்…அவ பெத்தவங்க இருந்திருந்தா கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ரொம்ப ஃபீலிங்….தூக்கம் வராமல் புரண்டு இப்போ தான் தூங்குறா… இதுக்கு மேல எப்படித்தான் பார்த்துக்கிறது இந்த கிறுக்கிய…”

“வாய் மேலயே போடுவேன் , கிறுக்கின்னு சொல்லிட்டு இருந்தால்…., இதுலாம் புள்ளத்தாச்சியா இருந்திருந்தால் தான்டா தெரியும்… நீ வயித்துல இருக்கும் போது எங்க ஊரு மணியண்ணன் கடை இனிப்பு போண்டா வேணும்னு ஆசைப்பட்டென்னு , என் கோந்து கார் வச்சு கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்தாரு…”
“ புள்ளைக்கு அப்பனா பாசம் காட்டுற யார் வேணும்னாலும் இருந்திடலாம்டா ஆனா கடைசி வரை நல்ல துணையா இருக்க, கொஞ்சமாச்சும் அவள் இருக்கிற இடத்தில இருந்து யோசிக்க தெரிஞ்சிருக்கணும்… இது ரெண்டு பேருக்கும் பொருந்தும்… நாம குடுத்த வாழ்க்கையில தான் வனப்பா வாழுறாங்கிற இறுமாப்பு தெரியுது உன் பேச்சுல….இது நல்ல வளர்ப்புக்கு அழகு இல்லை…அவ உன்னை கட்டிக்கிடலன்னா நீ காலம் முழுக்க மொட்டை பையன் டா… ஒரு நாயி உன்னை மதிச்சிருக்காது… இப்ப குடும்பஸ்தனா யோக்கியனா நடந்துக்க, இன்னும் நான் என்னுதுதான் பெருசுன்னு நினைப்போட திரிஞ்ச , ரோ கிட்ட, உன்னை டைவேர்ஸ் பண்ண சொல்லிடுவேன் பார்த்துக்க….”

“ஆனா ஒன்னு , அவ கிறுக்கி தான்டா…. இவ்வளவு நாளா என்னடி ஆசைன்னு வளைச்சு வளைச்சு கேட்டுட்டு இருந்தேன்… அப்படியெல்லாம் கேட்ட என்கிட்ட சொல்லாம கேணகிறுக்குப்பய உன்கிட்ட சொன்னா பார்த்தியா…? என்ன செய்யலாம் அவளை…?”

“இந்தா பாரு தாய்க்கிழவி , சரி தப்பு பண்ணிட்டேன் நான் ஒத்துக்கிறேன்… அதுக்குன்னு கேணை கோனைன்னு கழுவி ஊத்தாம ,என்ன செய்யறதுன்னு சொல்லு… உன் ஆளு அவர் ரேஞ்சுக்கு காரு வச்சு அழைச்சுட்டு போனாரு…, என் ரேஞ்சுக்கு கப்பல் வச்சு அழைச்சுட்டு போலாம்னா , இவ ஏரியால கடல் இல்லை… பேசாம குழி தோண்டி கால்வாய் அமைச்சுரவா…?”

“ஆமாம் பெருசா காவாய் நோண்ட வந்துட்டான்….,ஒரு வாய்க்கால் கூட நொண்ட முடியாது ,வாயைப் பாரேன்…”
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
“நான் முடிவு பண்ணிட்டேன்… ரோ வை தஞ்சாவூர் கூட்டிட்டு போயி , பிரசவம் முடியற வரை அங்கேயே வச்சிருந்து, பேரப்புள்ள கூட தான் இந்த வேதா ரிட்டர்ன்ஸ்…” ,

“ஆமா உன்னை அங்க ஆரத்தி எடுத்து வரவேற்க வரிசை கட்டி நிக்குறாங்க அவ மாமா, பெரியம்மா எல்லாம்… நடக்குற காரியத்த பேசும்மா…”

“ரோ ஆசைப்பட்டது ,அவ பெத்தவங்களோட வாழ்ந்த இடம் தான்… பூட்டி கிடக்கிற அவ அப்பா அம்மா இருந்த வீட்டை சரி பண்ணி, டாய்லெட் பாத்ரூம் கட்டணும்…இவளுக்கு தோதுவா இருக்கிற மாதிரி பண்ணனும்…குறிப்பா இவளுக்கு நல்ல ஹாஸ்பிட்டாலா பார்க்கணும்… நான், ரோ,லட்டு மூணுப் பேரும் தஞ்சாவூருக்கு போறோம்… நீ இங்கேயே இருந்து மேய்க்க வேண்டிய கழுதைகளை மேய்ச்சிட்டு இரு…"

“வாங்களேன்….. அஸ்க்கு… புஸ்க்கு… நீங்க எல்லாரும் கிளம்பி அங்க போயிட்டா ,நான் மேய்க்க கழுதைக்கு எங்க போவேன்… மரியாதையா என்னையும் கூட்டிட்டு போங்க…”

“இளாவும் ஊர்ல இல்லை, ஆசிர்வாத், வேதாஸ்ன்னு ரெண்டையும் கவனிக்கணும் அதோட சாருக்கு பொண்டாட்டி ஆசைப்பட்டதை நிறைவேத்துற அளவுக்கு டைமும் மனசும் இருக்குதோ என்னவோ… அங்க வந்து உக்கார்ந்துகிட்டு இவளால ஏழு கோடி நஷ்டம்,எட்டு எடத்துல குஷ்டமுன்னு சவுண்ட் உட்டு சீனைப் போடுவ… நீ ஆணியே புடுங்க வேணாம் சாமி…”

“என்னப் பேச்சு இது…? ஒரு பெரிய மனுஷன் செஞ்ச தப்பை ஒத்துகிட்டு சரெண்டர் ஆனா,அதை மதிக்காம,அவனை சல்லிப்பய மாதிரி வச்சு பேசறது… நீயும் அந்த சோத்து மூட்டையும் இங்கேயே இருங்க…நானும் என் டார்லிங்கும் என் மாமியார் ஊட்டுக்கு போறோம்… எனக்கு புள்ளை பொறந்ததும் உன் கிட்ட இருந்தா, அந்த பிஞ்சு மனசுலயும் நஞ்சை கலந்து உன் டீம்ல சேர்த்துப்ப, போ… நாங்க போறோம் ஊருக்கு…”

“சரி எல்லாரும் போலாம்… வேணும்னா திருச்சி யில இருந்து, ஃப்ளைட் புடிச்சு வந்து சென்னையில எல்லாத்தையும் பார்த்துக்க… லட்டுவையும் திருச்சி ஆராஸ் க்கு டெய்லி கார்லயே அனுப்பிடலாம்… தஞ்சாவூரில் இருந்து ஒரு மணி நேரம் தான் ஆவும் அங்க போக… அதுவும் சும்மா , வீட்டுலயே பொத்தி வச்சா பொறுப்பு இல்லாம போயிடும்…”

“அப்போ ஆக வேண்டிய ஏற்பாட்டை கவனிக்கிறேன்… சர்ப்பிரைசா செய்வொம்மா… குறிப்பா ரோஜா அடிச்சு கேட்டாலும் நான் தான் இவ்வளவும் பிளான் பண்ணி அவளுக்காக பண்ணினேன்னு சொல்லணும் நீ… இதை மட்டும் செஞ்சா, எனக்கு அம்மாவாக தாங்கள் பிறந்ததுக்கு இந்த ஒரு முறை மட்டுமாவது சந்தோஷப்படும் வாய்ப்பை தாருங்கள்…”

அதற்கு மேலே அங்கே நிற்காமல், கையில் காபியை எடுத்துகொண்டு ஜூட் விட்டு விட்டான். வேதாவிற்கு முகம் முழுக்க புன்னகை அப்பியிருந்தது…
ரோஜாவின் சொந்த ஊரில் வீடு புதுப்பிக்கும் வேலை ஜரூராக நடந்தது… ஆனால் இளாவின் தலைமையில்…
ரெண்டு வார நாடோடி வாழ்க்கைக்கு பிறகு , கொஞ்சமா மனசு அமைதியாக, தேடி தேடி வேலை செஞ்சிட்டு இருந்த இளாகிட்ட ,கிருஷ் ரோஜாவின் ஆசையை சொன்னதும் நானே ரோஸ்க்காக இதை பன்றேண்டான்னு சொல்லி வேலையில் இறங்கிட்டான், வீட்டை பலப்படுத்தி புதுபிச்சதோட இல்லாம, ரோஜா குழந்தையா இருந்தபோது அந்த வீட்டில என்னென்ன இருந்ததோ , அதையெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, தூரத்து சொந்தக்காரங்ககிட்ட கேட்டு, கிட்டத்தட்ட கட்டில்,சேர்,ஊஞ்சல்ன்னு நிரப்பிட்டான்…

குறிப்பா அவன் ஆளு ரூம்லயும் , ஆராவுக்கு தேவையான டூல்ஸ், டிஸைனர் டேபிள், பின் போர்டு, மெஷின், டிசைன் பண்ணின டிரெஸ்ஸை போட்டுப் பார்க்க டம்மி மாடல்ன்னு ,அங்கங்க லவ் டச் பண்ணவும் மறக்கல… அதாவது காதலால் மனசை தொடுறராமா…
என்னத்த தொட்றப்பா நீ…ஒரு ஃபீலிங் சையும் காணோமே அந்தம்மா கிட்ட,
அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, ஆராகிட்ட ஒரு மாற்றம்…, அடுத்தவன் கொட்டாவி உட்டா ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே தானா வாயைப் பொளக்கிறது போல, அடுத்தவன் புளியங்காய் தின்னா ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே நமக்கு நாக்கு கூசுறாப் போல, ஏதோ ஒரு தடுமாற்றம்… எதுக்குன்னு சுத்தமா அவங்களுக்கு புரியல…

ஒரு நல்ல நாளில் சர்பிரைசாக சொந்த வீட்டிற்க்கு அழைத்து வரப்பட்ட ரோஜா,ஆனந்தத்தில் அழுது தீர்த்து விட்டாள்…கிருஷ்சிர்க்கும் வேதாவுக்குமே மிகவும் சந்தோஷம்… வீட்டில் ரோஜாவுக்காக பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த இன்டீரியர்,வேதாவின் அறை என்று எல்லாம் ஆச்சர்யம்…

ஆராவோட ரூமுக்கு போயி பார்த்த கிருஷ் அசந்துவிட்டான்…அவ ரூமில மட்டும் மாடர்ன் இன்டீரியர்… அதுவும் அவளுக்கு டிசைனிங்கிற்கு தேவையானபடி அமைக்கப் பட்டிருந்ததை பார்த்து,

உடனே இளாவுக்கு ஃபோனை போட்டு,
“டேய் , டுபாக்கூர்…. உண்மைய சொல்லுடா…? ஏன் ஆளுக்காக வீட்டை ரெடி பண்ணியா இல்ல உன் ஆளுக்காக மெனக்கெட்டு பண்ணியா…?”
………..

“என்னது என்னா பிரச்சனையா…? கொய்யால, என் ஆளு ரூமை விட உன் ஆளு ரூமுக்கு ரெண்டு டோஸ் மேக் அப் கூட இருக்கு… என் மாமியார் ஊட்டை என் பொண்டாட்டிக்காக ரெடி பண்ண கொடுத்தா ,அதுல சார் தாஜ்மஹால் கட்டப் பார்த்திருக்க….”
…….

“ஆனா அந்தம்மா கிழிக்கிற கிழிக்கு வீட்டுல டிசைனர் செட் அப் வச்சதுக்கு பதிலா டிசைன் டிசைனா நாலு தட்டு வாங்கி கொடுத்திருக்கலாம்….அவ பார்க்கிற வேலைக்கு பொருத்தமா இருந்திருக்கும்….ஹி…ஹி…ஹி…”
.... ஃபோன் கட்டாகிவிட…
“அதானே ,நம்ம ஹியூமர் சென்ஸ் டெவலப் ஆனா இந்த வீட்டுல யாருக்கும் பிடிக்காதே….”


சொல்லிக்கொண்டே போய் விட…. பின்னால் நின்று கொண்டிருந்த ஆராவிற்க்கு இனம் புரியாத வெட்கம்… மலர்ந்த புன்னகையை நிரப்பியிருந்தது அவள் முகம் …
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
ஃபோனில் கூட, இளா , ஆராவிடம் அதிகம் பேசாததால்,
இளாவுக்காக இளவுக்காத்த கிளி வாட்ஸ் ஆப்பிலேயே வெயிட்டிங் , ஸ்லீப்பிங் எல்லாம்… ஆனா சாரோட மொபைல், பிரைவசி மோடில, ஏன்னா சாருக்கு எதிலும் சுத்தமா மூடில்ல…

ஆரா ஆராஸ்க்கு காரிலேயே போனாள்…திருச்சி ஆசீர்வாத்திற்கு பின் பக்கத்தில் அமைக்கப் பட்டிருந்த ஆராஸ்,இது வரை வெறும் ஆன்லைனில் மட்டுமே இவள் டிசைன் செய்து தர , அதை அங்கு உள்ள ஸ்டிச்சிங் யூனிட் தைத்து டிஸ்பிளே டம்மிக்கு போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்…, இப்போது தேவையான கஸ்டமர்களுக்கு அங்கேயே அளவெடுத்து, விரும்பும் டிசைனில் உடையை தயாரித்து தரும் விதத்தில், அவளுக்கு என்றே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டிருந்தது… அதுவும் அவளது அறையுடன் ஒரு படுக்கை கொண்ட தடுப்பும் உள்ளவாறு …..எல்லாம் அவன் செயல்…. ஆசீர்வாத்தையும் அவளே பார்த்துக் கொண்டாள்.

பொண்ணு வெளியில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க கூடாதுன்னு வீட்டுல இருந்து புட் பேஸ்கட் டூம் கூடவே போனது…
அதை பார்த்துட்டு சும்மா இருந்தா ,அவன் கிருஷ் இல்லையே…

“ஏய் புட் பாண்டா… தஞ்சாவூரில இருந்து திருச்சிக்கு போக ஒரு மணி நேரம் ,வர ஒரு மணி நேரம், பத்து டூ அஞ்சு வேலை செய்யரது,சாரி கடையில இருக்கிறது ஏழு மணி நேரம்… இப்படி மொத்தமாவே ஒன்பது மணி நேரத்திற்கு
ஒரு நாளைக்கு ஒன்பது டிஃபன் பாக்ஸை மூட்டைக்கட்டி பெரிய கூடையில போட்டு எடுத்துட்டு போற, இங்கயிருந்து எடுத்துட்டு போயி ,அங்க உக்கார்ந்து தின்னுபுட்டு அங்க இருந்து இங்க ரிட்டர்ன் ஆவுறதுக்கு பேசாம இங்கேயே உக்கார்ந்து திங்கலாமே… ?”

அவ்வளவு தான் பேஸ்கட்டை எடுத்து வீட்டிலேயே வச்சிட்டு போயிட்டா…

வேதா பார்த்துவிட்டு ஓடி வருவதற்குள் , அவள் காரை கிளப்பி கொண்டு சென்று விட,
“எருமை…எருமை …. எதையாவது பேசி அவளை திங்க விடாம பண்ணிட்ட போதுமா உனக்கு…. இந்தாக் கூடை கொண்டு போயி மொத்தமா கொட்டிக்க…”

“நீ புளிச்சு போன பழைய சோத்தை ,புது டிஃபன் பாக்ஸில போட்டு பேக் பண்ணி கொடுத்தா, அவ எப்படி எடுத்துட்டு போவா… மானஸ்தி , தூக்கி கடாசிட்டு போயிட்டா… இனிமேலாவது நல்லா ,என் தங்கச்சி ருசிச்சு திங்கற மாதிரி செஞ்சு கொடு தாய்க்கிழவி….”

“எருமை…உன்னை திட்டியும் பார்த்தாச்சு,அடிச்சும் பார்த்தாச்சு… கை வலிதான் மிச்சம்..”

“அட பொங்காத இரும்மா… இங்க ஆசிர்வாத் மேனேஜர் சிவகுரு கிட்ட சொல்லி லஞ்ச் வாங்கித் தந்திட சொல்லிடுறேன்… அவசரப் பட்டு ஒரு உத்தம புத்திரனை ஒன்னும் சொல்லிடாத ராஜமாதா….”

ஒரு வழியா கூல் ஆன வேதா,
“அப்படியே, காலையில பதினொரு மணிக்கு கட்லெட் கூட ஒரு கப் சாக்லேட் காம்ப்ளான்னும், ஈவ்னிங் நாலு மணிக்கு சாண்ட்விச் கூட ஒரு ஸ்வீட் கார்ன் இல்லைன்னா மஷ்ரூம் சூப்பும் வாங்கிக்கொடுக்க சொல்லுடா…”

“எதுக்கு…. பேசாம…, ஏதாவது நல்ல ஓட்டல்லா பார்த்து உன் பொண்ணை தங்க வைக்க சொல்லிடுரேன், நிமிஷத்துக்கு ஒரு அயிட்டத்த எடுத்துட்டு போயி அவ வாயில போட்டுக்கிட்டே இருப்பாங்க….ஏதாவது சொல்லிடப் போறேன் ஒழுங்கா நீயா தப்பிச்சு ஓடிப் போயிரு…”

வேதா எஸ்கேப்…

ஆனால் அந்த சாப்பாட்டை வைத்துவிட்டு வந்தது, ஆராவிர்க்கு திருப்புமுனை சம்பவம் ஒன்று நிகழ காரணமாய் இருந்தது… அன்னைக்கு ஆராஸ்ஸின் இரண்டு ஸ்டாஃபை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ரெஸ்டாரன்ட்க்கு ஆரா லஞ்ச்சிர்க்கு போக,
அங்கே அம்பது வயதை கடந்த ஒரு பெண்மணி, கண்ணீரோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததயோ…, அவள் போகும் போது பின்னாலேயே சென்று, ஆராசில் அவள் நுழைந்ததை தெரிந்துகொண்டு சென்றதையோ ஆரா அறியவில்லை…

அடுத்த நாள் அதே பெண்மணி, இன்னொரு வயோதிக பெண்மணியோடு வந்திருந்தார்…
ஆராஸில் போடப்பட்டிருந்த கஸ்டமர்கள் வெய்ட் பண்ணும் குஷனில் வயதானவரை அமர வைத்து விட்டு,
“ஆனா அந்த ஃபோன் கால் வந்தப்ப கூட, நான் இதைப்பத்தி எல்லாம் யோசிக்கல அம்மா… அப்பாகிட்ட மறுபடி இந்த விஷயம் போயி, அவரு வேற எதுவும் பிரச்சினை பண்ணிட கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா இவளைப் பார்த்ததுக்கு அப்புறம் ,என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த முறை விட்டுக் கொடுத்திடக்கூடாது…அப்பாவை எப்படியும் சமாளிச்சிடலாம்னு ஒரு தெம்பே வந்துடுச்சு… நீ ஒரு தடவை அவ முகத்தை பாரும்மா… அப்பத்தான் உனக்கே புரியும்…”

சொல்லிக்கொண்டே அவரின் அம்மாவைப் பார்க்க, அவர் தள்ளாடியபடி , அளவெடுத்து கொண்டிருந்த பெண்ணிடம் ஏதோ அறிவுறுத்தி கொண்டிருந்த ஆராவிடம் போய்விட்டார்…

ஓரிரு கணங்கள் உற்று நோக்கியவர்….
“பொன்னு …. வந்துட்டியா…. இந்த பாவியை மன்னிப்பியா….?” கேட்டபடி ஆராவின் இடுப்பை தழுவியபடி கதறி கீழே விழ,
ஒரு கணம் பதட்டத்திற்கு பிறகு ,அந்த வயதான பெண்மணியை தாங்கிக் கொண்டாள் ஆரா….

ஆரா அழுதுக் கொண்டிருந்தவரை தேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்…
கூட வந்திருந்தவரிடம் ,
“மேடம் இவங்களைக் கொஞ்சம் பிடிங்களேன்… யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்காங்க…”

“நான் மேடம் இல்லைடா ,உன் பெரியம்மா… உங்கம்மா பொற்கொடியோட அக்கா… உனக்கு விருப்பமிருந்தா அம்மான்னும் கூப்பிடலாம். இல்லைன்னா என் பேரைச் சொல்லி ஜெயகொடின்னும் கூப்பிடலாம்… தப்பா எடுத்துக்க மாட்டேன்… இவங்க உன் அம்மாச்சி … பேரு தனஞ்ஜெயம்…”

இப்போது ஆராவிர்க்கு பிடித்துக் கொள்ள பிடிமானம் தேவைப்பட்டது…


“இங்க உனக்குன்னு தாத்தா , அம்மாச்சி ,மாமா, அத்தை ரெண்டு பெரியம்மா ,பெரியப்பா, எங்க பசங்கன்னு பெரிய குடும்பமே இங்க இருக்கு… இத்தனை நாளாய் உன்னை எங்களோட வச்சிக்குற பாக்கியம் இல்லாம போயிட்டுது… ஆனா நீயே இப்ப எங்களைத் தேடி வந்திட்ட…. எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்குலாம்டா பாப்பா…” என்று அவர் முடிக்க….

“மன்னிச்சுடுங்க…. எனக்கு குடும்பலாம் இல்லை… நான் ஒரு அனாதை… எனக்கு இளாவைத் தவிர வேற யாரையும் தெரியாது… தயவு செஞ்சு கிளம்புங்க…”

“நாங்க இருக்கும்போது நீ எப்படிடா அனாதை ஆவ. அப்படிலாம் சொல்லாத பாப்பா….”

“அப்படித்தாங்க சொல்லுவேன்….. ஆயிரம் தடவை கத்தி சொல்லுவேன் நான் அனாதைதான்… எங்கம்மா செத்தப்ப , எங்க போனீங்க நீங்கள்லாம்…, அஞ்சு வயசுப் புள்ளையா நான் சாகக் கிடந்தப்ப எங்க போனீங்க நீங்கள்லாம்… யாராவது வந்து சாப்பாடு ஊட்டிவிடுவாங்களா, தட்டி தூங்கவைப்பாங்களான்னு நான் தேடினப்போ எங்க போனீங்க , ஏதாவது ஜெயிச்சு பிரைஸ் வாங்கிட்டு வந்தா, அதை சொல்றதுக்கு கூட ஆள் இல்லாம நான் ஏங்கினப்போ எங்க போனீங்க எல்லாரும்…. உங்க குடும்பத்தில நீங்க பத்தாயிரம் பேர் கூட இருந்துட்டு போங்க எனக்கு என்ன வந்தது…? நான் அனாதைத்தான்… எங்க மாதாஜீ குடும்பம் மட்டும் இல்லைன்னா நானும் செத்து எங்கம்மா கிட்டயே போயிருந்திருப்பேன்… அவங்க மட்டும் தான் எங்களோட ஒரே சொந்தம்… தயவு செஞ்சு என்னைத் தேடி வராதீங்க…கிளம்புங்க…..”

“அய்யோ…. எதை கேட்க வேண்டியதா இருக்கும்னு பயந்து இத்தனை வருஷம் வாழ்ந்துட்டு இருந்தனோ…, அதை கேட்க வைக்கத்தான் என்னை உசுரோட இத்தனை நாள் உசிரோட வச்சிருந்தியா கடவுளே….?”
தலையில் அடித்துக் கொண்டு முதியவர் அழ , கூட்டம் கூட ஆரம்பித்தது…

ஒன்றும் புரியாத ஆரா, லேண்ட் லைனில் இருந்து, ஃபோன் செய்தவள்….,
“இளாப்பா…. எனக்கு பயமா இருக்கு உடனே வா… இங்க ரெண்டு பேர் அம்மா ஃபேமிலின்னு சொல்லிட்டு வந்து என்னென்னமோ சொல்றாங்க… உடனே வா…” அழுது கொண்டே இளாவை துணைக்கு அழைத்தாள்…




சாரல்….





 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
As usual krish avan vara scene lam kalakkal..erkanave illa &aara vilaki irukanga intha puthu sonthathai innum thooram poituvangalo superb epi sara dear
Thank you so much darling ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top