• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயத்தில் ஏதோ ஒன்று

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"அடுத்த நிமிடம்
என்ன ஆகும் என அறியாத வாழ்க்கையில்
ஆயிரம் சோகங்கள்"

"சோகங்களை எல்லாம் சுற்றி
கடந்திடத்தான் தவிக்கிறேன்
இருப்பினும் இதயத்தில் ஏதோ ஒன்று"

"அழுகையை அறியாத கண்கள் தான்
ஆறாய் மாறிநிற்கிறது அர்த்தமே இல்லாமல்
அதை அறிய முற்படுகையிலே
முன்னின்று தடுக்கிறது இதயத்தில் ஏதோ ஒன்று"

"கண்ணீரை மறைக்கத்தான்
கடினமாய் போராடுகிறேன்
கைகொடுக்கவில்லை என் முயற்சி
கடவுளுக்கு கூட கருணையில்லையென
என் கைகொண்டே
என் கண்களை துடைத்துவிட்டு
சிரித்து சமாளிக்கலாம் சிக்கல்களை என்று
சிந்ததனை கொண்டபோது
சிரமம் தான் அதுவும் என சிக்கிக்கொண்டேன்"

"சில வலிகள்
சிறு சோகங்கள்
வெளிபடுத்த முடியாத பிரச்சனைகள்
வேதனை தரும் நினைவுகள்
முடியாத துயரங்கள்
கடந்து சென்ற காலங்கள்
காற்றில் கரையத்துடிக்கிறேன்
என் துயரங்களை எல்லாம் துடைத்தெறிந்திட
எண்ணம் அது நிறைவேற
தடுக்கிறது தடுப்பணை போட்டு
என் இதயத்தில் ஏதோ ஒன்று"

"சோகம் அது மறையுமா?
சொர்க்கம் அது திறக்குமா?
தோள் சாய்ந்து கதறிடத் தான்
உண்மை உறவு உரிமையுடன் வந்திடுமா?"

"வினாக்களுக்கு எல்லாம் விடை கேட்டேன்
என் இதயத்திடம்
இப்பொழுதும் தோன்றுகிறது என் இதயத்தில் ஏதோ ஒன்று"

"இது பயமா?
பாசமா?
பரிதவிப்பா?
அறியா நெஞ்சின் அழுகுரலா?
ஏக்கங்களின் ஏமாற்றமா?
எண்ணங்களின் வெளிப்பாடா?
காதலா?
காத்திருக்கிறேன் காலம் அது முடியும் முன்
காலனிடம் சேரும் முன் கண்டு கொள்வேன்
என் கேள்விக்கான விடை அதை
இதயத்தில் ஏதோ ஒன்று"
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
Why this much சோகம் ma.. but அருமை
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
:love::love::love::love::love:
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
Nice எதையும் நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டால் எந்த துன்பமும் நம்மை கண்டு பயந்து ஓடும்.
கண்டிப்பாக ,நன்றி சித்ரா அம்மா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
"அடுத்த நிமிடம்
என்ன ஆகும் என அறியாத வாழ்க்கையில்
ஆயிரம் சோகங்கள்"


"சோகங்களை எல்லாம் சுற்றி
கடந்திடத்தான் தவிக்கிறேன்
இருப்பினும் இதயத்தில் ஏதோ ஒன்று"


"அழுகையை அறியாத கண்கள் தான்
ஆறாய் மாறிநிற்கிறது அர்த்தமே இல்லாமல்
அதை அறிய முற்படுகையிலே
முன்னின்று தடுக்கிறது இதயத்தில் ஏதோ ஒன்று"


"கண்ணீரை மறைக்கத்தான்
கடினமாய் போராடுகிறேன்
கைகொடுக்கவில்லை என் முயற்சி
கடவுளுக்கு கூட கருணையில்லையென
என் கைகொண்டே
என் கண்களை துடைத்துவிட்டு
சிரித்து சமாளிக்கலாம் சிக்கல்களை என்று
சிந்ததனை கொண்டபோது
சிரமம் தான் அதுவும் என சிக்கிக்கொண்டேன்"


"சில வலிகள்
சிறு சோகங்கள்
வெளிபடுத்த முடியாத பிரச்சனைகள்
வேதனை தரும் நினைவுகள்
முடியாத துயரங்கள்
கடந்து சென்ற காலங்கள்
காற்றில் கரையத்துடிக்கிறேன்
என் துயரங்களை எல்லாம் துடைத்தெறிந்திட
எண்ணம் அது நிறைவேற
தடுக்கிறது தடுப்பணை போட்டு
என் இதயத்தில் ஏதோ ஒன்று"


"சோகம் அது மறையுமா?
சொர்க்கம் அது திறக்குமா?
தோள் சாய்ந்து கதறிடத் தான்
உண்மை உறவு உரிமையுடன் வந்திடுமா?"


"வினாக்களுக்கு எல்லாம் விடை கேட்டேன்
என் இதயத்திடம்
இப்பொழுதும் தோன்றுகிறது என் இதயத்தில் ஏதோ ஒன்று"


"இது பயமா?
பாசமா?
பரிதவிப்பா?
அறியா நெஞ்சின் அழுகுரலா?
ஏக்கங்களின் ஏமாற்றமா?
எண்ணங்களின் வெளிப்பாடா?
காதலா?
காத்திருக்கிறேன் காலம் அது முடியும் முன்
காலனிடம் சேரும் முன் கண்டு கொள்வேன்
என் கேள்விக்கான விடை அதை
இதயத்தில் ஏதோ ஒன்று"
ஒவ்வொரு வரியிலும்,
சற்று சோகம் தாக்கினாலும்

மனதில் வலிகள்... அருமையான வரிகள்...
இதயத்தை ஏதோ செய்கிறது...

யோசித்து சில வரியில் "ம்" சேர்த்தல் கேள்விக்கு பதிலும் அதில் கிடைக்கலாம்... ?


இது ஒரு கனவு நிலை...
இருப்பதும் ஒரு மனது....

அதனிடம் திரும்பி ஒரு வார்த்தை கேளு..
பதிலும் உன்னிடமே இருக்கும் பாரு...

பின்.....
உண்டான காயம் யாவும் தன்னாலே மாறி ஆகும் மாயம் என்ன பொன்மானே.. பொன்மானே...

இதயத்தில் ஏதோ ஒன்று.... ????
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
ஒவ்வொரு வரியிலும்,
சற்று சோகம் தாக்கினாலும்

மனதில் வலிகள்... அருமையான வரிகள்...
இதயத்தை ஏதோ செய்கிறது...

யோசித்து சில வரியில் "ம்" சேர்த்தல் கேள்விக்கு பதிலும் அதில் கிடைக்கலாம்... ?


இது ஒரு கனவு நிலை...
இருப்பதும் ஒரு மனது....

அதனிடம் திரும்பி ஒரு வார்த்தை கேளு..
பதிலும் உன்னிடமே இருக்கும் பாரு...

பின்.....
உண்டான காயம் யாவும் தன்னாலே மாறி ஆகும் மாயம் என்ன பொன்மானே.. பொன்மானே...

இதயத்தில் ஏதோ ஒன்று.... ????
thank you maha sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top