Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
மாங்காய் - 1
சீனி - 10 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உ. பருப்பு, வரமிளகாய்
செய்முறை :-
மாங்காயை தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உ. பருப்பு, ஒரு வரமிளகாய் தாளித்து அதனுடன் நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் ஒரு துளி மஞ்சள் தூள் மற்றும் ஒரு துளி உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் சீனி சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.