• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்
(16)
மகன் மனம் கலங்கி அறையை விட்டு வெளியேறுவதை பர்வதம் கண்கலங்கிப் போய் பார்த்துக்கொண்டிருந்தார் என்றால், “குழந்தையா?” என்று கதிகலங்கி பரத் செல்வதையே வெறித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா...

அதிர்ச்சி மேலிட ராதிகா மரகதத்தைப் பார்க்க, அவரோ நடந்த சம்பாஷணையைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பானுவைப் பார்த்தால், அவளும் சாதரணமாகவே பரிமாறிக்கொண்டிருந்தாள்.

குழந்தையைப் பற்றிய விஷயத்தைக் கேட்டு யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை, “அப்படின்னா, இவாளுக்கெல்லாம், தெரியுமா, என்கிட்டக்க யாருமே எதுவுமே சொல்லலையே?” என்ற கேள்வி எழ, செய்வதறியாமல் மாமியாரைத் திரும்பிப் பார்க்க, அவரோ, கண்களில் தளும்பிய கண்ணீருடன் அப்படியே நின்றிருந்தார்.

மெதுவாக அவரிடம் சென்று நின்றுகொண்டு ராதிகா, அவருடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ராதிகாவின் தொடுகையில் தன்னிலை பெற்ற பர்வதம் மாமி, தயக்கமாகத் திரும்பி ராதிகாவின் கண்களைச் சந்தித்தார்.

அந்தத் தாயின் தவிப்பு ராதிகாவின் இதயம் தொட்டதோ என்னவோ, தன்னுடைய குழப்பங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, “கண்ணைத் துடைச்சுக்கொங்கோம்மா, எல்லாரும் பாக்கறா” என்றாள் மெல்லிய குரலில்.

ராதிகா கூறியதற்கு தலையை ஆட்டிய பர்வதம் மாமி, புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டபடி, “சுமங்கலிகள் எல்லாரும் சாப்பிட்டு முடிக்கப் போறா, நமஸ்காரம் பண்ணனும், துளசியைப் போயி பரத்தை அழைச்சுண்டு வரச்சொல்லு,” என்று கூறினார்.

“துளசி வேலையா இருக்காம்மா, நான் போய் அழைச்சுண்டு வரேன்,” என்று ராதிகா செல்ல முனைய, “வேண்டாம் ராதும்மா, அவன் சட்டுன்னு ஏதாவது சொல்லிட்டா, மனசுக்கு கஷ்டமா போயிடும் உனக்கு, நீ துளசியையே அனுப்பு,” என்று கூற, “என்னை ஏதாவது சொல்றா மாதிரிதானே துளசியையும் சொல்லுவார், அதுக்கு நானே போறேன்,” என்றபடி, அவருக்கு மேலும் பேச இடமளிக்காமல், பரத்தைத் தேடிக்கொண்டு கூடத்தை விட்டு வெளியேறினாள் ராதிகா.

வீடு முழுவதும் பரத்தை தேடியவள் கடைசியில் அவர்களுடைய அறையில், இரு கைகளாலும் தலையைத் தாங்கிய நிலையில் உட்கார்ந்திருந்தவனைக் கண்டாள். முகம் தெரியாவிட்டாலும் அவனுடைய தொய்ந்த தோள்களே பரத்தின் மனநிலையை உணர்த்த, அறை வாசலில் நின்றபடியே, “பேசறவா பேச்சுக்கெல்லாம் இப்பிடி தலைல கைய வெச்சுண்டு ஒக்காந்தா அப்பறம் உருப்படறது எப்படி?” என்று கேட்டவளின் குரல் கேட்டு முகத்தை இரண்டு கைகளாலும் அழுந்தத் துடைத்துக்கொண்டு தலை நிமிர்ந்து பார்த்தான் பரத்.

வாசலில் சாய்ந்தபடி நின்றுகொண்டு பரத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா. தன்னை சிறிது சுதாரித்துக்கொண்டு அவளுடைய கண்களைச் சந்தித்தவன், ராதிகா அறை வாசலிலேயே நின்றிருந்ததைக் கண்டு, “ஏன் அங்கேயே நிக்கற, உள்ள வா” என்றான் பரத்.

எப்பொழுதும் அவனுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொள்பவள் இப்போது வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “ம்ஹ்ம், கார்பெட் விழுப்பு, அம்மா உள்ள வரக்கூடாதுன்னு சொல்லிருக்கா”, என்று தலையை இடமும் வலமும் ஆட்டியபடி ஒற்றை விரலால் தரையைக் காட்டி ராதிகா கூற, ஏனோ இறுக்கம் தளர்ந்து லேசான சிரிப்பு வந்தது பரத்துக்கு.

“சரி, வரவேண்டாம், என்ன வேணும் சொல்லு?” என்று புன்னகையுடன் கேட்க, “வேறென்ன வேணும், நீங்கதான் வேணும்,” என்று சிறிதும் தயங்காமல், பார்வையையும் அவனிடமிருந்து அகற்றாமல் பதிலளித்த ராதிகாவின் பதிலில் திடுக்கிட்டவன்,

“வாட்?” என்று சற்று காட்டமாகவே கேட்க,

சற்றும் தயக்கமே இன்றி, “சுமங்கலிகள் சாப்பிட்டு முடிக்கப்போறா, அவாளுக்கு நமஸ்காரம் பண்ணி தாம்பூலம் குடுக்கணும், அம்மா உங்களை அழைச்சுண்டு வரச் சொன்னா,” என்று ராதிகா பதிலளித்தாள்.

ராதிகாவின் ‘நீங்கதான் வேணும்’ என்பதன் அர்த்தம் தான் நினைத்து போல் இல்லை என்று தெரிந்து லேசாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட பரத், “சரி நீ போ, நான் வரேன்,” என்று கூற,

இப்போதும் பரத்தின் கண்களை ஊடுருவிய தனது பார்வையை விலக்கவில்லை ராதிகா, வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி, மாட்டேன் என்பதுபோல் தலையசைக்க, அவளுடைய பார்வையின் ஆழத்தை சந்திக்கமுடியாமல் கண்களை விலக்கிக்கொள்ளும் முறை இப்போது பரத்துடையதாயிற்று.

ராதிகாவிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டவன், எழுந்து அவளுடன் செல்ல எத்தனிக்க, “முகமெல்லாம் களைச்சாப்ல தெரியறது பாருங்கோ, முகத்தை அலம்பிண்டு, நெத்திக்கி இட்டுண்டு வாங்கோ,” என்று பரத்தின் முகம் பார்த்து கவலையாகக் கூற, கண்ணாடியில் தன் முகம் பார்த்த பரத்திற்கும் ராதிகா கூறுவது சரியென்று படவே, முகத்தை அலம்பிக்கொண்டு, வேறு டிஷர்ட் மாற்றிக்கொண்டு வெளியில் வந்தான்.

வந்தவனின் தோற்றம் முன்பைவிட சிறிது பரவாயில்லாமல் இருப்பதுபோல் தோன்ற, பரத்தின் முகத்தைப் பார்த்தவள், தனக்குத் தானே தலையை ஆட்டிக்கொண்டு, “வாங்கோ, போகலாம்” என்றபடி படியிறங்கத் தொடங்கினாள்.

தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு தலையை ஆட்டியபடியே படியிறங்கிய ராதிகாவை விசித்திரமாகப் பார்த்தபடி அவனையும் அறியாமல் ராதிகா தலையாட்டியதைப் போலவே தலையை ஆட்டிக்கொண்டு புன்னகைத்தபடி பரத் மேலேயே நிற்க, சில படிகள் கீழே இறங்கி திரும்பிப் பார்த்த ராதிகா, “என்ன தனியா சிரிச்சுண்டு, தலையை ஆட்டிண்டே நின்னுண்டு இருக்கேள், யாராவது பார்த்தா தப்பா நெனைச்சுக்க போறா? சீக்கிரம் இறங்குங்கோ...” என்று கொஞ்சம் அதிகாரமாகவே கூற, “அதானே, தனியா சிரிச்சா லூசுன்னுன்னா சொல்லுவா, நீ பாட்டுக்க நின்னு தனியா சிரிச்சுண்டு இருக்கே, வேகமா வா, எல்லாரும் காத்துண்டு இருக்கா...” என்று சிரிப்புடன் கூறிக்கொண்டே மடமடவென்று படிகளில் இறங்கியபடி அவளை முந்திக்கொண்டு சென்றுவிட்டான் பரத்.

சில நிமிடங்களுக்கு முன்னால் மனமுடைந்து கண்கள் கலங்கி உட்கார்ந்திருந்தவனா இவன், கணப்பொழுதில் ஒருவரால் உணர்வுகளை இப்படி மாற்றிக்கொள்ள முடியுமா? என்ற வியப்பில் அப்படியே நின்றுவிட்டாள் ராதிகா.

“என்ன வரலையா?”என்று அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே பரத் குரல் கொடுத்தபடி கூடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க, தலையை சிலுப்பி தன்னை சுதாரித்துக்கொண்டவள் ஓட்டமும் நடையுமாக பரத்தைப் பின்தொடர்ந்தாள்.
 
Last edited:

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இருவரும் முற்றத்தை அடைவதற்குள் சுமங்கலிகள் சாப்பிட்டு முடித்திருந்தனர். கலக்கத்துடன் பரத்தையே எதிர்பார்த்து நின்றிருந்த பர்வதம் மாமி, ராதிகாவுடன் பரத் வந்ததைப் பார்த்ததும் நிம்மதியாக எஞ்சியிருந்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். பர்வதம் மாமி புடைவைக் கலத்தில் உட்கார்ந்திருந்த சுமங்கலிளுக்கு உத்தரா போசனத்திற்காக கையில் ஜலம் விட்டு, பின்னர் சுமங்கலிகளின் வலது கையில் உத்திரணியால் மீண்டும் ஜலத்தைவிட, அவர்கள் இலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டு ஜலத்தை கைமூடி கட்டைவிரல் வழியாக இலைக்கு அருகில் விட்டு, “அன்னதாதா சுகிபவ” என்று வாழ்த்தினார்கள். அதன் பின்னர் அவர்களை கை அலம்பிக்கொண்டு வரச்சொல்லி உபசரித்தார் பர்வதம் மாமி.

கையலம்பிக்கொண்டு வந்த சுமங்கலிகளை கிழக்குமுகமாக உட்காரவைத்து, ராதிகாவும் கீதாவும் இணைந்து பானகமும், நீர்மோரும் கொடுத்து, சுக்கு வெல்ல உருண்டையும் கொடுத்துவிட்டு, ஒவ்வொருவரின் காலிலும் மஞ்சளும், மஞ்சள் சுண்ணாம்பு கலந்த கலவையைக் கொண்டும் நலங்கிட்டனர். பின்னர் தயார் செய்து வைத்த தாம்பூலத் தட்டுகளை, முதலில் புடவைக் கலத்தில் உட்கார்ந்த சுமங்கலிக்கும், கன்யா குழந்தைக்கும் கொடுத்துவிட்டு, மற்ற சுமங்களிகளுக்கும் மாமியாரும் மருமகள்களுமாகக் கொடுத்தனர். பின்னர் கும்பகோணம் வெற்றிலை, ரசிக்லால் பாக்கு, வாசனை சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, குல்கந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்த தாம்பூலத் தட்டைக் கொடுத்து சுமங்கலிகளைத் தாம்பூலம் தரிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வாழ்க்கைத் துணைகளோடும், குழந்தைகளோடும் சுமங்கலிகளுக்கு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றனர். சுமங்கலிகளும், பூ அட்சதையைத் தூவி, “ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியத்துடன், சந்தானப் பிரபத்தியும் அடைந்து தீர்காயுசாக வாழவேண்டும்” என்று வாழ்த்தி சுமங்கலி பிரார்த்தனையை திருப்தியுடன் நல்லபடியாக முடித்து வைத்தனர்.

அதன்பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள இன்னும் இரண்டு மணிநேரம் பிடித்தது. பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பத் தொடங்க, அவர்களுக்கெல்லாம் முறைப்படி தாம்பூலங்கள் கொடுத்து மரியாதை செய்து அனுப்பிவைத்தனர்.

“அப்படியே எங்களுக்கும் உத்தரவு குடுங்கோ சம்பந்தி, நாங்களும் கிளம்பறோம்,” என்று கைகூப்பி நின்ற ஆடியபாதத்தின் கைகளைப் பிடித்து கீழே இறக்கிய ஜகன்னாதன், “இப்போவே என்ன அவசரம், நீங்களும் விருந்தாளி மாதிரி கிளம்பறேன்னு சொல்றேளே, இன்னும் ரெண்டு மூணு நாள் எங்களோட இருந்துட்டு போகலாமே, சம்பந்தி” என்றார்.

அவருக்கேற்றபடியே, பர்வதம் மாமியும் மரகதத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “ஆமாம் மாமி, கல்யாண சந்தடியிலே உங்களோடல்லாம் விச்ராந்தியா உக்காந்து பேசக்கூட நேரம் கிடைக்கல்லே, கொஞ்சம் நிதானமா கிளம்பலாமே, ராதிகாவோடையும் இன்னும் கொஞ்ச நாள் இருந்தா மாதிரியும் இருக்கும்.” என்றார்.

“நம்பாத்துல இருக்கறதுக்கு என்ன, மாமி? ஆனா பாருங்கோ, அங்க ஆத்துல எல்லாம் போட்டது போட்டபடியே விட்டுட்டு வந்திருக்கோம். கல்யாணத்துக்கு முந்தின நாள் கிளம்பினது. நாங்களும் ஆத்துக்கு போயி எல்லாத்தையும் சரி பண்ணின்டாதானே, நீங்க எல்லாரும் சம்பந்தி விருந்துக்கு எங்காத்துக்கு வர்றதுக்கு நான் ரெடியாக முடியும்.” என்றபடி, தன கையில் இருந்த குங்குமச் சிமிழைத் திறந்து, பர்வதம் தொடங்கி, அந்த வீட்டு பெண்கள் அனைவருக்கும் குங்குமம் கொடுத்து, “எல்லாரும் எங்காத்துக்கு சம்பந்தி விருந்துக்கு வரணும்,” என்று மரகதமும் ஆடியபாதமும் இணைந்து சம்பந்தி வீட்டினரை முறைப்படி அழைத்தனர்..

பெற்றோர் தன்னை இங்கே விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்களே என்ற கலக்கத்தின் கண்ணீர் தளும்ப நின்றிருந்த ராதிகாவையும் கைப்பிடித்து அழைத்து வந்து பரத்தின் அருகில் நிற்கவைத்து வாழ்க்கையில் முதல்முறையாக மகளுக்கு குங்குமம் கொடுத்து “மாப்பிள்ளையை ஆத்துக்கு அழைச்சுண்டு வாடி கொழந்தே,” என்றும், பரத்திடமும், “ராதிகாவை ஆத்துக்கு அழைச்சிண்டு வாங்கோ மாப்பிள்ளை,” என்று கலங்கிய கண்களுடன் மரகதமும் ஆடியபாதமும், வரவேற்க, அவர்களிடம் என்ன சொல்வது என்று விளங்காமல், பரத் தலையை மட்டும் ஆட்டினான்.

பொங்கி வந்த அழுகையுடன், ராதிகா அம்மாவைக் கட்டிக்கொள்ள, “என்ன ராதும்மா, அசடாட்டம் இப்படித்தான் அழுவாளா, கண்ணைத் தொடைச்சுக்கோ, நீ சிரிச்சுண்டே விடை குடுத்தாதானே, நாங்களும் நிம்மதியா ஊருக்குப் போகமுடியும், என் சமத்துல்லியா, அழாதேடி கொழந்தே,” என்று தனது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, தாய் மகளுக்கு ஆறுதல் கூறி தேற்றியபடி, “வா என்னோட, வந்து பையெல்லாம் கட்டி வைக்க ஒத்தாசை பண்ணு,” என்று தன்னுடன் அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றார்.

பெண்வீட்டார் அனைவரும் பயணத்திற்கு ஆயத்தமாகச் சென்றுவிட, பர்வதம் மாமியும் சம்பந்தியினருக்கு தக்க மரியாதை செய்யும்படியாக தாம்பூலங்களை தயார் செய்ய கீதாவையும் நந்தினியையும் அழைத்துக்கொண்டு வேலையில் இறங்கினார்.

இவ்வாறாக பெண்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க, ஆடியபாதத்திடம் பரத், “மாமா, எத்தனை மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்னு சொன்னேள்னா நான் நாம வந்த சார்டர்ட் பிளேனை, ப்யூயல் பண்ணி, கிளியரன்ஸ் எல்லாம் வாங்கி ரெடி பண்ணச் சொல்லிடுவேன்,” என்று கூற,

“உங்களுக்கு என்னத்துக்கு மாப்பிள்ளை சிரமம், நான் ஊருக்குப் போக டெம்போ ட்ராவலர் புக் பண்ணிட்டேன், இன்னும் ஒரு மணி நேரத்துல வண்டி வந்துடும்,” என்று அவர் பதிலளிக்க,

“நோ, நோ. நோ, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், மொதல்ல வண்டியை கேன்சல் பண்ணுங்கோ, நான் பிளேனை ரெடி பண்ணச் சொல்றேன்,” என்று மறுபேச்சுக்கு இடம் கொடுக்காமல், பைலட்டுக்கு அழைத்து எல்லாவற்றையும் தயார் செய்யச் சொன்னவன், திருச்சி விமானநிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை செல்லவும், வண்டி ஏற்பாடு செய்தான்.

அதை ஆடியபாதத்திடம் தெரிவித்தவன், “போய் சேர்றதுக்கு எப்படியும் ராத்திரி ஆயிடும் மாமா, போனாவுட்டு உடனே சமைச்சிண்டு இருக்கவேண்டாம், நம்ப ரெஸ்டாரண்ட்ல இருந்தே எல்லாருக்கும் டிஃபன் கொண்டுவரச் சொல்லிருக்கேன், அவாளே ஒரு எட்டுமணி வாக்குல உங்களுக்கு போன் பண்ணுவா. உங்களுக்கு அவாளோட நம்பர் எஸ்எம்எஸ் பண்ணிருக்கேன், அவாகிட்டயே நாளைக்கு கார்த்தால என்ன ப்ரேக்பாஸ்ட் வேணும்னு சொல்லிட்டா, எடுத்துண்டு வந்துடுவா. அதோட, நாளைக்கு கார்த்தால நம்ப ரெஸ்டாரன்ட்ல இருந்தே ரெண்டுபேர் வருவா, ஆத்தை கிளீன் பண்ண ஒத்தாசை பண்ணுவா, நீங்க தனியா சிரமப்பட்டுக்க வேண்டாம்” என்று பரத் அடுக்கிக்கொண்டே போக,

மாப்பிள்ளையை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார் ஆடியபாதம். “ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. நீங்க எதுவுமே பேசாத மௌனமாவே இருக்கேளேன்னு சஞ்சலப்பட்டேன், ஆனா நேக்கு இப்போ புரிஞ்சுடுத்து மாப்பிள்ளை, எங்களுக்கே இப்பிடி யோசிச்சு யோசிச்சு சௌகரியம் செஞ்சு குடுக்கறேள்னா, என் பொண்ணை ராஜாத்தியாட்டம் வெச்சு பாத்துப்பேள்னு, நேக்கு விளங்கிடுத்து,” என்று அவர் நாதழுதழுக்க, மெதுவாய் அவரை தன்னிடமிருந்து விலக்கியவன், “அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கோ மாமா, உங்க பொண்ணு இந்த ஆத்துல சந்தோஷமா இருப்பா,” என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு விலகிச் சென்றான்.

மரகதத்துடன் சென்ற ராதிகா, அறைக்குள்ளே தம்பியையும் தங்கையையும் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். “அம்மா அப்பாவை பத்திரமா பாத்துக்கோங்கோ, நன்னா படிங்கோ,” என்று இருவரிடமும் கூறிக்கொண்டிருந்தவள், பானுவைப் பார்த்து, “அம்மாவுக்கு ஆத்து காரியத்துல கொஞ்சம் ஒத்தாசையா இரு பானு, நீ பாட்டுக்க மொபைலும் கையுமா உக்காந்துண்டு இருக்காதே, அம்மாவால தனியா முடியாது” என்று அறிவுரை கூறினாள். அதற்கு தலையாட்டியபடி நின்றிருந்த பானுவை, “பானு, துணி எல்லாம் மடிச்சு வெச்சுட்டேன், நீ எடுத்து பெட்டியிலே அடுக்கு,” என்று அனுப்பிவிட்டு, ஸ்ரீனிக்கும் ஏதோவொரு வேலை ஏவி வெளியில் அனுப்பியவர், ராதிகாவின் கையைப் பிடித்து அருகில் இருந்த சோபாவில் உட்காரவைத்து, அவளருகில் தானும் அமர்ந்துகொண்டார்.
 
Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
மகளின் கையை தன் கைகளுக்குள் வைத்து வருடியபடி, “ராதும்மா, நாங்கல்லாம் இன்னும் கொஞ்ச நாழியில கிளம்பிடுவோம், நீ தையிரியமா இருக்கணும், உன் புக்காத்து மனுஷால்லாம் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா, அன்பா இருக்கா. நீயும் அவகிட்டக்கல்லாம் அன்பா பழகு. பெரியவாகிட்ட மரியாதையா இரு. எதுவானாலும் மாமியார்கிட்டக்க கேட்டுண்டு செய், ஒவ்வொரு ஆத்துலயும் ஒவ்வொரு வழக்கம் இருக்கும், அது என்னன்னு தெரிஞ்சுண்டு வேலை பண்ணு, நீ புத்திசாலி கொழந்தைடி, அனுசரணையா இருந்துக்கோ. மாப்பிள்ளை மனசறிஞ்சு நடந்துக்கணும். என்கிட்டே பேசறாப்ல எல்லார் கிட்டயும் துடுக்குத்தனமா பேசப்டாது, புரியறதா?” என்று மகளின் தலை வருட,
கண்ணீருடன் தலையை ஆட்டிய ராதிகா, அம்மாவைக் கட்டிக்கொண்டாள். “என்ன மரகதம், எல்லாம் தயாராயிட்டேளா, கிளம்பலாமா,” என்று கேட்டபடி உள்ளே வந்த ஆடியபாதமும், ராதிகாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

மற்ற உறவினர்களும் கிளம்பி தயாராகக் காத்திருக்க, சம்பந்தி வீட்டினர் அனைவரையும் அமரவைத்து, மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி, வெள்ளிக்கிண்ணம், வெற்றிலை பாக்கு, பழக்கூடை, சீர் பக்ஷணங்கள், பருப்புத் தேங்காய், தக்ஷிணை என்று பர்வதமும் ஜகன்னாதனும் இணைந்து தம்பதி சமேதராய் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்தனர்.

பரத்தும் ராகவனும் சேர்ந்து, அனைவரின் லக்கேஜையும் எடுத்து வைப்பதில் மேற்பார்வை செய்துகொண்டிருக்க, ஊருக்குக் கிளம்புபவர்களை வழியனுப்ப விமான நிலையம் செல்ல, ராதிகா, பரத்துடன், பர்வதமும் ஜகன்னாதனும் இணைந்துகொண்டனர்.

அழுத கண்களும் சிவந்த மூக்குமாய் காரில் தன்னருகில் முன் சீட்டில் வந்து உட்கார்ந்த ராதிகாவைப் பார்த்து பரத்திற்கு என்ன தோன்றியதோ என்னவோ, “ம்க்கும், உனக்கு வேணும்னா உங்க அம்மாகிட்ட போய் உக்காந்துக்கோ,” என்று கூற, அவனை நன்றியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின் சீட்டில் பர்வதத்திடம் பேசியபடி அமர்ந்திருந்த மரகதத்தின் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டாள் ராதிகா.

திருசூலம் விமானநிலையத்தில் தனியார் விமானம் நிறுத்தும் பகுதியில் இவர்களுக்கான விமானம் தயாராக நின்றுகொண்டிருக்க, விமானத்தில் ஏறும் முன், பர்வதம் மாமின் கைகளைப் பிடித்துக்கொண்ட மரகதம், “ராதும்மாவை பாத்துக்கோங்கோ மாமி, இனி நீங்கதான் அவளுக்கு எல்லாமே. நான்தான் இனி அவளைப் பிரிஞ்சு இருக்கக் கத்துக்கணும். எப்பிடி இருக்கப்போறேன்னே தெரியல. அவ ஆத்துல இருந்தா என்னை ஒரு வேலை செய்ய விடமாட்டா, எல்லாத்தையும் பொறுப்பா பாத்துப்பா, ஆத்து காரியம் எல்லாம் சொல்லி குடுத்துருக்கேன், நன்னா சமைப்பா, ஆத்தைப் பாத்து வேலை பண்ணுவா, உங்காத்து பழக்க வழக்கமெல்லாம் சொல்லிக்குடுங்கோ, சொன்ன கேட்டுப்பா, ஏதாவது தப்பு செஞ்சுட்டா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு எடுத்து சொல்லுங்கோ மாத்திப்பா, பாத்துக்கோங்கோ மாமி,” என்று அவரிடம் இறைஞ்ச,

“ஏன் மாமி பெரிய பேச்செல்லாம் பேசறேள், எனக்கு நந்து துளசி எப்படியோ அப்படித்தான் ராதும்மாவும், நீங்க கவலையே படாதீங்கோ, எங்க கண்ணுல வெச்சு பாத்துக்கறோம்,” என்று அவருக்கு ஆறுதல் கூறி விடைகொடுத்தார் அந்த அன்பான மாமியார்.

ஒருவாறாக அனைவரும் பிரியாவிடை பெற்று விமானத்தில் ஏறி, விமானமும் வானில் பறக்கும் ஆயத்தமாக ரன்வேயில் ஓடத் தொடங்கியது. விலகி ஓடும் விமானத்தையே கண்ணீர் தளும்பும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த மருமகளின் தோளணைத்து, “வா, ராதும்மா, நாம நம்பாத்துக்கு போகலாம்,” என்று அழைத்துச் சென்று காரில் ஏற்றினார் பர்வதம் மாமி.

வீட்டை நோக்கிய பயணம் மௌனத்திலேயே முடிய, வீட்டை அடைந்ததும், பரத் தனக்கு சிறிது வேலையிருப்பதாகக் கூறி தனது அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான். தாய் தந்தையரைப் பிரிந்த துயரத்தில் ராதிகா அழுது கரைந்துவிடுவாள் என்று நன்கு அறிந்திருந்த பர்வதம் மாமியும் மற்றவர்களும் அவளைத் தனியாக இருக்க விடாமல், தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

சிறிதுநேரம் நந்தினி, கீதா மற்றும் துளசியுடன் பேசிக்கொண்டிருந்த ராதிகா சோர்ந்திருப்பதைப் பார்த்தபடி அனைவருக்கும் ஆரஞ்சு பழச்சாற்றை கொடுத்த பர்வதம் மாமி, “ரொம்ப சோர்ந்து போயிருக்கடா ராதும்மா, இந்தா இந்த ஜூசைக் குடிச்சுட்டு, மேல ரூம்ல போய் சித்தநாழி படுத்துக்கோ, நான் காபி போட்டப்பறம் வந்து எழுப்பறேன்,” என்று கூறி வேண்டாமென்று மறுத்த ராதிகாவையும் பழச்சாற்றைக் குடிக்கச் செய்தார்.

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, வரிசையாக வேலை செய்த களைப்புடன், பிறந்த வீட்டினரையும் பிரிந்த சோகமும் வெகுவாய் அழுத்த, ராதிகாவிற்குமே சிறிது ஓய்வெடுத்தால் தேவலை போன்றே இருந்தது. அதனால் மாமியாரின் பேச்சைத் தட்டாமல், மாடியேறி அவர்களுடைய அறைக்குச் சென்றாள்.

உள்ளே சென்றவள் அங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த அவளுடைய பெட்டிகளிலிருந்து வேறு மாற்று உடை எடுத்துக்கொண்டு உடை மாற்றும் அறைக்குள் சென்று, முகம் அலம்பி உடை மாற்றிக்கொண்டு வந்தவள் அங்கு கண்ட காட்சியில் இமைக்கவும் மறந்து உறைந்து நின்றுவிட்டாள்...
அந்தக் காட்சி...
 
Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai

Nice update ma enga poninga very long gap story update ah regular kudunga ma illana nanga confuse ayuduvom
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அப்பப்போ காணாம போயிடறீங்களே சிவப்ரியா மேம்... என்ன காட்சின்னு கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லிடுங்கப்பா
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Hi shiva நேற்று என்னிடம் சொன்ன மாதிரியே இன்று கண் விழித்ததும் காதல் கடனில் தான் சூப்பர் உடம்பை தேத்திக்கிட்டு சீக்கிரம் அடுத்த தவனையை கொடுத்துடுங்க
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top