• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Fan Fiction contest - Prema

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Lovely Lavi - Akila Kannan


ராஜை நித்திலா விட்டில் விட்டு லவியை அழைத்து செல்ல வந்தவனின்
கண்களின் புருவங்கள் மேலுயர்ந்து வளைந்து, கண்கள் விரிந்து வெள்ளை நிற பகுதி அதிகமாக தெரியும் அளவிற்கு ஆச்சரியம்.

வால்மார்ட்டில் சங்கர் அவளுக்காக வாங்கிய கரும்பச்சை நிற மிடியும் பொருத்தமான வெந்தய நிறத்தில் சிகப்பும் பச்சையும் கலந்த சிறிய பூக்கள் பிரின்ட் போட்ட டாப்ஸ்ம் அதற்கு மேட்சிங் அணிகலனக்ளுடன் சிறிய ஒப்பனையோடு கையில் wrist watch ஐ கட்டிக் கொண்டே அவனை ஏறிட்டாள்.

அவனின் பார்வையின் அர்த்தம் புரியாதவளா அவள். அவளும் அவனை மனதளவில் நெருங்கி இருந்தாள். அதன் வெளிப்பாடு அவன் வாங்கிதந்த உடையை இன்று உடுத்தி இருந்தாள்.

“என்ன புதுசா பார்கிற மாதிரி பார்கிற” சங்கரின் ஆச்சரியப் பார்வைக்கான அர்த்தம்தெரிந்தாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் குறும்புடனே கேட்டாள்.

“புதுசாயில்ல பழைய மாதிரி இருக்கிறதாலா பார்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி முன்நொக்கி சொன்றான்..

நெளிந்து கொண்டே பின்நோக்கி சென்றவள் sofaவில் இடித்து நிற்க.

“எல்லாவற்றிலும்.. என்று உன்ன சொல்ல வைக்கிறேன்” அன்று லவி யிடம் கத்தி சொன்னது இன்று அமைதியாக நினைவிற்கு வந்தது. முன்னே வந்தவன் அவள் கண்களை பார்த்து “ நீ இப்ப சந்தோஷமாக இருக்கிய, உன்னை நான் நல்ல பார்த்துகிறேனா “ தவிப்பு ஒருபுறமும் ஆர்வம் மறுபுறமும் போட்டி போட்டு கொண்டு கேட்டான்.

லவி மனதிற்குள் பொங்கும் காதலையும், முகத்தில் மின்னும் வெட்கத்தையும் மறைக்க போராட வேண்டி இருந்தது. இனி அவனில்லாத வாழ்க்கையை தனக்கு இல்லை என்று தீர்மானமாக தான் இருக்கிறாள். அவன் மேல் இருந்த பொறாமை, கோபம் எல்லாம் மொத்தமும் வெளிநடப்பு செய்து தான் இருந்தது. மறுக்க ஏதுமில்லை மறைக்கவும் முடியவில்லை ஆனால் சொல்ல தான் வார்தைகளில்லை.

“உன்ன மாதிரி ஒரு புருஷன் கிடைச்சா யாரு தான் சந்தோஷமாக இருக்க மாட்டாங்க” வார்த்தைகளை தேடி ஒரு வழியாக அவள் குறும்புடன் சொல்லியே விட்டால். எந்த ஒரு ஈகோவுமில்லாமல். காதலை சொல்ல இது தான் வார்தை என்று இலக்கணம் ஏதுமில்லையே.

இதுவே போதுமானதாக இருந்தது சங்கருக்கு. அவள் கண்களை விடவ வார்த்தைகள் சொல்லிவிடப்போகிறது. வாழ்க்கை என்னாகுமோ என்கிற கவலை மறைந்தது. சாதித்துவிட்ட நிறைவு மனதில் நிறைந்தது. இதைவிட ஒரு ஆண்மகனுக்கு கர்வம் கொள்ள வேறு உண்டோ.

அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி சங்கர் அவளை இறுக்கி அணைத்திருந்தான். ஆனந்தத்தில் கண்கள் உடைபெடுக்க ..அதை அடக்க அவன் முயற்சிக்கவில்லை.. அந்த தருணத்தை அப்படியே அனுபவித்தான். அவளுக்குள்ளும் கடத்திக்கொண்டு இருந்தான்.

என்ன மன்னித்துவிடு.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று அவனை இறுக அணைத்து அவளும் வார்த்தைகளின்றி யாசித்துக்கொண்டு இருந்தாள்.

நொடிகள் நிமிடங்களாக ஓட சூழ்நிலையை இலகுவாக்கும் பொறுப்பை லவியே கையிலெடுத்தாள்.

“வெள்ளகாரிக்கு வாங்குன dress எப்படி என் sizeல பக்காவா இருக்கு” பழைய குறும்போடு அவள்.

“அதுயெல்லாம் ஆண்களின் ஸ்சிகிரெட் சொல்ல முடியாது” மீண்ட குறும்போடு அவன்.

“உன் மூஞ்சிக்கு நானே அதிகம் இதுல உனக்கு வெள்ளக்காரி வேற கேட்குதா “என்று அவனை அடிக்க கையை ஓங்கினாள். அடுத்து என்ன நடந்தது என்று புரிய சில நொடிகள் தேவைபட்டது அவளுக்கு.

சங்கர் அவள் இதழ்க்கு பூட்டு போட்டு இருந்தான். வேற யாரும் தேவையில்லை நீ மட்டும் போதும் என்று இழுத்து அழுத்தி சொல்லி கொண்டு இருந்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு பூட்டை திறந்தான் ஆனால் விலகவில்லை. அவளின் ஐம்புலன்களும் அவனின் கட்டுப்பாட்டில். பூ மலருவது போல மெல்ல கண்திறந்து பார்த்தாள்.

மென்மையாக முன் உச்சியில் முத்தமிட்டவன் “நித்திலா யாதவ் வந்துட்டாங்க போல வா போகலாம் “ என்று சொல்லி கதவை திறந்து வெளியே வர இருவரையும் பார்த்த யாதவ் “சாரி உங்களை டிஸ்டர்பு பண்ணிட்டேனோ.. படதுக்கு டைம் ஆச்சு அதான் வந்தேன் .. நித்திலாவும் ராஜ்ம் கார்பார்கில் இருக்காங்க” என்று குறும்புடன் சொல்ல.

“எப்பவுமே நீ கரடி தான்” என்று கடுப்படித்தபடி காரை நோக்கி சென்றான் சங்கர்.

இதுவரை இல்லாத உணர்விது

இதயத்தில் உண்டான கனவிது

பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது

தானாக பூத்து வருகுது

தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்

மலர்ந்ததே முத்தான உணர்வுகள்

திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

இரு மனநிலைக்கும் ஏற்ற பாடலோடு அவர்கள் கார்பயணம் திரையரங்கை நோக்கி சென்றது. படம் பார்த்து முடித்த பிறகு அனைவரும் இட்டாலியன் உணவகத்திற்கு சென்றனர். சங்கர் அவனுக்கும் லவிக்கும் Arabiatta past வும் ராஜ்காக macaroni cheese ம் ஆடர் கொடுத்தான். இப்போது விழி விரித்து பார்ப்பது லவியின் முறையானது. நீ இவ்வளவு நல்லவனா என்று மனதிற்குள் சிலாகித்துக்கொண்டாள்.

இதமான மனநிலையை மௌனமாக கடந்தனர் இருவரும். பொதுவான பேச்சுகளோடு கழிந்தது அந்த மாலை பொழுது. அவ்வப்போது இருவரும் பார்வையாலே பேசும் காதல் மொழியை இரு ஜோடி கண்கள் கவனிக்க தவறவில்லை. நித்திலாவிற்க்கு மனநிறைவாக உணர்ந்தாள். யாதவ் தோழனை கட்டி அணைத்து விடைபெற்றுச் சென்றான்.

வீட்டுக்கு வரும் போதே ராஜ் தூங்கி விட்டதால் அவனை அவன் படுக்கையறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன் அவளை இரு கைகளில் ஏந்திக்கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றான்.

இனி அவங்க வாழ்வில் எல்லாம் சுகமே!!
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@akila kannan இந்த போட்டி அறிவிச்ச உடனே எனக்கு நினைவிற்கு வந்தது Lovely Lavi கதைக்கு எபிலாக் கேட்டு உன்னை படுத்தியது தான் நினைவிற்க்கு வந்தது. இது நான் கற்பனை செய்த எபிலாக்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top