• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!


25.

பத்மினியை நினைத்து யாமினியின் கண்கள் குளம் கட்டியது!

வாசு இதைப் பார்த்துக் கலவரமடைந்தான்!

"என்னாச்சு யாமினி? ஏன் கண் கலங்கற?" என்று கேட்டான்.

"ஒண்ணுல்ல வாசு.... வந்து.... உங்களப்பத்தி.... வெளிய யாருக்கும் தெரியாதப்ப... அந்த... சௌமிக்கு பாத்த மாப்ளக்கு மட்டும் எப்டி தெரியும்...." என்று கேட்டு, அன்று காவல் நிலைய வாசலில் அவனுக்காக காத்திருக்கும் போது, அவளைக் கெடுத்தவனின் பெற்றோர் பேசிக் கொண்டதைக் கூறினாள்!

"அவன் ஏன் உங்கள பழி வாங்க.... என்ன நாசப்படுத்தி....." என்று கேட்டுக் கொண்டே வாசுவின் முகம் போன போக்கைப் பார்த்து பேசுவதை நிறுத்தினாள்!

அவன் முகம் கோபத்தில் சிவந்தது நைட் லேம்ப் வெளிச்சத்திலும் நன்றாகத் தெரிந்தது!

"இதுக்கும் ஒரு வகைல பாஸ்கர் மாமாதான் காரணம்னு நெனக்கிறேன்!"

"ஏங்க..... நா அவ்ளோ தூரம் சொல்லியும், உங்களுக்கு அவர் மேல இருக்கற கோவம் இன்னும் போகலையா...."

"மாமா என்ன ஏத்துகிட்டு வளக்கல.... மாமிய மதிக்காம கொடும படுத்தினார்... சௌமிய சரியா கவனிக்காம இருந்தார்.... இதெல்லாம் என் கோவத்துக்கு காரணமே இல்ல...... அவர் மேல கோவம் வரக் காரணம் சொல்றேன் யாமினி.... அவன், அதான் உன் வாழ்க்கைய நாசப்படுத்தின பாவீ, எங்க மைதிலி பாட்டியோட பொறந்த வீட்டுக்கு எதோ சொந்தம்தான்.... நா பொறந்தப்ப.... அதாவது பாட்டி சாவுக்கு வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் பாட்டியோட காரியம் முடியற வரைக்கும் அங்க மாமா வீட்லதான் இருந்திருக்காங்க!

சிலருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கற மாதிரி, மாமாவுக்கு தூக்கத்தில உளறுர வியாதி உண்டு!

இந்த மனுஷன், தூக்கத்தில.... பத்மினி.... உன்ஆச..... இப்டி ஆயிடுத்தே.. படிக்கற வயசில...... வீணா போச்சே..... உன் மகன்..... கிருஷ்ணா..... இப்டீன்னு மொட்டையா பிட்டு பிட்டா உளறியிருக்கார்..... பக்கத்தில படுத்திருந்த பாட்டியோட பொறந்த வீட்டு சொந்தங்கள்ல சில வேண்டாத கேஸ் இருக்குமே..... அதுங்கல்லாம் சேந்து மாமா பிட்டு பிட்டா உளறினத கண், காது, மூக்கெல்லாம் சேத்து ஒட்ட வெச்சு ஒரு கதைய ரெடி பண்ணி பரப்பிட்டாங்க.....

பத்மினி எவனுக்கோ ஆசை நாயகியா ஓடிட்டா..... அவன் பத்மினிய நல்லா அனுபவிச்சிட்டு தூக்கி போட்டுட்டான்.... இதுக்கு கிருஷ்ணாவும் உடந்தை...... அதான் கிருஷ்ணா பத்மினியோட குழந்தைய எடுத்து வளக்கறான்..... அப்டின்னு ஒரு கதை!" என்றான்!

அவனுடைய முகம் பாறையாக இறுகியிருந்தது!

"என்ன சொல்றீங்க?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்!

"என் தலையெழுத்து..... இந்தப் பாவி..... நா படிச்ச ஸ்கூல்லதான் படிச்சானாம்..... ஆரம்பத்தில இவன் நல்லா படிக்க மாட்டானாம்; அப்பல்லாம் இவங்க வீட்ல என்ன காட்டி, அந்த பையன் மோசமான பையன்; குப்பைல கெடந்தவன்; அதனாலதான் அவன் படிப்புலயும் மட்டம்! குணத்திலயும் மட்டமா இருக்கான்! ஆனா நீ நல்ல குடும்பத்தில பொறந்திருக்கற நல்ல பையன்.... நல்ல பசங்க நல்லா படிப்பாங்க அப்டீன்னு சொல்லி வளத்திருக்காங்க..... அத கேட்டு இவன் நல்லா படிக்க ஆரம்பிச்சு ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டரா ஆனானாம்..... அவங்க சொன்ன மாதிரி, க்ளாஸ்லயே நான்தான் லாஸ்ட்..... ரொம்ப மோசமா படிப்பேன்..... ரொம்ப அட்டகாசம் பண்ற பையன்.....

அவனும் நல்லா படிக்க ஆரம்பிச்சதால என்னால அவனுக்கு பெரிய பிரச்சனை எதுவும் வரல.... அவன் நல்லா படிச்சி கோல்ட் மெடல் வாங்கி பாஸ் பண்ணின உத்தம ராசாவா இருந்திருக்கான்.....

ஆனா என்னோட கடந்த காலம் தெரிஞ்சப்றம், நா திருந்தி நல்லா படிக்க ஆரம்பிச்சேன்! எல்லார் கிட்டயும் ஒழுங்கா இருக்க ஆரம்பிச்சேன்! ஜர்னலிசம் முடிச்சி வேலைக்காக இன்டர்வ்யூவுக்கு போகும் போது, இவனும் அதே வேலைக்கு அப்ளை பண்ணினானாம்! அவன் கெட்ட நேரமாே இல்ல என் நல்ல நேரமாே தெரீல, அவனுக்கு அந்த வேலை கெடைக்கல! ஆனா எனக்கு வேலை கெடச்சிடுச்சாம்!

அதெப்டி, நல்லா படிச்சு கோல்ட் மெடல் வாங்கின தனக்கு வேலை கெடைக்காம படிக்கும் போதெல்லாம் ஊர் பொறுக்கியா திரிஞ்சவனுக்கு இந்த வேலை கெடைச்சதுன்னு, அன்னிக்கு ஆரம்பிச்சது அவனோட பழி வாங்கற திட்டம்!

நெறைய முறை என்ன தோக்கடிக்க ட்ரை பண்ணினானாம்..... எனக்கு எதுவுமே தெரியாது.....

என்ன பழி வாங்க நேரம் பாத்துகிட்டிருந்து அவன் உன்ன நாசப்படுத்தியிருக்கான்...." என்றான் கடுமையான குரலில்.

"இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்?"

"அவன போலீஸ் விசாரிக்கறப்ப இதெல்லாம் அவன் போலீஸ்ல சொன்னது.... அன்னிக்கு ஸ்டீவன் அவனோட ஆஃபீஸ்ல வெச்சு இததான் என்கிட்ட சொன்னான்! அதுனாலதான் எனக்கு அன்னிக்கு மயக்கம் வந்துச்சு.....

எந்த தப்புமே பண்ணாத எங்கம்மாவுக்கு ஏன் இத்தன கொடுமை.... எந்த தப்புமே பண்ணாத என் மேல ஏன் இத்தன வெறுப்பு...... எந்த தப்பும் பண்ணாத உனக்கு ஏன் இப்டி நடந்துச்சு.....

மனுஷங்கல்லாம் ஏன் இப்டி அடுத்தவங்களோட நிம்மதிய கெடுக்கறாங்க......

ஏன்? என்ன மாதிரி தப்பா பொறந்த குழந்தைங்க யாருமே இந்த உலகத்தில மத்தவங்க மாதிரி நல்ல வாழ்க்கை வாழவே தகுதியில்லாதவங்களா....." என்று விரக்தியுடன் கேட்டான் வாசு!

"அப்டீன்னு யார் சொன்னாங்க..... நீங்க நல்லா வாழ்ந்து காட்டி உங்கள தரக்குறைவா நெனக்கறவங்க மூஞ்சில கரியப் பூசுங்க.....

நீங்க என்ன தப்பு செஞ்சீங்க வாசு....இல்ல அத்ததான் என்ன தப்பு செஞ்சாங்க..... நாம யாரும் எந்த தப்பும் செய்யல....."

அவள் வாயிலிருந்து தன் அன்னையை இயல்பாய் அத்தை என்று விளிக்கக் கேட்டு அவன் முகம் பிரகாசமடைந்தது! அவள் அவனை கவனிக்கவில்லை! அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஒரு பெரிய பாறாங்கல்ல உளியால அடிச்சி அடிச்சிதான் சிற்பம் செய்வாங்க! அது எவ்ளோக்கெவ்ளா அடி தாங்குதோ அவ்ளோக்கவ்ளோ அழகான சிற்பமா மாறும்! அப்பதான் அத கோவில்ல வெச்சு எல்லாரும் கும்பிடுவாங்க..... அது முதல் அடிலயே ஒடஞ்சிருச்சுன்னா.... அத கோவில் வாசல்ல படியில வெச்சுடுவாங்க..... அத எல்லாரும் மிதிச்சி மிதிச்சிதான் கோவிலுக்குள்ள போவாங்க.....அது மாதிரி, கடவுள் நம்மள அடி மேல அடி குடுத்து அழகான சிற்பமா மாத்திகிட்டு இருக்காரு..... நாம நல்லா வரணும்ல.... நாம அவர் அடிக்கற முதல் அடியிலயே ஒடஞ்சி போய்ட்டோம்னா நம்ம மேல எல்லாரும் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க..... அதுக்கு நாம எடம் குடுக்க கூடாது வாசு....." என்றாள்.

அவளுடைய தெளிவான பேச்சைக் கேட்டவன் வியந்தான்! ஆரம்பத்தில் அவள் அவசரக் குடுக்கையோ என்றெண்ணினேனே.... இப்போது இவள் எவ்வளவு தெளிவாக சிந்திக்கிறாள் என்று வியப்போடு நினைத்துக் கொண்டான்!

இவளுக்கு படிப்பு கம்மிதான் என்றாலும் அறிவு அதிகம் என்று நினைத்துக் கொண்டான்!

இங்கே பவதாரிணியும் ருக்மணியும் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர்! ரொம்ப நேரமாக பவதாரிணி உறங்க வரவில்லையே என அவளைத் தேடி வந்தார் கிருஷ்ணா!

"என்ன பவி? நீயும் ஹாஸ்பிடல்லேந்து வந்து ரெண்டு மூணு நாள் தானேம்மா ஆகுது! வந்து படும்மா! நீ தெம்பா இருந்தாதான் வாசுவால தெம்பா நடமாட முடியும்!" என்றார்!

"நாந்தாண்ணா, மன்னிய தூங்க விடாம பிடிச்சுண்டிருந்தேன்! சாரிண்ணா!" என்றாள் ருக்மணி!

"விடு ருக்மணி! எனக்கும் தூக்கம் வரல....." என்ற பவதாரிணி, தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள்!

"ஏம்ப்பா! அன்னிக்கு ஸ்டீவன் என்னதான் சொன்னான்! அந்த மாப்ள பையனுக்கு எப்டி வாசுவப் பத்தி தெரிஞ்சதாம்? நீங்க கூட நாம எது நடந்துடும்னு நெனச்சோமோ அதே நடந்துடுச்சுன்னு சொன்னீங்க! என்ன நடந்துச்சு?" என்று கேட்டாள்!

கிருஷ்ணா வேதனையுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"நாம வாசுவ தூக்கிட்டு வரும்போது வழியில குழந்தைக்காக பால் வாங்க வண்டிய நிறுத்தினோமே, ஞாபகம் இருக்கா?"

"ஆமா! ஞாபகம் இருக்கு!"

"அப்ப நா என்னோட பெரிய ஆஃபீஸர்க்கு போன் பண்ணினேன்! ஏற்கனவே அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் நா பத்மினிய தேடறதுக்கு கிளம்பி வந்தேன்! அதனால அவருக்கு போன் பண்ணினேன்!"

"சரி..."

"போன் பண்ணி, இன்னும் பத்மினி கெடைக்கல.... ஆனா வழியில குப்பைத் தொட்டில ஒரு குழந்தை கெடச்சிதுன்னு சொன்னேன்..."

"ஆமா... எங்களுக்கும் அது தெரியுமே...."

"ம்.... ஆனா.... போன இடத்தில பத்மினிய காப்பாத்த அந்த ஏரியா போலீஸ் தானே உதவினாங்க.... அவங்க மூலமா எங்க ஆஃபீசருக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு.... அவர் என்ன கூப்பிட்டு விசாரிச்சார்! நானும் வாசுவோட எதிர்காலத்துக்காக பொய் சொன்னேன்னு சொல்லி நடந்தத சொன்னேன்! அவரும் பெருந்தன்மையா அத சரீன்னு ஒத்துகிட்டு பத்மினி காணம்! கண்டுபிடிக்க முடீல! அப்டீன்னு கேஸை க்ளோஸ் பண்ணிட்டாரு....

ஆனா பத்மினியோட அம்மா, அதாவது மைதிலி ஆன்ட்டியோட பொறந்த வீட்டு ரிலேஷன்ல யாரோ ஒருத்தரும் போலீஸ் டிபார்ட்மென்ட்ல பெரிய உத்யோகத்தில இருந்திருக்கார் போல.... அவரும் பத்மினி கேஸ் நமக்கு தெரியாம ஃபாலோ பண்ணியிருந்திருக்கார்! பத்மினிய கண்டுபிடிக்க உதவின அந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த எவனோ.... இல்ல அந்த ஹாஸ்பிடல்ல இருந்த எவனோ..... இல்ல அந்த வீடியோ கடைக்காரனோ..... யார் மூலமோ அவருக்கு விஷயம் போயிடுச்சு.... அவர் மூலமா அவங்க ரிலேஷன்ஸ்க்கு விஷயம் போய்டுச்சி.... அதுதான் இப்ப பெரிய சூறாவளியா மாறி வாசுவோட வாழ்க்கைல விசிறியடிக்க ஆரம்பிச்சிருக்கு!" என்றார் கிருஷ்ணா!

தண்ணீர் குடிக்க எழுந்து வந்த வாசுவும் யாமினியும் இதைக்கேட்டு அவரருகில் வந்தார்கள்!

"என்னப்பா சொல்றீங்க? நான் இதுக்கு மாமாதான் காரணமாயிருக்கும்னு நெனச்சேன்!" என்று கூறி தன் யூகத்தைச் சொன்னான் வாசு!

"அவர் தூக்கத்தில உளறுவார்தான்! நீ சொல்ற மாதிரியும் நடந்திருக்கலாம்!" என்றாள் ருக்மணி வேதனையுடன்!

"மாமா இத வேணும்னு பண்ணியிருக்க மாட்டார்.... பாவம்..... அவர் மேல எனக்கு கோவம் வந்துச்சே ஒழிய இப்ப அது சுத்தமா போய்டுச்சு.... அவரும்தான் என்ன பண்ணுவார்! இன்னொருத்தனா இருந்தா.... இந்நேரம் உயிர விட்டிருப்பார்.... இவர் பாவம்.... உடம்பு சரியில்லாதப்ப கூட எனக்கு நல்லது பண்ணனும்னுதான் நெனக்கிறார்.... ஆனா அவருக்கு என்ன பண்ணனும், எப்டி பண்ணனும்னு புரியல...." என்றான் வாசு கரிசனையுடன்!

"நீ பத்மினியோட புள்ளைல்ல.... அதான்.... அவ என்னிக்குமே அவ அண்ணன விட்டு குடுக்க மாட்டா... அதே மாதிரி நீயும் உன் மாமாவ விட்டு குடுக்காம பேசற.... உன்னோட அன்பை அந்த மனுஷர் ஒழுங்கா புரிஞ்சிகிட்டா சரி....." என்றாள் ருக்மணி!

இங்கே மருத்துவமனையில்:

"அண்ணா...."

"யாரு.... யாரது...."

"ஏண்ணா.... என் மகன இந்தப் பாடு படுத்தற.... உன்னால அவன வளக்க முடியாதுன்னு புரிஞ்சிதானே நா ராஜூண்ணா கிட்ட குடுத்தேன்.... அப்றமும் ஏண்ணா அவன் வாழ்க்கையோட வெளையாடற....."

"இல்ல.... இல்லமா..... நா...."

"அவன நிம்மதியா வாழ விடுண்ணா.... ப்ளீஸ்....."

"நா.... நா... வாசூ.... பத்மினீ..... வாசுவோட நிம்மதிய..... நா..... கெடுக்கலம்மா.....நா.... கெடுக்க மாட்டேம்மா..... பத்தூ.... பத்மினீ......."

பாஸ்கர் மாமாவின் இதயத் துடிப்பு தாறுமாறாக இருக்க, ரத்தம் ஏகமாகக் கொதித்தது! அவருடைய மூச்சு திணறியது!

அன்றைய இரவு எல்லாருக்கும் தூங்காத இரவாகக் கழிய வானம் கதிரவனின் வரவை எதிர் நோக்கியிருக்க, மெல்ல விடியத் தொடங்கியது!

மணி அதிகாலை ஐந்தாகியிருக்க, வாசுவின் கைப்பேசி அலற, அவன் அதை உயிர்ப்பித்துத் தன் காதுக்கு கொடுத்தான்!

"ம்... சொல்லு ஆகாஷ்!"

"டேய்.... வாசூ..... உங்க மாமா....."

"மாமா... டேய்... மாமாவுக்கு என்னடா....." என்ற வாசுவின் பேச்சு கேட்டு ருக்மணி மாமி பதறினாள்!

"வாசூ... அவருக்கு என்னடா...."

"மாமாவுக்கு திடீர்னு முழிப்பு வந்துடுச்சுடா.... பத்மினீ... வாசூன்னு சொல்லி புலம்பறார்.... பல்ஸ் குறைஞ்சுகிட்டே வருதுடா.... கொஞ்சம் க்ரிட்டிக்ல்தான்....." என்றான் ஆகாஷ்!

"மை காட்! டேய்.... மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாது! நாங்க இப்பவே வரோம்! அவர பத்திரமா பாத்துக்கோ!" என்று ஆகாஷிடம் கூறிவிட்டு அவன் கூறியதை வாசு இங்கே மற்றவர்களிடம் கூறினான்!

அனைவரும் அரக்கப் பரக்க மருத்துவமனைக்கு விரைந்தனர்!



- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!




 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
interesting sis
"ஒரு பெரிய பாறாங்கல்ல உளியால அடிச்சி அடிச்சிதான் சிற்பம் செய்வாங்க! அது எவ்ளோக்கெவ்ளா அடி தாங்குதோ அவ்ளோக்கவ்ளோ அழகான சிற்பமா மாறும்! அப்பதான் அத கோவில்ல வெச்சு எல்லாரும் கும்பிடுவாங்க..... அது முதல் அடிலயே ஒடஞ்சிருச்சுன்னா.... அத கோவில் வாசல்ல படியில வெச்சுடுவாங்க..... அத எல்லாரும் மிதிச்சி மிதிச்சிதான் கோவிலுக்குள்ள போவாங்க.....அது மாதிரி, கடவுள் நம்மள அடி மேல அடி குடுத்து அழகான சிற்பமா மாத்திகிட்டு இருக்காரு..... நாம நல்லா வரணும்ல.... நாம அவர் அடிக்கற முதல் அடியிலயே ஒடஞ்சி போய்ட்டோம்னா நம்ம மேல எல்லாரும் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க..... அதுக்கு நாம எடம் குடுக்க கூடாது வாசு....." என்றாள்.
superb sis(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)baskar mama pilaithu kolvaar thane.......... ellorkum ava mela irutha kobam kurainthu vittathu thane
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top