• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
சென்ற பதிவுக்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்!


eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்...6
..................... ....................


மாறன் மறுநாளே அலுவலகத்தில் ஜாயின் செய்திருந்தான், அவனோடு அமெரிக்காவில் பணிபுரிந்த மீதி நால்வரும் கூட பணியில் சேர்ந்திருந்தனர்..


அதில் சுபா ஓடி வந்து, மாறனை அணைக்க வர …ஹேய்! நில்லு.. எதுக்கு இப்படி ஓடி வர.. என அவளை தடுத்தான் மாறன்


பின்ன! உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு! என அவள் மையலோடு சொன்னாள்..


ஒரு மாசம் கூட ஆகலை , எல்லோரும் ஒண்ணா தானே அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தோம் என சொன்னான் மாறன், அதற்கு சுபா ஏதோ சொல்ல வந்த வேளையில், மகேந்திரன், ராதிகா, உமா, என அவனோடு பணிபுரியும் எல்லோரும் வர, அங்கே உற்சாகம் பீறிட்டது! இவர்கள் ஐவர் தான் பாரினில் ஒன்றாக பணியாற்றியது..


அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற சிலரும் வர, அந்த காலைப்பொழுது களைகட்டியது, அப்போது வந்த ராகவ்," என்னடா! எல்லோரும் சேர்ந்தது புது மாப்பிள்ளையை கலாய்க்கிறீங்களா? என கேட்டான்


புது மாப்பிள்ளையா? யாருடா அது? கோரசாக சத்தம் வந்தது!


அதுவா! அட உங்களுக்கு விஷயம் தெரியாது இல்ல... ஃபாரின் போயிட்டு வந்து இருக்கானேன்னு நம்ம கம்பெனி அவனுக்கு 20 நாள் லீவு கொடுத்தால், ஊருக்கு போனவன் பட்டு வேட்டி, சட்டை போட்டு திடீர்னு புது மாப்பிள்ளை ஆகிட்டான்...இப்ப அந்த புது மாப்பிள்ளை கருப்பு சட்டை போட்டுட்டு கலக்கலா நின்னுட்டு இருக்குது! என மாறனை பார்த்துக்கொண்டே ராகமாய் சொல்ல..


எல்லோரும் கருப்பு சட்டை போட்டிருந்த மாறனை ரவுண்டு கட்டி கேள்வி மேல் கேள்வி கேட்டு கேலி செய்ய.. சுபா மட்டும் அதிர்ச்சிக்குள்ளான முகத்தோடு ஓரமாய் ஒதுங்கி நின்றாள், அவளுக்கு மாறனின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது, அது காதலா என்று கேட்டால் அவளுக்கே பதில் தெரியாது, அமெரிக்காவில் அவனோடு கொஞ்சம் நெருங்கிப் பழக நினைத்தாள், ஆனால் மாறனோ," நீ என் தோழி! அதற்கான எல்லையில் நில்! என ஒருவித ஒதுக்கத்தோடே பழகினான், அவள் மட்டுமில்லை எந்தப் பெண் என்றாலும் ஒருவித ஒதுக்கத்தோடே மாறன் இருப்பான், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமே அதற்கு காரணம், தன்னை விட்டு அவன் எங்கு போகப் போகிறான் என அசட்டையாக இருந்த சுபாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவனின் திடீர் திருமணம்..


மாறனை சூழ்ந்த அனைவரும், அவர்கள் கலாச்சாரப்படி பார்ட்டி கேட்டு நச்சரிக்க..


பார்ட்டி தானே கண்டிப்பா வர்ற சனிக்கிழமை வைக்கிறேன்,இப்ப நம்ம டூட்டிய பார்க்கலாம்டா! இல்லன்னா.. அந்த ஹெட் சோடா புட்டிட்ட திட்டு வாங்கணும் என பேசி கூட்டத்தை கலைத்துவிட்டு, தன் இடத்தில் வந்து வேலையை பார்த்தான் மாறன்.


மாலையை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்,அந்தப் பெரிய ஹாலின் ஒரு மூலையில் இருந்த கப்போர்டில் பைலை தேடிக்கொண்டிருந்தான் மகேந்திரன், அப்போது அவன் அலைபேசி அலையோசை எழுப்ப…


அங்கிருந்தபடியே மகேந்திரன், போனுக்கு பக்கத்திலிருந்த மாறனிடம்,

"போன்ல யாருன்னு பாருடா! என்றான்..


டேய் ஏதோ பேபின்னு கால் வருது! அட்டென்ட் பண்ணவா?


பேபியா! இதோ வரேன்! என பதறி அடித்துக்கொண்டு மகேந்திரன் போனை எடுக்க வந்தான், ஆனால் அதற்குள் கால் கட்டாகி இருந்தது..


என்னடா பேபினதும் பதறிட்டு வர்ற...யாரு பேபி? புருவம் உயர்த்தி சந்தேகத்தோடு கேட்டான் மாறன்.


அட நீ வேற.... அது என் மனைவி தான்டா!...போனை எடுக்காமல் விட்டால் திட்டுவா..அதான் வேகமா வந்தேன்!


உன் மனைவி பேரு ராஜராஜேஸ்வரி தானே? ஓ பேபின்னு செல்லமா கூப்பிடுவியா? ஓகே! ஓகே!, நீ பரவால்லடா .. அவனவன் பொண்டாட்டியை பேய்! பிசாசுன்னு கூப்பிடும் போது.. நீ செல்லப் பேரு வச்சு கூப்பிடுறே, நல்லது தான் என நண்பனைப் பாராட்டினான் மாறன்..


போடா டேய்! நானும் பேய் , பிசாசுன்னு தான் கூப்பிடுவேன் ஆனால் என்ன.. அந்த இரண்டு வார்த்தையிலும் இருக்கிற முதலெழுத்தை சேர்த்து வச்சு பேபின்னு கூப்பிடுவேன், நான் செல்லம் கொஞ்சுவதா அவ சந்தோசப்பட்டுப்பா,அவளைத் திட்டுனதா நான் சந்தோஷப்பட்டுப்பேன்! எப்படி என் அறிவு திறமை என ஸ்டைலாக கேபினின் மீது கைவைத்து அவன் பேசிக்கொண்டிருக்க.. அப்போது மாறன் சைகையில் ஏதோ அவனிடம் சொல்ல முயற்சித்தான்.


என்னடா? கையால் அபிநயம் புடிச்சிட்டு இருக்க ..என மகேந்திரன் கேட்க


ம்ம்ம்! அக்கட சூடு !என மகேந்திரனின் பின்னால் கை காட்டினான் மாறன்..


அசால்டாக திரும்பிப் பார்த்தவன், அங்கே அவன் மனைவி ராஜி நிற்கவும் அரண்டு போனான்,"ஐயோ பேபி! ச்சி! ராஜி? நீ.. நீ..எங்க இங்க?
தட்டு தடுமாறி அவன் பேச..


அவளோ இடுப்பில் கைகளை வைத்து,சிவந்த முகத்தோடு அவனை முறைத்தபடி நின்று இருந்தாள்.


அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக, "அட ஆமாம்! நான் உன்னை சினிமாவுக்கு போக வரச் சொல்லி இருந்தேன் இல்ல.. நீ ஆபிஸ்க்கு வந்தா ரிசப்சனில் காத்திருக்க வேண்டியதுதானே! ஏன் உள்ள வந்தே? என ஏதோ தப்பு அவள் மேல் தான் என்பது போல் கேட்க..


அதற்கும் ராஜி எதுவும் பேசாமல் நின்ற நிலையிலேயே நிற்க..


மகேந்திரனுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கியது, தான் பேசியதை அவள் கேட்டு விட்டாள் என்பது அவளின் தோரணையிலேயே அவனுக்கு புரிந்தது, ஒரு காமெடி படத்துக்கு போக நினைத்து இருந்தவனுக்கு, இன்னைக்கு ஆக்க்ஷன் படம் வீட்டிலேயே உண்டு என்பதும் புரிந்தது! என்ன நடந்தாலும் அது நாலு சுவற்றுக்குள் இருக்கட்டும் என்று அவள் கைகளைப் பிடித்து, மெதுமெதுவாய் சமாதானம் பேசியபடியே கூட்டிச் சென்றான்.


அதை ஒரு நமட்டுச் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த மாறனும் தனது பேக்கை எடுத்துக் கொண்டு பார்க்கிங் வர, அங்கோ சுபா நின்று கொண்டிருந்தாள்..


என்னாச்சு சுபா? கிளம்பலையா? என மாறன் கேட்க..


என்னோட பைக் பஞ்சர் ஆகிடுச்சு, மெக்கானிக் எடுத்துட்டு போயிட்டான், அதான் எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு
நிற்கிறேன் , என்னை ட்ராப் பண்ண முடியுமா? சுபா கெஞ்சலா,கொஞ்சலா என தெரியாத குரலில் கேட்டாள்..


கொஞ்சம் யோசித்தவன்," சரி வா! நான் கூட்டிட்டு போறேன், என அவளை தன் பைக்கில் கூட்டிச்சென்றான்,சுபா இருப்பது அவன் இருக்கும் ஏரியாவுக்கு அருகில் தான்..


பைக் தன் வீட்டை நெருங்கிய போது , சுபாவிடம்

"இந்த வீட்டில்தான் நாங்க இப்ப இருக்கோம் ! டைம் கிடைக்கும்போது வா!" என சொல்ல..


ஏன் இப்ப வந்த தப்பா.. உன் மனைவி இருப்பாங்க இல்ல... எனக்கு அறிமுகப்படுத்தி வை! எனக்கும் அவங்கள பாக்கணும் போல இருக்கு.. என கேட்டாள், அவள் கேட்டதால் பைக்கை நிறுத்தியவன், வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


உள்ளே இரவு சமையலுக்காக சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த பாரதி, காலிங் பெல் அடித்ததும் சென்று கதவை திறந்தாள்..


அங்கே புன்னகை முகத்தோடு நின்ற மாறன்," ஹாய் பாரதி! என்ன சமையல் பண்ணிட்டு இருந்தியா? என உற்சாகத்தோடு கேட்டான்


மாறனா?சிரிச்சுக்கிட்டு பேசுவது நம்மகிட்டயா? என ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள் பாரதி..


பாரதி," இவங்க சுபா! என்னோட பிரண்டு, என்கூட தான் வேலை பார்க்கிறாங்க! என அறிமுகப்படுத்த, அப்போதுதான் மாறனுக்கு அருகிலிருந்த சுபாவை கவனித்தாள் பாரதி..


அதானே! இவனாவது சிரிப்பதாவது, கூட ஆள் இருப்பதால சிரிக்கிற மாதிரி நடிச்சு இருக்காரு,.. மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பாரதி, ஆனால் வெளியே சிரித்தபடி," வாங்க சுபா! உள்ள வாங்க! என அழைத்து அவளை சோபாவில் அமர வைத்தாள்..


சுபாவுக்கு தேனீர் தயாரித்து எடுத்து வந்தவள், அவளிடம் அதை நீட்ட.. அந்த நேரம் மாறனுக்கு போன் வந்ததால், அவன் போன் பேசியபடியே தோட்டத்திற்கு போனான்.


பாரதியை மேலும் கீழும் குரோதத்தோடு பார்த்த சுபா,"நீ பார்க்க அப்படி ஒண்ணும் கலரா இல்ல! அழகாவும் இல்ல.. பின்னே எப்படி மாறன் உன்னை அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான், சுபா சந்தேகமாய் கேட்க..


அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத பாரதி, அவளை உற்றுப் பார்த்தாள். அவள் விழிகளில் பொறாமையும், எரிச்சலும் அப்பட்டமாய் தெரிந்தது.


சுபாவை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தபடியே," நீங்க கேட்டது சரியான கேள்வி! ஆனால் தப்பான ஆள்கிட்ட கேட்டுட்டீங்க! நீங்க இந்த கேள்வியை அவர்கிட்ட தான் கேக்கணும் !என தோள்களைக் குலுக்கியபடி, அலட்சியமாய் பதில் சொன்னாள் பாரதி..


கேட்பேன், கண்டிப்பா கேட்பேன்! என்னை மாதிரி அல்ட்ரா மாடர்ன் பொண்ணுகிட்ட இல்லாதது ,இந்த பட்டிக்காட்டுட்ட என்ன இருக்குன்னு கேட்பேன்! ஆவேசமாய் சொன்னாள் சுபா!



ஓ தாராளமா கேளுங்களேன்! உங்ககிட்ட இல்லாதது என்கிட்ட என்ன இருக்குன்னா, அன்பு ,அக்கறை பொறுமை, பொறுப்பு.. இப்படி இன்னும் எத்தனையோ சொல்லி லிஸ்ட் போட்டுக் கிட்டே போகலாம்...ஆனா என்னைப் பத்தி நானே சொன்னா அது தற்பெருமை மாதிரி இருக்கும், அதனால நீங்க அவர்கிட்டயே கேளுங்க! என்னை பட்டிக்காடுன்னு சொன்னீங்கல்ல.. அவர் கூட எனக்கு பக்கத்து பட்டிக்காடு தான்.. ஒருவித தெனாவெட்டுடன் சொன்னாள் பாரதி.


"ஏய் !என்ன ரொம்ப திமிரா பேசுற, ஒண்ணு தெரிஞ்சுக்கோ! நீ என்னதான் மாறனை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், மாறன் உனக்கு சொந்தமாகிவிடமாட்டான், மாறன் எப்பவுமே எனக்கு தான் ! மாறன் மாதிரி ஒரு ஆளுக்கெல்லாம் நீ பொருத்தமே இல்லை! அவனுக்கு உன்மேல ஆசை, காதல் இதெல்லாம் வராது! ஏதோ கட்டாயத்தில் தான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கணும், அவன்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு, உன்னை உங்க பட்டிக்காட்டுக்கே பார்சல் பண்ணி அனுப்பி வைக்கிறேன் பாரு! என சுபா விரல் சொடுக்கி சவால் விட..


அலட்சியமான முகபாவத்தோடு அவளைப் பார்த்த பாரதி, "ஏம்மா இப்படி வார்த்தைக்கு வார்த்தை மாறன், மாறன்னு கத்தரீங்க? காது அடைக்குது,இதுல சவால் வேற... இதுக்கு நான் உன்கிட்ட பதில் சவால் விடணுமா? எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை என்றவள், சுபாவை மேலும் கீழும் பார்த்து, அந்த அளவுக்கு நீ வோர்த்தும் இல்லை என சேர்த்து சொன்னாள் அலட்சியமாய்!


அதைக்கேட்டு கோபத்தில் சிலிர்த்த சுபாவின் அருகில் போனவள்,


"எனக்கும் மாறனுக்கும் பெரியவங்க ஆசிர்வாதத்தோடு திருமணம் ஆகிடுச்சு, இந்த ஜென்மத்துல அவருக்கு நான் தான் மனைவி, இதை யாராலும் மாற்ற முடியாது !இப்படி அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல், நாகரீகமா வாழ கத்துக்க..இந்த மாதிரி கெட்ட எண்ணத்தோட இனிமே என் வீட்டு வாசல்படி மிதிச்சிடாதே! கெட் அவுட்! இந்த வீட்டிலிருந்து மட்டுமில்லை.. எல்லாத்துல இருந்தும் என்றாள் பாரதி,நிதானமாக ஆனால் உறுதியாக..


பதில் பேச சுபா வாயை திறக்க அதற்குள் மாறன் உள்ளே வருவதை கண்டதும், உடனே முகத்தை மாற்றி சிரித்தபடி "பாரதி உங்க டீ நல்லா இருந்தது, தேங்க்ஸ்!" என்றாள்.


அட எங்க வீட்டு டீ உனக்கு புடிச்சிருக்கா? மாறன் எதார்த்தமாய் கேட்டபடி உள்ளே வந்தான்..


டீ ரொம்ப புடிச்சிருக்கு! இந்த டீ குடிப்பதற்காகவே அடிக்கடி இங்க வரணும் போல இருக்கு.. என்றாள் சுபா, பாரதியை ஓர விழிப்பார்வை பார்த்தபடி..


அதனால என்ன பக்கத்துல தானே இருக்க.. அடிக்கடி வா! இப்ப வீட்டுக்கு போலாமா? என சுபாவை அழைத்தான் மாறன்..


விடை தருவதுபோல் அவள் அருகில் வந்த பாரதி, அடிக்கடி வீட்டுக்கு வந்தாய் என்றால், டீ ல சர்க்கரைக்குப் பதிலாக விஷத்தை போட்டு தருவேன் பரவாயில்லையா?.. என நக்கலாக கேட்டாள் அவள் காதருகில்..


எதுவும் பதில் சொல்ல முடியாத சுபா, குரூரமான பாவனையுடன் தலையாட்டிக் கொண்டு விடைபெற்றாள்..


சுபாவை ட்ராப் செய்துவிட்டு திரும்பி வந்த மாறனுக்கோ, மனதுக்குள் உற்சாகம் பீறிட்டது! அவன் சுபாவும் பாரதியும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு விட்டான்,சுபாவின் மனதில் இருப்பதை பற்றி அவனுக்கு கவலையில்லை, பாரதிக்கு சுபாவை பிடிக்கவில்லை, சுபாவுக்கும் பாரதியை பிடிக்கவில்லை, இந்த சுபாவை வைத்து பாரதியை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்யலாம் என்றுதான் அவன் யோசிக்கத் தொடங்கினான், அவனும் பாரதியை டார்ச்சர் செய்ய ஒவ்வொரு பாலாக போட, அவள் ஒவ்வொன்றையும் சிக்ஸ்ராக அடித்தால் பாவம், அவன்தான் என்ன செய்வான்?, அவளை ரன் அவுட் செய்யும் வாய்ப்பாகவே சுபாவை பார்த்தான்..


அன்று சனிக்கிழமை, ஹோட்டலில் பார்ட்டி தருவதாக மாறன் சொன்னதால்,அதற்கான ஏற்பாடுகளை பண்ணியிருந்தான்..


பார்ட்டிக்கு செல்ல கிளம்பியவன், அவனோடு வரத்தயாராகி வந்த பாரதியைப் பார்த்து ஒரு கணம் மெய்மறந்து நின்றான்..


ஒரு லைட் பிங்க் நிற டிசைனர் சேலையை நேர்த்தியாய் உடுத்தி இருந்தாள் பாரதி, கூந்தல் மற்றும் முக அலங்காரம் அதற்குத் தகுந்தார்போல் இருக்க.. பார்க்கவே மிக அழகாக இருந்தாள், அது ஆளை அசரடிக்கும் அழகில்லை! பார்க்கும் போதே கண்களுக்கு குளிர்ச்சி தரும் மெல்லிய மலரின் மென்மையான அழகு..


அந்த மலரின் அழகில் கவரப்பட்டுதான் ஒருநொடி அவளைப்பார்த்துக்
கொண்டிருந்தான் மாறன்!


அவள் உன் எதிரி டா! அவளை ஏன் அப்படி பார்க்கற? என மனசாட்சி குரல் கொடுக்க... தன் தலையில் மானசீகமாக குட்டிக்கொண்டவன் தலையை சிலுப்பி தெளிவிற்கு வந்தான்..


இருவரும் சந்தோசமான மனநிலையோடே பார்ட்டிக்கு சென்றனர், அந்த மனநிலை திரும்பிவரும்போது இருக்குமா? என்பது தான் தெரியவில்லை!!



அனல் வீசும்!









 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Yenma suba konchamachum arivirukka unakku? Kalyanam agiruchu nu therinchum ipdi pesriye🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤨🤨🤨🤨🤨🤨🤨 ada dei ippovum pazhi vanga idea kedaichuruchu nu than santhosha paduviya
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top