• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சுரைக்காய் தட்டைப்பயிறு குழம்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
தேவையான பொருட்கள் :

தட்டைப்பயிறு - 1/2 glass or பச்சை தட்டக்காய் (காரமணிக்காய் என்றும் சொல்வார்கள்) ஒரு கால் கிலோ
மஞ்சள் தூள் - 1/2 T.Spoon
புளி - 50 கிராம்
தக்காளி - 2
சுரைக்காய் - (small Size) ஒன்று

வதக்கி அரைப்பதற்கு :

சின்ன வெங்காயம் - 1/4 kilo
கடலைப் பருப்பு - 1 tab.Spoon
வர மிளகாய் - 4
தனியா - 1 tab. spoon
சீரகம் - 1 tab.spoon
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தாளிப்பதற்கு :

எண்ணெய் - 1 tab. spoon
சீரகம் - 1/4 T.Spoon
கடுகு - 1/2 T.Spoon
வெந்தயம் - 1/4 T.Spoon க்கும் குறைவாக
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5

செய்முறை :

சுரைக்காய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும், தட்டக்காயை வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளுங்கள், கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வர மிளகாய், தனியா, சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைசாக அரைச்சு எடுத்துக்கோங்க, புளியை ஊறவைத்துக் கரைத்து வைத்துக்கோங்க.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கோங்க, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக்கோங்க, அடுத்து சுரைக்காயைச் சேர்க்கவும்., பின்பு காய்களை நன்கு வேக விடவும்,
வதங்கியதும் வேக வைத்த தட்டைக்காய் சேர்த்துக் கிளறி விடுங்கள்,

அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், தண்ணீர் சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிடுங்க.. சுவையான சுரைக்காய் தட்டைப்பயறு குழம்பு ரெடி.. இது சாதத்துக்கு மட்டுமல்ல இட்லி தோசை, சப்பாத்திக்கும் கூட நன்றாக இருக்கும்.

maxresdefault.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
எங்கள் வீட்டில் தேங்காய் மட்டுமே அரைத்துவிடுவோம்.
Apdiyum pannalam sagothari
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
பார்க்கவே ரொம்ப நாவூறுது. சூப்பரா இருக்கு. ஹெல்தி டிஸ். கண்டிப்பா செய்து பார்க்கின்றேன். இங்கு வெள்ளை, மற்றும் சிவப்பு காராமணி தான் இருக்கு இப்படிப் பச்சை இருக்கா தெரியாது.
1626837681928.png1626837807469.png1626837882417.png
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
என்ன ஸ்வீட்டி கலை தம்பியைப் பாசமாக் கூப்பிடுறீங்க. ஆனால் அந்த தம்பிக்கு ப்ரியா சிஸ்ஸின் சமையலில் ஆயிரம் சந்தேகம் வந்து அந்தப் பிள்ளையைப் போட்டு வம்பு இழுப்பாரே ஒரு வேளை அதுக்கு தான் கூப்பிடுறீங்களோ? ரொம்மோட சண்டை போட.
1626838172726.png
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
பார்க்கவே ரொம்ப நாவூறுது. சூப்பரா இருக்கு. ஹெல்தி டிஸ். கண்டிப்பா செய்து பார்க்கின்றேன். இங்கு வெள்ளை, மற்றும் சிவப்பு காராமணி தான் இருக்கு இப்படிப் பச்சை இருக்கா தெரியாது.
View attachment 30502View attachment 30503View attachment 30504
பச்சை காராமணிங்கறது செடியிலிருந்து காயாமல் பறித்தவுடன் செய்வது. நிறத்தை சொல்வதல்ல.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
பச்சை காராமணிங்கறது செடியிலிருந்து காயாமல் பறித்தவுடன் செய்வது. நிறத்தை சொல்வதல்ல.
நன்றி அக்கா.
1626846393461.png1626846451214.png1626846692332.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top