• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை!💕.8.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
நெஞ்சம் மறப்பதில்லை!.8.

"உன்னைய யாருடா இந்த நேரத்துல நினைக்கிறது?" என்ற தாத்தாவின் கேள்விக்கு,

"என்னைய எல்லாம் யாராவது நினைக்கிறதுக்காக புறையேறணும்னா, இருபத்தி நாலு மணி நேரமும் புறையேறணும் தாத்தா! அத்தனை பொண்ணுங்க என்னைய நினைச்சுட்டு இருப்பாங்க."

"எந்நேரமும் புறையேறுணா அதுக்குப் பேரு வியாதிடா. அதுவுமில்லாம நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட."

"என்ன தாத்தா! என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்க. காலேஜ் டேஸ்ல இருந்து இப்ப வரைக்கும் எத்தனை பேர் எம்மேல க்ரஷ்ஷா இருக்காங்க தெரியுமா?"

"இருந்து என்னடா பிரயோஜனம் சொல்லு! ஒன்னையாவது செலக்ட் பண்ணி இருக்கியா?"

"தாத்தா! நான் சொன்னதை நீங்க சரியா கவனிக்கலை. க்ரஷ்ஷா இருக்காங்கனு தான் சொன்னேன்."

"அதைத்தான் சூர்யா நானும் சொல்றேன்.காலேஜ் படிக்கிறப்பயாச்சும், யாரையாவது லவ் பண்றேனு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். சொல்லலை சரி... பிஸினஸ் சர்கிள்ள யாரையாவது உனக்குத் தகுந்த மாதிரி செலக்ட்
பண்ணுவேன்னு எதிர்ப்பாத்தா, அதுவுமில்லை. வேற வழி இல்லை... நாம தான் இவனுக்குப் பொண்ணுப் பாத்து வைக்கணும் போலேன்னு பொண்ணு போட்டோஸ் காமிச்சா ஒன்னு கூடப் பிடிக்கலைங்கற. என்ன தான்டா எதிர்பாக்குற?"
சத்யபிரகாஷ் அலுத்துக் கொள்ள,



"தெரியலை தாத்தா! நீங்க சொன்ன மாதிரி எந்த பொண்ணையும் லவ் பண்ணனும்னு தோணல. காலேஜ் டேஸ்ல ஃப்ரென்ட்ஷிப் தாண்டி யார்‌கூடயும் பழகப் பிடிக்கல. பிஸினஸ் சர்க்கிள்ல பாக்குற பொண்ணுங்க எல்லாம், என்ன மட்டும் விரும்பறவங்களாத் தெரியலை. அவங்களுக்கு பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் அடையாளம் தேவைப்படுது. அப்புறம்... எனக்குத் தெரிஞ்சு நீங்க காட்டுற போட்டோஸும் கிட்டத் தட்ட ரெண்டாவது வகையறா தான்."

"ஆமாண்டா! நமக்கு பொண்ணு விவரம் கொடுக்கறவங்க நமக்குத் தகுந்த மாதிரி தானே தருவாங்க."

தாத்தாவும் பேரனும்‌ சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருக்க, மங்கையர்க்கரசி இவர்களுக்கு தோசை ஊற்றிக்கொண்டே பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"ஒரு பொண்ணைப் பாத்தா இவள் நமக்கானவன்னு தோணனும்ல. அது மாதிரி எந்த ஒரு பொண்ணைப் பாத்தாலும் தோனலை. ஃபோட்டோஸ் பாத்தாலும் தோனலை."

தாத்தா சூர்யாவை நெருங்கி கீழே குனிந்து அவன் காதருகில் சென்று, "ஏன்டா! டாக்டர் யாரையாவது பாக்கலாமா?" எனக்‌கேட்க,

"தாத்தாஆ…! எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் அவன் அம்மாவுக்கு கேட்காதவாறு கத்தினான்.

தோழனாக தந்தை இருக்க வேண்டிய வயதில் தந்தையை இழந்தவன். ஆதலால் தாத்தாவே இங்கு தந்தையும், தோழனும் ஆகிப் போனார்.

"தாத்தா! நான் சொல்லுறது உங்களுக்குப் புரியலை. ஒரு பொண்ணைப் பாத்தா நமக்கு மட்டுமே சொந்தம்னு தோணனும். எந்த சூழ்நிலையிலும் இவளை இழந்துவிடக் கூடாதுனு மனசு ஏங்கணும். அந்த இடத்துல அந்தஸ்து, அழகு, அறிவெல்லாம் ரெண்டாம் பட்சம் ஆயிடும் தாத்தா."

"இப்ப என்ன!? அவனுக்குக் கல்யாணம் ‌நடக்கணும். அவ்ளோ தானே? அதெல்லாம் காலாகாலத்துல தானா நடக்கும். இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்க." எனக் கூறியவாறு மங்கையர்க்கரசி வர,

"நீ என்னம்மா!? இவன் கல்யாணப் பேச்சை எப்ப எடுத்தாலும் பட்டும் படாம பேசுற. ஒரு வேளை... உனக்கும் மகனுக்கும் இடையில ஒரு பொண்ணு வந்துட்டா உனக்கு உரிமை குறைஞ்சுறும்னு, அந்தக் கால மாமியார் மாதிரி யோசிக்கிறியா?"
எனக் கேட்டு சத்யப்பிரகாஷ் சிரித்தார்.

"ஆமா... நான் சீரியல் மாமியார் பாருங்க‌. இப்படி எல்லாம் யோசிக்க. நானே... இவனுக்கானவ வர்ற காலம் எப்படா வரும்னு காத்திட்டிருக்கேன்.
வந்தவுடனே கரண்டியைக் கையில் கொடுத்துட்டு சிவனேனு ஒதுங்கிற மாட்டேன்!"

"என்னங்கம்மா? அது என்ன செங்கோலா!
ஆட்சியைப் பிடின்னு கொடுக்க."

"டேய் சூர்யா! இது அதை விட பவர்ஃபுல் ஆயுதம்டா!
நீ பேச்சை மாத்தாதே. எனக்கு உன்னோட வயசுல எல்லாம், உன்னோட அப்பா ஸ்கூலுக்குப் போயிட்டான்."

"தாத்தா... பால்ய விவாகம் பண்ணிட்டு நீங்க எல்லாம் வயசைப் பத்திப் பேசக்கூடாது."

"ஆமாண்டா! எங்க தாத்தா கடைசி காலத்துல ஒத்தப் பேரனோடக் கல்யாணத்தைப் பாக்கணும்னு ஆசைப்பட்டாரு. நானும் தாத்தாவோட கடைசி ஆசையை நிரைவேத்தணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப இருக்கற பிள்ளைக மாதிரி சம்பாதிக்கணும், லைஃப்ல செட்டில் ஆகணும்கற
எண்ணம் எல்லாம் அப்ப இல்லை. சொத்துக் கிடந்தது. சொந்தத்துல பொண்ணும் இருந்தது. ஈஸியாக் கல்யாணம் முடிஞ்சது."

"தாத்தா... நான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னா சொல்றேன். எனக்கு இவதான்னு எந்தப் பொண்ணைப் பாத்தா தோணுதோ உடனேக் கல்யாணம் பண்ணிக்கிறேன். அது நீங்க பாக்குற பொண்ணா இருந்தாலும் சரி. நான் பாக்குற பொண்ணா இருந்தாலும் சரி." எனக் கூறி‌விட்டு கைகழுவ சூர்யா எழுந்து சென்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த
சத்யப்பிரகாஷ்,

"நாலஞ்சு தலைமுறையாவே நம்ம குடும்பத்துல ஒரு பிள்ளைதான் வாரிசுனு ஆகிப்போச்சு. இந்த தலைமுறையிலாவது அதை மாத்தி ஒரு நாலஞ்சு கொள்ளுப் பேரன் பேத்திகளைப் பாக்கலாம்னா, சரிக்கொடுக்க மாட்டேங்கறானே." எனத் தன் மருமகளிடம்‌ புலம்ப,

"கவலையை விடுங்க தாத்தா. நீங்க உங்க தாத்தா ஆசையை நிறைவேத்தின மாதிரி, நானும் எங்க தாத்தா ஆசையை நிறைவேத்துறேன்.
நாலஞ்சு என்ன? பதினாறும் பெற்று பெரு வாழ்வு மாதிரி பதினாறு பெத்துக்கறேன். போதுமா?"

"கேட்க சந்தோஷமாத் தான்டா இருக்கு. ஆனா... அடியேங்க பொண்டாட்டி இல்லை. புடி புள்ளயன்னா எப்படிடா!?"

"ஹா..ஹா... தாத்தா என்ன கிழவி மாதிரி பழமொழியெல்லாம் சொல்றீங்க."

"கிழவனும் சொல்லாம்டா!"

"கிழவனா!? யாரது?" எனக் கேட்டவனிடம்,

"போடா… படவா." எனக் கூறி விட்டு சாப்பிட்டு முடித்தவர், கை கழுவி விட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றார்.

வாஞ்சையுடன் தன் தாத்தாவையேப் பார்த்துக் கொண்டிருந்த மகனிடம்,

"தம்பி... தாத்தாகிட்ட சொன்னது இருக்கட்டும். கல்யாண வாழ்க்கையப் பத்தி நீ என்ன முடிவு பண்ணியிருக்க." தாயின் அக்கறையோடு மகனிடம் வினவ,

"அவர் கிட்ட சொன்னது தாம்மா உங்க கிட்டயும் சொல்லப் போறேன். கல்யாணம்னு யோசிச்சாலே மனசு ஏதோ ஒன்னை எதிர் பாக்குது. மனசுக்கு நெருக்கமான உறவா அமையணும்னு ஆசைப்படுது. தாத்தா சொல்ற மாதிரி ஏதாவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணலாம்னு நினைச்சாலே மனசுல ஏதோ வெறுமை படறுது. எதனாலைனு தெரியலை. மொத்தத்துல ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணனும். அனுபவிச்சு வாழணும். அவ்ளோதாம்மா!" எனக் கூறிச் சென்ற மகனையே பார்த்துக் கொண்டிருந்தார் மங்கையர்க்கரசி.

தனது அறைக்கு வந்தவன் காற்றோட்டமாக பால்கனி பக்கமாக சென்றான்.
கைகளைக் கட்டிக் கொண்டு, முன் இருந்த பால்கனி கம்பியில் சாய்ந்தவாறு நின்று கொண்டு, கீழே தெரிந்த தோட்டத்து செடிகள் மீது பார்வையைப்‌பதித்தான். இரவுப் பூக்களான மல்லி, முல்லை மலர்ந்து பரப்பிய மெல்லிய மணத்தை அவன் நாசி உணர, ஆழ்ந்து மூச்சு விட்டு நுரையீரல் நிரப்பினான்.

பார்வை செயற்கைத் தாமரைக் குளத்தில் படிந்தது. தாமரை மொட்டுக்கள், குவித்த கரமாய் கூம்பி நின்றன. தான் மலர சூரியன் வேண்டும். நிலவு நீ வேண்டாம்! சென்று ஆதவனை வரச்சொல்! என்பதாய்.

தாத்தாவிடமும் அம்மாவிடமும் தனது எதிர்பார்ப்பைக் கூறினாலும், திருமணம் என்றவுடன் மனதில் ஒரு ஏக்கம் பிறக்கிறது. மனம் யாரையோ தேடச் சொல்கிறது. எங்கேயோ போகச் செல்கிறது. யாரை? எங்கே? என்றுதான் தெறியவில்லை.

உரிமைப்பட்டவளை
அறிய முடியாமல் உடமைப்பட்டவன் மனம் ஏங்குகிறது.

அதே சமயம் ஆதியாவிடம் பேச வேண்டுமென சண்முகமும், லஷ்மியும் அவளிருந்த இடத்தை நோக்கி வந்தனர்.

அவர்களைப் பார்த்து எழுந்து கொண்டாள்.
"என்னங்க ஆன்ட்டி
எல்லோரும் தூங்கிட்டாங்களா?"

"ம்ம்.. தூங்கிடாங்கம்மா!"

"ரெண்டு பேரும் இருங்க. நான் போய் சேர் எடுத்துட்டு ‌வர்றேன்!"

அருகில் சமையல் கூடம் சென்றவள், அங்கிருந்த சேர்களில் இரண்டை எடுத்து வந்தாள்.

அவள் செடித்திட்டில் அமர, அவர்கள் இருவரும் அவளை எதிர் நோக்கி சேரில் அமர்ந்தனர்.

"ஆதிம்மா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!" சண்முகம் ஆரம்பிக்க,

"இந்நேரம் என்னைத் தேடி வரும் போதே தெரியும். சொல்லுங்க அங்கிள்."

"உன் வாழ்க்கையப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க? இப்படியே
எவ்வளவு நாளைக்கு யோசிப்ப?"

"நீ தேவையில்லாம பயப்படறியோனு
தோணுது." லஷ்மி கூற,

"இது பயம் இல்லை ஆன்ட்டி.
எதிர்பார்ப்பு." என்றவளிடம்,

''ஆனா எங்களுக்குப் பயமா இருக்கே ஆதிம்மா! பெத்தவங்க இருந்திருந்தா
இப்படி ஆகுமான்னு ஒரு கேள்வி வரும். இல்லை நீங்க பெத்த பிள்ளையா இருந்திருந்தா இப்படித் தான் வீட்ல வச்சு அழகு பாப்பீங்களானும் கேள்வி வரும்."
என லஷ்மி தனக்குரிய பயத்தைக் கூறினார்.

"யாரு கேப்பாங்க ஆன்ட்டி".

"ஊருல நாலு பேரு கேக்க‌மாட்டாங்களா? அப்படி இல்லைனா உன் சொந்தக்காரங்கள்ல யாராச்சும் ‌கேக்க மாட்டாங்களா?"

"யாரு சொந்தக்காரங்க? அம்மாவும் அப்பாவும் இறந்த அன்னைக்கே, வயசுப்பொண்ணு தனியா ஆகிட்டாளேனு கவலைப்படாம, சொத்துக் கணக்குப் போட்டு பொண்ணைக் கல்யாணம் பண்ண திட்டம் போட்ட அப்பா வழி சொந்தமா? இல்லை... பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கத் தோதா மாப்பிள்ளை ‌இல்லையேனு கவலைப்பட்ட அம்மா வழி சொந்தமா?"

"சரி அவங்களை விடு! உன் மேல அவங்களுக்கு அக்கறை இல்லை. எங்களுக்கு இருக்கா?இல்லையா?"

"இல்லைன்னு சொல்லுவேனா அங்கிள்?"

"அப்படினா எப்பப் போய் நாங்க பேசட்டும்?" சண்முகம் கேட்க,

"ஏன் அங்கிள்? இப்ப நான் போனா அவங்க அம்மா என்னைய ஏத்துக்க மாட்டாங்கணு நினைக்கிறீங்களா?"

"அவங்க அம்மா உன்னைய ஏத்துக்கறதாம்மா பிரச்சினை?"

"கண்ணா மேல சந்தேகமா அங்கிள்."

"கண்டிப்பா கண்ணா மேல இல்லைம்மா. சூர்யப்பிரகாஷ் மேல தான். ஆனா எடுத்து சொன்னோம்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார் ஆதிம்மா!"

"நானும் அதையே தான் அங்கிள் சொல்றேன். எடுத்து சொல்லி கடமைக்காக வாழ்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம். காதலோடு வேணும். நான் அவர் மீதுகொண்ட காதலை விட, அவர் என் மீது கொண்ட காதல் அதிகம்.
அதே காதல் இப்பவும் வேணும்னு மனசும் பேராசைப்படுது." என்று லேசாகக் குரல் கமற ஆதியா கூறக் கேட்ட லஷ்மிக்கும் லேசாக கண்கள் கலங்கியது.

"சரிம்மா! இப்ப என்ன பண்ணலாம்?
இப்படியே கனவுலயே வாழ்ந்திறலாம்னு இருக்கியா? குழந்தை குட்டினு வாழ வேண்டாமா?"

"கண்டிப்பா ஆன்ட்டி! அவர் பக்கமும் அவர் ஒரே பிள்ளை. நானும் இங்கே ஒரே பிள்ளை. அதனால நாங்களாவது குறைஞ்சது நாலஞ்சாவது பெத்துக்கணும் ஆன்ட்டி! ஒத்தைப் பிள்ளையான என் அலும்பே தாங்க முடியாம, எங்க அம்மா கரண்டியும்‌ கையுமா அலைவாங்க.
நானும் அது மாதிரி கரண்டியத் தூக்கிட்டு எம்பிள்ளைக பின்னாடியே
சுத்தணும். கண்ணாவும் எங்க அப்பா மாதிரி பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு எங்கூட சண்டை போடணும்." என்று கண்களில் கனவு மிண்ண கைகளை ஆட்டிப் பேசியவளைப் பார்த்து,

"எங்கண்ணு! நீ நினைச்சது எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும் கண்ணு." என்று நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார் லஷ்மி.

"இன்னொரு விஷயம் அங்கிள்!"

"என்னம்மா?"

"'நாதன் அன்ட் கம்பெனியை வாங்கி இருக்கிறது யாரு தெரியுமா?"

"யாரும்மா!?"

"பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் அங்கிள். இன்னக்கி ரெஸ்டாரன்ட்ல அவங்க தாத்தாவைத்தான் மீட் பண்ணினோம்."

"இவ்ளோ நாளா உனக்குத் தெரியலையா ஆதியா!?"

"இல்லை ஆன்ட்டி! ஃப்ரெண்டு, ஃப்ரெண்டுனு சொன்னாரே ஒழிய பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ்னு சொல்லலை ஆன்ட்டி." என்று பாவமாய்‌ முகம் வைத்து சொன்னவளைப்
பார்த்து சண்முகம் சிரித்து விட்டார்.

"இப்ப என்னம்மா பண்ணப்போற?"

"தெரியலை அங்கிள்! சில சமயங்கள்ல அடுத்து என்ன செய்றதுனு தெரியாதப்ப, அந்தப் பிரச்சினையை விட்டு வெளிய வந்துரணும். என்ன நடக்குதுனு கையைக்கட்டி வேடிக்கை மட்டும் பாக்கணும். தீர்வைப் பிரச்சினை கையிலேயே விட்டுறணும். அப்பா அடிக்கடி இதைத்தான் சொல்லுவார்."

"ஆனா... நாங்க அப்படி விட முடியாது ஆதிம்மா! சாயங்காலம் நம்ம குட்டியம்மா கேட்ட மாதிரி கேஸ் ஒரு முடிவுக்கு வந்துட்டா, நாங்க எங்க வீட்டுக்குக் கிளம்ப வேண்டியிருக்கும். அதுக்குள்ள உன்னன, உன் கண்ணாகிட்ட‌ சேத்துரணும்."

"கேஸ் எந்த அளவுள‌ இருக்கு அங்கிள்?''

"கோர்ட்டு, கேஸுனு அலைஞ்சா வேலைக்காகாது. யாராவது முக்கியஸ்தர்களை வச்சுப் பேசிப் பாக்கலாம்னு இருக்கேம்மா!"

"கட்டப் பஞ்சாயத்து மாதிரியா அங்கிள்!"

"ஆமாம்மா! நானும் மரியாதையா முடிச்சுக்கலாம்னு பாத்தேன். ஆனா இவங்களுக்கு அது சரிப்பட்டு வராது."

வழக்கு பற்றிய பேச்சு வரவும் லஷ்மியின்‌ முகம் வாடுவதைப் பார்த்த சண்முகம், பேச்சை மாற்ற எண்ணினார்.

"லஷ்மி! நாளைக்கு ஆஃபிஸ் போகும் போது ஆதியாவுக்கு, பெட்ஷீட்டும், ஒரு பில்லோவும் கொடுத்து விட்டுறு."

"எதுக்குங்க?" புரியாமல் வஷ்மி வினவ,

"அடுத்த கம்பெனிக்கே நேரங்காலம் பாக்காம ஓடுவா! இனிமே அம்மணி கம்பெனியே கதின்னுல கிடப்பாங்க!"
என்று சண்முகம் கேலி பேசினார்.

"போங்க அங்கிள்!" என்று சிறு வெட்கத்தோடு அவள் தலையாட்டி சொன்னது, பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது இருவருக்கும்.

"சரிம்மா! ரொம்ப‌லேட்டாயிருச்சு.போய்த் தூங்குமா!'

"ஓ.கே. ஆங்கிள்!" .இருவருக்கும் பொதுவாக, "குட்நைட்." சொல்லியவள் தன் அறை நோக்கி சென்றாள்.

அவர்களும் மாடி நோக்கி சென்றனர்.

உரிமைப் பட்டவளை அறியா நிலையில் உடமைப் பட்டவன் மனம் இருக்க, தன்னவனின் ஆழ்மனக் காதலை வெளிக் கொணரும் வழி அறியாமல் உரிமைப் பட்டவள் மனம்!
 




Last edited:

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
இதோ நெஞ்சம் மறப்பதில்லை அடுத்த பதிவு. படிச்சவங்க கருத்து சொல்லுங்க. முக்கியமாக குறைகளைச் சொல்லுங்க.திருத்திக்க உதவும்.💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top