• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Andril 3 : thegittaatha thedalgal.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
அன்றில் 3: தெகிட்டாத தேடல்கள்.

உலகத்தில் ஆக சிறந்த சொல் எதுவென்று இப்போது கேட்டால், பரோட்டா என யோசிக்காமல் பதில் சொல்வான் மணி. அவனை சொல்லி குற்றம் ஒன்றுமில்லை. கூரக்கடை பரோட்டவின் ருசி அப்படி. எண்ணையிலே பொரித்து எடுத்து நெய்யில் பட்டும் படாமலும் உரசி, தக தக வென பொன்னிறத்தில் இலையில் வைக்கையில் நாக்கு நாலு இன்ச் வளர்ந்திருக்கும். தொட்டால் கையே பொசுங்குமளவு கொதிக்கும், இருந்தும் அவ்வை கிழவிக்கு வேலன் தந்த சுட்ட பழம் போல ஊதி ஊதி, அதை சிறு சிறு துண்டுகளாக பியத்து முடித்து, சால்னாவை ( குருமா ) ஊற்றி.. பிசைகையில் கிளம்புமே ஒரு நறுமணம்.. ஆஹா.. அதை நுகர்ந்து கொண்டே கருங்கல்லை கூட மென்று விடலாம். இந்த சால்னா போல ருசியான சால்னா மாவட்டத்திலேயே கிடையாது என அனைவரும் சொல்வர். மணியிடம் கேட்டால் உலகத்திலே கிடையாது என்பான்.


சாப்பிடுகையில் அவன் சொல்வது தான் சரியென அர்ஜுனும் உணர்ந்தான். இருவரும் வயிற்றை கடந்து தொண்டை வரை பரோட்டாவை தள்ளி கொண்டிருந்தனர்.
" அகுத்து என்ன பண்ண போக.. " வாயை அடைத்த பரோட்டவில் நசுங்கி வினோதமாக வெளிவந்தது மணியின் குரல்.

" என்ன.. " என்றான் அர்ஜுன்.

தண்ணீரை ஊற்றி விழுங்கிய மணி , ஏப்பத்தை விடுவித்து தெளிவாக மீண்டும் சொன்னான்
" அடுத்தது என்ன பண்ண போறனு கேட்டேன். "

" அடுத்து என்ன ஆப்பாயில் தான்."

" டேய் ஆப்பாயில் .. அந்த புள்ள விஷயத்துல என்ன பண்ண போறேன்னு கேட்டேன். "

" அதுல என்ன பண்றது.. பெட் வச்ச.. நான் ஜெய்ச்சிட்டேன் அவ்வளவு தான். "

" அப்போ நீ அந்த புள்ள பின்னாடி சுத்துறது லவ் பண்றதுனுலாம் பண்ண மாட்ட.. ? "

" சீ.. சீ.. நான் போய் ஒரு பொண்ணு பின்னடியா.. அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா.. நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராதுப்பா.. "

" என்னவோ சொல்ற.. அது ஒரு மாதிரி டைப்பு.. நேரா வீட்டுக்கே வந்து போட்டு கொடுத்திடும் அப்புறம்.. "

" என்னல.. மறுபடியும் அதையே சொல்லிக்கிட்டு.. சத்தியமா அவ பக்கமே இனி போகவே மாட்டேன்.. " என கூறிவிட்டு அடுத்த ஆப்பாயிலுக்கு ஆர்டர் கொடுக்கையில் அர்ஜுன் அறிந்திருக்கவில்லை அவன் சத்தியத்தின் ஆயுள் அடுத்த நாள் மதியம் வரை தான் என்று.

அவளை பார்த்த நேரம் நெருங்கியதும் தானாகவே மாற்றங்கள் நிகழ தொடங்கின. மீண்டும் அவளை காண வேண்டுமென உடலின் ஒவ்வொரு அங்கமும் வேலை நிறுத்தம் செய்ய தொடங்கிற்று. காதல் கீதல் என்று பெயர் வைக்கவெல்லாம் அவன் விரும்பவில்லை . ஏதோ அந்த பெண்ணை மறுமுறை பார்க்க தோன்றுகிறது. முடிந்தால் பார்ப்போம், இல்லையென்றால் இரண்டு நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என எண்ணிக்கொண்டான். ஆனாலும் இந்த விஷயம் தன் நண்பர்களுக்கு எக்காரணம் கொண்டும் தெரிந்து விட கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.

ஒரு வழியாக அவளை கண்ட அதேநேரத்தில் அதே இடத்தில் அடுத்த நாளும் சென்றான் , அவள் வரவில்லை, அதற்கடுத்த நாளும் வரவில்லை. அவன் மனமும் மாறவில்லை. பார்க்கவேண்டும் என்ற ஆசை வேட்கையாக வளர்ந்தது. அவள் வீடு எங்கிருக்கிறதென்பதை லாவகமாக மணியிடம் கேட்டறிந்து கொண்டான். அடுத்த நாள் நிச்சயம் அவள் தெருவிற்கே சென்று பார்த்து விட வேண்டுமென முடிவெடுத்தான். பார்த்து விட்டால் அதோடு தொந்தரவு செய்வதை விட்டு விடுவேனென்று மனதும் உறுதியளித்தது.

மறுநாள் மாலை அவளை பார்க்க போகிறோம் என்று முடிவெடுத்ததிலிருந்து காலை நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தது, ஒருவழியாக மதிய உணவுக்கு பின், சிம்ரன் குளித்து குளித்து வாங்க சொன்ன சோப்பையும், சாருக்கானும் சல்மான்கானும் போட்டி போட்டு விற்ற சாம்புவுமாக குளிக்க சென்றவன் திரும்பி வரும் பொழுது இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது, ஆறுமுறை சோப்பு போட்டு குளித்ததில் அரவிந்த்சாமி நிறத்திற்கு வந்து விட்டாதாக தோன்றிய எண்ணம் கண்ணாடியை பார்த்ததுமே கலைந்து போனது, சரியாக சொனால் ஆடி கழிவிற்கு வாங்கிய துணி, துவைப்பில் சாயம் இழந்தது போல முகமெங்கும் வெளுத்திருந்தான், இருபத்தாறு முறை குளிப்பதெல்லாம் சிம்ரனால் மட்டுமே முடியும் என இவன் உணர்வதற்குள் சோப்பு கரைந்தது தான் மிச்சம். இதற்கெல்லாம் சோர்ந்து விட முடியுமா,


கடிகாரத்தை ஏறிட்டான், நிமிட முள் நகர்ந்திவனை வினாடி முள்ளாக துரத்த தொடங்கிற்று, விடாமல் ஓடினான். ஒரு மணிநேரம் தலை சீவி, அரை மணி நேரம் வெளிறிய முகத்தை கழுவி, கால் மணி நேரம் வேவு பார்த்து கடைசியில் பத்து நிமிட பெருமூச்சுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினான், இவன் நினைத்தது போலவே நண்பர்கள் யாருமில்லை, விறுவிறுவென தன் வீடு தொலைவில் சிறுத்து மறையும் தூரம் வரை நடந்து விட்டான். அவள் தெரு இவன் தெருவிலிருந்து நடந்து செல்லும் தொலைவு தான் என்பதால் நினைத்ததை விட வேகமாகவே நெருங்கி விட்டான்.


இதோ இந்த சந்தினை கடந்து திரும்பினால் அவள் தெரு தான், மனதிற்குள் மௌதார்கன் தானாய் இசை எழுப்பியது, அவன் திரும்பியதும் அவள் வருவாள், காற்று இதமாக வீசி அவள் தலையை கலைக்கும், யாரோ கோவில் மணி அடிப்பார், பூக்காரி கால் இடறி இருவர் மேலும் பூமாரி பொழிவாள். சே.. அதற்குள் இத்தனை கனவு காண செய்கிறாளே இவள்.. என லேசான கோவமும் கூட வந்தது,

சந்தும் முடிந்தது, அவள் தெருவும் வந்தது, விழியின் அகலம் வரை விரித்து பார்த்தான், அங்கே அவன் நினைத்தது போல் எதுவுமே இல்லை, ஜெராக்ஸ் கடைகாரன் கட்டியது போல ஒரே சைசில் அடுத்தடுத்து வீடுகள், ஒவ்வொன்றின்ற்கும் நேர் எதிரில் வளைந்து நிமிர்ந்த தென்னை மரங்கள், கரண்டு கம்பிகளில் காக்கைகள், தூரத்தில் மோர் விக்கும் கிழவியை தவிர அங்கு ஆள் அரவமே இல்லை. இருந்தும் அர்ஜுனுக்கு யாரோ உற்று பார்ப்பது போலவே ஓர் உணர்வு, ஐந்தாவது போஸ்ட் கம்பத்தை தாண்டி முதல் வீடு அவளது என்ற மணியின் வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன, நடையின் வேகம் கூட்டினான், வேறெங்கும் பார்ப்பதை தவிரத்தான்,

இந்த தெருவின் முனையில் ஒரே ஒரு பொட்டி கடை உண்டு, யாராவது பார்த்து யார் நீ .. ? இங்க எதுக்கு வந்த ? என்று கேட்டு விட்டால் அந்த பொட்டி கடை தான் இவன் காவல் தெய்வம், சாமான் வாங்க வந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும். பாக்கெட்டில் தடவி பார்த்தான், தான் எழுதி வைத்திருந்த சீட்டு அதே இடத்தில் தான் இருந்தது.அதற்குள் ஐந்தாவது கம்பமும் கடந்து போக, அவள் வீடும் வந்து விட்டது, நடையின் வேகத்தை குறைத்து விட்டான் ஆனால் இதயம் ஓட்டம் பிடித்தது.

" ஏய்.... " என்ற ஒரு அதிகார குரல் கேட்டதும் பக்கென இருந்தது, முகத்தை மாற்றிக் கொண்டு சாதாரணமாக திரும்பினான்.
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
" அட மணிணி.. நானும் யாரோன்னு நெனச்சுட்டேன் "

அவனை ஏற்ற இறக்கமாக பார்த்தான் மணி
" நீ யார நெனச்சிருப்பனு தெரியும்டி.. "

அர்ஜுனும் சமாளித்தான் " உன்ன கூப்டலாம்னு தான் பார்த்தேன் , ஆச்சி அவசரமா சாமான் வாங்கிட்டு வானு சொல்லிருச்சு.. அதான் நானே கிளம்பி வந்துட்டேன்.

அர்ஜுனின் நேர்த்தியாக அயர்ன் செய்யப்பட்ட சட்டையையும்,, அரை மணி நேரமாக அவன் சீவி எடுத்த சிகையையும் பார்வையில் தீண்டிய மணி இறுதியாக அவன் முகத்தில் ஒட்டிய பவுடரை விரலால் துடைத்தபடி, " நீ அவசரமா கிளம்பி வந்திருக்க.. " அவன் சிரிப்பில் நக்கல் தெளித்தது.

" என்னல நம்பாத மாதிரியே பேசுற, வேணா இத பாரு .. " என அவன் முன்னேற்பாடாய் வைத்திருந்த பொருள் பட்டியலை மணியின் கையில் திணித்தான்.

அதை ஒவ்வொன்றாய் வாய் விட்டே வாசித்தான் மணி..
" கிரிக்கெட் பால், சிக்கன் மசாலா, போன்வீட்டா, அருண் ஐஸ்க்ரீம் " என அவன் கடைசியாக முடித்த பொழுது அந்த பொட்டி கடைகாரன் மண்பானையில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தான்.

"கரெக்டா... என்ன.. என்ன.. இங்க கிடைக்காதுன்னு தேடி பிடிச்சு எழுதி கொண்டு வந்திருக்க.. ம்ம்.. அவனே அரை டப்பா ஆரஞ்சு வில்லையை வச்சு கடை போட்டிருக்கான் அதுல உனக்கு போன்வீட்டாவா.. அதெப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அய்யர் கடைல சிக்கன் மசாலா வாங்க வந்த நீ.. " அவனது ஒவ்வொரு கேள்விக்கும் அர்ஜுனின் கழுத்து வளைந்து கடைசியில் கேள்விக் குறியாகவே மாறிவிட்டது.

" அப்போவே சொல்லிருக்கலாம்ல.. இதுல நான் போய் லவ்வானு டயலாக் வேற.. "

" லவ்வுன்னு இல்லல.. சும்மா அப்படியே.. "

" இரு இரு.. இங்க வா " சட்டென மணி இவனை இழுக்க சுவரோடு இருவரும் மறைந்து கொண்டனர்.

என்னவென்று இவன் கேட்க விளைவதற்கு முன் சொடுக்கிட்டு இவன் பார்வையை வேறு பக்கம் திருபின்னான் மணி, அவன் திருப்பிய இடத்தில்.. அட கோபு.. இவன் எங்கே இங்க.. என இவன் நினைக்கும் பொழுதே விடையும் தானாகவே கிடைத்தது, இவன் ஊருக்கு வந்ததிலிருந்து கோபுவை பார்க்கவே இல்லை. எப்போது கேட்டாலும் காலேஜ் ட்யுசன்னு ரொம்ப பிசியா இருப்பார் ஆபிசர். இப்போது தான் அவனது பிசியான வேலை என்ன என்பது புலப்பட்டது அர்ஜுனுக்கு. இவனை போலவே அவனும் பயங்கர டிப் டாப்பாக கிளம்பியிருந்தான், அந்த சைக்கிளை அவ்வளவு ஒய்யாரமாக அண்ணாமலை ரஜினியால் கூட ஓட்ட முடியாது, பவுடர் படலத்தின் திட்டுகளில் கொஞ்சம் கொஞ்சம் முகம் தெரிந்தது. தலை முடி பயங்கர ஸ்டைலாக வாரியிருந்தான். செந்தாழம் பூவில்.. பாடலில் வரும் சரத் பாபு போல முகத்தை அசைத்து கொண்டு அவன் இவர்களை கடக்கும் காட்சி.. ஐயோ நினைக்கையிலே சிரிப்பு பீறிட்டது அர்ஜுனுக்கு.

வீவீவீல்ல்ல்.. என்ற விசில் சத்தத்தில் அவன் காதை கிழித்தான் மணி, இவர்களை கண்டதும் இவனை போலவே கோபுவும் பதறினான்.

" நீங்களா.. நீங்க இங்க என்ன பண்றீங்க.. "

" நாங்க பண்றது இருக்கட்டும் நீ இங்க என்ன பண்ற நாய.. " என்றான் மணி அவனுக்கே உரித்தான நக்கல் தொணியில்.

" அது.. அது வந்து.. அர்ஜுன் நீ எப்போ வந்த.. " இப்போது தான் அர்ஜுன் அவன் பார்வை வளையத்திற்குள்ளே வந்திருக்கிறான்.

" ஒரு வாரம் ஆச்சுல.. உன்ன தான் கைலயே பிடிக்க முடியல.. "

" அது நான் வந்து...."

" டேய் .. சுத்தி வளைக்காம எவள பாக்க வந்தனு சொல்லுடா.. " என மணி அதட்ட,
அர்ஜுனுக்குள் ஒரு ஓரம் ஜனனி என சொல்லி விடுவானோ என்ற பயம் வேறு நெரித்தது,

" ஏன் அழுற.. "

" அழலாம் இல்ல.. வெக்கம்.. " என்று நெளிந்தான் கோபு , அதற்கு அழுகையே மேல் போல இருந்தது.

" சீக்கிரம் சொல்லு.. யாரை பாக்க வந்த.. " சீறினான் அர்ஜுன்.

" சீதா.. " என்று அவன் மொழிந்ததும் பெருமூச்சு பீறிட்டது அர்ஜுனிடம்.
அதனை ஓரக்கண்ணில் கவனித்தவனாக, கோபுவிடம் திரும்பினான் மணி, " டேய் அவ தான் நீ ப்ரொபோஸ் பண்ண அடுத்த வாரமே ஊர காலி பண்ணிட்டு ஓடிட்டாளே.. "
" ஓடலாம் இல்ல.. ஏதோ டூர் போயிருக்காங்க.. அவ்வளவு தான், அவ தான் இல்லை அவ வீட்டையாசும் பாக்கலாமேனு வந்தேன்.. "

" வீட்ட பாக்க எதுக்கு இவ்வளவு மேக் அப் .. " என்றான் அர்ஜுன் புரியாதவனாக..

" அதுவா.. அது.. ஒருவேளை நாம வர நேரம் பார்த்து அவ திரும்பி வந்துட்டானா.. என்னை வழியுற முகத்தோட பாத்துர கூடாதுல.. அதான். " இழித்தான் கோபு

" ஆமா.. நீங்க எப்படி இங்க.. " என்றான் அர்ஜுனை எறிட்டவாறே.

" எல்லாம் அய்யாக்காக தான் " அர்ஜுனை கண்ஜாடையில் சுட்டிய மணி, " மில்லுகாரசாமி மவள பாக்குறாப்ல.. " என்று போட்டு உடைத்தான்.

" பெருசா.. சிறுசா.. "

" சின்னவ தான்.. என் கூட படிச்சாளே.. "

" நீ தான் எல்லார் கூடவும் படிப்பியே.. அவள நான் பார்த்திருக்கேன்.. பேர் கூட... " என அவன் யோசிக்கையில்,

" ஜனனி.. " என எடுத்துக் கொடுத்தான் அர்ஜுன், என்னவோ இபோதெல்லாம் அவள் பேர் சொல்ல ரொம்ப பிடித்தமாகி விட்டது அவனுக்கு.

" அவள் ரொம்ப திமிரு புடிச்சவளாச்சே.. " என தொடங்கி மீண்டும் பழைய புராணத்தை ஆரம்பித்தான் கோபு, அவன் முடிக்கும் பொழுது வழக்கமாக அவர்கள் கூடும் குட்டி சுவரை அடைந்திருந்தனர்.

" போதும்பா. ஒரே கதைய கேட்டு கேட்டு காது வலிக்குது, நானே சும்மா டைம் பாசுக்கு தான் பார்த்தேன். "

" அதுக்கு இல்ல.. நாம எது பண்ணுனாலும் பெயிலா போயிற கூடாதுல அதான் சொன்னேன்.. " சைக்கிளை பூட்டியபடி சொன்னான் கோபு.

" அத சொல்றது.. யாரு.. " என்றான் மணி அவனை ஏறிட்டவாறு,

" அவன் கெடக்குறான். இங்க பாரு அர்ஜுனு கரெக்டா ஐடியா பண்ணி தட்டுனா யாரனாலும் மடக்கிரலாம்."

மணி வேண்டுமென்றே இருமினான், அது காதில் விழாதவாறு தொடர்ந்த கோபு
" நம்ம இன்சு அண்ண.. அதான்ம்ல இன்சமாம் குண்டா கிரிக்கட் ஆட வருவானே.. அவன் லவ் மேட்டர்ல பெரிய கை, கரெக்டா ஐடியா கொடுப்பான், அதோட ரொம்ப முக்கியம் அவன்கிட்ட ஒரு சைக்கிள் இருக்கு அத மட்டும் எடுத்துட்டு போனா சக்சஸ் தான், அவ்வளவு ராசி. எனக்கு தான் கிடைக்கல என் நேரத்துக்கு அத மேலத் தெரு கார்த்தி எடுத்துகிட்டான். அடுத்த மாசமே அவனுக்கு சக்சஸ் தெரியுமா.. உனக்கு கிடைக்கும்னு நினைக்கறேன் , இப்போ அவன் வர்ற நேரம் தான் அவன்கிட்ட போய் விசயத்த சொல்லுவோம் .. அப்புறம் ட்ரீட் தான்.. " சிரிப்பில் குலைந்தான் கோபு.
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
அவன் சொன்னது போல இன்சமாம் அவன் நிஜ பெயரில்லை போலும், அவன் அம்மா நம்பியா .. உள்ள இருக்கான் போங்க என்று அவன் உண்மையான பெயரை கூறி அனுப்பி வைக்கவும் , அந்த சைக்கிள் தான் பார்வையில் பட்டது, பழைய ஹீரோ சைக்கிள் தான் என்றாலும் கோபு கொடுத்த பில்டப்பில் பென்ஸ் கார் போல மினுக்கியது. அர்ஜுன் லேசாக தூட்டதும் தன் டைனமோ தலையை வெடுக்கென திருப்பி கொண்டது. அதன் கைப்பிடியை பற்றி இறுக்கும் பொழுது ஏதோ புது நம்பிக்கை பிறந்ததும் உண்மை தான்,

" என்னடா இந்த பக்கம்.. இவன் யாரு.. " என்று சொன்னவாறே ஒரு கருப்பு உருவம் தொப்பையும் டவுசருமாக வந்தது. பாத்ததுமே இன்சமாமுக்கான பெயர்காரணம் விளங்கிற்று.

" இவன் நம்ம மிலிட்டரிகாரர் பேரன், முன்னாடி கிரிக்கெட் விளையாட வருவானே.. நீங்க கூட பாத்திருப்பீங்க.. "

" ஓ.. ஆமா ஆமா எப்படிப்பா இருக்க " என நலம் விசாரித்த இன்சு, அர்ஜுன் பதில் சொல்வதற்குள் மணியை ஏறிட்டான்.

" நீ மணி தானே.. "

தலையை சோர்வாக ஆட்டினான் மணி.

ஒரு நிமிடம் தன் தாய் இருக்கிறாளா என எட்டி பார்த்த இன்சு மணியை நெருங்கி.. " நானே உன்ட்ட கேக்கணும்னு நினைச்சேன்.. அந்த மில்லுகாரசாமி மவ. அதான் பேரு கூட ஜனனி.. உன் கூட தானே படிச்சா.. "

கேட்டதும் அர்ஜுனுக்கு சட்டென ரத்தம் உச்சந்தலை வரை ஏறியது, அவள் பெயர் கண்டவன் வாயில் விழுவது கூட இவனால் பொறுக்க முடியவில்லை என்பதை அந்த கணம் தான் உணர்ந்தான்.

" அவளை தான் இப்ப நான் ரூட்டு விட்டுட்டு இருக்கேன்.. அதுவும் நம்மள தான் பாக்குது.. அதுட்ட பேசுவியா.. பேசுனா நம்மள பத்தி சொல்லேன்" என அவனை இடித்தான் இன்சு.

அர்ஜுன் கையை பிடித்துக் கொண்டான் மணி..
" இல்லண்ணே.. அதுலாம் என்ட்ட பேசாது.. "

" ஹும்.. சரி விடு நான் பாத்துக்கறேன்.. நீங்க ஏதோ சொல்ல வந்திங்களே.. " என்றான் கோபுவை பார்த்து.

" அது தான் முடிஞ்சே போச்சே.. " என முடித்தான் கோபு.

மீண்டும் அதே குட்டி சுவர்.. அதே பார்க்.. சென்ற முறை இருந்த துள்ளல் மட்டும் துடைத்தெறிய பட்டிருந்தது.

" இப்போ எதுக்கு தலைல கை வச்சிட்டு உக்காந்திருக்க.. " அர்ஜுன் தோளில் தட்டினான் மணி.

" ஒரு வாரம் தானே ஆச்சு அப்படியே விட்ரு.. இன்சு கூடலாம் நாம போட்டி போட முடியாது. அது வேற அவனை பாக்குதுன்னு சொன்னான்ல.. "

" ஆமா பாக்குது.. நீ பாத்தியா.. " சீறினான் அர்ஜுன்.

" இப்போ எதுக்கு ரொம்ப அலட்டிக்குற.. நீ தானே லவ்லாம் இல்ல டயம் பாசுக்குனு சொன்ன.. விட்டுற வேண்டி தானே.. அடுத்த வாரம் பெட் மேட்ச் இருக்கு பேசாம அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணுவோம் ஜாலியா.. "

" பெரிய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் .. கொஞ்சமாச்சும் அவனுக்குலாம் மனசாட்சி இருக்கா.. அவ எப்படி இருக்கா இவன் எப்படி இருக்கான். செந்தில் மாதிரி இருந்துட்டு.. இதெல்லாம்.. "

" ஆமா இவரு பெரிய அஜித்து .. " சீண்டினான் மணி.

" எனக்கு அப்படி தாண்டா .. டைம் பாசுலாம் இல்ல.. இப்போ சொல்றேன் நான் அவள தான் லவ் பண்றேன் அவளும் என்ன தான் லவ் பண்ணுவா.. பண்றா.. எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. நீங்க கூட இருக்குறதுனா இருங்க.. இல்லைனா அந்த இன்சுக்கே போய் சிங்கி அடிங்க. " என பொரிந்து தள்ளி விட்டு கிளம்பியவன் ஒரு நொடி திரும்பி,.. " என்ன சொன்ன அஜித்தானா.. அஜித் சாலினி, அர்ஜுன் ஜனனி பேர் பொருத்தம் கூட எங்களுக்கு தான் இருக்கு. அவளை காதலிக்க வச்சு காட்றேன்.. " என சொடுக்கிட்டு விறு விறுவென நடந்தான்,

நடக்கும் வழியெல்லாம் அவளை காதலிக்கிறோம் என்று மனதில் கூட சொல்ல தயங்கிய சொற்கள் இன்று காற்றை கிழித்து சவாலாய் மாறியது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, ஒரே பார்வையில் தன்னை இப்படி பித்தனாக்கி விட்டாளே இவள் என்று கூட தோன்றியது.

" ஏப்பா அஜித்து .. பொசுக்குனு கோவ படுதீகளே.. " ஓடி வந்து இவன் தோளை இழுத்தான் மணி, பின்னாடியே கோபுவும் வந்தான்.

" உன்னை விட அவன் யாருல எங்களுக்கு.. மச்சான் ஆச பட்டுட்ட.. என்னனாலும் தட்டி பாத்துருவோம்.. " மூச்சிரைக்க சொன்னான் கோபு. இழந்த புன்னைகை லேசாக இதழுக்குள் புகுந்தது அர்ஜுனுக்கு.

" இப்படி பண்ணுனா என்ன.. நீ வேற பொண்ண பாக்குறன்னு சொல்லி அவன்கிட்டயே ஐடியா கேட்டு.. உஷார் பண்ணிட்டா.. " கோபு சொன்னதும் முதலில் வேண்டாம் என்று தான் சொல்ல தோன்றியது அர்ஜுனுக்கு. இருந்தும் அவர்கள் சொல்வதும் சரி தான். நல்ல வழியோ குறுக்கு வழியோ அவனுக்கு அவள் கிடைத்தே தீர வேண்டுமென்று இருந்தது, சம்மதித்தான்.. காதல் தேடலும் தொடங்கியது.


தொடரும்.

ஹாய் நண்பர்களே.. நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றிலின் மூன்றாம் அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்துகளையும் விமர்சனகளையும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். மிக்க நன்றி .. !
 




Priya2195

புதிய முகம்
Joined
Jan 26, 2018
Messages
3
Reaction score
3
Location
Trichy
As usual semma... Indha update la dialogue description ellame rombha different ah fun filled ah irundhuchu... Neraya note panni sollanum... But inga andha option Illa... ??? Waiting for ur next update...
 




Vidya

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
22
Reaction score
8
Location
Tuticorin
அரவிந்த்சாமி நிறத்திற்கு வந்து விட்டாதாக தோன்றிய எண்ணம் கண்ணாடியை பார்த்ததுமே கலைந்து போனது, சரியாக சொனால் ஆடி கழிவிற்கு வாங்கிய துணி, துவைப்பில் சாயம் இழந்தது போல முகமெங்கும் வெளுத்திருந்தான், இருபத்தாறு முறை குளிப்பதெல்லாம் சிம்ரனால் மட்டுமே முடியும் என இவன் உணர்வதற்குள் சோப்பு கரைந்தது தான் மிச்சம். இதற்கெல்லாம் சோர்ந்து விட
???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top