• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பூமி..

ம்மா என்று கத்தியபடி தன்னை கட்டிக்கொண்ட குழந்தையைக் கண்டு திகைத்துப்போனாள் யுவஸ்ரீ..

தன் கால்களை குழந்தை கட்டிக்கொண்டிருந்த தினுசில் ஒரு நொடி நெகிழ்ந்து பின் தெளிந்தவள் தன்னிடமிருந்து குழந்தையைப் பிரித்தெடுத்து, “வாட் இஸ் யுவர் நேம்..??”, என்று கேட்டாள்..

“என்னமா பேசற நீ..?? எனக்கு புரியலையே..”, என்றது குழந்தை..

அவள் கேட்ட தினுசில் திருத்திருத்த யுவஸ்ரீ உடைந்த தமிழில், “உன் பெயர் என்ன..??”, என்று கேட்டாள் குழந்தையிடம்..

“ஹான்.. என்னம்மா நீ..?? என் பேர் மறந்து போச்சா.. அச்சோ..”, என்று தன்னைத் தானே தலையில் அடித்துக்கொண்டு குனிந்திருந்த யுவஸ்ரீயின் தலையிலும் ஒரு கொட்டு வைத்து, “வசிஷ்டரா..”, என்றது..

“நைஸ் நேம்..”, என்ற யுவஸ்ரீ வசிஷ்ட்ராவின் ஒரு லேசான துணியில் உடை அணிந்திருப்பது கண்டு பதறி, “நீ ஏன் கூல் ஜாக்கெட் போடல..??”, என்று கேட்டாள்..

“கூல் ஜாக்கேட்டா..?? அப்படி என்றால் என்ன..??”, என்று கேட்டவள், “ம்மா.. நீங்க ஏன் இவ்ளோ பெரிய துணி போட்ருக்கீங்க..??”, கேள்விக்கு மேல் கேள்வியாய்..

“ஸ்கின்ல யூ வீ ரேஸ் படக்கூடாதுன்னு போட்ருக்கேன்.. இது போடலீன்னா ரேஷஸ்ல இருந்து கான்சர் வரைக்கும் வரும் குட்டிப்பாப்பா..”, என்று வசிஷ்ட்ராவிற்கு விளக்கம் அளித்த யூவஸ்ரீ தன்னுடைய ஜாக்கெட்டிற்குள் குழந்தையையும் இழுத்துக்கொண்டாள்..

“குளுமையா இருக்கு ம்மா இந்த... இந்த.. ஹான்.. ஜாக்கெட்..”, என்றது குழந்தை கிளுக்கி சிரித்தபடி..

அதில் மனம் குளிர்ந்தவள், “நீ யார்கூட இங்க வந்த குட்டிமா..??”, என்று கேட்டாள்..

“நானா.. நான் நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்.. அப்புறம் இன்னும் ஒரு ஆறு எல்லோன் கூட வந்தேன்..”

நிவ்யா நேசன் சாகர் ஜானு என்று அவள் கூறியது பெயர்கள் என்று புரிந்து கொண்ட ஸ்ரீ, “ஆமா.. இந்த எல்லோன்னா யாரு..??”, என்று கேட்டாள்..

“அதான் சொன்னேனே.. நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்..”, என்று சொன்னதையே ரிப்பீட் அடித்தவளைக் கண்டு கண்ணைக்கட்டியது ஸ்ரீக்கு..

தலை உலுக்கியவள், “நிவ்யா நேசன் ஜானு இவங்கெல்லாம் எங்கே குட்டி..??”

“அவங்க அதோ..”, என்றபடி ஒரு பாதையைக் காட்டியவள், “அங்கிருக்க ஒரு சுவரில் அமர்ந்திருக்கின்றனர்..”, என்றாள்..

வசிஷ்ட்ராவை அணைத்தவாறு பிடித்த ஸ்ரீ அவள் காட்டிய பாதையில் நடக்கத் துவங்கினாள்..

ரொம்ப நேரமாக வசியைத் தேடிக்கொண்டிருந்த நிவ்யா அவள் ஒரு பெண்ணுடன் வருவது கண்டு அவசரமாக எங்கே போனே வசீ என்று இருவரையும் நெருங்கினாள்..

“தெரியாமல் ரோட் சைட் வந்துவிட்டாள் இவள்..”, என்ற ஸ்ரீயை அப்பொழுது தான் உற்றுப் பார்த்த நிவ்யாவின் இதழ்கள் திருஷ்டி என்று மெலிதாய் முனுமுனுத்தது..

நிவ்யா எதுவோ முனுமுனுப்பது கண்டு, “என்ன சொன்னீங்க..??”, என்று கேட்டாள் ஸ்ரீ..

“ஒன்றும் இல்லை..”, என்ற நிவ்யா, “இவளை எங்களிடம் அழைத்து வந்ததற்கு நன்றி..”, என்றுவிட்டு வசிஷ்ட்ராவை தன்னிடம் லேசாக இழுத்தாள்..

ஆனால் குழந்தையோ ஸ்ரீயிடம் ஒட்டிக்கொண்டு நிவ்யாவிடம் போக மறுத்தது..

அதை ஒரு இயலாமையுடன் பார்த்த நிவ்யா ஸ்ரீ கேள்வி கேட்கும் முன்பே, “இவளது அன்னை அச்சு அசல் உங்களைப் போல் தான் இருப்பார்.. அதனால் குழந்தை உங்களிடம் ஒட்டுகிறது..”, என்றாள் நிவ்யா..

புரிகிறது என்பது போல் தலையசைத்த ஸ்ரீ, “என் பெயர் யூவஸ்ரீ.. நீங்கள்..??”, கேள்வியாய்..

“நான் நிவ்யா.. இவள் அன்னையின் சகோதரி..”, இன்ஸ்டண்டாய் பொய் உரைத்தாள் நிவ்யா..

“குட்டி பத்து பேர் இருப்பதாக சொன்னாலே.. யாரையும் காணோமே..??”, கேள்வியாய்..

“இவளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார்கள்..”, என்றவள், “ஜானு.. வசீ கிடைத்துவிட்டாள்.. எங்கே இருக்கீங்க..”, என்று குரல் கொடுத்தார்..

அங்கொருவர் இங்கொருவராய் வந்து சேர்ந்தனர் பெண்கள் எட்டு பேரும்..

நேசனும் சாகரும் இல்லாதது கண்டு ஜானுவிடம், “ஆமாம் இந்த சாகரும் நேசனும் எங்கே..??”, என்று கேட்டார்..

அடுத்தநொடி இரு திசையில் இருந்து அம்மா.. ஐயோ.. என்று சத்தங்கள் ஆண்களிடமிருந்து..

வலப்பக்கம் அவசரமாக சென்ற ஜானுவும் நிவ்யாவும் அங்கு நேசன் அடிப்பட்டிருப்பது கண்டு, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நாம் நினைத்தது போல் அப்பெண் வசியை அழைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்துவிட்டாள்.. அவள் மூலமாக எப்படியாவது மக்கள் நடமாடும் இடம் சென்றுவிடலாம்..”, என்றாள் நிவ்யா..

“வலி ஒன்றும் எனக்கு பெரிதாக இல்லை..”, என்ற நேசன், “வசியும் அந்தப் பெண்ணும் எங்கே..??”, என்று கேட்டார்..

“சாகர் இருக்கும் இடம் சென்றிருக்கிறாள்.. வாருங்கள் நாம் அவர்களைக் காணச்செல்லலாம்..”, என்றாள் ஜானு ஏதோ சாதித்து விட்ட புன்னகையுடன்..

ஆம்.. சாதித்து விட்ட புன்னகைதான் அது..
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
முந்தைய இரவு இரண்டு மணி நேரம் மட்டும் ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்த பொழில் வாசிகளின் முடிவு அந்த இடிந்த வீட்டில் கிடைத்த புகைப்படம் தரைமட்டமாக்கியது..

காலை வரை காத்திருக்க முடிவு செய்தனர் பொழில் வாசிகள்..

பூமியில் பொழில் வாசிகளின் முதல் நாள் அது.. அதிகாலை மற்றவர்கள் எழும் முன்னே எழுந்தே வசிஷ்டரா அவ்விடம் பிடிக்காது விளையாட்டுத் தனமாய் தத்தக்கா பித்தக்கா என்று அவ்விடத்தைத் தியாகம் செய்தாள்..

வசிஷ்டரா அங்கிருந்த சென்ற ஐந்தாம் நிமிடத்தில் எழுந்த ஜானு வசியை காணாது கொஞ்சம் பயந்து அனைவரையும் எழுப்பினாள்..

ஆளுக்கு ஒரு திசையை அவளைத் தேடத் துவங்கினர்..

வசீ சென்ற திசையில் பயணித்த ஜானு அவள் ஒரு பெண்ணுடன் உரையாடிக்கொண்டிருப்பது கண்டு மற்றவர்களிடத்தில் விரைந்தவள் அவருக்கு அந்நிமிடம் தோன்றிய திட்டத்தை விளக்கினார்..

அதன் படி ஒவ்வொன்றாய் காய்களையும் நன்றாக நகர்த்தவும் செய்தார்..

எல்லாம் சரியாக போய்க்கொண்டும் இருக்கிறது..

அதன் வெளிப்பாடே அவரின் இப்புன்னகை.. சாதித்து விட்ட புன்னகை.. பொழிலைக் காக்க வெற்றிகரமாக முதல் அடி எடுத்துவைத்துவிட்ட மகிழ்ச்சியில் உதிர்ந்த மகிழ்ச்சிப் புன்னகை..

ண்கள் இருவரின் மூக்கு அறுபட்டிருப்பதைக் கண்டு திகைப்பும் குழப்பமுமாய் அவர்களைப் பார்த்த ஸ்ரீ உடனடியாக தனது வாட்சில் (watch) இருக்கும் ஒரு சிறு பட்டனை அழுத்திவிட்டு இருக்கும் ஆட்களை எண்ணியவள் தனது போனை எடுத்து எதுவோ செய்துவிட்டு அனைவரிடமும் பொதுவாக, “வாங்க ரோட்டிற்கு போவோம்.. ஸ்மார்ட் ஹாஸ்பிடல் வில் பி ஹியர் சூன்..”, என்றாள்..

அவள் ஆங்கிலத்தில் கூறியது புரியாது என்ன அது என்று கேட்க வந்தவர்களை முந்திக்கொண்ட வசீ, “ம்மா.. நீங்க என்னமோ பேசறீங்க.. ஆனால் புரிய மாட்டேங்குது..”, என்றாள்..

இரத்தத்தைப் பார்த்த டென்ஷனில் (tension) வசியின் கையை இறுக்கிப் பிடித்திருந்த ஸ்ரீ அவளை இழுத்துக்கொண்டு, “என்ன குட்டி புரியல உனக்கு..??”, கடுப்பாகவே ஒலித்தது அவளது குரல்..

ஸ்ரீயின் கடுப்பும் டென்ஷனும் வசிக்கு புரியவில்லை என்றாலும் மற்ற பொழில் வாசிகள் அனைவருக்கும் புரிந்தது..

“அது வந்து ம்மா..”, என்று ஆரம்பித்த வசியைத் தடுத்த நிவ்யா, “ஸ்மார்ட் என்று ஏதோ நீங்கள் சொன்னீர்களே.. அது குழந்தைக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் புரியவில்லை..”, என்றார்..

என்ன சொல்கிறார் இவர்.. யாருக்கும் புரியவில்லையா.. இவர்கள் என்ன காட்டுவாசிகளா.. ச்சே..ச்சே.. அப்படி இருக்க வாய்ப்பில்லையே.. காடுகள் என்ற ஒன்று இருந்தால் அல்லவா காட்டுவாசிகள் என்பவர்கள் இருப்பார்கள்.. மனதினுள் கேள்விகள் பல குடைந்தாலும் ஸ்ரீ இப்பொழுது ஆண்கள் இருவரின் மூக்கில் (மூக்கு இருக்கும் இடத்தில் இருந்து) வழியும் குருதி தான் பிரதானமாக பட்டது.. அதனை சரியாக்க வேண்டும் என்ற உத்வேகமும்..

தன்னை சமன் செய்து கொண்டவள், “ஸ்மார்ட் ஹாஸ்பிட்டல் என்றால் நடமாடும் மருத்துவமனை என்று அர்த்தம்..”, என்றாள்..

“நடமாடும் மருத்துவமனையா..??”, ஆச்சார்யமாக வந்து விழுந்தது சாகரின் குரல்..

அபத்தமான கேள்வி (ஸ்ரீயைப் பொறுத்தவரை அது அபத்தமான கேள்வி தான்..) எழுப்பிய சாகரின் மேல் தன் ஒட்டு மொத்த எரிச்சலைக் கொட்டவது போல், “தெரியாமல் தான் கேட்கிறேன்.. நீங்கள் என்ன வேற்று கிரக வாசிகளா..?? (உண்மை அது தான் ஸ்ரீ.. :p) விநோதமாக கேள்வி எழுப்புகிறீர்கள்..”, என்றவள் சாலையை தாங்கள் நெருங்கிவிட்டது கண்டு தன் வாட்சை ஒரு செகென்ட் (Second) பார்த்தவள், “சற்று பொறுங்கள்.. ஸ்மார்ட் ஹாஸ்பிட்டல்.. ஷ்.. அதாவது நடமாடும் மருத்துவமனை இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்து சேரும்..”, காரமாகவே..

அவள் பேச்சில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பொழில் வாசிகள் கப்சிப்பானார்கள்..

ஸ்ரீ அவர்களிடம் கூறியது போலவே இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்தது அந்த ஸ்மார்ட் ஹாஸ்பிட்டல்..

அத்தனை நவீன வசதிகளுடன் இருந்தது அந்த மருத்துவமனை..

கைதேர்ந்த மருத்துவர்கள் அதில் அமர்ந்திருக்க சாகரையும் நேசனையும் அவர்களிடம் அழைத்துச் சென்றாள் ஸ்ரீ..

நெற்றியில் மத்தியில் இருந்து உதடுகளின் சற்று மேலே வரை தோள் முழுதும் அறுந்து எலும்புகளும் சதையும் தெரிய இரத்தமும் வெள்ளம் போல் வழிந்து கொண்டிருந்தது..

மருத்துவர்களின் முதல் கேள்வியே இருவராலும் மூச்சு விட முடிகிறதா என்பது தான்..

அவர்கள் ஆங்கிலத்தில் இவர்களிடம் கேட்க மொழி மாற்றம் செய்து கொடுத்தாள் ஸ்ரீ..

ஏதோ சுமாராக என்று வலியே இல்லாதவர்கள் போல் திடமாக கூறியவர்களை ஜந்துவைப் போல் பார்த்த மருத்துவர்கள் இருவருக்கும் ஸ்டிச்சஸ் இட்டபடியே ஸ்ரீயிடம், “லெட்ஸ் டேக் தெம் டூ தி ஹாஸ்பிட்டல்..”, என்றனர்..

சரி என்பது தலையசைத்த ஸ்ரீ ஜானுவையும் நிவ்யாவையும் மொபைல் ஹாஸ்ப்பிட்டலில் ஏற்றிவிட்டவள் புக் செய்திருந்த கேபில் (cab) மற்றவர்களை ஏற்றிவிட்டுவிட்டு தன்னுடன் வருவேன் என்ற வசிஷ்ட்ராவை தனது காரில் ஏற்றிக் கொண்டவள் மருத்துவமனை இருக்கும் திசை நோக்கி பறக்க ஆரம்பித்தாள்..

“ம்மா.. இது என்ன வாகனம்..??”, காரில் ஏறியவுடன் கேள்வி பிறந்தது வசியிடமிருந்து..

இவள் கேள்விக்கு பிறந்தவள் போல் என்று நினைத்துக்கொண்ட ஸ்ரீ, “திஸ் இஸ் கார்..”, என்று பழக்க தோஷத்தில் சொன்னவள் வசீ பேந்த பேந்த முழிப்பதைக் கண்டு, “இந்த வாகனத்திற்கு பெயர் கார்..”, என்றாள்..

“நம்ம ஊரில் இப்படி எல்லாம் இல்லை அல்லவா..?? இதில் பயணம் செய்ய நன்றாக இருக்கிறது..”, சான்றிதழ் தந்தாள் குட்டி..

“கேட்கனும்னு நினைத்தேன் குட்டி.. நம்ம ஊர் பெயர் என்ன..??”

“என்னம்மா ஆச்சு..?? உங்களுக்கு எல்லாம் மறந்துபோச்சா..??”, என்று பரிதாபப்பட்ட வசிஷ்டரா, “நம் ஊரின் பெயர் புலரி வனம்..”, என்றாள்..

ஸ்டெயரிங்கில் இருந்த தனது வலது கையை எடுத்த ஸ்ரீ சைடில் இருந்த ஒரு பட்டனை அழுத்தினாள்..

உடனே ஸ்பீக் நவ் (speak now) என்று பதிவு செய்யப்பட்டிருந்த ஒலி ஒன்று ஸ்பீக்கரில் (speaker) ஒலிக்க வசிஷ்டரா கேள்வி கேட்கும் முன், “ப்ளேஸ் (place) புலரி வனம்..”, என்றாள் ஸ்ரீ..

பீப் என்ற சிறு ஒலிக்குப் பின், “நோ மேட்சஸ் பவுண்ட்.. (no matches found)”, என்று பதில் வந்தது..

கண்களை சுருக்கியவள் வசியிடம், “நம்ம ஊர் பெயர் புலரி வனம் தானா..?? உனக்கு சரியா தெரியுமா..??”, என்று கேட்டாள்..

“ம்மா.. அது கூட தெரியாதா எனக்கு..”, என்று தலையில் அடித்துக்கொண்ட குட்டி, “ஆமா இப்போ யார் கூட பேசுனீங்க..??”, என்று கேட்டது..

“யாரோடையும் பேசல பேபி.. அது ரெகார்டட்..”

“அப்படீன்னா..??”

“ரேக்கார்டட்ன்னா..”, பதில் தெரியாதவள் கூகிள் ஆண்டவரிடம் கேட்டுவிட்டு, “பதிவுசெய்யப்பட்டது..”, என்றாள்..

“பேபினா என்ன ம்மா..??”, அடுத்த கேள்வியாக..

“பேபி மீ..”, மீன்ஸ் என்று சொல்ல வந்தவள் அதற்கும் அவள் ட்ரான்ஸ்லேஷன் கேட்டாள் என்ன செய்வது என்று, “பேபி என்றால் குழந்தை..”, என்றாள்..

சிறிது நேர அமைதிக்குப் பிறகு வசிக்கு போர் அடிக்கவே, “இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்..??”, என்று கேட்டாள்..

“இன்னும் ஒரு ஒரு மணி நேரம் பேபி.. போயரலாம்.. நீ தூங்கறதுனா தூங்கு..”, என்றாள் வசியின் சீட்டைப் பின்னால் சாய்த்தபடியே..

சோர்வாக இருந்த குழந்தையும் கண்களை மூடி உறங்கிப்போனது..

சிரித்த முகமாய் உறங்கும் வசியைப் பார்த்து ஸ்ரீக்கு ஒரு புன்னகை பிறந்தது..

இவர்கள் பத்து பேர் யார்..?? இந்த குழந்தைக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்..?? இவர்கள் எங்கிருந்து வருகின்றனர்..?? பல கேள்விகள் மனதில் ஓடியது ஸ்ரீயின் மனதில்..

ஹாஸ்பிட்டல் சென்ற பிறகு தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள் ஒரு சீராக காரை இயக்கிக்கொண்டிருந்தாள்..

ந்து நிமிடங்கள் கடந்திருக்க வசியும் ஸ்ரீயும் சென்று கொண்டிருந்த கார் ஒரு குலுங்கி குலுங்கியது..

அதில் கண் விழித்த வசியை கண்களைக் கசக்கியவாறே, “ம்மா.. என்னாச்சு..??”, என்று கேட்டாள்..

ஒரு லேவேண்டர் கலர் லைட் ஒன்று ஸ்ரீயின் போனில் எறிந்து மறைய..

புரிந்துபோனது அவளுக்கு..

நிலநடுக்கும்.. பெரியதொரு நிலநடுக்கம்..

ஸ்ரீயின் காரைப் போல் ஸ்மார்ட் ஹாஸ்பிட்டலும் கேபும் குலுங்கியது..

அவ்விடத்தை விரைந்து கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் இம்மூன்று வாகனங்களுக்கு பின் வந்த ஒரு கனரக வாகனம் ஸ்ரீயின் வாகனத்தை முதலில் முந்தி சற்றே தடுமாறி நிலநடுக்கத்தின் நடுக்கத்தில் கண்ட்ரோல் செய்ய இயலாது கேபோடு (cab) சேர்த்து ஸ்மார்ட் ஹாஸ்பிட்டலையும் இடித்துத் தள்ளிவிட்டு அதுவும் தடம்பிரண்டது..

-தேடலாம்..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
வசிஷ்ட்ராவுக்கு என்ன ஆச்சு பொழில்வாசிகள் பூமி பயணம் வெற்றியா நாங்க வெயிட்டிங்
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
Recorded Tamil meaning koota Google andavarsolla vendi iruku.interesting epi sis smart hospital nalla karpanai
thank you sissy for ur comments.. :)
google aandavar ini neraiya sevaikal seivaarnu ninaikkiren.. namakku bathila padichaalum nalla irukkum..;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top