• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பூமி..

மீண்டும் ஒரு கார் பயணம் வசிக்கு.. காரில் செல்வதால் உற்சாகம் மனதில் டன் டன்னாக வழிந்த போதிலும் அன்று வந்த நிலநடுக்கத்தைப் போல் இன்றும் ஆகிவிடுமோ என்று சிறு பயம்..

சிறிது நேரம் ஸ்ரீயுடன் துள்ளி குதிப்பவள் சில சமயம் சிறு பயத்துடன் அவளின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டே வந்தாள்..

சற்று நேரம் பொருத்து பார்த்த ஸ்ரீ வசீ தன் கையுடன் தன் கையை பினைதபோது, “வசிக்கு என்னாச்சு..??”, என்று கேட்டாள்..

“ம்மா.. அது.. அன்னைக்கு நடுங்குச்சே அது மாதிரி இன்னைக்கும் நடுங்கும்மா..??”

வசீ சொன்னதை கிரகிக்க முயன்ற ஸ்ரீ அவள் நிலநடுக்கம் பற்றி கூறுகிறாள் என்று உணர்ந்து, “எப்பொழுதும் நடுங்காது குட்டி..”, என்று அவளை சமன் படுத்த முயன்றவள் பேச்சை மாற்றும் விதமாக, “நாம் இப்போ எங்கே போறோம் தெரியுமா..??”, என்று வினவினாள்..

உதட்டைப் பிதுக்கிய வசீ தெரியவில்லை என்பது போல் தலையசைத்துவிட்டு, “எங்கே..??”, என்று கேட்டாள்..

“நம்ம இரண்டு பேரும் ஹைத்ராபாத் போறோம்..”

“ஹைத்.. ஹைத்.. ஹைத்ராபாத்தா..?? அப்படி என்றால்..??”, கேள்வி பிறந்தது வசியிடமிருந்து..

“அன்று நீ சொன்னாயா புலரி வனம் என்று அது போல் ஹைத்ராபாத்..”

“அப்படியா.. அங்கே ஓடை ஆறு எல்லாம் இருக்கும்மா விளையாட..??”

ஓடையா அப்படியென்றால் என்று மனதில் தனக்குத்தானே கேள்வி எழுப்பிய ஸ்ரீ கூகிள் ஆண்டவரிடம் சரணடைந்தாள்..

அதற்குள் வசீ மீண்டும், “அங்கே ஓடை ஆறு எல்லாம் இருக்கும்மா விளையாட..??”, என்று கேட்டாள் இரண்டாவது முறை..

“அங்கே ஓடை எல்லாம் இருக்காது ஆனால் நீச்சல் குளம் இருக்கும்..”

“அப்படியா.. அப்போ நாம் இருவரும் அதில் இறங்கி விளையாடலாம்..”, என்று சந்தோஷமாக சொன்ன வசீ, “ம்மா.. அன்னைக்கு நான் உங்களைப் பார்த்தேனே அந்த வனத்தின் பெயர் என்ன..?? நீங்கள் எப்படி அங்கு வந்தீர்கள்..??”

“அது க்ரோனா (க்ரோனா : கற்பனை பெயர் ; மைசூருக்கு அருகே இருக்கும் இடம்) சின்ன வயசில் அங்கே தான் இருந்தேன்..”, என்றாள் ஸ்ரீ..

“அப்போ இப்போ ஏன் அங்கே இல்லை..??”

“கடல் தெரியுமா உனக்கு..??”

“ம்ம்.. தெரியுமே அலையலையா வருமே.. நல்லா இருக்கும் பார்க்க..”, கண்களில் ஆசை மின்ன..

“ஹ்ம்.. அழகா இருக்கும் கடல் அலை தான் ஒரு முறை சீற்றம் கண்டு அந்த இடத்தை அடித்துசென்றுவிட்டது.. சுனாமி என்ற பெயரில்..”

வசிக்கு என்ன புரிந்ததோ ஸ்ரீயின் குரலில் இருந்த பேதம் உணர்ந்து அமைதியாக அவளைப் பார்த்தவள் அவளுக்கு ஒரு ஹக் கொடுத்துவிட்டு அமைதியாக சீட்டில் சாய்ந்துகொண்டாள்..

வசியின் நடவடிக்கை கண்டு திகைத்துப்போனாள் ஸ்ரீ..

சில நேரம் குழந்தையாகவும் சில நேரம் பெரிய மனுஷியாகவும் நடந்துகொள்ளும் அவளது நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சர்யம் கொண்டாள்..

தனது வாய்ஸை வைத்து எப்படி இவளால் என் மனநிலையை உணர்ந்துகொள்ள முடிந்தது.. அதுவும் மூன்று வயதில்..

வசியைக் கண்டவுடனேயே அவளுடன் தனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் இப்பொழுது இப்பொழுது அது மேலும் மேலும் இறுகுவது போல் தோன்றியது ஸ்ரீக்கு..

முகம் முழுதும் புன்னகை பூசியபடியே வசீ பேப்பரில் கிறுக்குவதை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ..

ஸ்ரீயை வரைகிறேன் என்ற பெயரில் பேப்பரில் வாட்டர் கலரால் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்..

பேப்பரை விட முகத்திலே அதிக வண்ணக் கோலங்கள்..

ஸ்ரீ வசியை அழைத்துவந்து நாட்கள் இரண்டை தொட்டுவிட்டது.. வசியின் வருகை சில நாட்களுக்கு முன் தாய் தந்தையை இழந்த ஸ்ரீக்கு தனிமையை மட்டும் போக்கவில்லை வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பையும் கொடுத்திருந்தது..

“ம்மா.. நான் அப்பாவை வரையனும்.. வேற பேப்.. பேப்.. ஹான்.. பேப்பர் கொடுங்கள்..”

தந்தை என்றவுடன் வசியை திடுக்கிட்டுப் பார்த்தாள் ஸ்ரீ..

இதழ்கள் இரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வார்த்தைகள் வெளிவர சண்டித்தனம் செய்தது..

மடியில் வைத்திருந்த சிறிய ரைட்டிங் பேட் கீழே விழ திகைத்துப் போய் அமர்ந்திருந்த ஸ்ரீயை உலுக்கினாள் வசீ..

“ம்மா.. வேற பேப்பர் கொடு..”, அதட்டியது அந்த வாண்டு..

ஹான் என்றபடியே ஒரு பேப்பரை எடுத்துக்கொடுத்தாள் ஸ்ரீ..

பென்சிலால் மீண்டும் பேப்பரில் கிறுக்கத் துவங்கியவள் சிறிது நேரத்திற்கு பிறகு அந்தப் பேப்பரை ஸ்ரீயின் கையில் திணித்து, “ம்மா.. ப்பா இதுல எப்படி இருக்காங்க..??”, என்று வினவினாள்..

வசீ தந்த பேப்பரை ஏறிட்டுப்பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டுவந்தது..

அதை வாய்க்குள் அடக்கியவள், “அப்பாக்கு மூக்கு எங்க குட்டி..??”, என்று கேட்டாள் வசியின் மூக்கைப்பிடித்து ஆட்டியபடியே..

“மூக்கா..??”, கன்னத்தில் கையை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவள், “ம்மா.. அப்பாக்கு எங்கம்மா மூக்கு..??”, என்று அவளிடமே கேள்வி எழுப்பினாள்..

“என்னது..?? மூக்கு இல்லையா..??”

“அப்பாக்கு மட்டும் இல்லை விபூக்கு மிளிருக்கு மயூக்கு கிரீசன் எல்லோனுக்கு... யாருக்குமே மூக்கு இல்லையே..”, என்றாள்..

அவள் கூறியது கொஞ்சம் புரிந்தாலும் தெளிவுப் படுத்திக்கொள்ள போனை ஆன் செய்தவள் தனது நண்பர்களுடன் அவள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டி இவர்களுக்கு இருப்பதுபோல் மூக்கு இல்லையா என்று கேட்டாள்..

“ம்மா.. நமக்கு மட்டும் தான் இப்படி மூக்கு இருக்கும்..”

“நமக்கு என்றால்..?? உனக்கு எனக்கு ஜானுவிற்கு மட்டும் தான் இப்படி மூக்கு இருக்குமா..??”

“ஆமாம்மா.. தெரியாத மாதிரி கேக்கற..??”

“உனக்குத் தெரியுமான்னு டேஸ்ட் பண்ண..”

“டெஸ்ட்டா..??”

“டெஸ்ட்னா சோதிக்கறதுன்னு அர்த்தம்..”, என்ற ஸ்ரீ, “அப்போ உங்க அப்பா மாதிரி சாகருக்கும் நேசனுக்கும் மூக்கு இருக்காதா..??”, என்று கேட்டாள்..

“ஆமாம்மா..”, என்ற வசீ ஸ்ரீயின் கையில் இருந்த போனை சுட்டி, “நான் இதை பார்த்துவிட்டுத்தரவா..??”, என்று கேட்டவள் ஸ்ரீ சரி என்று சொல்வதற்கு முன் அதனை பிடிங்கிக்கொண்டு சோபாவில் தொப்பென்று விழுந்தாள்..

நேசனிற்கும் சாகருக்கும் மூக்கில்லை என்றால் அவர்கள் எப்படி மூச்சு விட்டிருப்பார்கள்..??

அதை எல்லாவற்றையும் விட அதை எப்படி அவர்களை ட்ரீட் செய்த டாக்டர்கள் கண்டுப்பிடிக்காமல் விட்டார்கள்..??

குழப்பம்.. மனது முழுதும் குழப்பம்..

இது எப்படி சாத்தியம் என்று மனதில் கேள்வி வேறு..

பல கோணங்களில் யோசித்துப்பார்த்தவளுக்கு சாகரும் நேசனும் மூக்கிருக்கும் பகுதியில் இரத்தத்துடன் மனக்கண்ணில் தோன்றினர்..

கண்களை இருக்க மூடி திறந்த ஸ்ரீ, “அப்பொழுது சாகரும் நேசனும் வேண்டும் என்றே தான் மூக்கு இருக்கும் இடத்தை காயம் செய்திருக்கிறார்களா..??”, என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள்..
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
நாட்கள் அதன் போக்கில் விரைந்து விரைய வசிஷ்டரா பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்திருந்தாள்.. கூடவே பொழிலை மறந்து ஸ்ரீயுடனும் பூமியுடனும் நெருங்கியிருந்தாள்..

பள்ளியில் மோஸ்டாக அனைவரும் சிங்கிள் பேரெண்ட்ஸாக இருக்க ஆதியை மறந்தவள் புதிய நண்பர்களால் விபு மிளிர் மயூரன் என மூவரையும் மறந்தாள்..

இரண்டாவது படிக்கும்பொழுது ஸ்ரீக்கு நந்தனுடன் திருமணமாக நந்தன் வசியை இயல்பாய் மகளாக ஏற்றுகொண்டது போல் வசியும் அவரை தந்தையாக ஏற்றுக்கொண்டாள்..

எப்பொழுதும் படிப்பிலும் குறும்பிலும் முதலாவதாக வந்த வசிக்கு இயற்கையைப் பற்றியும் விண்வெளியைப் பற்றியும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் வசிக்கு..

பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்..?? சூரிய குடும்பத்திற்கு அப்பால் வேறு குடும்பங்கள் இருக்குமா..?? என பல பல கேள்விகள் அதுவும் இரண்டாவது படிக்கும் பொழுதே..

“ப்பா.. எனக்கு ஆஸ்ட்ரானமி படிக்கனும்..”

நான்காவது படிப்பவள் ஆஸ்ட்ரானமி படிக்கவேண்டும் என்று வந்து சொன்னதைக் கேட்டு, “ஆஸ்ட்ரானமியா..??”, எப்பொழுதும்போல் ஒரு ஆசார்யத்துடன் வசியிடம் கேட்டார் நந்தன்..

“ஆமாம்ப்பா ஆஸ்ட்ரானமிதான்..”, தெளிவாக பதில் வந்தது வசியிடமிருந்து..

“இவளுக்கு சாட்டர்ன்ல (Saturn) இடம் வாங்கி வீடுகட்ட வேண்டுமாம்..”, மகன் கிருஷிற்கு உடை அணிவிதவாறே கேலியாக சொன்னாள் ஸ்ரீ..

போங்கம்மா என்று சிணுங்கிய வசியைக் கண்டு சிரித்த நந்தன், “உனக்கு என்ன விருப்பமோ அதை படி வசீமா..”, என்றார்..

“தாங்க்ஸ்ப்பா..”, என்ற வசீ, “எங்க ஸ்கூலில் இதற்கான பேஸிக் கிளாஸ் (Basic class) கண்டக்ட் பண்றாங்க.. சேரட்டும்மா..??”, ஆர்வமாக..

“உனக்கு யூஸ்புல் என்றால் சேர்ந்துகொள் பாப்பா..”, என்ற நந்தன், “நீ என்ன சொல்ற ஸ்ரீ..”, என்றார் ஸ்ரீயிடம்..

ஆஸ்ட்ரானமி படிக்க போகிறேன் என்று அவள் கூறும்போதெல்லாம் மனதில் கிலிப் பறக்கும் ஸ்ரீக்கு.. எங்கே தங்களை இவள் விட்டுப்போய்விடுவாளோ என்று..

ஆனால், ஸ்ரீயால் வசியின் ஆசையையும் தட்ட முடியவில்லை..

சரி என்பது போல் அரைகுறையாக தலையசைத்த ஸ்ரீயை காணும்பொழுது நந்தனால் ஸ்ரீயின் மனதில் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது..

ஆயினும் இது வசியின் ஆசை.. அதை தடுத்து நிறுத்தக்கூடாது என்பது நந்தனின் அசைக்கமுடியா கருத்து..

“ம்மா.. உங்களுக்கு நான் ஆஸ்ட்ரானமி படிப்பது பிடிக்கவில்லையா..”, ஸ்ரீயின் முக பாவங்களைக் கண்டு கேட்டாள் வசீ..

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை குட்டி.. அது வந்து..”, என்று திக்கத்துவங்கியவரை தடுத்த நந்தன், “உங்கம்மாக்கு பிடிக்காம எல்லாம் குட்டி ஆஸ்ட்ரானமி படிக்கனும்னா நீ பாங்களூர் போகனுமே.. அதான்.. உங்க அம்மாவால் உன்னை விட்டு இருக்க முடியாதாம்..”, என்று வசியிடம் கண்சிமிட்டியவர் ஸ்ரீயிடம் ஒரு கண்டனப்பார்வையை வீசினார்..

அதைப் புரிந்துகொண்ட ஸ்ரீ வேகமாக, “ஆமா எப்படி உன்னை விட்டு இருப்பேன்..”, என்றார் சிறுபிள்ளைத்தனமாக..

“ம்மா.. நான் என்ன இப்போவேவ்வா அங்க போகப்போறேன்..?? டென்த் முடித்த பின் தானே.. அதுக்கு இன்னும் சிக்ஸ் இயர்ஸ் இருக்கு..”, என்றாள்..

அவளது விளக்கம் ஸ்ரீக்கு கலக்கத்தையே கொடுத்தது.. இருந்தும் அதனை வெளிக்காட்டாமல் சமாளித்தவர், “எனக்கு எப்பொழுதும் உன் சந்தோஷம் தான் முக்கியம்..”, வசியைத் தன் தோளோடு அணைத்தபடி..

வருடம் 2665..

ல்பா ப்ரோக்ஸிமா – I (பொழில் கிரகம் இருக்கும் சூரிய குடும்பத்தின் பெயர்) இரண்டாயிரத்தி அறுநூற்றி அறுபத்தி ஐந்தாம் வருடத்தின் காட் டாபிக் அதுவே..

எந்த நாடு முதலில் மனிதர்கள் அக்குடும்பதில்லுள்ள கிரகத்திற்கு அனுப்பப் போகிறார்கள் என்பதில் பெறும் போட்டி நிலவிக்கொண்டிருந்த காலம்..

கோல்ட் வார் என்றும் அந்தப் போட்டியை சொல்லலாம்..

நூற்றாண்டுகள் கடந்த போதிலும் இன்னும் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் எல்லா காரியங்களிலும் போட்டிகள் அதிகமானதே தவிர குறைவதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.. இருக்கவில்லை என்பதைவிட எந்த ஒரு நாடும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை என்றே கூறலாம்..

இந்தியாவும் ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு மனிதர்கள் அனுப்ப கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது..

ஆல்பா ப்ராக்ஸிமா என்னும் சூரிய குடும்பம் இருப்பதை முதன் முதலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சில வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து அங்கு சில மனிதர்களை அனுப்ப திட்டம் தீட்டியிருந்தது.. அதை இரகசியமாகவே செய்தது நம் நாடு..

ஆனால் எந்த இடத்தில் தவறு என்று தெரியாத வகையில் ஓராண்டிற்கு முன் இந்தியாவின் இம்முயற்சி உலக நாடுகள் முழுவதும் பரவியது..

அதன் விளைவாக சீக்ரட்டாக செய்த அந்த ஆராய்ச்சி இப்பொழுது வெட்டவெளிச்சமானது..

எல்லா நாடுகளும் ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு மனிதர்கள் அனுப்ப தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்க சர்வேஷ் ஸ்வரூபன் இஸ்ரோவின் (ISRO) தலைவர் மற்றும் ப்ரோக்ஸிமா ப்ராஜெக்ட்டின் ஹெட்டிற்கு பெறும் நெருக்கடியே..

இந்த முயற்சியில் முதல் நாடாக இந்தியா வரவேண்டும் என்ற நெருக்கடி..

மனிதர்கள் செல்வதற்கான ஸ்பேஸ் ஷிப் தயாராகிக்கொண்டிருந்தது சர்வேஷ் ஸ்வரூபனின் தலைமையில்.. அது தயாராக மினிமம் ஏழு வருடமாவது ஆகும்..

மற்ற நாடுகள் ஸ்பேஸ் ஷிப்புகளை தயாரிப்பதற்கு குறைந்தது பதினைந்து வருடங்கள் ஆகும்..

அந்த வகையில் நம் நாடு ஒரு படி முன்னே தான்..

ஆனால் இப்பொழுது பிரச்சனை அதுவல்ல..

ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு அனுப்படும் மனிதர்கள் க்ளோனிங் மனிதனாக இருக்கக்கூடாது.. இது அரசின் ரெக்கொயர்மென்ட் (requirement)..

இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே தயார் நிலையில்.. ஆனால் இன்னும் இருவர் வேண்டும்.. அதுவும் ஆஸ்ட்ரானமி படித்தவர்கள்.. தேடத் துவங்கிது சர்வேஷின் தனிக்குழு..

அந்த இரு நபருக்கான தேடுதல் வேட்டையில் சிக்கியவர்கள் தான் அத்வைத்தும் வசிஷ்டராவும்..

-தேடலாம்..
 




Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Super super
neenga evlo perusa kuduthalum kuti pola dha sis irukum epi...
adhukula mudinja dhan nu dhan thonudhu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top