• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
காதலாக உருமாறியது


ஜென்னி யோசனையோடு அறைவாசலிலேயே நின்றிருக்க, அவனோ அவள் வந்து நின்றதை கவனிக்காதவனாய் பழைய நினைவுகளில் ஆழ்ந்துகிடந்தான்.

அவனின் யோசனையை தடை செய்ய மனமில்லாமல் அவள் அசைவின்றி நிற்க, டேவிட் தன் சிந்தனையிலிருந்து மீண்டு தலையை நிமிர்த்த, அவன் விழிகள் அவளை பார்த்தது.

அவள் அறைக்கதவருகே மௌனமாய் நடந்து வந்தாள்.

அவன் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கரத்தில் இருந்த சட்டையை பெட்டிக்குள் வைத்தபடி "எப்போ வந்த ஜென்னி ?" என்று ரொம்பவும் இயல்பாய் கேட்க, அவள் பதில் பேசாமல் அவனையே பார்த்திருந்தாள்.

அவன் புன்முறுவலோடு "கிளம்பிறதுக்கு முன்னாடி உன்னை பார்க்கனும்னு நினைச்சேன்... எப்படியோ நீயே வந்துட்ட" என்க, அவள் அப்போதும் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை.

அவன் துணிகளை அடுக்கி கொண்டிருக்கும் பெட்டியை பார்த்தவள்
அருகில் இருந்த ப்ளைட் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் கவனிக்கலானாள்.

அவள் மனமோ வேதனையில் திளைத்திருக்க,

அவன் தன் பெட்டியை மூடியபடி "நான் லண்டன் போறேன் ஜென்னி... எப்போ வருவேன்னு எனக்கு தெரியல... திரும்பியும் மீட் பண்ணுவோமான்னு கூட தெரியல" என்று அவன் சொல்ல,

அத்தனை நேரம் அவள்
கொண்டிருந்த வருத்தமெல்லாம் கோமாய் துளிர்விட்டது.

"நிறுத்துங்க டேவிட்... இவ்வளவு இமோஷன்ல் சீனெல்லாம் இங்க கிடையாது... நீங்க எங்கேயும் போகல" என்றவள் தடலாடியாய் உரைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

அவளை பார்த்து புன்னகையித்தவன் "ஏன் போக கூடாது?" என்று கேட்க,

"இப்போ நீங்க ஏன் போகனும் ?" என்று கோபமான தொனியில் கேட்டாள்.

அவன் தவிப்புற "இப்படி கேட்டா நான் என்ன சொல்ல ?" என்றவன் யோசிக்க,

"போகிறதுக்கான காரணத்தை சொல்லுங்க... இல்லாட்டி எங்கேயும் போக வேண்டாம்" என்று அவனை வழியறித்தபடி நின்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு "எனக்கு இங்க இருக்க பிடிக்கல ஜென்னி... என் தாட்டும் இந்த லைஃப் ஸ்டைலும் சுத்தமா ஓத்து போகல ... டேடோட ஹெல்த் இஷுனாலதான் அட்மினிஸ்டிரேஷனை நான் பார்த்துகிட்டேன்... இல்லைன்னா எனக்கு இதுல எல்லாம் கொஞ்சம் கூட இன்டிரஸ்ட் இல்லை... போர்ட் மீட்டிங் வைச்சி வேற எம்.டி சூஸ் பண்ணி அபாயின்மன்ட் பண்ணிட்டு நான் மொத்தமா ரிலீவாயிடலாம்னு இருக்கேன்... " என்றவன் சொல்லி முடிக்க,

"ரிலீவாயிட்டு" அவள் புருவங்களை சுருக்கி அவனை பார்த்தாள்.

"ரீலவாயிட்டு நிம்மதியா சுதந்திரமா இருக்கனும்னு நினைக்கிறேன்" என்றான்.

"அவ்வளவுதானா ?!" என்றவள் பார்வை அவனை கூர்மையாய் நோக்கியது.

"அவ்வளவுதானா ன்னா ?! நான் இப்போ என்ன சொல்லனும்னு நீ எதிர்பார்க்கிற" என்று கேட்டு அவளை ஆழமாய் நோக்கினான்.

"நீங்க போறதுக்கான உண்மையான காரணத்தை சொல்லுங்க" என்றாள்.

அவன் மௌனமாக நின்றுவிட, அவன் அருகாமையில் வந்தவள் "நான்தான் காரணம் ரைட்"என்றவள் கேட்க,

அவன் பெருமூச்செறிந்தவாறு தன் மௌனத்தை கலைக்காமல் நின்றிருந்தான்.

"உங்க விருப்பத்தை பத்தி கேட்காம தியாவா நான்.. உங்களை மீட் பண்ண வைச்சது... போஃன்ல நான் பேச மாட்டேன்னு சொன்னது... இதெல்லாமா?"

அவன் அப்போது தன் மௌனத்தை கலைத்து "அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஜென்னி... ஸ்ரீயஸா நான் அதையெல்லாம் நான் பெரிசாவும் எடுத்துக்கல.. அதுவும் இல்லாம உன் கோபம் பொய்யுன்னு எனக்கு நல்லா தெரியும்" என்றவனை அவள் ஆழ்ந்து பார்த்து

"எப்படி தெரியும்?"

"உன்னால என்கிட்ட கோபப்பட எல்லாம் முடியாது...." என்க, அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் தலைகவிழ்ந்து நின்றபடி

"யூ ஆர் ரைட்... என்னால உங்ககிட்ட கோபப்பட முடியாது... ஆனா உங்ககிட்ட இருந்து விலகி நிற்க எனக்கு வேறவழி தெரியல" என்றாள்.

"உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம்னுதானே நானே போறேன்" என்று சொல்லியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் தன் அறையிலிருந்து போஃனை எடுத்து வேலையாட்களை அழைக்க, அவர்கள் வந்து அவன் முன்னிலையில் நின்றனர்.

"பெட்டியை கார்ல வையுங்க" என்றவன் பணிக்க,

அதே போல் அவன் பெட்டியை அவர்கள் அறையிலிருந்து எடுத்து கொண்டு செல்ல,அவளுக்கு படபடப்பானது.

உண்மையிலயே சென்றுவிட போகிறானா என்ற பதட்டம் அதிகரிக்க
மனவுணர்வுகளை வெளிப்படுத்த முடியாத ஊமையை போல் கிடந்தாள்.

அவன் தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு "சரி ஜென்னி... டைமாச்சு... நான் கிளம்பிறேன்?!" என்றவன் தலையசைத்து சொல்ல,

அவள் மனமோ 'போகாதீங்க டேவிட்' என்று அவதியுற, ஏனோ அந்த வார்த்தைகள் வெளிவராமல் அவளுக்குள் சிக்குண்டது.

அவன் தன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் எடுத்து கொள்ள யத்தனித்த போது, அவள் உடனடியாக அதனை கைப்பற்றி கொண்டாள்.

"ஜென்னி என்ன பன்ற ? டிக்கெடையும் பாஸ்போர்ட்டையும் கொடு" என்றவன் கேட்க, அவள் அதனை தன் பின்புற கரத்தில் மறைத்தபடி "மாட்டேன்" என்றாள்.

அவள் செய்கையை நம்ப முடியாமல் பார்த்தவன் "என்னாச்சு ஜென்னி உனக்கு ?" என்று புரியாமல் அவன் கேட்க,

"நீங்க போக கூடாது" என்றாள் அழுத்தமாக.

"புரிஞ்சிக்கோ ஜென்னி... நான் போகனும்... டிக்கெட்ஸை கொடு" என்றவன் அமர்த்தலாகவே உரைத்தபடி அதனை வாங்க வர, அவள் பதட்டத்தில் பின்னோடு சென்றாள்.

"கொடு ஜென்னி" என்றவன் அவள் கரத்திலிருந்த பயணச்சீட்டை வாங்க முற்பட, அவள் பின்னங்கால் இடிப்பட்டு படுக்கையில் சரிந்து விழப் போனாள்.

"ஜென்னி பாத்து"என்று அவளை தாங்கி கொள்ள முயன்றவன் அவனும் தன்னிலை தடுமாறி அவள் மீதே விழப் பார்க்க, அதனை உணர்ந்தவள்
அச்சத்தில் விழிகளை மூடிக் கொண்டான்.

அவன் சற்று சுதாரித்து தன் கரங்களை ஊன்றி அவள் மீது விழாமல் நிலைநிறுத்திக் கொண்டுவிட, அவள் விழிகளை திறந்த நொடி அவன் தன்மேல் விழாததை எண்ணி பெருமூச்செறிந்தாள்.

ஆனால் அவன் மனமோ அந்த நொடி தன்நிலைப்பாட்டில் இருந்து வெகுவாய் நழுவிக் கொண்டிருந்தது.

வானமும் கடலும் எப்படி ஒன்றை ஒன்றை பார்த்தபடி இருக்குமோ அப்படி இருந்தனர் இருவரும்.

ஆகாயம் போல மெய்மறந்த வண்ணம் அவள் மீது அவன் லயித்திருக்க, அவனின் நெருக்கம் அலைகடல் போல அவளின் உணர்வுகளை பொங்கி எழச் செய்தன.

தனக்கும் அவளுக்குமான அந்த சிறு தூரத்தை கடந்து அவளை நெருங்கிவிட மாட்டோமா என்று ஏங்கி அவன் பார்த்த பார்வையில், அவளை அச்சம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்க, அவளோ மலங்க மலங்க விழித்திருந்தாள்.

எந்த பெண்ணையும் பார்வையால் கூட தீண்டிடாத அவனின் ஆண்மையும் கண்ணியமும் அவளிடம் மட்டும் தோற்றுவிட விழைய, அவனின் மனதின் ஏதோ ஒரு உணர்வு அந்த இடைவெளியை கடந்து செல்ல சொன்னது.

அவனோ தன் சுயநினைவிலிருந்து வெகுதூரம் பயணித்திருக்க, அவளோ காதலோடு அவளை வருடிய அவன் பார்வையை நிராகரிக்க முடியாமல் பேச்சற்று போயிருந்தாள்.

அவர்களுக்கு இடையில் இருந்த நட்பென்ற மெல்லிய கோட்டை அந்த நேரம் அவன் தாண்டியிருந்தான்.

அவன் தனை மறந்து அவளை நெருங்கி வரவும், உஷ்ணமாய் அவளை தீண்டிய அவனின் மூச்சுகாற்று அவள் இதயத்தின் துடிப்பை அதிகரத்திருக்க செய்தது.

அந்த நோடி அவள் மூச்சு காற்று ஏற்ற இறக்கமாய் மாற, அவள் நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது. அவள் நினைக்க விரும்பாதவை எல்லாம் அவள் மனம் நினைவூட்டியது.

அதோடு அல்லாது தியா சொன்னதெல்லாம் அவள் காதில் ஒலிக்க, டேவிடின் விருப்பத்தை மீண்டும் மீண்டும் நிராகரிக்க அவளுக்கு குற்றவுணர்வாய் இருந்தது.

ஆதலால் அவனை தடுக்க முற்படாமல் அவள் விழிகளை மூடிக் கொள்ள, அவனோ அவளின் முகமாற்றத்தை பார்த்து துணுக்குற்று, எழுந்து நின்றவன் அவளையும் கரம் பிடித்து தூக்கி அமர வைத்து "ஜென்னி" என்றழைக்க அவள் விழியோரம் நீர் கசிந்திருந்தது.

"ஐம் ஸாரி... எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" என்று அவன் பதட்டமான குரலில் தலையிலடித்து கொண்டு கூற,

அவள் பதில் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள். டேவிட் தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் நீட்டவும் அவள் அதனை வாங்கி குடித்தாள்.

அவள் முகத்தில் வியர்வை படர்ந்திருக்க, அவன் குறுக்கும் நெடுக்கமாய் நடந்தபடி "இதுக்குதான்... இந்த காரணத்துக்காகதான் உன்னை விட்டு நான் விலகியிருக்கனும்னு நினைக்கிறேன்" என்றவன் அவதியுற,

அவளும் ஒருவாறு சுதாரித்து கொண்டு "நானும் இதே காரணத்துக்காகதான்
உங்களை விட்டு விலகி இருக்கனும்னு நினைக்கிறேன் டேவிட்" என்று வெறுமையான பார்வையோடு உரைக்க,

அவன் புரியாமல் பார்த்தான்.

அவள் எழுந்து நின்று கொண்டு "ஒரு ப்ரண்டா உங்க கூட வாழ்க்கை பூரா என்னால வர முடியும்... பட் மனைவியா முடியாது... ஏன்னா நான் அதுக்கு தகுதியானவ இல்லை.

உங்களுக்கான அடிப்படை சந்தோஷத்தை கூட என்னால பூர்த்தி செய்ய முடியாது டேவிட்...

வெளிப்படையா சொல்லனும்னா தாம்பத்ய வாழ்க்கையை என்னால வாழ முடியாது... அந்த நரகவேதனையை திரும்பியும் என்னால அனுபவிக்க முடியாது" என்றவளின் முகம் அவளின் பழைய நினைவுகளால் அசூயையாய் மாறியிருந்தது.

சில நிமிடம் நிசப்தமாய் கிடந்தது அந்த அறை.

டேவிட் வெகு நேர யோசனைக்கு பின் "இந்த விஷயம் ராகவிற்கு தெரியுமா? " என்று கேட்க,

அந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சிவசத்தால் தான் சொல்ல கூடாதென்று நினைத்தவற்றை எல்லாம் உளறிவிட்டோமா என்று அவள் யோசித்திருக்க,

அவன் மீண்டும் "உன்னைதான் கேட்கிறேன் ஜென்னி... ராகவுக்கு தெரியுமா ? தெரியாதா?" என்றவன் அழுத்தி கேட்க எந்த பதிலை சொன்னாலும் தான் சிக்கி கொண்டே தீருவோம் என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்தது.

*******

டிவியை பார்த்திருந்த ராகவின் முகம் குழப்பமாய் மாறியிருந்தது.

கிட்டத்தட்ட மனோவும் அதே நிலையில் இருக்க "என்ன பாஸ்? சையத் சார் இப்படி சொல்லிட்டாரு... கஷ்டப்பட்டு அந்த மதுவை மிரட்டி இவ்வளவு தூரம் பேச வைச்சா... அவர் அசலாட்டா உண்மைதான்டாரு... நம்ம பிளானெல்லாம் ப்ஃளாப் ஆயிடுசே" என்றவன் வருத்தப்பட,

"விடு மனோ... இதுவும் ஒருவகையில நல்லதுக்குதான்... ஜென்னிக்கு அவன் மேல இருக்கிற இமேஜ் உடைஞ்சி போயிருக்கும் ல" என்று சொல்லி குரூரமாய் புன்னகையித்தான் ராகவ்.

சையத் டிவியில் மது சொன்ன அத்தனையும் உண்மையென்று ஆமோதித்து அவளையே திருமணம் செய்து கொள்வதாக சொல்லிக் கொண்டிருக்க, அந்த காட்சியை அப்போது சாஜிம்மாவும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அப்சானா தன் அண்ணனிடம் "என்ன ண்ணா இப்படி சொல்லிட்டீங்க ?" என்று கேட்க அதே கேள்விதான் சாஜியின் மனதையும் அழுத்தியது.

"வேறென்ன செய்ய முடியும் ?" சையத் விரக்தியான பார்வையோடு தங்கையை பார்க்க,

சாஜிம்மா கோபம் பொங்க "உன் பேர்ல தப்பா ஒருத்தி பழி போட்டிருக்கா? அவளை எதுக்குடா நீ கல்யாணம் பண்ணிக்கனும்... ?" என்று கேட்க,

"எனக்கு மதுவை நல்லா தெரியும்மா... அவ நிச்சயம் தெரிஞ்ச பண்ணி இருக்க மாட்டா... பாவம் அவ சூழ்நிலை என்னவோ ?!" என்றவன் உரைக்க சாஜிம்மா அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.

அந்த கணம் எதிர்பாரா விதமாய் மது சையத்தின் கால்களை பிடித்து கொண்டு "ஸாரி ஸார்... என்னை மன்னிச்சிடுங்க" என்று கண்ணீர் வடிக்க எல்லோருமே அதிர்ந்தனர்.

சையத் அவள் கரத்தை பிடித்து தூக்கியவன் "என்ன காரியம் பன்ற மது?" என்று கோபமாய் பார்க்க,

அவள் கரத்தை குவித்தபடி
அழுதவள் "என்னை மன்னிச்சிடுங்க சார்... எனக்கு வேற வழி தெரியல" என்றாள்.

சாஜிம்மா எரிச்சலோடு "ஏன் மது? என் பையன் என்னைக்காச்சும் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டானா ?" என்று கேட்க,

அவள் பதறியபடி "சத்தியமா இல்லம்மா... அவர் அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது" என்றாள்.

"அப்புறம் ஏன்டி என் பிள்ளை மானத்தை வாங்கின?... அவனை எல்லாரும் எப்படி பார்க்கிறீங்க தெரியுமா ? !" என்று அவர் உணர்ச்சி பொங்க குரலை உயர்த்த சையத் தன் அம்மாவை அணைத்து பிடித்தபடி,

"வேண்டாம் ம்மா... விடுங்க... "என்று சமாதானம் உரைக்க, அவர் தன் மகனின் தோளில் சாய்ந்தபடி அழ தொடங்கினர்.

அப்சானாவும் அதே நேரம் அழ தொடங்க, ஆஷிக் கோபத்தோடு மதுவை பார்த்து "அப்படி என்னதான் உங்களுக்கு எங்க ண்ணன் மேல கோபம்" என்று கேட்க,

அவள் தன் அழுகையை விழுங்கி கொண்டு "நான் எதுவும் வேணும்டே செய்யல... எங்க வீட்டில ரவுடிங்க மாதிரி வந்து சில பேர் மிரட்டினாங்க... சையத் சாரை தப்பா சொல்லலன்னா தங்கச்சிங்ககிட்ட தப்பா நடந்துப்பேன்னு சொன்னாங்க... அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை... நான் அந்த நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லும் போதே அவள் கரமெல்லாம் உதறலெடுத்தது.

அவளின் அழுகை மெல்ல மெல்ல அதிகரிக்க, சாஜி ஆஷிக் அப்சானா மூவரும் அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.

சையத்திற்கு இதெல்லாம் ராகவின் வேலைதான் என்று தீர்க்கமாய் புரிந்தது.

'நீ செய்ற எல்லாத்துக்கும் ஒருநாள் அனுபவிப்ப ராகவ்' என்று மனதிற்குள் கொதித்தவன் அந்த கணம் மதுவின் நிலையை பார்த்து பரிதாபம் கொண்டான்.

அவளோ கதறி அழுதபடி தரையில் சரிய, சையத் அப்சானாவிடம் சமிஞ்சையால் அவளை தேற்ற சொன்னான்.

அப்சானா அவள் அருகில் அமர்ந்து "அழாதீங்க க்கா" என்றுரைக்க அவளோ அமைதியடையவில்லை.

சாஜி நடப்பதெல்லாம் என்னவென்று புரியாமல் மகனை பார்த்து "அந்த பொண்ணு சொல்றதெல்லாம் என்ன சையத்? " என்றவர் சந்தேகமாய் வினவ,

"நீங்க முதல்ல போய் கொஞ்சம் படுங்க... நைட்டெல்லாம் தூங்கல... நான் எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன்" என்றவன் ஆஷிக்கிடம் அம்மாவை உள்ளே அழைத்து போக சொன்னான்.

அவர் மகனை தவிப்போடு பார்த்துவிட்டு மறுப்பேதும் சொல்லாமல் ஆஷிக்கோடு உள்ளே செல்ல, சையத் அப்சானாவை பார்த்து "போய் மதுவுக்கு தண்ணி எடுத்துட்டு வந்து கொடு" என்க, அவளும் உள்ளே சென்றாள்.

சையத் தரையில் அமர்ந்திருப்பவளை பார்த்து "மது" என்றழைக்க அவள் விசும்பலோடு அவனை நோக்கினாள்.

"எழுந்திரு... மேலே உட்காரு" என்று இறுக்கமாக சொல்ல அவள் முகத்தை துடைத்தபடி எழுந்து கொண்டாள்.

அதற்குள் அப்சானா தண்ணி எடுத்து வந்து தரவும் அவள் அதை வாங்கி அருந்திய போதும் அவள் விசும்பல் நின்றபாடில்லை.

அப்சானா தன் அண்ணனின் பார்வை புரிந்து உள்ளே செல்ல, மதுவை அமர சொன்னான்.

அவள் விசும்பி கொண்டே அமர்ந்து கொள்ள,

சையத் அவளை நோக்கி "அழாதே மது... விடு போகட்டூம்" என்று உரைக்க அவள் உச்சபட்ச வியப்போடு அவனை பார்த்தாள்.

தான் செய்த செயலை அவன் இத்தனை நிதானமாய் எதிர்கொள்வதை அவளால் நம்பமுடியவில்லை. அவள் விசும்பல் கிட்டதட்ட நின்றிருக்க,

அவள் அவனை குழப்பமாய் பார்த்து "ஏன் ஸார்... நான் சொன்னது அத்தனையும் உண்மைன்னு ஒத்துக்கிட்டீங்க" என்றவள் கேட்க,

"தப்பு எல்லாம் என் பேர்லதான்... உனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்ததுக்கும் ஒருவகையில நான்தான் காரணம்... அதனாலதான் நான் அப்படி சொன்னேன்" என்றவன் சொல்லி பெருமூச்செறிந்தான்.

அவள் யோசனை குறியோடு மௌனமாகிட சையத் அவளிடம்,

"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னதுல உனக்கு சம்மதமா ?!" தயக்கத்தோடு அவன் கேட்கவும் அவள் அதிர்ந்தாள்.

அவன் மேலும் "நான் முஸ்லீங்கிறதால உங்க வீட்டில" என்று சொல்லும் போதே அவள் கண்ணீரோடு "உங்க மதமெல்லாம் எனக்கு தெரியல... நீங்க எனக்கு இப்போ கடவுளாதான் தெரியிறீங்க" என்றாள்.

"அப்படி எல்லாம் யாரும் அவ்வளவு சுலபமா கடவுளாகிட முடியாது மது" என்று தெளிவோடும் நிதானத்தோடும் உரைத்தவனை அடங்காத வியப்போடு பார்த்து

"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா சார்?" என்று கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

அவன் உதடுகளில் லேசாய் புன்னகை எட்டி பார்த்தது.

"நீ கொஞ்சங் கூட உன் வாழ்க்கை பாதிக்குமேன்னு கவலைப்படாம.. உன் குடும்பத்துக்காக நீ எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கு மது... உன் மேல எனக்கு கோபம் வரல... அதுக்கு பதிலா மரியாதைதான் அதிகமாகுது" என்று உரைத்தவனை பார்த்து அதிசயத்துதான் போனாள்.

அவளுக்கு எப்போதும் அவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் அது இப்போது முற்றிலும் காதலாக உருமாறியிருந்தது.

Hi friends,

உங்களுக்கு கருத்துக்களுக்கு நன்றி. நேரம் கடந்துவிட்டாலும் இன்றைக்கான பதிவு வந்துவிட்டது. மறவாமல் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

this song for syed and madhu
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதலாக உருமாறியது-ன்னு
heading தலைப்பு பார்த்தவுடனே,
சரி, ஜென்னியும் டேவிட்டும்
சேர்ந்திடுவாங்களோ-ன்னு
நினைச்சு ஆசையாக படித்தால்
இப்படி ஏமாற்றி விட்டீர்களே,
மோனிஷா டியர்?

டேவிட்டிடம், கூடிய சீக்கிரம்
நீ, சிக்கிக் கொள்ளத்தான்
போகிறாய், ஜென்னித்தா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சையத், மிகவும் அருமையான
மனிதன்
மதுவிற்கு ராகவ் உண்டாக்கிய
இடைஞ்சலை எப்படி சுலபமாக
கண்டுகொண்டான்?
இவர்கள் இருவரும் வெகு
பொருத்தமான ஜோடிதான்,
மோனிஷா டியர்

அடப்பாவி? ராகவ்வுக்கு ஏன்
இவ்வளவு கெட்ட புத்தி?
இவனுக்கெல்லாம் ஜென்னி
கிடைக்கவே கூடாது
டேவிட்டுக்குத்தான் ஜென்னித்தா
மனைவியாக வேண்டும்,
மோனிஷா டியர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
காதலாக உருமாறியது-ன்னு
heading தலைப்பு பார்த்தவுடனே,
சரி ஜென்னியும் டேவிட்டும்
சேர்ந்திடுவாங்களோ-ன்னு
நினைச்சு ஆசையாக படித்தால்
இப்படி ஏமாற்றி விட்டீர்களே,
மோனிஷா டியர்?

டேவிட்டிடம், கூடிய சீக்கிரம்
நீ, சிக்கிக் கொள்ளத்தான்
போகிறாய், ஜென்னித்தா டியர்
Naan kuda expect pannen kadaisiya bulb ??than ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top