• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பூமி..

திரவனின் வெப்பம் ஒருபுறம் வசிஷ்டராவின் நச்சல்கள் மறுபுறம் என தலைவலி மண்டையைப் பிளந்தது நிவ்யாவிற்கு..

அவளை அடக்க வழியில்லாது திணறிய நிவ்யா ஒரு கட்டத்தில் அவளிடம் சத்தமிட கப்சிப்பானாது குழந்தை..

பார்க்க பாவமாக இருந்தாலும் அதனை அடக்கியவர் அவளிடம் சற்று கடுமையான முகத்தையே காண்பித்தார்..

“நிவ்யா.. தேவையானவற்றை கப்பலில் இருந்து எடுத்துவிட்டோம்.. நீங்கள் ஒரு முறை சரிபார்த்தால் இங்கிருந்து கிளம்பலாம்.. கப்பல் வெடித்து சிதற இன்னும் இருபது நிமிடங்களே மிச்சம் உள்ளது..”, என்றான் சாகர் நிவ்யாவிடம்..

“நான் பார்க்கிறேன் சாகர்..”, என்றவர் குரலைத் தாழ்த்தி, “இவளைப் பிடித்துக்கொள்ளுங்கள்.. ரொம்பவும் அடம் செய்கிறாள்..”, என்று வசியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு கப்பலிற்குள் நுழைந்தார்..

தேவையான பொருட்கள் இறக்கப்பட்டிருக்க ஏதாவது மிச்சம் உள்ளதா என்று சோதித்த நிவ்யா பொழிலுக்கு கப்பல் வெடித்து சிதறப்போகும் ஒரு செய்தியையும் வசிஷ்ட்ராவைப் பார்த்துக்கொள்வதாக ஒரு செய்தியையும் அனுப்பிவிட்டு கப்பலுக்கு வெளியே வந்து அதன் கதவில் இருந்த நீல நிற பட்டனை அழுத்தினார்..

தானாக மூடிக்கொண்ட அந்தக் கதவு பதினேழு நிமிடம் மீது உள்ளது என்ற செய்தியைத் தாங்கி நின்றது..

வசிஷ்ட்ராவை கையில் வாங்கியவர் தன்னுடன் வந்திருக்கும் மீதி ஒன்பது பேருடன் அவ்விடத்தை விட்டு நடக்கத்துவங்கினார் வேகமாக..

சரியாக பதினைந்து நிமிடம் நடந்தவர்கள் திரும்பி தாங்கள் வந்திறங்கிய கப்பலின் திசையைப் பார்த்தனர்..

லேசாக புகைமூட்டம் கிளம்ப வெடித்துச் சிதறி மண்ணோடு மண்ணாகி இருந்தது அந்த விண்வெளி கப்பல்..

சற்றே ஆசுவாசம் அடைந்த நிவ்யா தன்னுடன் வந்த ஒன்பது பேரையும் நோக்கியவர், “நான் சொல்லப் போவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.. இருந்தாலும் இன்னொரு முறை இதை உங்களுக்கு நியாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்..”, என்றவர், “நாம் செல்ல வேண்டிய இடம் பூமியில் 12.9716 வடக்கு 77.5946 கிழக்கு.. அது தோராயைமாக இங்கிருந்து நூற்றி நாற்பத்தி ஆறு மைல் வடகிழக்கில் தொலைவே உள்ளது.. நடந்து சென்றோமானால் குறைந்தபட்சம் முப்பத்தி இரண்டு மணி நேரம் ஆகும்..”, என்றார்..

“நாம் மட்டும் இருந்தால் நடந்துவிடலாம் நிவ்யா.. ஆனால் இப்பொழுது இக்குழந்தையை வைத்துக்கொண்டு..”, என்று இழுத்தார் அக்குழுவில் இருந்த ஒருவர்..

“வேறு வழி இல்லை நேசன்.. நாம் நடந்து தான் ஆகவேண்டும்.. வழியில் நம் கிரகத்தில் இருக்கும் வாகனம் போல் இங்கு ஏதாவது தட்டுப்படாமலா போய்விடப் போகிறது.. வாகனங்கள் தட்டுப்படவில்லை என்றால் என்ன வனங்கள் (ஊர்கள்) தட்டுப்படும்.. சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம்”, என்றார்..

அவர் சொல்லுக்கு ஆமோத்தித்தவர்கள் மெதுவாக நடக்கதுவங்கினர்..

த்து மைல் கடந்திருந்த வேளையில்..

நிவ்யாவை கையை சுரண்டினாள் வசிஷ்டரா மெதுவாக..

அப்பொழுது தான் வசியின் முகத்தை கூர்ந்து பார்த்த நிவ்யா அவள் முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்டு, “என்ன குட்டிம்மா வேணும்..?? பசிக்குதா..??”, தன்மையாகவே வெளிவந்தது நிவ்யாவின் குரல்..

தண்ணீர் என்பது போல் தலையசைத்து குழந்தை..

அவசரமாக தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்தவர் நீரை ஒரு சிறு மண் கிண்ணத்தில் ஊற்றி அவளுக்குக் கொடுத்தார்..

வேகமாக அதனை வாங்கி அருந்தியவளைக் கண்டு மீண்டும் அக்கின்ணத்தில் நீர் நிரப்பிக் கொடுத்தவர் வாயருகில் சிந்தியிருந்த நீரைத் துடைத்துவிட்டு போகலாமா என்று கேட்டார்..

சரியென்று தலையசைத்த வசிஷ்ட்ராவும் அவர்களுடன் மெதுவாக ஊற (நடக்க) ஆரம்பித்தாள்..

தரவனின் தாக்கம் மாலையில் குறைய ஆரம்பித்த போது பொழில் வாசிகளின் வேகமும் குறைய ஆரம்பித்தது..

“இவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம்..??”, சாகரின் குரல் சோர்வாக வந்து விழுந்தது..

“ஒரு ஐம்பது மைல்..”, இது நேசன்..

“இவ்வளவு தூரம் கடந்தும் ஒரு வனம் கூட தென்படவில்லையே..??”, அதிர்ச்சியா ஆச்சர்யமா.. ஒன்றும் தெரியாத குரலில் மொழிந்தார் சாகர்..

“இந்த வரக்காட்டை நாம் தாண்டினால் வனங்கள் தென்படலாம்..”, இடையிட்டார் நிவ்யா..

“இது காட்டுப் பகுதி போல் தோன்றவில்லையே..??”, இது சாகர்..

“சரி தான்..”, என்ற நிவ்யா சுற்றிக்கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் சிமென்ட் தரைகள் இடிந்து கிடந்த மதில்கள் என எல்லாவற்றையும் பார்த்து, “மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கக் கூடும்.. இயற்கையோ செயற்கையோ இவ்விடத்தை அழித்திருக்கிறது.. என்னவென்று சரியாகத் தெரியவில்லை..”,என்றார் யோசனையுடன்..

நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது பொழில் வாசிகளுக்கு..

மனிதன் என்று ஒருவன் அங்கிருந்த சுவடே தெரியவில்லை..

றுபத்தி ஐந்து மைல் கடந்த நிலையில்..

அன்று பௌர்ணமி ஆனதால் நிலவின் வெளிச்சம் வழிக்காட்டிக் கொண்டிருந்தது அவர்களுக்கு..

மக்காத பொருட்கள் துர்நாற்றத்தை காற்றின் மூலம் பரப்பிக்கொண்டிருந்தது..

நாற்றம் தாங்காது அவ்விடத்தை விட்டு அவசரவசரமாக கடந்து கொண்டிருந்தனர் பொழில் வாசிகள்..

நாற்றம் தாங்காது இரு முறை வாந்தியே எடுத்திருந்தாள் வசிஷ்டரா.. புதிதாக வந்திறங்கிய இடத்தின் சீர்தோஷநிலைக்கு அவள் உடல் வளைந்து கொடுத்திருக்கவில்லை..

மற்ற பொழில் வாசிகளுக்கும் அது புதிது என்றாலும் கூட அவர்கள் அதனை அட்ஜெஸ்ட் செய்துகொண்டனர்..

வசியின் நிலையைக் கண்ட சாகர் அவளை தன் தோளில் ஏற்றிக்கொண்டு விரைவாக நடக்கத் துவங்கினான்..

மேலும் பத்து மைல்கல் கடந்தபோது தான் முற்றிலுமாக மறைந்தது அந்த நாற்றம்..

வசிஷ்ட்ராவைத் தோளில் சுமந்துகொண்டிருந்த சாகர் அதற்கு மேல் நடக்கத் தெம்பில்லாது இடிந்த நிலையில் இருந்த ஒரு வீட்டின் தரையில் அமர்ந்துகொண்டான்..

“சாகர்.. என்னதிது..??”, சோர்விலும் நிதானமாகவும் கடினமாகவும் வார்த்தைகள் வந்து விழுந்தது நிவ்யாவிடமிருந்து..

“என்ன என்னதிது..?? நிற்காமல் கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து மைல்கள் கடந்துவிட்டோம்.. நாம் யாரும் இயந்திரங்கள் இல்லை நிவ்யா.. அனைவருக்கும் கொஞ்சமேனும் ஓய்வு தேவை..”, வசிஷ்டராவையும் சாகரையும் பார்த்தபடியே நிவ்யாவிடம் எகிறினாள் ஜானு..

ஜானு பொழில் வாசிகளில் ஒருத்தி..

அனைவரையும் ஒரு பெருமூச்சுடன் பார்த்த நிவ்யா, “எனக்கு மட்டும் சோர்வாக இல்லை என்றா நினைக்கிறீர்கள்..??”, என்று பொதுவாக கேட்டவள், “பூமிக்கு வந்து பதினான்கு மணி நேரம் கடந்துவிட்டது.. ஆனால் இன்னும் நாம் இக்கிரகத்தில் ஒரு மனிதனைக் கூடப் பார்க்கவில்லை.. நாம் கடந்து வந்த பாதையை பார்த்தீர்கள் அல்லவா..?? அதைப் பார்த்துவிட்டும்மா நீங்கள் ஓய்வெடுக்கலாமா என்று கேட்கிறீர்கள்..??”, என்று கேட்டாள்..

“நீங்கள் சொல்வது எல்லாம் நூறு என்ன இருநூறு சதவிகிதம் சரி தான்.. இருந்தாலும்.. நம் அனைவருக்கும் ஓய்வு என்பது இப்பொழுது மிக மிக அவசியமான ஒன்று..”, என்றான் சாகர்..

சில நொடிகள் யோசித்த நிவ்யா, “சரி.. ஓய்வு எடுக்கலாம்.. ஆனால் ஓய்வு இரண்டு மணி நேரம் மட்டும் தான்.. அதன் பிறகு நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.. விரைவில் மக்கள் நடமாடும் இடம் செல்ல வேண்டும்..”, தீர்மானித்து விட்டது போல் வந்து விழுந்தது நிவ்யாவின் குரல்..

இவர்கள் பூமியில் ஓய்வெடுக்கட்டும்.. அதற்குள் பொழிலில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வரலாம்..

இடம் : பீது வனம், பொழில்..

நிவ்யாவிடமிருந்து வசிஷ்டரா அங்கிருக்கிறாள் என்று அறிந்த திருஷ்டி சிதைந்து போனார் என்றே சொல்லவேண்டும்.. அவருக்கு தான் தெரியுமே பூமிக்கு செல்வது என்பது ஒரு வழிப்பாதை என்று..

விஷயம் அறிந்து அங்கு வந்த ஆதி, “வசியை இனி இங்கு அழைத்து வர ஏதாவது வழி இருக்கிறதா..??”, என்று கேட்டார் வினோதனிடம்..

“தெரியவில்லை..”, என்ற வினோதன், “நான் இப்படி சொல்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் ஆதி.. ஆனால் உண்மை அதுதான்.. பூமிக்கு சென்றிக்கும் பொழில் வாசிகள் அவர்களாக தொடர்புகொள்ளும் வரை இனி நம்மால் தொடர்புகொள்ள முடியாது.. அவர்கள் சென்றிருக்கும் இடம் நமக்குத் தெரிந்தாலும் இச்சமயம் நாம் அங்கு செல்வது உசித்தமான விஷயம் அல்ல.. அது அங்கிருப்பவர்களுக்கு மட்டும் அல்ல நம் கிரகத்துக்கும் ஆபத்தாக முடியும்..”, என்றார்..

வினோதன் சொல்லும் உண்மை புரிந்தாலும் நொந்து போனவராக, “வேறு வழி எதுவும் இல்லையா..??”, என்று கேட்டார் ஆதி..

இல்லை என்பது போல் தலையசைத்த வினோதன், “நாம் இப்பொழுது செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் பொழில் வாசிகள் நமக்கு செய்தி அனுப்பும் வரை காத்திருப்பது.. கூடவே அவர்களை இங்கு அழைத்து வர ஒரு புதிய விண்வெளிக்கப்பலை புதிதாக உருவாக்குவது..”, என்றார்..

“சீக்கிரம் செய்தி அனுப்புவார்கள் தானே எல்லோன்..??”, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விபு கேட்டான்..

அவன் குரல் பேதத்தை உணர்ந்தவராக, “கண்டிப்பாக அனுப்புவார்கள் விபு..”, என்றார் ஆதி..

அவரின் பதிலில் திருப்தி இல்லாதவனாக, “எனக்காக சொல்லக்கூடாது..”, என்றான் கொஞ்சமே கொஞ்சம் அழுத்தமாக..

“நமக்கு அவர்கள் அழைப்பு விடுவார்கள் என்று நம்புவோம்..”, என்று அழுத்தமாக சொன்ன வினோதன் தனது காப்பு அதிர்ந்து ஒளிர்விடுவதைக் கண்டு கண்களை லேசாக மூடினார்..

எதிர்முனை அவரிடம் ஏதோ சொல்ல சொல்ல அவரின் முகம் வெகுவாக மாறியது..

அது இயலாமையோ..?? பரிதாபமா..??

-தேடலாம்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top