• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedi vantha devathaiye-Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சில வருடங்களுக்கு பின்னர்

"நீ என் அம்மா இல்லை. அன்பு அக்காதான் என் அம்மா" என்ற சௌமியாவின் வார்த்தைகள் எப்பொழுதும் காதில் ஒலிக்க வந்தனா தான் செய்த தவறுகளுக்காக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தான் செய்த தவறுகளுக்காக வருந்தி மன வேதனையுடன் தன் காலத்தைக் கடத்தி வந்தாள்.

தர்மலிங்கம் நினைவு கருணை இல்ல வளாகம்.

மாருதி சுவிப்ட் கார் மெதுவாக வந்து நின்றது. காரில் இருந்து ஜெயகாந்தனுடன் செளமியாவும் அவர்களின் வாரிசுகளான மகள் அன்பரசியும், மகன் ஆதித்தியாவும் இறங்கி வந்தனர்.

அன்பு செல்வியின் திருமண நாளை கொண்டாடத்தான் அவர்கள் குடும்பத்துடன் அங்கே வந்தார்கள்.

செளமியாவின் மூத்த வாரிசான அன்பரசிக்கு ஒன்பது வயது. அன்புசெல்வி நினைவாக அந்த பெயரை வைத்து விட்டாள்.

அண்ணன் நினைவாக நான்கு வயது மகனுக்கு ஆதித்தியா என்று பெயர் வைத்து விட்டாள்.

ஆதித்தியா வேகமாக இல்லத்திற்குள் ஒட "ஆதி! பொறுமையாக போடா." என்றாள் செளமியா.

அன்பரசியோ அம்மாவின் அருகில் சிரித்தபடி அமைதியாக காவலாக வருவது போல் வந்துக் கொண்டிருந்தாள்.

இல்லத்தின் பிரேயர் ஹாலுக்கு நுழைந்த செளமியா அங்கே இருந்த தலைவியின் கைகளில் ஆதித்தியா அமைதியாக இருந்து கொண்டிருந்தான்.

"குட்மார்னிங் மேடம்" என்று செளமியா சொல்லிவிட்டு சிரித்தாள்.

"குட்மார்னிங் டாக்டர் மேடம்" என்றபடி அன்புசெல்வி சிரிக்க "அம்மா... உங்களை" என்றாள் செளமியா.

"வணக்கம் டாக்டரம்மா" என்று குரல் கேட்க தன் ஒன்பது வயது மகன் அன்புராஜ் அருகில் வர சிரித்தபடி வந்தாள் இந்துமதி.

"மாமா!" என்றபடி ஒடி வந்த அவர்களது நான்குவயது சைந்தவியை கைகளில் ஏந்திக் கொண்டார் ஆதிரையன்.

"வணக்கம் டாக்டர் மேடம்" என்றபடி இளந்திரையனின் கரங்களில் தஞ்சம் புகுந்தாள் அன்புசெல்வியின் வாரிசான ஆறு வயது மகள் செளந்தர்யா.

ஜெயகாந்தனோ அவர்களின் இரண்டு வயது மகன் தர்மதுரையை கைகளில் ஏந்திக் கொண்டான்.

"இளா... நீங்களுமா?" என்றாள் செளமியா.

"அப்புறம் நீ மட்டும் அக்காவை மேடம் என்று சொல்லுவியா?" என்றாள் இந்துமதி.

"என்ன ஆளாளுக்கு என் செளமியை வாருறிங்க?" என்றபடி அன்புசெல்வி துணைக்கு வர "அப்படி சொல்லுங்கம்மா" என்றாள் செளமியா.

"அக்கா! நீங்க எப்பொழுது பார்த்தாலும் செளமிக்கே சப்போர்ட் பன்றிங்க. இப்பொழுதும் பார் செளமி குழந்தையைத்தான் கையில் வைச்சிருக்கே" என்று அக்காவிடம் பாய்ந்தாள் இந்துமதி.

"ஏய்! உன் மகளைத்தான் அவரு வைச்சிருக்காரில்லே அப்புறம் என்னடி உனக்கு" என்றாள் அன்புசெல்வி.

அர்ச்சுனன் அய்யா வர அனைவரும் தம்பதியராக சென்று அவரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்கள்.

"நாங்களும் வந்துட்டோம்" என்றபடி சரிகா அவள் கணவன் வேல்முருகன் மகன் அஷ்வந்த் மகள் செளமிதாவுடன் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.

செளமியாவும் ஜெயகாந்தனும் மருத்துவதுறையில் நல்லபடியாக சேவை செய்த காரணத்தால் மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அவர்களின் சேவை பாராட்டப்பட்டு பல விருதுகள்
வழங்கபட்டு பாராட்டுகள் பெற்று விட்டனர்.

இளந்திரையன் பள்ளி செயலராகவும், இந்து பள்ளி முதல்வராகவும் மாறி இருந்தார்கள்.

வேல்முருகன் ஐகோர்ட் வக்கீலாக உயர்வு பெற்றாலும் எஸ்டேட் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து கொண்டு அங்கேயே இருக்க, சரிகா தலைமை நர்சாக இருந்தாள்.

தர்மலிங்கம் நினைவு கருணை இல்ல நிறுவனராக அர்ச்சுனனும் அதை நிர்வகிக்கும் தலைவியாக அன்புசெல்வியும் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் இல்லத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் சேர்த்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம் என்று எல்லா வசதிகளையும் இலவசமாக வழங்கினார்கள்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
தர்மலிங்கம் நினைவு கருணை இல்லத்தை சேர்ந்தவர்கள் ஹாலில் கூடியிருக்க நடுவில் ஆதிரையன் அன்புசெல்வி நின்றார்கள்.

கருணை இல்லத்தின் மதர் நிர்மலா மேரி வர, அவருடன் வனிதாவும் ரஞ்சனியும் கணவர் குழந்தைகளுடன் வருகை தர அனைவரும் சேர்ந்து மதரிடம் ஆசி பெற்றனர்.

"அன்பு... இந்து... நீங்க ரெண்டு பேரும் கருணை இல்லத்துக்கு சின்ன குழந்தைகளாக வந்திங்க. இப்பொழுது கருணை இல்லத் தலைவியாக அன்பு மாறிட்டாள். உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் தந்து விட்டார்" என்றார் மதர்.

"இன்று திருமண நாள் காணும் ஆதிரையன் அன்புசெல்வி தம்பதிகள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்" என்று இந்துமதி சொல்ல அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்

"நானும் வந்திட்டேன் இளா" என்றபடி வந்த இன்ஸ்பெக்டர் சண்முகமும் அவர் மனைவி குழந்தைகளுடன் வந்து அன்புசெல்வி ஆதிரையனை வாழ்த்தினார்கள்.

"அன்பு! ஆதிரையன்! உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்களுக்குத்தான் ஒரு டிடெக்டிவ் இல்லாமல் போயிட்டாங்க" என்று ஆதங்கத்தையும் வெளியிட்டார் இன்ஸ்பெக்டர்.

கருணை இல்லத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு அவர்களுடன் அமர்ந்து எல்லோரும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அன்பு செல்வி- ஆதிரையன், செளமியா- ஜெயகாந்தன்,
இந்துமதி- இளந்திரையன், சரிகா- வேல்முருகன், இன்ஸ்பெக்டர் சண்முகம் தம்பதியினர், வனிதா தம்பதியினர், ரஞ்சனி தம்பதியினர் தங்கள் வாரிசுகளுடன் நிற்க ,மதர் நிர்மலா மேரி என அனைவரும் நிற்க புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Write your reply...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கருணை இல்லத்தை சேர்ந்தவர்கள் ஹாலில் கூடியிருக்க நடுவில் ஆதிரையன் அன்புசெல்வி நின்றார்கள்.

கருணை இல்ல மதர் நிர்மலா மேரி, வனிதாவும் ரஞ்சனியும் கணவர் குழந்தைகளுடன் வருகை தர அனைவரும் சேர்ந்து மதரிடம் ஆசி பெற்றனர்

"அன்பு... இந்து... நீங்க ரெண்டு பேரும் கருணை இல்லத்துக்கு சின்ன குழந்தைகளாக வந்திங்க. இப்ப கருணை இல்ல தலைவியாக மாறிட்டிங்க. உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் தந்திட்டார்" என்றார் மதர்.

"இன்று திருமண நாள் காணும் ஆதிரையன் அன்புசெல்வி தம்பதிகள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்" என்று இந்துமதி சொல்ல அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்

"நானும் வந்திட்டேன் இளா" என்றபடி வந்தஇன்ஸ்பெக்டர் சண்முகமும் அவர் மனைவி குழந்தைகளுடன் வந்து அன்புசெல்வி ஆதிரையனை வாழ்த்தினார்.

"அன்பு! ஆதிரையன்! உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்களுக்குதான் ஒரு டிடெக்டிவ் இல்லாம போயிட்டாங்க" என்று ஆதங்கத்தையும் வெளியிட்டார் இன்ஸ்பெக்டர்.

கருணை இல்லத்தை சேர்ந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு அவர்களுடன் அமர்ந்து எல்லோரும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அன்பு செல்வி- ஆதிரையன், செளமியா- ஜெயகாந்தன்,
இந்துமதி- இளந்திரையன், சரிகா- வேல்முருகன், இன்ஸ்பெக்டர் சண்முகம் தம்பதியினர், வனிதா தம்பதியினர், ரஞ்சனி தம்பதியினர் தங்கள் வாரிசுகளுடன் நிற்க ,மதர் நிர்மலா மேரி என அனைவரும் நிற்க புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Write your reply...

Wow wow (y)happy end:love::D;) very nice sakthi priya ma:) ennaku romba happy adhi and anbu jodi ya anadhu dha avanga kulandai ku kuda avangaluku pudicha. vanga peirunga mathi vechi avanga anbai katturanga superb da all the best and good luck (y):love:
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Wow wow (y)happy end:love::D;) very nice sakthi priya ma:) ennaku romba happy adhi and anbu jodi ya anadhu dha avanga kulandai ku kuda avangaluku pudicha. vanga peirunga mathi vechi avanga anbai katturanga superb da all the best and good luck (y):love:
என் கதையை கடைசி வரைக்கும் படிச்சு லைக் கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா. இதுவே எனக்கு பரிசு கிடைச்ச மாதிரி சந்தோஷம் தருதும்மா நன்றி நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top