ஹாய் மக்களே
சைட் இனி பிரச்சனை செய்யாது என்று நம்புகிறேன். தடையில்லாமல் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வேலை பார்க்கிறோம். ஆனாலும் நேற்று என்னைப் படுத்தியெடுத்து விட்டது. இப்போது சுபம். உங்களது பொறுமைக்கு நன்றி. இன்று புதிதாக சைட் லாகின் செய்யும் போதும், முன்னரே லாக் இன் செய்திருந்தாலும் உங்களது ப்ரௌசெர் cache clear and cookies delete செய்து விடவும். இனி பிரச்சனை இருக்காது. அப்படி யாருக்கேனும் ஏதாவது பிரச்சனை இருந்தால் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்பி வைக்கவும்.
இது நமது தள எழுத்தாளர்களுக்கு:
உங்களது கதைகளுக்கு லிங்க் எடுக்கும் முறை மாற்றப்பட்டு இருக்கிறது. smtamilnovels என்ற இந்த முகப்பு பக்கத்துக்கு போனால், அங்கு POst your story என்னும் பாக்ஸ் தெரியும். அதில் உங்களது கதையை எழுதவும் செய்யலாம், எழுதிய கதையை பேஸ்ட் செய்யலாம். அதற்கு முன் உங்களுக்கு அங்கு account இல்லையென்றால் தனி account தொடங்கிக் கொள்ளவும். forum login credentials அதற்கு பொருந்தாது. வலது ஓர மேல் மூலையில் அதற்கான லிங்க் இருக்கும் (லாப்டாப்). அதன் பின் உங்களது கதையின் எபிசோடை பேஸ்ட் செய்தவுடன் அது போஸ்ட் ஆகி லிங்க் காட்டும். அந்த லிங்க்கை உங்களது திரியில் பேஸ்ட் செய்யவும். நமது forum இல் இப்போது copy paste enable செய்திருப்பதால், முடிந்தவரை இதை செய்து உங்களது கதைகளை போடவும்.
இது வாசகர்களுக்கு:
கதைகள் அங்கு தான் இருக்கிறதே, நாம் படித்து விட்டு சில வார்த்தைகளை சொல்வோம் என்று படிப்பவர்கள் நினைத்தால் மகிழ்ச்சி. அதை விடுத்து கண் வலிக்க pdf இல் தான் படிப்போம் என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை. வாசகர்களின் வசதிக்காகத்தான் நமது தள கதைகளை நாம் delete செய்வது இல்லை, எழுத்தாளராக விருப்பப்பட்டால் மட்டுமே delete செய்கிறோம்.
இது யாருக்காக? வாசகர்களாகிய உங்களுக்காகத்தான். நீங்கள் இன்னும் என்ன வசதி வேண்டும் என்று கேட்டாலும் செய்து தர தயாராக இருக்கிறோம் நமது தளத்தில். (அதுக்காக pdf குடுங்கன்னு கேட்டா கடிச்சு வெச்சுடுவேன் ;) ) இன்னும் பல வசதிகளோடு புதிய தளமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. என்னென்ன வசதிகள் இருந்தால் நன்றாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை என்னிடம் தனிப்பட்ட முறையில் இன்பாக்சில் கூறலாம். முடிந்தவரை செய்து தருகிறேன்.
எழுதறவங்க என்னங்க நினைக்கறாங்க? நாலு லைக் ரெண்டு கமென்ட்... அவ்வளவுதாங்க அவங்க ஆசை.
படிங்க. ஜாலியா கமென்ட் போடுங்க. யாரையும் hurt பண்ணாம விளையாடுங்க.
லவ் யூ ஆல்!