• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொள்ளு சூப்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள்.. சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்!

மனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாகும். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு.

நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை

கொள்ளின் நன்மைகள்
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம்.

உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

தேவையான பொருள்கள்
கொள்ளு 4 ஸ்பூன்,
பூண்டு 5 பல்,
தக்காளி 2,
மிளகு 1ஸ்பூன்,
சீரகம் 1 ஸ்பூன்,
துவரம்பருப்பு 1 ஸ்பூன்,
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழைசிறிது,
கறிவேப்பிலை சிறிது,
தாளிக்க நல்லெண்ணெய்
கடுகுசிறிது,
வரமிளகாய் 2
செய்முறை:
முதலில் கொள்ளை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.பின் அதனுடன் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளங்கள். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

வாரம் 4 நாட்கள்

அதிக பருமன் இருப்பவர்கள் கொள்ளு சூப் வைத்து தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் குடித்தால் கொழுப்பை அப்படியே கரைத்து உடல் எடை கணிசமாக குறையும்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், மணிக்கொடி டியர்
 
Last edited:

Select_reads

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
56
Reaction score
137
Location
USA
Tried it.. Super

I had to add புளி..to my taste

Thanks for the recipe

4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள்.. சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்!

மனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாகும். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு.

நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை

கொள்ளின் நன்மைகள்
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம்.

உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

தேவையான பொருள்கள்
கொள்ளு 4 ஸ்பூன்,
பூண்டு 5 பல்,
தக்காளி 2,
மிளகு 1ஸ்பூன்,
சீரகம் 1 ஸ்பூன்,
துவரம்பருப்பு 1 ஸ்பூன்,
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழைசிறிது,
கறிவேப்பிலை சிறிது,
தாளிக்க நல்லெண்ணெய்
கடுகுசிறிது,
வரமிளகாய் 2
செய்முறை:
முதலில் கொள்ளை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.பின் அதனுடன் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளங்கள். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

வாரம் 4 நாட்கள்

அதிக பருமன் இருப்பவர்கள் கொள்ளு சூப் வைத்து தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் குடித்தால் கொழுப்பை அப்படியே கரைத்து உடல் எடை கணிசமாக குறையும்.
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top