• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bairavi part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Hi friends..
உங்கள் Zainab பேசுகிறேன். சொக்கர் பிரியாணிக்கு நண்பர்கள் கொடுத்த ஆதரவால் உருவானது இந்த 'ஆனந்த பைரவி'. கதையின் நாயகனாக ஆனந்தன், நாயகியாக பைரவி.
இவர்களுக்கிடையே உருவாகும் ஒரு மெல்லிய காதல் கதை என் ஆனந்த பைரவி!
படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் சின்னதாக ஒரு கமெண்ட் போட்டு விடுங்கள்.
நன்றி!!


'பூஞ்சோலை கிராமம் உங்களை
அன்போடு வரவேற்கிறது'

பெயர்ப் பலகையை பார்த்தபோது பைரவியின் இதழ்களில்
ஓர் அழகான புன்னகை தானாக அமர்ந்து கொண்டது.

தென்காசியில் இருந்து இரண்டே கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கிராமம்.
கிராமம் என்று சொல்ல முடியாத அளவு தன்னகத்தே அத்தனை வசதிகளையும் கொண்டிருந்தது.
சாலையில் இருமருங்கிலும் வரிசை கட்டி நின்ற மரங்களைப் பார்த்தபோது பைரவிக்கு இனம் புரியாத சந்தோசம்..
ஏனென்று தெரியாமல் அந்த ஊரின் அத்தனையும் அவளைக் கவர்ந்தது.
இந்த ஊருக்கு நான் கொஞ்சம் அதிகப்படிதான் என்று சொல்லாமல் சொன்ன அந்த ஹையுண்டாய் ஐ 10 ஐ ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து இறங்கியபோது
காரிலிருந்து... இளையராஜாவின் இசையில் சின்னக் குயில்

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்"..........என்று எல்லோரையும் வசியப்படுத்திக் கொண்டிருந்தார்.

அசுத்தமில்லாத காற்றை ஆழ இழுத்து நுரையீரலை
நிரப்பிய போது கொஞ்சம் புத்துணர்வு பிறந்தது.

பைரவி....
ஐந்தடி இரண்டங்குலம்.. திருத்தமான முகம்.. திரும்பிப் பார்க்க வைக்கும் அமைதியான அழகு!
எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி!
அந்தக் கண்களில் மட்டும் ஒரு பிடிவாதம்..
நான் முடிவெடுத்து விட்டால் முடித்தே தீருவேன் என்று சொல்லாமல் சொன்னது.
குர்தாவும் லெக்கினுக்குமே பழகியவள் அன்று காட்டன் சுடிதாரில் பாந்தமாக இருந்தாள்.
போகும் இடமும் சந்திக்கப் போகும் மனிதர்களும் அப்படி!!!
இனி தான் நிறையவே மாற வேண்டி இருக்கும் என்று நினைத்தபோது கோபம் வராமல் கொஞ்சம் இனிக்கத்தான்
செய்தது.
தன்னை நினைக்கும் போது பைரவிக்கே மெல்லிய ஆச்சரியம்!!
இதழில் மென்னகையோடு சுற்று வட்டாரத்தில் கவனம் அவளை அறியாமலே சென்றது..
பார்க்கும் இடம் எல்லாம் ஏதோ ஒன்று அழகாய்த்தான் தோன்றியது..

கவனத்தை கலைத்தாற்போல் வட்ஸப் சிணுங்கியது..
கை நீட்டி தொ(ல்)லை பேசியை எடுத்த போது "அம்மா" என்றது!

உடனே அழைப்பை ஏற்றவள் அவசரமாய்..
"ஹாய் மா, என்ன இத்தனை ஏர்லியா கூப்பிடுறீங்க?" என்றாள்.

"பைரவி, ஊருக்கு போய் சேந்துட்டியா?"

"ம்.. இப்போதான் என்டர் ஆகுறேன்மா. ஜஸ்ட் காரை நிறுத்திட்டு
இங்க இருக்கிற அழகை எல்லாம் கண்ணாலேயே அள்ளுறேன்"

"சரி சரி பாத்து அள்ளு.. ஊர்க்காரங்க சண்டைக்கு வந்திர போறாங்க"

"ஐய்யோம்மா.. அவங்க சும்மா இருந்தாலும் நீங்க எடுத்துக் கொடுப்பீங்க போல இருக்கே!!??"

"கண்டிப்பா!! அப்பவாவது அவங்க உன்னை அங்க இருந்து
துரத்தி விட மாட்டாங்களா அப்படீங்கிற ஒரு நப்பாசைதான்"
அந்தக் குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது..!

பைரவியின் அம்மா அருந்ததி. அப்பா சந்திரன்.
இருவருமே இப்போது இருப்பது இங்கிலாந்தில்..
அழகிய லிவர்பூல் நகர வாசிகள்..
லண்டனின் அதிவேகமும், நவ நாகரிகமும் பிடிக்காமல்
அமைதிக்காகவே லிவர்பூலை(Liverpool) தேர்ந்தெடுத்து
அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்..

ஆனால் ஒற்றை மகள் அவர்களையும் மிஞ்சி அமைதிக்காக ஒரு கிராமத்தில் வந்து நிற்பாள் என்பது நிச்சயம் அருந்ததி எதிர்பாராதது!
சந்திரனால் மகளின் அத்தனை உணர்வுகளையும் ஏற்றுக் கொள்ள முடிந்த அளவு அருந்ததியால் முடியவில்லை..
ஒற்றைப் பெண்....!
பெற்றவர்களோடு இருக்காமல் இது என்ன அதிகப் பிரசங்கித்தனம்.. என்பார்..
ஆனால் யார் அவர் கதையை காதில் போட்டார்கள்..
அப்பாவும் மகளும் எப்போதும் அவர்கள் இஷ்டத்துக்கு தானே
ஆடுகிறார்கள்..
ஏனோ அந்த அதிகாலையிலும் மனதில் ஓர் சலிப்பு வந்தது.

"ம்மா... ப்ளீஸ்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க"

"எதைப் புரிஞ்சுக்கணும் பைரவி?? வயசுப் பொண்ணு....
எங்களோட இருக்காம இந்தியாவில தான் இருப்பேன்னு அடம் பிடிச்ச.. சரி போனாப் போகுது.... சுத்திவர சொந்த பந்தமெல்லாம் இருக்காங்க ஓ கே ன்னு சம்மதிச்சா இப்ப எங்கேயோ ஒரு கிராமத்தை காட்டி இங்கதான் இருக்கப் போறேங்கிறே!!
என்னதான் நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்ணுறேன்னு
ஒண்ணும் புரிய மாட்டேங்குது..
இதுல உங்கப்பா எம் பொண்ணு எது பண்ணினாலும் அது
கரெக்டா தான் இருக்கும்னு ஒரு வியாக்யானம் வேற..
என்னவோ பண்ணுங்க ரெண்டு பேரும்..."

"ம்மா ப்ளீஸ்.. ஒவ்வொரு தடவையும் எனக்கு அப்பா மட்டுமில்லே நீங்களும் தான் சப்போர்ட் பண்ணி இருக்கீங்க"

"பண்ணி இருக்கேன் பைரவி.. ஆனால் எல்லா தடவையும் சந்தோஷமா சப்போர்ட் பண்ணலை...
கமலாக்காவையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லை??"

"இங்க எல்லாம் கன்ஃபர்ம் ஆனவுடனே வந்திருங்கண்ணு சொல்லியிருக்கேன்"

மகள் படித்திருக்கும் படிப்பிற்கு லண்டனிலேயே ஆசிரியர் வேலை பார்க்கலாம்....!
இந்தப் பெண் அப்படி எதைக் கண்டு இங்கேதான் வேலை பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிறது....!!??
அருந்ததிக்கு ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது..

"சரி என்னமோ பண்ணுங்க அப்பாவும் பொண்ணும்" என்றார்
சலிப்புடனே..

"ம்மா விஷ் பண்ணுங்கம்மா" இந்த வாழ்த்து தனக்கு எத்தனை அவசியம் என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

சட்டென்று அத்தனையும் மறந்து..
"விஷ் யூ சக்ஸஸ் கண்ணா" என்றார் அருந்ததி.

"தேங்க்யூ ம்மா, லவ் யூ சோ மச்"
இணைப்பை துண்டித்த போது அப்பாடா என்றிருந்தது
பைரவிக்கு.

நேரத்தைப் பார்க்க அது எட்டு ஐம்பது என்றது.
ஒன்பது மணிக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்.
கிளம்பினால் சரியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே
காரை ஸ்டார்ட் செய்தாள்.
வழியில் ஒருவரிடம் முகவரியை காட்டி வழியைத் தெரிந்து கொண்டு அந்த முகவரியை சென்றடைய சரியாக
ஒன்பதுக்கு மூன்று நிமிடங்கள் இருந்தது.
வாயிலில் நின்ற காவலாளி பெயர் தெரிந்து கொண்டு

"வந்தா உள்ளார வரச் சொன்னாங்கம்மா" என்றார்.

" இல்லை காரை... "என்று அவள் இழுக்க

" பொறுங்கம்மா.. கேட்டை திறந்து விடுறேன்..
நீங்க உள்ளேயே கொண்டு போங்க"

"ம்.. சரி" என்று தலை அசைத்தவள்..

சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டே மெதுவாக ட்ரைவ் பண்ணினாள்.
தோட்டத்திற்கு அப்போதுதான் நீர் பாய்ச்சியதன் அத்தனை அறிகுறியும்அங்கே தெரிந்தது.
வீட்டைப் பார்த்தபோதே அதில் வாழ்பவர்களின்
செழுமை புரிந்தது பைரவிக்கு....!

அவள் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்..
தோட்டம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
மலர்கள் வஞ்சனையின்றி பூத்துக் குலுங்கியது.
வீட்டிற்கு சற்று தள்ளியே காரை நிறுத்தியவள்
தன் சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை மட்டும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்தாள்.

கிராமத்திற்கே உரிய அழகோடு இருந்தாலும்
அத்தனை நவீன வசதிகளும் அந்த வீட்டில் இருக்கும் என்று
பைரவியால் அனுமானிக்க முடிந்தது.

வீட்டின் வாசற் கதவு அத்தனை விசாலமாக இருந்தது..
ஆனாலும் திறந்துதான் இருந்தது...!

அடடா சகுனம் நல்லாத்தான் இருக்கு என்ற எண்ணம் தோன்றிய போது பைரவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சமத்தாய் நின்றுகொண்டாள் யாராவது வருகிறார்களா
என்று நோட்டமிட்டபடி..

"உள்ளே வாம்மா"....

சத்தம் வந்த திசை நோக்கி திரும்பியபோது.....
ஓர் எழுபது வயது மதிக்கத்தக்க பெண் தன்னை வரவேற்பது
ஆச்சரியமாக இருந்தது...
'யார் நீ? என்ன விஷயமாக வந்திருக்கிறாய்???'
இப்படி ஒரு வரவேற்பைத்தான் எதிர்பார்த்தாள்.

நடிகை பத்மினியின் சாயல்..
தலை நிறைய பூவும் நெற்றி நிறைய பொட்டும்
வாய் நிறைய புன்னகையுமாக அவர் வந்தபோது...

ஓர் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஊரின் அத்தனை
வாலிபர்களும் நிச்சயம் இவர் பின்னால் சுற்றி இருப்பார்கள்
என்றுதான் தோன்றியது பைரவிக்கு..!!
அத்தனை அழகு...!

அருகே வந்தவர் மென்மையாக அவள் கரம் பற்றி
"ஆனந்தன் சொன்னான்.. நீ இன்னைக்கு வருவேன்னு
நான் ஆனந்தனோட பாட்டி"

"ஓ... அப்படியா வணக்கம் பாட்டி நான்...."

"தெரியும்மா.. நீ பைரவி எங்க பள்ளிக்கூடத்திற்கு புதிசா வந்திருக்கிற டீச்சர்... சரியா நான் சொன்னது?.."
அத்தனை ஸ்நேகம் அந்தக் குரலில்..

லேசாகப் புன்னகைத்தவள்....
"சரியா சொன்னீங்க பாட்டி" என்றாள்.

வீட்டின் காவலாளி முதல் எஜமானி வரை தன் வருகை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை பைரவியின்
மனம் அவசாரமாக குறித்துக் கொண்டது.

"உட்காருமா.. இதோ இப்ப ஆனந்தன் வந்திடுவான்"
பாட்டி சொன்னபோது தானாக அவள் தலை ஆடி தன் ஆமோதிப்பைக் காட்டியது.

ஏற்கனவே தனது தகுதிகள் அத்தனையையும் பாடசாலை நிர்வாகத்திற்கு அனுப்பி அவர்கள் தொலைபேசி ஊடாக ஓர்
தேர்வு காணலையும் முடித்திருந்தார்கள்..
இருந்தாலும் இறுதி முடிவு ஆனந்தன் ஐயா தான் எடுக்க முடியும் என்று அந்த பாடசாலை அதிபரே அத்தனை பவ்யமாய் சொல்லும் போது பைரவியால் சண்டை போடவா முடியும்??

ஆனந்தனின் கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்து அவர்கள் கண்காணிப்பில் வளர்ந்து வரும் பாடசாலை..
அதனால் அத்தனை இறுதி முடிவும் அவர்கள் வசம் தான்..
அந்த வரிசையில் இன்று ஆனந்தன்....... நாளை......?!

எண்ணத்தின் நாயகன் எதிரே நடந்து வர அது புரியாமல்
ஏதோ சிந்தனையில் பைரவி திளைத்திருக்க.....

"ம்ஹூம்"

தன் கவனம் கலைய பைரவி நிமிர்ந்து பார்த்த போது..
ஏதோ தன்னை விழுங்க வரும் ராட்சசனாய் அகன்று விரிந்த தோளோடு, கண்களில் ஓர் அலட்சியப் பார்வையோடு
அவளையே பார்த்திருந்தான் ஆனந்தன்!!!!!




















.
i like bairavi character.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top