• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்

  • நாற்றுப்பண்ணை அமைத்தல்.
  • நாற்றுப்பண்ணை மேலாண்மை
  • அலங்காரச் செடிகளின் நாற்றுப் பண்ணை அமைப்பதற்கான பொருட்செலவு.
இந்தியாவில் நகர மற்றும் கிராமப்புற பகுதிகள் தோட்டகலைப் பயிர்கள், முக்கியமாக மற்றும் ஆபரணப் பயிர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனுடன், சிறந்த தரமுடைய நடவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததுடன், சமீப காலமாக நாற்றுப்பண்ணைத் தொழிலானது நமது நாட்டில் பெரும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. நாற்றுப்பண்ணையின் செடிகள் பழத்தோட்டங்கள், பெரிய பூங்காக்கள் மற்றும் பூந்தோட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. உயர்ந்த கட்டிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபாரஸ்தலங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், கொலலைப்புறங்கள், நகரங்களின் சாலையோரங்கள், மேற்கூரைகள் போன்ற பல இடங்களில் அழுகுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கு விழாக்காலங்கள் மற்றம் கண்காட்சி காலங்களில் பெருமளவு தேவை ஏற்படுகின்றது. அலங்கார செடிகளுக்கான நாற்றுப் பண்ணைத் தொழிலானது பெரிய மற்றும் சிறிய நகரங்களில் பொருமளவு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1.நாற்றுப் பண்ணை அமைத்தல்
நாற்றுப்பண்ணையை படிப்படியாக உருவாக்க வேண்டும். விதையில்லா மற்றும் விதையினால் பயிர்ப்பெருக்கத்திற்காக தாய் செடிகள் மற்றும் பருவகால மலர்ப்பயிர்கள் போன்ற விதையினால் இனப்பெருக்கம் செய்யப்படும் செடிகள் மற்றும் விதைச்செடிகள் போன்றவற்றை அடுத்தடுத்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணையை அமைப்பதற்கு வேளாண் - காலநிலைகள் வேண்டும். நாற்றுப்பண்ணையை அமைப்பதற்கு வேளாண் - காலநிலைகள், மண்வகைகள், மண்ணின் கார அமிலத் தன்மை, இருப்பிடம், பரப்பளவு, நீர்ப்பசான வசதிகள், தகவல் பரிமாற்றம், சந்தை தேவை, பண்பகப் பண்ணை அல்லது தாய்ச்செடிகள் கிடைக்கக்கூடிய அளவு, திறமை பெற்ற தொழிலாளி ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்தல்:
பொருட்களை சிறு அல்லது எவ்வித சேதாரமும் இல்லாமல் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு விற்பனை செய்யப்படும் மையத்திற்கு அருகிலேயே நாற்றுப்பண்ணைக்கு இடுபொருட்களைக் கொண்டு வருவதற்கும் போதிய போக்குவரத்து வசதியுடன் இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணைக்குள் ஒரு நிரந்தர பல்லாண்டு நீர் ஆதாரத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். காற்றுத் தடுப்பு வேலி மரங்களான தைல மரம், பெருநெல்லி, விதையிலிருந்து முளைத்த மா ஆகியவற்றை போதுமான நிழல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக தேவைப்படும் சமயத்தில் நடவு செய்யலாம்.

உற்பத்தி பொருளைத் தேர்ந்தெடுத்தல்
அருகிலிருக்கும் சந்தைகளில் நிலவும் தேவையினைப் பொறுத்தே உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெருமளவு சந்தையினைக் கவர்வதற்கு சந்தையில் விருப்பமானவற்றில் முதலில் நன்கு கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் சாலேயோர தோட்டங்கள், அலலுலகங்கள், வியாபார ஸ்தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் ஆகிய இடங்களுக்கு பொருத்தமான நிழல் விரும்பம் தழைச்செடிகள், பூச்செடிகள், படர்கொடிகள் ஆகிய பல்வேறு வகையான அழகுச் செடிகளை நாற்றுப்பண்ணையில் பயிர் பெருக்கம் செய்யலாம். மலர்கள், குமிழ்கள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்தும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

பயிர்ப்பெருக்க முறைகள்: விதை அல்லது விதையில்லா பயிர்பெருக்கம் மூலம் செடிகளை உற்பத்தி செய்யலாம். சில முக்கியமாக பயிர்பெருக்க முறைகள் பழப்பயிர்களின் எடுத்துக்காட்டுடன் கீழே விளக்கப்பட்டுள்ளன.

1.விதைநாற்றுக்கள்: தகுந்த நிலையில் விதைக்கப்பட்டிருந்தாலும் விதைகளின் முளைப்பத்திறன் நூறு சதவிகதமாக இருக்காது. விதையின் வயது, முதிர்ச்சி பருவம் மற்றும் முளைத்திறன், நீர், உயிரிய அளிப்பு மற்றும் வெப்பம் அல்லது வெப்பநிலை ஆகியவை விதையின் முளைப்புதிறனைக் கட்டுப்படுத்துகின்றன. சில விதைகள் எளிதாக முளைக்காததற்கு அவற்றின் உறக்கநிலை, ஒய்வுக்காலம் மற்றும் கடினமான மேல்தோல் ஆகியவையே காரணிகளாகக் கருதப்படுகின்றன. விதைகளை தேய்த்தல், நீரில் ஊற வைத்தல் அல்லது அமில நேர்த்தி செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பின்படுத்தி விதையின் மேல தோலினை உடைக்கலாம்.
விதையின் முளைத்திறனை பரிசோதித்த பின்னரே விதைத்த பெருமளவில் மேற்கொள்ளவேண்டும். எ.கா.எழுமிச்சை, பெருநெல் மாண்டரின், ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், பிளிம்பி கெரம்போலா கரோனடா, சோக்வர், ஃபால்சா போன்றவை.

2.விதையில்லா பயிர் பெருக்கம்: அழகுச் செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டுத் துண்டு, பதியம் உருவாக்குதல், பாகம் பிரிப்ப மொட்டுக்கட்டுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.

தண்டுத்துண்டு: தண்டுகள், வேர்கள், இலைகள் மற்றும் கிழங்குகள், தண்டடிக்கிழங்கு, வேர்கிழங்குகள், ஒரு தண்டுகள் மற்றும் குமிழ்கள் போன்ற திருந்திய தண்டகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை எளிதாகவும் சிக்கமாகவும் மேற்கொள்ளப்படுவதால், இது பெரிதும் பிரபலமடைந்தள்ளது. இருப்பினம் ஒராண்டு, ஈராண்டு மற்றும் சில பல அண்டு பயிர்களில், விதைத்தல் பதியம் போடுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் ஆகிய முறைகளே எளிதாகவும் பணச்சிக்கனத்துடனம் மேற்கொள்ளப்படுகின்றன. எ.கா: திராட்சை, மாதுளை, பேரி. மேற்கிந்திய செர்ரி. தாட்பூட் பழம். லோக்வட். ஃபாள்ஸா, அத்தி, கிவி கறிப்பலர போன்றவை பயிர்கள்.

பதியம் போடுதல்: செடியிலிருக்கும் தண்டுகளில் வேர்களை உருவாகச் செய்த பின்னர் வேர்களுடன் உள்ள அத்தண்டினைப் பிரித்தெடுத்து இன்னொர செடியாக நடவுசெய்வதே பதியம் போடுதலாகும். பெரும்பாலும் படர்செடிகளும் மரங்களும் இம்முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. கார்னேசன், செவ்வந்தி போன்ற இளந்தண்டு செடிகள் பதியம் போடுதல் முறையின் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. எ.கா: கொய்யா, மாதுளை, எழுமிச்சை. மேற்கிந்திய செர்ரி, லிட்ச்சி, கரோன்டா, ஃபாள்ஸா, ரம்பூட்டான், கறிப்பலா போன்ற பயிர்கள்.

3.பாகமிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்: தரைமட்டத்தில் பெருமளவு தண்டுகளை உற்பத்தி செய்யும் செடிகளிலிருந்து ஒவ்வொரு தண்டும் அதன் வேர்களுடன் தனித்தனி செடிகளாக பிரிக்கப்படுவதே பாகமிடுதளலாகும். பிரித்தெடுத்துக் முறையில் வேர்விட்ட அல்லது வேரில்லாத பாகங்கள் முதிர்வடையும்போது தானாக பிரிந்து அடத்து வரும் பருவத்தில் ஒரு புது செடியாக வளர ஆரம்பித்துவிடும். செவ்வந்தி, சம்பங்கி, ரஸ்ஸேலியா மற்றும் பெரும்பாலான இளந்தண்டு பல அண்ட பயிர்கள் பாகமிடுதல் அறையில் சுலபமாக பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. குமிழ் நீர்ப்பூங்கோரை மற்றும் குங்குமப்பூ போன்ற பயிர்கள் பிரித்தெடுத்தல் முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன.
தாவரக்கன்று, வேர்க்கிழங்குகள், கிழங்குகள், ஒடுதண்டுகள், மகிழ்ப்புத்தண்டுகள். குமிழ்கள், தண்டடிக்கிழங்குகள். சிறுகுமிழ்த்தண்டுகள் போன்ற செடியின் பிற பாகங்களும் விதையில்லா பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. எ.கா வாழை (கன்றுகள்), அன்னாசி கன்றுகள் மற்றும் வேர்க்கட்டைகள்), ஸ்ட்ராபெர்ரி (ஒடுதண்டுகள், வேர்க்கட்டைகள்) போன்ற செடிகள்.

4.ஒட்டுக்கட்டுதல்: ஒட்டுக்கட்டுதல் முறையில் அழகுச் செடிகளில் ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் உள்வளைவு ஒட்டு, பக்க ஒட்டு, சரிவு ஒட்டு, ஆப்பு ஒட்டு. தட்டை ஒட்டு மற்றும் இரக்கை ஒட்டு ஆகிய முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் சில பகுதிகளில் ரோஜாவில் பயிர்ப்பெருக்கத்திற்கு உள்வளைவு ஒட்டு முறை மேற்கொள்ளப்படுகின்றது. பக்க ஒட்டு முறையானது ரோஜா மற்றும் கெமீலியாகளில் பின்பற்றப்படுகின்றது. எ.கா: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெரிசிமன், ஆப்ரிகாட், லோக்வட் போன்ற பயிர்கள்,

5.மொட்டு கட்டுதல்: அழகுச் செடிகளில் ‘T’ வடிவ மொட்டு அல்லது ‘கேடய’ மொட்டு முறையெ பயிர்ப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றது. எ-கா: பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம். வெண்ணெய் பழம், லிட்ச்சி. லோக்வட்,. ஆப்ரிகாட் போன்ற பயிர்கள்.

6.திசு வளர்ப்பு: வளர்நுனி வளர்ப்பு முறையில் ஆர்கிட் பயிர்களில் முதன் முதலில் வணீகரீதியில் வெற்றிகரமாக திசுவளர்ப்பு பயிர்பெருக்க முறை மேற்கொள்ளப்பட்டது. இளந்திசுக்களை உடைய அழகுச் செடிகளில் திசு வளர்ப்பு முறை வெற்றிகரமாகக் மேற்கொள்ளப்படுகின்றது. பெருமளவு அழகுச் செடிகள் திசு வளர்ப்பபு முறைக்கு ஏற்றதாகத் திகழ்கின்றன. க்ளாடியோலஸ், கார்னெசன், லில்லி, ரோஜா, ஸெர்பிரா, ஆந்தூரியம். மேக்னோ லியா. பெரணி. கள்ளிச்செடி வகைகள் போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இம்முறையில் பயிர்பெருக்கம் மேற்கொள்ளப்படுவது மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது. எ.கா :வாழை
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
கட்டமைப்புத் தேவைகள்: நாற்றுப்பண்ணை உருவாக்குவதற்கு பல கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. நாற்றுப் பண்ணையை தொடங்குவதற்கு கீழ்வரும் கட்டமைப்புகளை முதலில் அமைக்க வேண்டும்.
1.பணிமனை: மூங்கில், மரக் கட்டைகள் போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மேற்கூரை வேயப்பட்ட 6மீ x 4.5மீ அளவுடைய பணிமனையினை அமைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.250 என்ற வீதத்தில் மொத்தம் ரூ.6750 இதற்கான செலவீடாகக் கணிக்கப்பட்டுள்ளது.
2.பாலிதீன் குடில்: மூங்கில், மரக்கட்டை மற்றும் பலகை போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் பாலிதீன் மேற்கூரை வேயப்பட்ட 90 செ.மீ. செங்கல் சுவர், 3.6மீ உயர சாய்சதுர வலைப்பின்னலுடன் 9மீ x 4மீ அளவுடைய பாலிதீன் குடிலை அமைக்க வேண்டும். இதற்கான செலவு ஒரு சதுர மீட்டரக்கு சுமார் ரூ.300.00 அக கணிக்கப்படுகின்றது. பாலிதீன் குடிலின் உட்புறத்தில் மர மாடங்கள் அமைப்பதற்காக ரூ.2000 மொத்த தொகையாக ஒதுக்கப்படுகின்றது.
3.சேமிப்பு மற்றும் அலுவலக அறை: உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட 6.0 மீ x 4.5 மீ அளவுடைய சேமிப்பு மற்றும் அலுவலக அறை போதுமானதாகும் இதற்கு ஒரு சதுர மீட்டரக்கு ரூ.350 தேவைப்படுகின்றது.
4.தடுப்பு வேலி: நாற்றுப்பண்ணைக்கு ஆடுகள் உள்ளே வராத வண்ணம் அமைக்கப்படும் தடுப்பு வேலியே மிகவும் ஏற்றதாகும். இம்மாதிரி இத்திட்டம் கொண்டுள்ள 0.5 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றிலும் ஆட்கள் உள்ளே வராத வண்ணம் தடுப்பு வேலியமைக்க மொத்தத் தொயைாக ரூ.1625 தேவைப்படுகின்றது.
நிலம் தயாரிப்பு: நாற்றுப் பண்ணைக்கான நிலத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகும். நாற்றுப்பண்ணையின் நிலத்தினைக் குறைந்தபட்சம் நான்கு பங்காக பிரிக்கலாம்

  • தாய் செடிகளுக்கான நிலப்பரப்பு
  • விதை உற்பத்திக்கான நிலப்பரப்பு
  • மலர்ப்பயிர் விதை நாற்றுக்கான நிலப்பரப்ப
  • விதை நாற்றுக்கள் மற்றும் விதையில்லா முறையில் பயிர்பெருக்கம் செய்யப்பட்ட பல அண்டு பயிர்களுக்கான நிலப்பரப்பு
உழுதல் மற்றும் குறுக்கு உழுதலால் நாற்றுப்பண்ணை நிலத்தை தயார் செய்ய வேண்டும். தேவையில்லாத அனைத்துப்பொருளையும் நீக்கிவிட்டு நிலத்தை சமன் செய்ய வேண்டும்.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
2.நாற்றுப்பண்ணை மேலாண்மை:
விதைப்படுக்கை மற்றும் நாற்றுப்படுக்கை
: மலர்ப்பயிர் விதை நாற்றுச்செடிகளை வளர்ப்பதற்கு விதைதப்பபடுக்கைக்கான சில நிரந்தர அல்லது தற்காலிக கட்டமைப்புகளைத் தயார் செய்ய வேண்டும். இப்படுக்கைகள் தரை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 0.5 முதல் 0.75 மீ உயரம் கொண்டிருக்கும் படுக்கைகளின் அகலம் 0.75 மீ முதல் 1.00 மீ வரையும் நிலத்தின் இருப்பினைப் பொறுத்து நீலமும் இருக்கும். பல ஆண்டு செடிகள் சேமிப்பதற்கும் விற்பனைக்கான செடிகளுக்கும் நாற்றுப்படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

தாய் செடிகளை சேகரித்து நடவு செய்தல்: தாய் செடிகளை நடவு செய்தல் நாற்றுப்பண்ணையை உருவாக்குவதற்ககான முக்கிய செயல்பாடாகும். தாய் செடிகள் உண்மை நிலை வகையாகவும் இரகமாகவும் இருக்க வேண்டும். செடிகள் முறையாக அடையாளம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருக்கும் செடிகளை சேகரிப்பதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாய் செடிகளை வீரிய வளர்ச்சியுடன் முறையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிடில் பயிர்ப்பெருக்கம் செய்யப்பட்ட செடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

உலர்ந்த, சுத்தமான மண் மற்றும் மட்கிய எருவினை சேகரித்தல்:
மலர்ப்பயிர் நாற்றுக்களை மழைக்கால அல்லது ஆரம்பகுளிர்கால பருவத்தில் வளர்ப்பதற்காக மண் மற்றும் மட்கிய எருவை கோடைகாலத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்கால பருவத்தில் உலர்ந்த மண் மற்றும் எருவினை சேகரிப்பது மிகவும் கடினம். இவையில்லாமல் மழைக்காலத்தில் நாற்றுக்களை வளர்க்க முடியாது.

மலர்ப்பயிர் விதைகளை உற்பத்தி செய்தல்: மலர்ப்பயிர் விதை உற்பத்தியானது தனிச்சிறப்பு வாய்ந்த பணியாகும். விதைகள் கவனத்துடன் உற்பத்தி செய்யப்பட வேண்டும். விதையின் தரம் நன்றாகயிருந்தால் விதை முளைப்பு சதவிகிதம், நாற்றின் வீரியம், தழை மற்றும் இனப்பெருக்க வளர்ச்சி ஆகியவை சிறந்து விளங்கும். தரமுடைய விதைகளை அறுவடை செய்த பின்னர் அவற்றின் முளைப்பு சதவிகிதம் மற்றும் வீரியம் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு முன்னர் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

நாற்றுப் படுக்கைகளில் பயிர்ப்பெருக்கம் செய்த செடிகளை சேமித்தல்: பயிர்ப்பெருக்கம் செய்யப்பட்ட செடிகள் சிறந்த வளர்ச்சிக்காகவோ கடினப்படுத்தப்படுவதற்கோ நாற்றுப் படுக்கைகளில் நடப்படுகின்றன பொதுவாக இத்தகைய படுக்ககைள் பகுதி நிழலின் கீழே அமைக்கப்படுகின்றன.
உரமிடுதல்: உரமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். வீரிய வளர்ச்சியடைய செடிகளே வாங்குவோரைக் கவர்ந்திழுக்கும். ஆனால் அதிகமாக உரமிடுதல் பயிர்களின் சேமிப்புக்கு பயன்தராது.

நீர்ப்பாய்ச்சுதல்: உரமிடுதலைப் போல நீர்ப்பாய்ச்சுதலும் மிகவும் முக்கியம். பயிர்களின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்ச வேண்டும் நாற்றுப்பண்ணை தனது சொந்த நீர் ஆதாரத்தினைக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக ஒரு கிணறினை (12மீ ஆழம் x 3மீ அகலம்) தோண்டி துணைப்பொருட்களுடன் கூடிய 2.0 HP மண்ணெண்ணய் இறைப்புத்தொகுதியை பொருத்தலாகும். ஆரம்பநிலையில் நுண்துளி தெளிப்பு முறை நீர்ப்பாசனம் உகந்ததல்ல.

வடிகால்: செடிகளின் போதுமான தழை மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு படுக்கைகளுக்கு இடையேயும் நாற்றுப்பண்ணைச் சுற்றிலும் சிறந்த வடிகால் வசதியினை ஏற்படுத்த வேண்டும். தொட்டிகளுக்கான படுக்கை தளத்தினை போதுமான மெல்லிய சரிவுடன் அமைக்க வேண்டும். தொட்டிகளைச் சுற்றிலும் படுக்கைகளைச் சுற்றிலும் நீர் தேக்கமில்லாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.

பயிர் பாதுகாப்பு: பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலை கண்டறிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தாய் செடிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவற்றிலிருந்து பயிர் பெருக்கம் செய்யப்படும் செடிகளுக்கும் நோய் பரவும். எனவே நோய் தொற்றினைக் கண்டறிந்தவுடன் தேவையான கட்டுப்பாட்டு வழிமுறைகளே உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அறுவடை: விதைகள், குமிழ்கள் போன்றவை சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். முழுமையாக முற்றிய விதைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட வேண்டும். மெல்லிய விதைகளைக் (கேலன்டுலா, பால்சம்) போன்றவை கொண்ட விதை பொதிகளை முதிர்வடையுமுன்னாத் மஸ்லின் துணி அல்லது காகிதப் பையினால் மேலுறை இடுவதால் காற்றினால் மற்றும் கனி வெடிப்பதனால் ஏற்படும் விதை சேதம் தவிக்கப்படுகின்றது.
தண்டடிக்கிழங்குகளும் குமிழ்களும் பொதுவாக இலைகள் மஞ்சள் நிறம் அடைந்தவுடனோ அல்லது காயந்த உடனோ அறுவடை செய்யப்படுகின்றன. காயம் ஏதும் ஏற்படாத வகையில் கவனத்துடன் இவை மண்ணிலிருந்தது தோண்டி எடுக்கப்படுகின்றன.
அறுவடை செய்யும் முன்னர், அடித்தண்டு நன்கு முற்றியிருக்க வேண்டும். நீரிழப்பு மற்றும் சுருக்கம் ஏற்படாத வகையில் திசுக்கள் நன்கு கடினப்பட்டிருக்க வேண்டும். சிறுஞ்செடிகள் மற்றும் மரங்களை தோண்டி எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இலைகளைக் களைந்து விடுதல் வழக்கமாக மேற்கொள்ளப்படும் செயலாகும். இதன் இரசாயன இலைக்களைப்பான உதவியுடனோ நீர்பாசனத்தை தவிர்த்தோ அல்லது கைகளால் மேற்கொள்ளலாம். போக்குவரத்துக்கு உண்டான செடிகளை ஒரு சிறு மண் உருண்டை வேர்பகுதியை சுற்றிலும் இருக்குமாறு அனுப்ப வேண்டும்.

சிப்பமிடுதல் மற்றும் கையாளுதல்: விதைகள் சுத்திகரிக்கப்பட்டு மூடிய புட்டிகளில் அல்லது தகர குப்பிகளில் சேமிக்கப்படுகின்றன. குப்பிகளில் அடைக்கப்படும் முன்னர், 2 முதல் 3 நாட்களுக்கு நிழலிலும் பின்பு ஒரிரண்டு நாட்களுக்கு வெளியிலிலும் உலர்த்தப்படுகின்றன. உமி உள்ள விதைகளில் உமிகளை நீக்கிவிட்டு குப்பிகளில் அடைக்கப்பட வேண்டும்.
செடிகள் போக்குவரத்திற்கு அடுக்கப்படும்போது மிகவும் நெருக்கமாகவோ அல்லது நகருவதற்கு இடம் உள்ள வகையிலோ அடுக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்டியில் காலியாக உள்ள இடங்களை வைக்கோல், உலர்ந்த புல் போன்ற சிப்பமிடுவதற்கு பயன்படும் பொருட்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். நெடுந்தூர இடத்திற்கு எடுத்தச் செல்லப்படும்போது வேரைச் சுற்றியிருக்கும் மண்ணுரண்டையை நீரில் நனைத்து ஈரப்பதமுள்ள மலைப்பாசியைக் கொண்டு ஒரு ஏடு போர்த்த வேண்டும். இத்தகைய நெடுந்தூர பயணத்திற்காக நன்கு வளர்ந்த வேருடன் உள்ள செடிகளை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.
குமிழ்கள், கிழங்குகள் மற்றும் தண்டடிக் கிழங்குகள் கையாளுவதால் ஏற்படும் திடீர் நடுக்கங்களைத்தாங்கவல்லது மூங்கிலால் பின்னப்பட்ட கூடைகளில் வைக்கோல்களுக்கு இடையில் இவை அடுக்கப்படுகின்றன. நீர் லில்லி மற்றும் தாமரையின் வேர்க்கிழங்குகள் போக்குவரத்தின் போது ஈரப்பதத்துடன் இருப்பதற்காக ஈரமுள்ள மலைப்பாசியினைக் கொண்ட பாலிதீன் பையில் சுற்றப்பட்டு கூடைகள் அல்லது அட்டைப்பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.

சேமிப்பு: விதைகள் குளிருடன் உள்ள உலர்ந்த இடத்திலோ அல்லது உலர்ந்துகலனிலோ சேமிக்கப்படுகின்றன. உயிர்வாழ்கின்ற செடிகளை நிழலில் வைக்க வேண்டும். குறைவான தட்பவெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதமுள்ள நன்கு காற்றோட்டம் உள்ள சேமிப்பு அறையிலுள்ள உலர்மண்ணின் மீது அல்லது தட்டையான மர தட்டுகளில் அல்லது அடக்குச்சட்டங்களில் ஒர் அடுக்காக அடுக்கப்பட்டு குமிழ்கள், தண்டடிக் கிழங்குகள் மற்றும் கிழங்குகள் சேமிக்கப்படுகின்றன. சேமிப்பிற்கு முன்னர் 0.1 சதவிகிதம் பென்லேட் அல்லது 0.1-0.2 சதவிகிதம் கேப்டான் 5 சதவிகிதம் டிடிT, பி.ஹெச்.சி போன்ற பூஞ்சாணக்கொல்லிகள் அல்லது பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு நேர்த்தி செய்யப்படவேண்டும்.

சந்தைப் படுத்துதல்: நாற்றுப்பண்ணைத் தொழிலில் செடிகள் மற்றும் நடவுப் பொருட்களை விற்பனை செய்வதே மிகவும் சிக்கலான மற்றும் நெருக்கடியான பகுதியாகும். உயர்தர உண்மை வகை மற்றம் கவர்ச்சி மிக்க நடவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மிகவும் முக்கியமாகும். இவை பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல்கள் இல்லாமல் வீரிய வளர்ச்சியுடன் பளிச்சென்ற வண்ணத்துடன் இருக்க வேண்டும்.

ஏற்றுமதி:
நாற்றுப் பண்ணை பொருட்கள் அதிக ஏற்றுமதி வாய்பினைக் கொண்டுள்ளன. விதைகள், குமிழ்கள், கிழங்குகள், கள்ளிச்செடி வகைகள் பூக்கம் செடிகள், தழைச்செடிகள், வேர்விடாத தண்டுத் துண்டுகள் மற்றும் கொய் மலர்கள் ஆகியவை ஆஸ்திரேலியா, நெதர்லாந்து. யுஏஈ, ஜப்பான் யுகே, சிங்கப்பூர், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
உர அட்டவணை:
பயிர்களின் பொதுவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பதினாறு தனிமங்கள் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. கரிமம்(C), நீரியம்(H) மற்றும் உயிரியம்(O) ஆகியன காற்று மற்றும் நீரிலிருந்து பெறப்படுகின்றன. காலகம் (N) எரிகம் (P) மற்றும் சாம்புரம் (K) ஆகியன பயிர்களுக்கு பெருமளவு உபயோகப்படுத்தப்படுவதால் முக்கியத்துவமிக்க அல்லது “முதல் நிலை சத்துப்பொருட்கள்” என்று அழைக்கப்படுகின்றன. சுண்ணகம் (Ca) வெளிமம் (Mg) மற்றும் கந்தகம் (S) ஆகியன சிறு அளவு என்றாலும் சொல்லிக் கொள்ளும்படியான அளவில் தேவைப்படுவதால் “துணைச்சத்துப் பொருட்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இரும்பு (Fe), துத்தநாகம் (In), மேங்கனீஸ் (Mn), தாமிரம் (Cu), போரான் (Bo), மாளிப்டினம் (Mo), க்ளோரின் (Cl) ஆகியவை மிகவும் சிறு அளவே தேவைப்படுவதால் “நுண் ஊட்டப்பொருள்” அல்லது “நுண்ணூட்டச்சத்துகள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட “நுண்ணூட்டச்சத்துகள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ளவைகளைத் தவிர, சில தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட வகை அல்லது சிற்றினங்களுக்கு தேவைப்படுகின்றன. அடர்த்தியில் வெனடியம் (V), சிலிக்கான் (Si), ஐயோடின்(I), செலீனியம்(Se), கேலியம்(Ca) மற்றும் அலுமினியம் (A1) ஆகிய தனிமங்கள் இவ்வாறு தேவைப்படுகின்றன. இவற்றைத் தவிர ருபீடியம் (Rb), ஸ்ட்ரான்ஸியம்(Sr), நிக்கல்(Ni), க்ரோமியம்(Cr) மற்றும் ஆர்செனிக் (As) ஆகிய தனிமங்களுக்கு மிகக் குறைந்த தேவை சில பயிர்களில் தேவைப்படலாம். இவை அவ்வப்பொழுதுபயன்தரும் தனிமங்கள் அல்லது “நுண்ணூட்ட தனிமங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
தாவர ஊட்டச்சத்துக்கள் எரு மற்றும் உரங்கள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. எருக்கள் அங்கக தன்மையுடன் இருப்பதுடன் அதிக அளவில் தேவைப்படுகின்றது. அவை அங்ககங்கள் அல்லது அங்கக எருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை விலங்குகள் அல்லது தாவரங்கள வழியாக உருவாகி ஒன்றுக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து பொருளையும் கொண்டுள்ளன. அங்கக உரங்கள் ஊட்டச்சத்து பொருட்களை மிக குறைவான அளவிலேயே கொண்டள்ளன. உரங்கள் கரிமமற்ற அல்லது செயற்கை தன்மையுடன் எருக்களைவிட அதிக அளவு ஊட்டச்சத்து பொருட்களையும் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து பொருள் அல்லது பல ஊட்டச்சத்துக்கள் இணைந்த கலவை ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கப்படுகின்றன.
அங்கக எருக்கள்:
பண்ணையம் மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகளில் தாவரங்கள் மற்றும் விலங்கு வளங்களின் வழியாக பெறப்பபடும் துணைப்பொருளே அங்கக எருக்களாகும். அங்கக எருவானது அளவில் அதிகம் உள்ள எருக்கள் மற்றும் செறிவுடைய அங்கக எருக்களை என்று இரண்டு வகைப்படுகின்றது. அளவில் அதிகம் உள்ள எருக்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டாலும் குறைவான சத்துப்பொருட்களை கொண்டுள்ளன. எ.கா. பண்ணை தொழு உரம், மட்குரம், மல எரு, சாக்கடை நீர் மற்றும் கழிவு, மண்புழு மட்குரம் பசுந்தாள் எரு, செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு எரு, கோழி எரு போன்றவை. செறிவுடைய அங்கக எருக்கள் அதிக சதவிகித தாவர முதல்நிலை சத்துபொருட்களைக் கொண்டுள்ளன. எ.கா. பல்வேறு எண்ணெய் பிண்ணாக்குகள் மற்றும் உலர்ந்த இரத்தம் எலும்பு எரு, மீன் எரு முதலில் விலங்குகளின் கழிவு பொருட்கள்
பசுந்தாள் எருவானது பயறு வகை குடும்பத்தைச் சேர்ந்த செடிகளை சாகுபடி நிலத்தில் வளர்த்து பொதுமான வளர்ச்சியடைந்தவுடன் மண்ணுடன் சேர்த்து உழுதுவிடுவதாகும். பசுந்தாள் எருவிற்காதக வளர்க்கப்பட்ட செடிகளை பசுந்தாள் எருப்பயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. சணப்பை, டேன்ச்சியா. நவப்பயறு, கொத்தவரை மற்றும்அகத்தி போன்றவை மிக முக்கியமான பசுந்தாள் எருப்பயிதர்களாகும். மரங்கள் சிறுஞ்செடிகள் மற்றும் குறுஞ்செடிகளிலிரந்து கிடைக்கப்பெறும் பசும் இலைகள், கிளைகள் போன்றவற்றறை பயனுக்கு ஈடவதே பசுந்தழை எருவாகம். வெம்பு, இலுப்பை, காட்டு அவுரி, க்ளைரிசீடியா, புங்கமரம். எருக்கு, அகத்தி, சுபாபுல் போன்றவையே பெரும்பாலும் பசுந்தழை எருவிற்கு பயன்படுகின்றன.
உயிர் உரங்கள் மண்ணின் நெடுநாளைய நிலைத்த வளத்தினை பராமரிப்பதற்கு பெரும்பங்காற்றி வருகின்றது. வான் காலகத்தை பயிரக்கு கிடைக்க செய்கின்ற அல்லது மண்ணிலுள்ள கரையாத நிலையிலுள்ள எரிகையை கரையச் செய்யும் ஆற்றலுடைய பாக்டீரியா, பூஞ்சானம் மற்றும் பாசிகள் போன்ற நுண்ணுயிர்களும் இவ்வுயிர் உரங்களில் அடங்கும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, பணச்சிக்கனம், சுற்றுப்புற நன்மை மற்றும் பயிர் சத்துப்பொருட்களை புதுப்பித்தல் போன்ற ஆற்றல் உடைய உயிர் உரங்களை பயன்படுத்தப்டுகின்றன. நுண்ணுயிர்களின் வகையினைப் பொறுத்து உயிர் உரங்கள் பின் வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1.பாக்டீரிய உயிர் உரங்கள் எ-கா: ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர் மற்றும் பாஸ்போபாக்டீரியா
2.பூஞ்சான உயிர் உரங்கள் எ-கா: மைக்கோரைசா
3.பாசி உயிர் உரங்கள் எ-கா: நீல பச்சை பாசி மற்றம்
4.ஆக்டினொமைசீட்ஸ் உயிர் உரங்கள் எ-கா: ஃப்ரான்கியா
கரிமமற்ற உரங்கள்
1.நேரடி உரங்கள்:
முதல்நிலை சத்துப்பொருட்களான காலகம் அால்லது எரிகம் அல்லது சாம்பரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்குவதே நேரடி உரங்களாகும். எ-கா: யூரியா, அம்மோனியம் எல்ஃபேட்டு, பொட்டாசியம் க்ளோரைடு மற்றும் பொட்டாசியம் சல்ஃபேட்டு
2.கூட்டு உரங்கள்: கூட்டு உரங்களானது இரண்டு அல்லது மூன்று முதல்நிலை சத்துப்பொருட்களைக் கொண்டு அவற்றில் இரண்டு வேதி இணைப்புடன் அமையப்பெற்றிருக்கும். இவ்வுரங்கள் குறுணை வடிவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எ.க: டைஅமமேரினயம் பாஸ்பேட்டு (DAP), நைட்ரோபாஸ்போட்டுகள் மற்றும் அம்மோனியம் பாஸ்பேட்டு
3.கலப்பு உரங்கள்: இது நேரடி உரங்களின் பெளதீக கலவையாகும். இவை இரண்டு அல்லது மூன்று முதல்நிலை சத்துப்பொருட்களை கொண்டிருக்கும். கலவைக் கூறுகளை இயந்திரம் அல்லது கைகள் வழியாக நன்றாக கலந்து கலவை உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உரங்கள் உட்கொண்டிருக்கும் சத்துப்பொருள்களின் அடிப்படையின் பின்வருமாறு வகைப்பிரிக்கப்படுகின்றன.
1.தழைச்சத்து உரங்கள்
2.மணிச்சத்து உரங்கள்
3.சாம்பல்சத்து உரங்கள்
4.கூட்டு அல்லது கலப்பு உரங்கள்
5.நுண்ணூட்டச்சத்துக்கள்
உரங்கள் பெளதீக அமைப்பை பொறுத்தும் வகைப்படுத்தப்படுகின்றன
1.திட உரங்கள்
2.திரவ உரங்கள்
திட உரங்கள் கீழ்வருமாறு வடிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன
1.தூள் (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டு)
2.படிகங்கள் (அம்மோனியம் பாஸ்பேட்டு)
3.பரல்கள் (யூரியா,டைஅம்மோனியம் பாஸ்பேட்டு, சூப்பர் பாஸ்பேட்டு)
4.குறுணைகள் (ஹாலந்து குறுணைகள்)
5. சிறு குறுணைகள் (யூரியா சிறுதுணுக்குகள் மற்றும்
6.சிறு துணுக்குள் (யூரியா சிறுதுணுக்குகள்)
திரவ உரங்கள்:
1.திரவ உரங்கள் பாசன நீருடனோ அல்லது நேரடியாகவோ பயிர்களுக்கு அளிக்கப்படுகின்றன
2.சுலபமாக கையாளும் வசதி, குறைந்த பட்ச ஆள்தேவை மற்றும் களைக்கொல்லியுடன் கலந்து உபயோகப்படுத்தும் வசதி போன்றவற்றால் விவசாயிகள் பெரிதும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஊட்டச்சத்து பொருளானது தோட்டக்கலைப் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. மிகச் சிறந்த பயிர் சாகுபடிக்கு போதுமான பயிர் சத்துப்பொருட்களை வழங்குவது மிகவும் அவசியமாகும் மண்ணின் வளத்தினை நிலைக்கச் செய்வதற்கு விலங்கு மற்றும் தாவர எருவினை மண்ணிற்கு இடுவது பண்டைய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுவரும் முறையாகும். இரசாயன உரங்களின் பயன்பாடு, அதிகமான இருப்பு மற்றும் சுலபமாக மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்பம் ஆகய காரணங்களால் அதிகரித்துவிட்டதால் அங்கக எருக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து விட்டது. செறிந்த வேளாண்மையில் மண் பயிர் அமைப்பின் சத்தப்பொருள் உற்பத்தி அளவானது அதிகமிருப்பதால், இரசாயன உரங்கள் அங்கக அல்லது உயிர் உரங்களோ தனித்து நிலைருக்கம் உற்பத்திக்கு வழிவகுக்க முடியாது. எருக்கள் மற்றும் உரங்களை தேர்ந்தெடுத்து சாியான அளவு மற்றும் நேரத்தில் அளிப்பதன் மூலமே அதிகமான உற்பத்தியை பெறமுடியும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரொம்பவும் அருமையான
விவரங்கள், Laksha24 டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மிக மிக அருமையான குறிப்புகள் சிஸ்டர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top