• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Kottai - Minnal : Aththiyaayam 17.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 17.

வசதியாக அமர்ந்து கொண்டு கேட்கத்தயாரான நால்வரையும் பார்த்து விட்டு சொல்ல ஆரம்பித்தாள் கிளிக்குட்டி.

"முதல்ல நீங்க எங்களோட இனத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். எங்களுக்கு காணின்னு பேரு குடுத்தது அகத்திய முனிவர்னு எங்க முன்னோர்கள் சொல்லுவாங்க. முனிவர் இந்தப் பகுதிகள்ல தான் தவம் செஞ்சாரு . அவரோட ஆசிரமத்துல பல மாணவர்கள் வந்து தமிழ் வானிலைன்னு நிறையக் கத்துக்கிட்டாங்க. . எங்க இனத்தைச் சேர்ந்த சிலர் கூட அவர் கிட்ட மாணவர்களா இருந்தாங்களாம். அவரு மந்திரம் வான சாஸ்திரம்னு எல்லாமே தெரிஞ்சவரு. ஆனா ஏதோ அவர் மனசுக்குப் பிடிக்காத சில சம்பவங்கள் நடந்ததால இந்தக் காட்டை விட்டுப் போறதா தீர்மானிச்சிருக்காரு. "

"அது என்ன சம்பவம்னு தெரியலியா?" என்றான் அரவிந்தன்.

தனது எண்ண ஓட்டத்தை இடைஞ்சல் செய்த அவனை விழித்துப் பார்த்தாள் கிளிக்குட்டி.

"இல்ல தெரியல்ல! நான் சொல்லிக்கிட்டு வரும் போது கேள்வி கேக்காத சாமி! " என்றூ சொல்லி விட்டு கண்களை மூடிக்கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

"அந்த சம்பவம் என்னன்னு தெரியல்ல! ஆனா அவருக்கு மனசுக்குப் பிடிக்கல்லன்னு மட்டும் தெரிஞ்சது எங்க முன்னோர்களுக்கு. அப்ப அவங்க முனிவர் சாமி கிட்டப் போயி நீங்க இந்த வனத்தை விட்டுப் போகக் கூடாது அப்புறம் அந்த வனத்துக்கே பாதுகாப்பு இல்லாமப் போயிரும்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சியிருக்காங்க. அவங்க பக்தியைப் பார்த்த அந்த மா முனிவர், தன்னைப் போலவே ஒரு சிலை செய்து இதை வெச்சுக்குங்க! ஆண்டு தோறும் மாசி பௌர்ணமியில நான் எங்க இருந்தாலும் இங்க வந்துருவேன். அன்னைக்கு நீங்க எனக்கு படையல் போடுங்கன்னு சொல்லியிருக்காரு"

"பாட்டி! அகத்தியர் சாமி கொடுத்த அந்தச் சிலையா இப்ப அகத்தியர் மலையில இருக்கு?" என்றான் மருதன்.

கண்களைத் திறவாமலே ஆமாம் என்றாள் கிளிக்குட்டி. சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

"முனிவர் சாமி சிலையைக் கொடுத்தும் இவங்களுக்கு திருப்தி இல்ல. அப்ப அவரு இந்த மலை முழுசுக்கும் நீங்க தான் காவல். பின்னாட்கள்ல ஒரு ராஜா வந்து இந்த மலையையே உங்களுக்கு காணிக்கையா குடுப்பாரு. அதனால இப்பவே உங்க இனத்துக்கு காணிகள்னு பேரு வெக்கறேன். காணின்னா நிலம்னு அர்த்தம் இந்த இடம் முழுசுக்கும் நீங்க சொந்தக்காரர்களா ஆகப் போறீங்க. அதனால உங்களைக் காணிகள்னும் உங்களுக்குக் காணிக்கையா வந்த மலைங்குறதாலயும் காணின்னும் உங்களை அழைப்பாங்க. ஆனா இதுல உங்க யாருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது. நீங்க ஒத்துமையா கூட்டா வாழணும்னு சொல்லியிருக்காரு. அதோட இந்த மலைக்குப் பல தீங்குகள் வரலாம் அது அத்தனையும் தடுத்துக் காப்பாத்த வேண்டியது உங்க கடமைன்னு கட்டளையிட்டுட்டுப் போயிட்டாரு முனிவர் சாமி" என்றூ சொல்லி நிறுத்தினாள். அவள் கண்களில் முத்தாக நீர் கோர்த்திருந்தது.

திகைப்புடன் நால்வரும் பார்துக்கொண்டிருந்தனர். தன் பையிலிருந்து ஏதோ ஒரு பழத்தை எடுத்து தானும் உண்டு விட்டு மற்றவர்களுக்கும் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டாவர்கள் உடனே உண்ணவில்லை. கையில் வைத்துக்கொண்டு "அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?" என்று ஊக்கினார்கள்.

"காலம் வேகமாப் போனது. முனிவர் சாமி சொன்னபடியே நாங்க செய்துக்கிட்டு வந்தோம். ரொம்ப வருஷம் கழிச்சு கேரளாவுல ஒரு ராஜா இருந்தாராம். அவரோட பகையாளிங்க அவரையும் அவரு மகனையும் கொல்லறதுக்கு சதி செஞ்சிருக்காங்க. அந்தச் சின்னப்பையனோட தாய் தகப்பனைக் அதாவது அப்ப ராஜாவா இருந்தவரையும் ராணியையும் கொன்னுட்டு மகனைக் கொல்லத் தேடியிருக்காங்க. ஆனா ஒரு பணிப்பெண் அந்த இளவரசரைக் காப்பத்தி காட்டுக்குள்ள ஒளிஞ்சு வந்து எங்க கிட்ட அடைக்கலமா கொடுத்தா. எங்க முன்னோர்களும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னால அகத்தியர் சாமி சொன்ன ராஜா இவர் தான்னு தீர்மானம் செஞ்சு அவரை கண்ணும் கருத்துமா பாதுகாத்திருக்காங்க"

சட்டென பேசுவதை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் கிளிக்குட்டி.

"உங்க கூட வேற யாராவது வந்தாங்களா மருதா?" என்றாள்.

"இல்ல பாட்டி! மூட்டுக்காணி எங்க நாலு பேரையும் மட்டும் தான் போகச் சொன்னாரு" என்றான்.

தலையைத் திருப்பி சுற்றும் முற்றூம் பார்த்தாள். அவளுக்கு என்ன தெரிந்ததோ?

"தாயீ மின்னல் நீ என்ன நெனச்சிருக்கியோ யாருக்கு தெரியும்? நீ தான் மாயக்காரி ஆச்சே?" என்றாள். மற்றவர்கள் மூதாட்டி பார்த்த திசையைப் பார்த்தனர். அவர்கள் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. ஆனால் ஏதோ ஒரு அசைவு தெரிந்தது சற்று தள்ளி இருந்த மரத்தடியில். பயத்தோடு பார்த்தான் மருதன்.

"உம் நீங்க கவலைப்படாதீங்க! எல்லாத்தையும் மின்னலும் மகிழியும் பார்த்துப்பாங்க" என்றாள். அவர்கள் மௌனமாக ஏறிட்டு நோக்கவே தன் கதையைத் தொடர்ந்தாள்.

"அந்த இளவரசருக்கு வில் வித்தை வாள் வீச்சுன்னு எல்லாமே கத்துக்கொடுத்து 17 வயசானதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சிங்கம்பட்டி ராஜா உதவியோட கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. அப்ப பெரிய போரே நடந்திருக்கு. அதுல பல காணிகளும் சிங்கம்பட்டி இளவரசரும் உயிர்த் தியாகம் செய்துட்டாங்க. ஆனா கடைசியில இவங்க தான் ஜெயிச்சாங்க. அங்கேயே வெச்சு ராஜாவுக்கு மார்த்தாண்ட வர்மான்னு பேர் கொடுத்து முடி சூட்டியிருக்காங்க. அந்த பட்டாபிஷேகத்துல தான் இந்த மலையை எங்களுக்குக் காணிக்கையா கொடுத்தாரு ராஜா. அதுக்காக சாசனம் செஞ்சு அதை அவரோட அரண்மனையில பத்திரமா வெச்சிருக்காரு. அது இன்னமும் இருக்கு" என்றாள்.

கால் மாற்றி அமர்ந்து கொண்டான் அருண். இந்த வயதான பாட்டி எதற்கு இந்தக் கதையை நம்மிடம் சொல்கிறாள்? மின்னலைப் பற்றிக் கேட்டால் என்னென்னவோ தேவையில்லாமல் சொல்கிறாளே என்று எண்ணிக்கொண்டான் அரவிந்தன். அருணுக்கும் பூஜாவுக்கும் கூட அதே எண்ணம் தான். மருதன் வாய் விட்டே கேட்டு விட்டான்.

"ஏன் பாட்டி எதுக்கு இப்ப இதப் பழைய கதையை எங்க கிட்ட சொன்னீங்க?"

"காரணம் இருக்கு! நீங்க மீகாமர்கள்னு சொன்னேன் இல்ல? அவங்களுக்கு நம்ம இனத்தைப் பத்தி எல்லா விவரமும் தெரியணும். அப்படித்தான் சில நூறு வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த வேம்புலிக் காணி எழுதி வெச்சிருக்காரு. " என்றாள்.

வேம்புலியா? அவர் மின்னலின் தந்தை அல்லவா? அப்படியானால் கதை இனிமேல் தான் இருக்கிறதா? என்று நினைத்து நெருங்கி அமர்ந்து கொண்டர்கள்.

"பாட்டி மீகாமர்கள்னா என்ன? அதை நீங்க சொல்லவே இல்லையே?"

"நீங்க தமிழ் படிச்சதில்லையா? உங்க பிலாத்தி உங்களுக்கு தமிழ் சொல்லித்தர மாட்டாரா?" என்று கேலியாக வினவினாள் கிளிக்குட்டி.

"மீகாமர்கள் தமிழ் வார்த்தையா? நான் கேட்டதே இல்லையே?" என்றான் அரவிந்தன். மருதன் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

"உங்க ஊர்ல ஆறு, குளம், ஏரின்னு எந்த நீர் நிலையும் இல்லையா? அதுல நீஞ்சுறதுக்கு நீங்க போக மாட்டீங்களா?" என்றான்.

இது என்ன சம்பந்தமில்லாமல் என திகைத்தார்கள்.

"மீகாமன் அப்படீன்னா உயிரைக் காப்பவன்ன்னு அர்த்தம் சாமி! எங்க காணிகள் பாவனாசத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்குற பாண தீர்த்த அருவிக்கும் காவல் காரங்க. அங்க நிறைய பக்தர்கள் குளிக்க வருவாங்க. அப்ப அவங்க தண்ணியில் மூழ்கிட்டாங்கன்னா எங்க காணிகள்ல சிலர் அவங்களைக் காப்பாத்துவாங்க. அப்படிக் காப்பாத்தறவங்க தான் மீகாமர்கள். சில சமயம் உயிர் கூடப் போகும். ஆனா தன்னை நம்பி தண்ணியில குதிச்ச பக்தர்களை காப்பாத்தாம விட மாட்டாங்க மீகாமர்கள்" என்றான்.

அதிசயத்துக்கு மேல அதிசயமாக இருந்தது இந்தத் தகவல்கள். ஏதோ சாதாரணப் பழங்குடி மக்கள் என்று நாம் நினைத்தது போக அவர்களுக்குத்தான் எத்தனை வலுவான பின்னணி இருக்கிறது என நினைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நாட்டைப் பற்றியும் அதில் வாழ்ந்த பழந்தமிழர் பற்றியும் எண்ணிப் பெருமையாக இருந்தது. அவர்களும் மீகாமர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகக் கருதினார்கள். ஆனால் இவர்களுக்கு நீச்சலே தெரியாதே? யாரை எங்கு எப்போது காப்பாற்ற வேண்டும்? கேல்விக்குறியோடு பாட்டியை நோக்கினார்கள் இளைஞர்கள்.

மூதாட்டி கிளிக்குட்டி தொடர்ந்தாள்.

"வேம்புலின்னு ரொம்ப முன்னாடி ஒரு மூட்டுக்காணி இருந்தாருன்னு நான் சொன்னேன் இல்ல? அப்ப பிலாத்தியா இருந்தவரு ரொம்ப அறிவாளி. அவரு வானத்தோட கோள்கள் நிலையை வெச்சு இந்தக் காட்டுக்கு அப்புறமும் என்னென்ன அபாயங்கள் நடக்கும்னு எழுதி வெச்சுட்டு அதுல இருந்து காட்டைக் காப்பாத்த மீகாமர்களை எப்படி அடையாளம் கண்டுக்கணும்னும் எழுதி வெச்சிருக்காரு. இந்த ரகசிய ஓலையைப் பத்தி எனக்கு மூட்டுக்காணிக்கு பிலாத்திக்கு மூணு பேருக்குத்தான் தெரியும். மத்தவங்களுக்குத் தெரியாது. இப்ப உங்க வேலை மூழ்கிக்கிட்டு இருக்குற இந்த மலையை மீகாமர்களா இருந்து நீங்க காப்பாத்தணும். இதுக்கு முன்னாடி மீகாமர்களா இருந்த சில பேரு எழுதுன ஓலைகளை நான் உங்களுக்குத் தரேன்" என்றாள். பேசி முடித்து விட்டேன் இனி நீங்கள் தான் பேச வேண்டும் என்பது போல அவர்களைப் பார்த்தாள்.

"பாட்டி நாங்க யார் கிட்ட இருந்து இந்த மலையைக் காப்பாத்தணும்னு சொல்றீங்க? புரியலியே? இப்ப இந்த மலைக்கு என்ன ஆபத்து வந்திருக்கு?" என்றான் அரவிந்தன். அதைக் கேட்டதும் கிளிக்குட்டியின் முகம் சிவந்து விட்டது. "உன்னை எப்படி மீகாமனா தேர்ந்தெடுத்தா மின்னல்னு தெரியலியே? என்றாள்.

மருதன் பேசினன்.

"என்ன சாமி இப்படிக் கேட்டுட்டீங்க? சேட்டு ரூபத்துல இந்த மலைக்கு ஆபத்து வந்திருச்சே? இன்னமும் இங்க அகஸ்தியர் தவம் செய்யுறார்னு நாங்க நம்புறோம்ங்க! இந்த இடம் அமைதியா இதே மாதிரி இருந்தாத்தான் நல்லது. இங்க ஓட்டல் கட்டினா ஜன நமடாட்டம் அதிகமாகி அதனால கொஞ்சம் கொஞ்சமா வன விலங்குகளும் மரங்களும் அழிக்கப்படும்ங்க. அப்புறம் இது பூங்குளமா இருக்காது. பாறைக்குளமாத்தான் இருக்கும்" என்றான் வேதனையோடு.

"ஆமா சாமிகளே! மருதன் சொல்றது அத்தனையும் உண்மை. அதுவும் தவிர இந்தக் காடு இப்படியே காக்கப்பட்டால் தான் தமிழ் நாடு நல்லா இருக்கும். நல்லா மழை பெஞ்சு பயிர் பச்சை விளையும். இதை நான் சொல்லல்ல! எங்க அகஸ்தியர் சாமி சொல்லியிருக்காரு. அதனால இந்த மலையைக் காப்பாத்த வேண்டியது உங்க கடமை. " என்றாள் முடிவான குரலில்.

பலவிதமான சிந்தனகளோடு அமர்ந்திருந்தார்கள் அரவிந்தன். அருண் மற்றும் பூஜா. அவர்களுக்குப் பல விஷயங்கள் புரியவில்லை.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Me Second,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
மீகாமார்கள் நல்ல இருக்கு
நம்ம நாட்டை அரசியல்வாதிகளிடம்
இருந்து காப்பாற்ற இந்த மாதிரி
மீகாமார்கள் யாராவது வந்தா
நல்லா இருக்கும்
நடக்கற காரியமா:unsure:
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top