• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆங்கிலத்தில் 100 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
"A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா ? - பேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வி !

சுமார் 1965ம் ஆண்டுவாக்கில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார்.அண்ணா டபுள் M.A. படித்து,ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர்.பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.

அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர்பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம்,
"நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..."என்றார்.
அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.
நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும்
சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே...நான் கேட்கும் கேள்விக்கு
உங்களால் பதில் சொல்லமுடியுமா?..." என்றார்.அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார்."ஆங்கிலத்தில் 100 வார்த்தைகளுக்கு
"A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?..." என்றார்.உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 100 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.கடைசியில் STOP என்று ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..." என்றார்.

இந்தபதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.அன்றுதான் நிறையபேருக்கு தெரிய ஆரம்பித்தது 0 முதல் 99 வரை ஆங்கிலத்தில்
"A" என்ற எழுத்தேவராது என்று.
Peraringar Annaaa???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top