• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனக்குமுறல்............

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மனக்குமுறல்............

அன்பும் அறமும் கொண்ட முன்னோர்கள் வாழ்ந்த நாடு இன்று மூடர் கூடமாக மாறிவிட்டது,மனிதர்கள் தானடா நீங்கள் எல்லாம் ஆறு வயது சிறுமியிடம் எது உன்னை ஈர்த்தது,உனது கண்ணைக் காமம் கொண்டு படைத்து விட்டானா அவன்,நீயும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவன் தானடா,உன்னை போன்ற ஆண்களை வதம் செய்யக் காளி பிறப்பெடுக்க வேண்டும்,உனது சிறு நொடி உணர்விற்கு ஓர் உயிர் பலி,பெண் பிள்ளைகள் வேண்டுமென்ற ஆசையே அற்றுப் போகும் அளவிற்கு ஆகிவிட்டதே,உள்ளம் கொதிக்குதடா...........

மீண்டும் கள்ளி பால் தான எங்களின் நிலை,நங்கள் எத்தனை சரித்திரம் படைத்தலும்,எத்தனை சிகரம் தொட்டாலும்,எங்களது அடைப்படை நிலையில் மாற்றம் இல்லையே ஏன்?வெள்ளை துணியில் சுற்றி குழந்தையைக் கையில் ஏந்தும் போதுதான் எத்தனை மகிழ்ச்சி,அதே பெண்ணை இன்று வெள்ளை துணியில் உயிர் அற்ற பிணமாகப் பார்க்கும் போதும் உள்ளம் வெம்புகின்றதே!....

தமயன்,தகப்பனை பார்த்தால் கூட எச்சிரிக்கை உணர்வு வரும் படி செய்து விட்ட சமுதாயத்தை என்னவென்று சொல்ல..........

கடவுளே என் பிள்ளைகளைக் காக்க நீர் வர வேண்டாம்,உன்னிடம் இருக்கும் ஆயுத்தை மட்டும் கூடு,எங்களை நாங்கள் காத்து கொள்ளவோம்!("உனது நேரம் இன்மையின் காரணமாக")

பெண் என்பவள் வாழ்க்கையின் அச்சாணி ,எத்தனை புத்தகங்கள் வந்தாலும்,எத்தனை நூல்கள் வந்தாலும்,எத்தனை குறும் படங்கள் வந்தாலும்,அவையெல்லாம் கானல் நீர் தான் போலும்.

இனி எல்லாம் நம் கையில்.................."ரௌத்திரம் பழகு",அன்றே நம் நிலையறிந்து உண்மையாகப் போராடிய ஆண் மகன் ,அது தாண்ட ஆண்மையின் அழகு என் பாரதி.............................

என்னால் அடக்க முடியவில்லை தோழிகளே!.......................அதன் வெளிப்பாடு தான் இந்தப் பதிவு....."நம்மால் என்ன செய்ய இயலும்" இந்த வார்த்தையை அடியோடு வெறுக்கிறேன்.....................
இந்த மனக்குமுறல் எனக்கும் உண்டு, தன்னை ஈன்றவளும் ஒரு பெண் தான் என்பதை ஈசியாக மறந்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்காத இந்த கயவர்களை பற்றி நினைக்கும் போது நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும் போல் தோன்றுகிறது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top