• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கே.ஜி. அப்பார்ட்மெண்ட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
டிசம்பர் மாத குளிர் காற்று கே.ஜி.அப்பார்ட்மெண்ட்டை லேசாக வருடிய போது மணி இரவு பத்து. கே.ஜி.அப்பார்ட்மெண்ட் ஆதம்பாக்கத்தில் ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் ஒரு சுமாரான சைஸ் அப்பார்ட்மெண்ட், பத்து பதினைந்து வீடுகள் வரை இருக்கலாம்.பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தினரே வசிக்கின்றனர், நகரத்தின் போதைக்கும் நம் முன்னோர்களின் போதனைகளுக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள் வசிக்கும் இடம்.
அதன் முதல் மாடியில் மேரி கிசுகிசுக்கும் ஓசை கேட்டருகில் உறங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேனின் தூக்கத்தை கலைக்க முயன்று தோற்றுப்போனது.

"டூப்ளிகேட் கீ, மாஸ்க் , கை குளோஸ் எல்லாம் ரெடி" மேரி அவள் ஹேன்ட் பேக்கை செக் பண்ணி முடித்தாள்.

"குளோஸா...!!, அது எதுக்குடி.." என்றாள் காயத்ரி.

"கைரேகை தெரியாம இருக்கத்தான் மாமி" சிமிட்டினாள் நிசா.

"என்னடி.. கொலை பண்ண போறாப்ள பில்டப் கொடுக்றேள்"

"மாமி எதுனாலும் நடக்லாம், டாமிக்காக நான் கொல கூட செய்வேன்" என்றாள் மேரி இறுகிய குரலில்.

"நம்ம ஆத்துக்காராள்ளாம் வர வரைக்கும் வெய்ட் பண்லாமேடி..! ஏன் அவசரப்பட்றேள்.."

"வந்துட்டா மட்டும் .. அதுங்கள்லாம் ஹோட்டல்ல எக்ஸ்ட்ரா சட்ணி கேக்கவே பயப்படுங்க.. அதுலயும் இப்போ டூர் வேற போயிருக்குதுங்க , அவங்கல்லாம் திருப்பி வரதுக்குள்ள டாமி கதையே முடிஞ்சுரும்" சலித்துக்கொண்டாள் நிசா.

"பர்ஸ்ட்டு.. அந்த தாடிக்காரன் தான் டாமிய கடத்திருக்கான்னு எப்படி சொல்றேள் , நேக்கென்னவோ பெரிய ப்ராப்ளமாக போறதுன்னு தோன்றது"

"மாமி.. நீங்களும்தானே அவன் ரூம்லருந்து டாமி குரல் வர்றத கேட்டீங்க"

"டாமி குரல் என்ன ஏசுதாஸ் குரலாடி, எல்லா நாய்க்கும் ஒரே லொள் லொள் தானே"

"டாமிய நாய்னு சொல்றீங்களா" நிசா கண்கள் சிவந்தன "உங்கள அவன் கடத்தி வீட்ல வச்சிருந்நான்னா டாமி உங்கள மாதிரிதான் சும்மா இருக்கும்னு நினைக்குறீங்களா..!"

"பெருமாளே..!.. என்னை ஏன்டி அவன் கடத்தனும், நான் தெரியாம சொல்லிட்டேன். நீங்க போங்கடிம்மா.. " அலுத்துக்கொண்டாள் காயத்ரி.

மேரி நிதானமாக காயத்ரி அருகே வந்தாள்
"மாமி நாம எல்லாரும் சேர்ந்துதானே டிசைட் பண்ணோம். எவ்ளோ நாளா டாமியை தேடி அலைஞ்சோம், இவன் தான் ஏதோ மெடிசின் டெஸ்ட் பண்ண நம்ம டாமியை யூஸ் பண்றான். அவன் ஏதோ பார்மஸிஸ்ட் னு தானே அசோசியேசன்ல சொல்லிருக்கான். இத போலீஸ்ட சொன்னா நாட்டு நாய் தானேனு அலட்சியமா சொன்னாங்க.. இப்ப நீங்களும் அதையே சொல்லிட்டீங்களே"

"மாமி நமக்கு வேற வழியில்ல.., நாங்க இரண்டு பேரும் அவன் பிளாட்டுக்கு போய் பாக்குறோம் நீங்க இங்க இருந்து அவன் வரானானு மட்டும் பார்த்து சொல்லுங்க போதும். புரியுதா.?" என்றாள் நிசா.

சரி என்ன சொல்ல முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள் காயத்ரி.

இவர்கலெல்லாம் யார்?.. டாமிக்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பது விளங்க வேண்டுமெனில், முதலில் இவர்களுக்கும் டாமிக்குமுள்ள பந்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்,

காயத்ரி, ஶ்ரீரங்கத்தில் காவேரி கரையில் பிறந்து வளர்ந்தவள். அரசு வேலையிலிருக்கும் மாதவனை திருமணம் செய்து கொண்டு, சென்னை வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது, என்றாலும் நகர்புற வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு இன்னும் கடலை மாவும் சீயக்காயுமாக தான் வலம் வருகிறாள். இவளுக்கும் துணிவிற்கும் ரொம்ப தூரம். உதாரணமாக லிப்ட்ல் நுழைந்து வெளி வரும் வரை ஆயிரம் முறை பெருமாளே.! பெருமாளே..! என ஶ்ரீரங்கத்து ரங்கராஜனுக்கு எமர்ஜென்ஸி கால் செய்திருப்பாள், எஸ்கலேட்டரில் ஏறவே மாட்டாள்.

மேரி திருநெல்வேலிக்காரி, காலேஜ் வரை படித்திருக்கிறாள், முதல் ஷோ சினிமாவில் பசங்களை மிஞ்சுமளவிற்கு விசில் அடிப்பாள். மூக்குக்கு மேல் கோபம் வந்தால் பரவாயில்லை, இவளுக்கு நாக்குக்கு மேல் கோபம் வரும். வந்தால், கேட்பவர் நிலை பரிதாபம் தான். இவள் தாத்தா வெள்ளைக்காரன் காலத்திலேயே கராத்தே மாஸ்டராக இருந்தாராம் அதனால் தனக்கும் கராத்தே இரத்தத்தில் இருக்கிறது என ஏழாம் அறிவு பார்த்ததிலிருந்து நம்பிக் கொண்டிருக்கிறாள்.

கடைசியாக நிசா மூவரில் இளையவள் இவள்தான். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து, வேலையை கைவிட்டு கணவனை கைப்பிடித்தாள். இங்கிலீஸ் படங்களாய் பார்த்தாலும் இந்தி சீரியலுக்கு கண்ணீர் விடும் மாடர்ன் தமிழச்சி. இவள் கணவன் ஒரு டென்டிஸ்ட் ஆனால் இவளுடம் கேட்டால் என் ஹப்பி டாக்டர் என்று தான் சொல்வாள். இம்மூவருள் நான்தான் புத்திசாலி என இவளே சொல்லிக் கொள்வாள்.

மூன்று துருவமாய் நிற்கும் இவர்களை இணைத்தது அந்த டாமி என்கிற நாய் தான். டாமி நாட்டு நாய் தான் அதாவது நம் நாட்டிலேயே பிறந்து நம் நாட்டினராலே மதிக்கப்படாத நாட்டு நாய் இனம். ஆனால் விசுவாசத்தில் அது எந்த ஆடம்பர நாய்க்கும் சளைத்ததில்லை. டாமிக்கும் தோழியர்க்கும் உள்ள பந்தத்தை சுருங்க சொல்ல வேண்டுமானால், சீரியல் பார்க்கும் போது இவர்களுன் கணவர்களும், டாமியும் பசியில் கத்தினால், விளம்பர இடைவெளியில் டாமி சாப்பிட்டு விடும்.

இவ்வளவு பாசமாக வளர்த்த டாமி தொலைந்து போனால், அதுவும் அதை யார் பறித்தார்கள் என்பதும் தெரிந்திருந்தால் யார்தான் சும்மா இருக்க முடியும் அதனால் தான் செயலில் இறங்கி விட்டனர். மீண்டும் கதைக்குள் செல்வோமா..!

"ஓகே மாமி, அந்த மித்ரன் வந்தா சிக்னல் கொடுங்க, நாங்க சீக்கிரம் வந்துடறோம்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர் மேரியும் நிசாவும்.

காயத்ரிக்கு இதயம் படபடக்க, அப்பார்ட்மெண்ட் வாசலை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது, வாயை திறந்தால் இதயம் குதித்து வெளியே வந்துவிடும் போல இருந்தது. சிக்கென வாயை பொத்திக் கொண்டாள். அவளின் சிறு வயதில் அதிகமாக பயப்படும் போது, அவளையே அறியாமல் உறங்கி விடும் வியாதி இருந்ததாம், அது இத்தனை ஆண்டுகள் கழித்து இன்று தான் வர வேண்டுமா, கண்ணயர்ந்தாள் காயத்ரி.

தோழிகள் டாமியை மீட்பார்களா..? இல்லை இரக்கமற்ற மித்ரனின் கையில் மாட்டிக் கொள்வார்களா..? விடை அடுத்த அத்தியாயத்தில்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 
Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எக்ஸ்ட்ரா சட்னி கேட்கவே பயபடுவார்களா ???

அடங்கப்பா இருந்தாலும் இவ்வளவு நக்கல் இருக்க கூடாதுமா நிஷாக்கு ஒட்டுமொத்த ஆண்களையே இப்படி சொல்லலாமா சில பேரு சாம்பார் கேட்க கூட தான் பயப்படுவாங்க? just கிட்டிங்?

டாமி குரல் என்ன ஏசுதாஸ் குரலாடி, எல்லா நாய்க்கும் ஒரே லொள் லொள் தானே
":LOL::ROFLMAO::censored::Dசெம்ம ????

அட டா.... தூங்குமூஞ்சி மாமியா காயத்ரி பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு..
இதை நம்பி மேரி நிஷாவும் உள்ளே போய் இருக்காங்க,.... ??

இப்போ மித்ரன் entry கொடுக்கணுமா... அட்ரா அட்ரா நாக்க முக்க moment தான்??‍♀

டாமி என்னமோ நல்லாதான் இருக்கும்
இவங்க அடிக்கிற கூத்து தான்தாங்க முடியல?
மகளிர் மட்டும் சூப்பர் very interesting jalan?????
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
டிசம்பர் மாத குளிர் காற்று கே.ஜி.அப்பார்ட்மெண்ட்டை லேசாக வருடிய போது மணி இரவு பத்து. கே.ஜி.அப்பார்ட்மெண்ட் ஆதம்பாக்கத்தில் ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் ஒரு சுமாரான சைஸ் அப்பார்ட்மெண்ட், பத்து பதினைந்து வீடுகள் வரை இருக்கலாம்.பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தினரே வசிக்கின்றனர், நகரத்தின் போதைக்கும் நம் முன்னோர்களின் போதனைகளுக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள் வசிக்கும் இடம்.
அதன் முதல் மாடியில் மேரி கிசுகிசுக்கும் ஓசை கேட்டருகில் உறங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேனின் தூக்கத்தை கலைக்க முயன்று தோற்றுப்போனது.

"டூப்ளிகேட் கீ, மாஸ்க் , கை குளோஸ் எல்லாம் ரெடி" மேரி அவள் ஹேன்ட் பேக்கை செக் பண்ணி முடித்தாள்.

"குளோஸா...!!, அது எதுக்குடி.." என்றாள் காயத்ரி.

"கைரேகை தெரியாம இருக்கத்தான் மாமி" சிமிட்டினாள் நிசா.

"என்னடி.. கொலை பண்ண போறாப்ள பில்டப் கொடுக்றேள்"

"மாமி எதுனாலும் நடக்லாம், டாமிக்காக நான் கொல கூட செய்வேன்" என்றாள் மேரி இறுகிய குரலில்.

"நம்ம ஆத்துக்காராள்ளாம் வர வரைக்கும் வெய்ட் பண்லாமேடி..! ஏன் அவசரப்பட்றேள்.."

"வந்துட்டா மட்டும் .. அதுங்கள்லாம் ஹோட்டல்ல எக்ஸ்ட்ரா சட்ணி கேக்கவே பயப்படுங்க.. அதுலயும் இப்போ டூர் வேற போயிருக்குதுங்க , அவங்கல்லாம் திருப்பி வரதுக்குள்ள டாமி கதையே முடிஞ்சுரும்" சலித்துக்கொண்டாள் நிசா.

"பர்ஸ்ட்டு.. அந்த தாடிக்காரன் தான் டாமிய கடத்திருக்கான்னு எப்படி சொல்றேள் , நேக்கென்னவோ பெரிய ப்ராப்ளமாக போறதுன்னு தோன்றது"

"மாமி.. நீங்களும்தானே அவன் ரூம்லருந்து டாமி குரல் வர்றத கேட்டீங்க"

"டாமி குரல் என்ன ஏசுதாஸ் குரலாடி, எல்லா நாய்க்கும் ஒரே லொள் லொள் தானே"

"டாமிய நாய்னு சொல்றீங்களா" நிசா கண்கள் சிவந்தன "உங்கள அவன் கடத்தி வீட்ல வச்சிருந்நான்னா டாமி உங்கள மாதிரிதான் சும்மா இருக்கும்னு நினைக்குறீங்களா..!"

"பெருமாளே..!.. என்னை ஏன்டி அவன் கடத்தனும், நான் தெரியாம சொல்லிட்டேன். நீங்க போங்கடிம்மா.. " அலுத்துக்கொண்டாள் காயத்ரி.

மேரி நிதானமாக காயத்ரி அருகே வந்தாள்
"மாமி நாம எல்லாரும் சேர்ந்துதானே டிசைட் பண்ணோம். எவ்ளோ நாளா டாமியை தேடி அலைஞ்சோம், இவன் தான் ஏதோ மெடிசின் டெஸ்ட் பண்ண நம்ம டாமியை யூஸ் பண்றான். அவன் ஏதோ பார்மஸிஸ்ட் னு தானே அசோசியேசன்ல சொல்லிருக்கான். இத போலீஸ்ட சொன்னா நாட்டு நாய் தானேனு அலட்சியமா சொன்னாங்க.. இப்ப நீங்களும் அதையே சொல்லிட்டீங்களே"

"மாமி நமக்கு வேற வழியில்ல.., நாங்க இரண்டு பேரும் அவன் பிளாட்டுக்கு போய் பாக்குறோம் நீங்க இங்க இருந்து அவன் வரானானு மட்டும் பார்த்து சொல்லுங்க போதும். புரியுதா.?" என்றாள் நிசா.

சரி என்ன சொல்ல முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள் காயத்ரி.

இவர்கலெல்லாம் யார்?.. டாமிக்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பது விளங்க வேண்டுமெனில், முதலில் இவர்களுக்கும் டாமிக்குமுள்ள பந்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்,

காயத்ரி, ஶ்ரீரங்கத்தில் காவேரி கரையில் பிறந்து வளர்ந்தவள். அரசு வேலையிலிருக்கும் மாதவனை திருமணம் செய்து கொண்டு, சென்னை வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது, என்றாலும் நகர்புற வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு இன்னும் கடலை மாவும் சீயக்காயுமாக தான் வலம் வருகிறாள். இவளுக்கும் துணிவிற்கும் ரொம்ப தூரம். உதாரணமாக லிப்ட்ல் நுழைந்து வெளி வரும் வரை ஆயிரம் முறை பெருமாளே.! பெருமாளே..! என ஶ்ரீரங்கத்து ரங்கராஜனுக்கு எமர்ஜென்ஸி கால் செய்திருப்பாள், எஸ்கலேட்டரில் ஏறவே மாட்டாள்.

மேரி திருநெல்வேலிக்காரி, காலேஜ் வரை படித்திருக்கிறாள், முதல் ஷோ சினிமாவில் பசங்களை மிஞ்சுமளவிற்கு விசில் அடிப்பாள். மூக்குக்கு மேல் கோபம் வந்தால் பரவாயில்லை, இவளுக்கு நாக்குக்கு மேல் கோபம் வரும். வந்தால், கேட்பவர் நிலை பரிதாபம் தான். இவள் தாத்தா வெள்ளைக்காரன் காலத்திலேயே கராத்தே மாஸ்டராக இருந்தாராம் அதனால் தனக்கும் கராத்தே இரத்தத்தில் இருக்கிறது என ஏழாம் அறிவு பார்த்ததிலிருந்து நம்பிக் கொண்டிருக்கிறாள்.

கடைசியாக நிசா மூவரில் இளையவள் இவள்தான். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து, வேலையை கைவிட்டு கணவனை கைப்பிடித்தாள். இங்கிலீஸ் படங்களாய் பார்த்தாலும் இந்தி சீரியலுக்கு கண்ணீர் விடும் மாடர்ன் தமிழச்சி. இவள் கணவன் ஒரு டென்டிஸ்ட் ஆனால் இவளுடம் கேட்டால் என் ஹப்பி டாக்டர் என்று தான் சொல்வாள். இம்மூவருள் நான்தான் புத்திசாலி என இவளே சொல்லிக் கொள்வாள்.

மூன்று துருவமாய் நிற்கும் இவர்களை இணைத்தது அந்த டாமி என்கிற நாய் தான். டாமி நாட்டு நாய் தான் அதாவது நம் நாட்டிலேயே பிறந்து நம் நாட்டினராலே மதிக்கப்படாத நாட்டு நாய் இனம். ஆனால் விசுவாசத்தில் அது எந்த ஆடம்பர நாய்க்கும் சளைத்ததில்லை. டாமிக்கும் தோழியர்க்கும் உள்ள பந்தத்தை சுருங்க சொல்ல வேண்டுமானால், சீரியல் பார்க்கும் போது இவர்களுன் கணவர்களும், டாமியும் பசியில் கத்தினால், விளம்பர இடைவெளியில் டாமி சாப்பிட்டு விடும்.

இவ்வளவு பாசமாக வளர்த்த டாமி தொலைந்து போனால், அதுவும் அதை யார் பறித்தார்கள் என்பதும் தெரிந்திருந்தால் யார்தான் சும்மா இருக்க முடியும் அதனால் தான் செயலில் இறங்கி விட்டனர். மீண்டும் கதைக்குள் செல்வோமா..!

"ஓகே மாமி, அந்த மித்ரன் வந்தா சிக்னல் கொடுங்க, நாங்க சீக்கிரம் வந்துடறோம்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர் மேரியும் நிசாவும்.

காயத்ரிக்கு இதயம் படபடக்க, அப்பார்ட்மெண்ட் வாசலை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது, வாயை திறந்தால் இதயம் குதித்து வெளியே வந்துவிடும் போல இருந்தது. சிக்கென வாயை பொத்திக் கொண்டாள். அவளின் சிறு வயதில் அதிகமாக பயப்படும் போது, அவளையே அறியாமல் உறங்கி விடும் வியாதி இருந்ததாம், அது இத்தனை ஆண்டுகள் கழித்து இன்று தான் வர வேண்டுமா, கண்ணயர்ந்தாள் காயத்ரி.

தோழிகள் டாமியை மீட்பார்களா..? இல்லை இரக்கமற்ற மித்ரனின் கையில் மாட்டிக் கொள்வார்களா..? விடை அடுத்த அத்தியாயத்தில்.
Jaalan ... Nice...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top