• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்----44--- பரிசிலர்க்கு எளியன்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சிற்றரசனான பாரி வள்ளலின் பறம்புமலையை மூவேந்தர்களும் முற்றுகையிட்டிருந்தனர். பாரியின் மேல்அவர்களுக்கு இருந்த பொறாமையின் அளவை அந்த முற்றுகையின் கடுமையே காண்பித்தது. பாரியை வெல்ல வேண்டும், அல்லது கொல்ல வேண்டும். இரண்டிலொன்று முடிந்தாலொழியஎவ்வளவு காலமானாலும் தங்கள்முற்றுகையைச் சிறிதளவும் தளர்த்தக்கூடாது என்றுஉறுதிசெய்துகொண்டிருந்தனர்.

மூவேந்தர்பறம்பு மலைக்குக் கீழேசு ற்றி வளைத்துக்கொண்டு முற்றுகையிட்டிருந்த அவர்கள் எப்படியும் என்றைக்காவது ஒருநாள் பாரி கீழேஇறங்கி வந்து தங்களுக்குப் பணிந்துதான்ஆகவேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தனர். பறம்பு மலையின்செங்குத்தான அரணமைப்பும் அதன்மேல்பாரியின் கோட்டையும் அவர்கள் மேலேஏறிப்போய்ப் போர் செய்வதற்குவசதியானதாக இல்லை. எனவே தான்மலையின் கீழ்ப் பகுதியிலேயேமுற்றுகையை நீட்டித்தார்கள்.

ஆனால் பாரியோ, இவர்கள்முற்றுகையினாலோ, பயமுறுத்தலினாலோ சிறிதும் அயரவுமில்லை;
அச்சமுறவுமில்லை. எப்போதும் போலப்பறம்பு மலையின் மேலே அவனும் அவனுடைய குடிமக்களும் வளமானநிலையில் மகிழ்ச்சி குன்றாமலே வாழ்ந்துவந்தார்கள். மூவேந்தரின் இலட்சியமே செய்யவில்லை.

கபிலர் பாரியின் உயிர் நண்பர். தமிழ்நாடுமுழுவதும் நன்கு அறிந்த பெரும்புலவர். மூவேந்தர்களுக்கும் கூட அவரைப் பற்றிநன்றாகத் தெரியும். இந்த முற்றுகையின்போது அவர் பறம்புமலையில் பாரியின் கூடவே இருந்தார். ஒருநாள் பாரியின் சார்பாகக் கீழேமுற்றுகையிட்டிருக்கும் மூவேந்தர்களைச் சந்தித்துச் செல்வதற்காகக் கபிலர் மலை மேலிருந்து கீழே இறங்கி வந்தார்.

அவர் பாரிக்கு வேண்டியவர் என்பதைஎண்ணிப் பாராமுகமாக இருந்து விடாமல் தமிழ்ப் புலவர் என்ற முறைக்கு மரியாதைகொடுத்து வரவேற்றனர் மூவரும். கபிலர் கீழே முற்றுகையிட்டிருந்த மூவேந்தர்களின் விருந்தினராக அவர்களோடு தங்கினார்.

சிலநாட்கள் கழிந்தபின், ஒருநாள்அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் வாயிலிருந்து பாரியின் மலை அரண்களைப் பற்றிய இரகசியமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றனர் மூவேந்தர். ஆனால் கபிலர் அவர்களுக்குச் சரியானபடி அறிவுரைகூறிவிட்டார்.

“நாங்கள் இவ்வளவு நாட்களாக இங்கே முற்றுகை இட்டிருந்தும் உங்கள் பாரி சிறிதும் கவலையே இல்லாமல் மலை மேல் சுகமாக இருக்கிறானே? எங்கள் முற்றுகைஅவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையோ?”

கபிலர் பதில் கூறாமல் மூவேந்தர்களையும் பார்த்து மெல்ல சிரித்தார். அவர் தங்களைப்பார்த்ததும் சிரித்தவிதமும் எத்தகைய அர்த்தத்துக்கு உரியன என்பதை மூவேந்தர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. “பாரியைப் பற்றியாகேட்கிறீர்கள்? மிகவும் நல்ல கேள்விதான்! நீங்கள் இத்தனை பலமாகவும் பயங்கரமாகவும்முற்றுகையிட்டிருந்தும் கூடப் பாரி இன்னும் மலைமேல் குறைவின்றி எப்படிவாழ்கிறான்? என்ற விவரம் உங்களுக்கும்தெரிய வேண்டியதுதான். ஆனால்...”

“ஆனால் என்ன? சொல்லுங்களேன் புலவரே?”

“அவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதனால் நீங்கள் செய்யப்போவதுதான் என்ன?”

“அது என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள் கபிலரே! நாங்கள் கையாலாகாதவர்கள் அல்லவே? காரியத்தோடு தான் இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம்” “நான்உங்களைத் தாழ்த்திக் கூற வரவில்லை. பாரியைப் பொறுத்தமட்டில் உங்களால்ஏதும் செய்ய
முடியாதே’ என்றெண்ணும்போது எனக்கு உங்கள் மேல்மிக்க அனுதாபம் ஏற்படுகிறது.”

“ஏன் முடியாது, கபிலரே? நாங்கள் மூன்றுபேர். பாரி ஒரு தனியன். நாங்கள் மூவரும்பேரரசர். பெரும்படைகளோடுவந்திருக்கின்றோம். பாரி சிற்றரசன், வெறுங் குறுநில மன்னன். அவன்படைகளின் தொகை எங்களுக்குத் தெரியும் எங்கள் படைகளில் நூற்றில் ஒருபங்குகூடத் தேறாது”

“நீங்கள் சொல்வனவெல்லாம்உண்மைதான் மூவேந்தர்களே! ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் படைகள் மட்டுமின்றி இன்னும் ஆயிரம் மடங்கு பெரும்படைகளை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வரலாம். பாரியைமாத்திரம் படை பலத்தால் அசைக்கக்கூடமுடியாது உங்களால் இது நிச்சயம். மறந்துவிடாதீர்கள்.”

“அப்படியானால் பாரியிடம் படைபலத்தால்அசைக்க முடியாத அளவு அப்படிஎன்னதான் இருக்கிறது?”

“பாரியின் பறம்பு மலையை எளியதாக நினைப்பதனால்தான் நீங்கள் இப்படிக்கேட்கிறீர்கள். உங்கள் மூவருடைய
முற்றுகையினாலும் பறம்புமலை சிறிதும்பாதிக்கப்படாது. உழவர் உழாமலே இயற்கையிலேயே நான்கு உணவுப்பொருள்கள் மலைமேல் விளைகின்றன.

மூங்கிலரிசி ஒன்று; பலாப்பழம் இரண்டு வள்ளிக்கிழங்கு மூன்று கொம்புத்தேன் நான்கு இந்த நான்கு குறையாத உணவுப்பொருள்களோடு பளிங்கு போலத் தெளிந்தஇனிய நீர்ச்சுனைகளுக்கும் பறம்புமலையில் பஞ்சமே இல்லை. இதனால்மலைமேல் உணவுப் பஞ்சமோ, தண்ணீர்ப்பஞ்சமோ ஏற்பட்டுப் பாரி அவற்றைத் தாங்கஇயலாமல் வருந்தி நடுங்கிக் கீழே ஒடிவந்து உங்கள் முற்றுகைக்கு அடிபணிவான்என்று கனவிலும் நினையாதீர்கள்.


யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் மலைமலையாகக்குவித்தாலும் போர் முயற்சி பயன் தராது. நீங்கள் மூவர் மட்டும் மலைமேல் ஏறிஅவனோடு வாட் போர்செய்யலாமென்றலோ வாட் போரில் பாரிஉங்களை இலேசில் விடமாட்டான்.ஆனால்
நீங்கள் மூவரும் அவனை வெல்லுவதற்குரிய ஒரே ஒரு வழி எனக்குத்தெரியும். நீங்கள் தேவையென்று விரும்புவீர்களாயின் உங்களுக்கு அந்தவழியைக் கூறுவேன்!” கபிலர் குறுநகைபுரிந்தார்.

“சொல்லுங்கள். கபிலரே! நீங்கள் கூறும்அருமையான யோசனையைத்தேவையில்லை என்றா சொல்லுவோம்? உடனே சொல்லுங்கள். தாமதம் எதற்கு’ மூவேந்தர்களும் ஆத்திரமும் பரபரப்பும்நிறைந்த குரலில் துடிதுடிக்கும் வேகமானஉள்ளத்தோடு கபிலரைத்துரிதப்படுத்தினர்.

“சொன்னால் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்களே?”

“வாக்குறுதி வேண்டுமானால் தருகிறோம்புலவரே! நீங்கள் கூறுவதற்காக உங்களைஏதும் சினந்து கொள்ளவோ, துன்புறுத்தவோ நாங்கள் என்னஅறியாப்பிள்ளைகளா?”

“அப்படியானால் சொல்லி விடுகிறேன்மூவேந்தர்களே! பாரியின் பறம்புமலையைச் சேர்ந்ததாகவும் அவன் ஆட்சிக்குரியனவாகவும் முந்நூறு சிற்றுார்கள்உள்ளன. இந்த முந்நூறு ஊர்களையும்தன்னை நாடிவந்த
பரிசிலர்களுக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்துத் தீர்த்துவிட்டான் பாரி. இப்போது அவனிடம்எஞ்சியிருக்கும் பொருள்கள் மூன்றேமூன்றுதாம். அந்தப் பொருள்கள்வேறெவையும் இல்லை, நானும் அவனும்பறம்பு மலையுமே. நீங்கள் என்னையும்பாரியையும் பறம்பு மலையையும் வெல்லவேண்டுமானால் அதற்கு இம்மாதிரிஆயுதங்கள் தாங்கிய போர்க்கோலமோ, படைகளோ தேவையில்லை!”

“மூவேந்தர்களே! நீங்கள் பாட்டுப்பாடும் பாணர்களாகவும் கூத்தாடும் விறலியர்களாகவும் வேடமிட்டுக் கொண்டுபாரிக்கு முன்னால் சென்று ஆடி பாடவேண்டும். ஆடி பாடிமுடிந்ததும் ‘உங்களுக்கு என்னபரிசில்வேண்டும்’ என்று கேட்பான் பாரி. ‘உன் உயிரும் பறம்பு மலையும் எங்களுக்குவேண்டும்’ என்று நீங்கள் மூவரும் தலைவணங்கிக் குழைவான
குரலில்கேளுங்கள். தயங்காமல் இரண்டையும்உடனே உங்களுக்குக் கொடுத்து விடுவான்அவன்.


நீங்கள் பாரியை வெல்ல இந்த ஒரேஒருவழிதான் உண்டு. வாளோலோ, போராலோ, முற்றுகை யாலோ நீங்கள் நிச்சயமாக அவனை வெல்ல முடியாது” கபிலர் கூறி முடித்தார். மூவேந்தர் நெஞ்சத்தை அணுஅனுவாகச் சித்திரவதைசெய்யும்
விஷமத்தனம் நிறைந்த புன்னகைஒன்று அவர் இதழ்களில் அப்போதுநெளிந்தது.

மூவேந்தர்கள் முகத்தில் ஈயாடவில்லை. கபிலர் அவர்களைச் சரியானபடிஅவமானப்படுத்திவிட்டார். வெட்கித்தலைகுனியும் படியாக வாழைப்பழத்தில்ஊசி ஏற்றுவது போலப் பேசப்பெற்ற அவர்சொற்கள் அவர்களைக் கூசிக் குறுகிச்சிலைகளாய் வீற்றிருக்கும்படிசெய்துவிட்டன.

“பாரி, வாளுக்குமுன் பணியமாட்டான். கலைக்குமுன் பணிவான்.போரில்பகைவர்களுக்குத் தோற்காத தன் நாட்டையும் உயிரையும் அரண்மனையில் தனக்கு முன் ஆடிப்பாடும் கலைஞர்களுக்குத் தோற்கத் தயாராயிருப்பான். கலைக்கும் கவிதைக்கும் தலை வணங்கியாவற்றையும் அளிக்கத்தயாராயிருப்பான். ஆனால் போரால்அவனை அசைக்க முடியாது” முன்னிலும் பலமாக வாய்விட்டுச் சிரித்தார் கபிலர். சிரித்துக்கொண்டே மூவேந்தர்களையும்நோக்கி, “வருகிறேன் மன்னர்களே! நான் மலைமேல் போக வேண்டும்” என்றுகூறிவிட்டு, வெளியே நடந்தார் அவர்.

தைரியமாகக் கைவீசிச் சிரித்துக்கொண்டேநடந்து செல்லும் அந்தப் புலவரின்உருவத்தை இமைக்காமல்
பார்த்துக்கொண்டே திக்பிரமை பிடித்துப்போய் வீற்றிருந்தனர் மூவேந்தர்! அவருடையசிரிப்பொலி அவர்கள்
செவிகளைநெருப்பாகச் சுட்டது!

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்புகொளற்குஅரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே! (புறநானூறு-110)

கடந்து அடுதானை = நேர் நின்று போரிடவல்ல படை, உடன்றனிர் ஆயினும் = போர்செய்தீர்கள் ஆனாலும், பறம்பு = பாரியின்மலை, ஊர்த்தே = ஊரையுடையது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top