• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குழந்தை வளர்ப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
எது_மரியாதை

குழந்தைகளுக்குக்கற்றுக்கொடுங்கள்

இன்றைய குழந்தைகளுக்குப் பணம் சம்பாதிக்கும் யுக்தியைச் சொல்லித்தருகிறோம். பாதுகாப்பு யுக்தியைச் சொல்லித்தருகிறோம். ஆனால், நம் பண்பாட்டுக்கே உரித்தான மரியாதையைச் சொல்லித்தருகிறோமா?

1. உங்கள் பிம்பங்கள்தானே உங்கள் பிள்ளைகள். அதனால், நீங்கள் பெரியவர்களைப் பார்க்கும்போது, நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணக்கம் சொல்லுங்கள். உங்களைப் பார்த்துப் பிள்ளைகளும் பழகுவார்கள்.

2. சென்னை போன்ற நகரத்துக் குழந்தைகளில் நிறையப் பேர், வணக்கம் சொல்வது கிராமத்து மக்களின் பழக்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தேவையான ஒரு பண்பு என்பதை உங்கள் நடத்தையின் மூலமே பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

3. பேருந்தில் செல்லும்போது வயதானவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ நின்றுகொண்டிருந்தால், பிள்ளையை உங்கள் மடியில் உட்காரவைத்து, அவர்களுக்கு இடம் கொடுங்கள். அதைப் பார்த்து அவர்களுக்கும் உதவும் குணம் உண்டாகும்.

4. வீட்டில் பிள்ளைகள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு முன்பு 'தாத்தா முறுக்கு சாப்பிடுங்க, பாட்டி பிஸ்கட் தரட்டுமா' என்று கேட்டுவிட்டு சாப்பிடச் சொல்லுங்கள்.

5. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வரும்போது, 'அத்தை வாங்க, மாமா வாங்க' என்று வரவேற்கப் பழக்குங்கள்.

6. உறவுகளின் திருமணங்களுக்கு முடிந்தவரை பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுங்கள். அங்கே வரும் சொந்தங்களின் உயர்ந்த விஷயங்கள், பணிகள் பற்றி எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்யுங்கள். அவர்களிடம் இருக்கும் குறைகளைச் சொல்லாதீர்கள். இது, பிள்ளைகளுக்கு மரியாதைப் பண்பை கற்றுத்தருவதோடு, உறவுகளும் பேணப்படும்.

7. வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுப் பேசுவதில் கவனம் செலுத்துங்கள். அதைப் பார்த்து பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். தங்கள் செல்போன் விளையாட்டையும் கட் செய்வார்கள்.

8. மனதைப் புண்படுத்தும், உடற்குறையைச் சொல்லும் வகையில் யாரையும் பட்டப்பெயரில் குறிப்பிடுவதை தவிருங்கள். பிள்ளைகளையும் செய்யவிடாதீர்கள். மரியாதை குறைவின் உச்சம் இது.
9. உங்கள் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களில் வரும் கதாபாத்திரங்கள், மரியாதையாகப் பேசுகின்றனவா என்று கவனியுங்கள். குழந்தைகளின் மரியாதைக் குறைவு பெரும்பாலும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பாதிப்பாகத்தான் இருக்கிறது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் இது. இன்றைக்கும் கிராமப்புறங்களில், 'பாப்பா வாங்க', 'தம்பி, சொன்ன பேச்சைக் கேளுங்க' என்று மரியாதையுடனே நடத்துவார்கள். இதுபோன்ற மரியாதையைப் பெற்ற பிள்ளைகள், மற்றவர்களுக்கும் திருப்பித்தரும். எனவே, நீங்கள் எப்போதும் பிள்ளைகளை மரியாதையுடனே அழையுங்கள். உங்கள் குழந்தையும் உயர்ந்த பண்புடன் இருப்பது உறுதி..

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top