• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமஸ்தானம் - 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
மார்த்தாண்டபள்ளம்

அத்தனை உயரத்தில் இருந்தவர்கள், இத்தனை பள்ளத்தில் குடியமர்த்தப்படுவார்களென சற்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லைதான். சேர்வராயன் அவர்களை அழைத்துவருகையில், தொண்டைமான்சீமையிலும் மலை, குன்று இருக்கிறதெனச் சொல்லிதான் அழைத்துவந்தான். பல குன்றுகளில் ஏறி இறங்கி, பல ஆறு, ஏரி, குளங்களை நீந்தி, வயல், தரிசு, காடு, கழனிகளைக் கடந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு, சேர்வராயன் ஒரு பள்ளத்தில் காட்டிவிடுகையில் அவர்களின் ஈரலும், குடலும் நடுங்கித்தான் போனார்கள்.

குணலும், நாமும் ஒன்றுதானோ? வாயால் கெட்டுவிட்டோமோ,

‘ ஆமாம்ப்பா, நுணல் இரு வாழ்வி. நீரிலும் வாழும் நிலத்திலும் வாழும்..நாமும் அப்படிதே. இத்தன காலம் மலை குன்றென வாழ்ந்தோம். இப்ப பள்ளமா பார்த்து ஒதுங்குறோம்....’

நீள,அகன்ற பள்ளம் அது. அவர்கள் கடந்துவந்த மலைக்குன்றுகளை உடைத்து கரைத்து நிரப்பினால் பள்ளம் கொள்ளாது. அத்தகைய அகன்ற ஆழ பள்ளம்.

தலையிலிருந்த மூட்டை முடிச்சை கீழே இறக்கி வைத்துவிட்டு பள்ளத்தை எட்டிப் பார்த்தான் கடம்பன். பார்க்கத் தெரியாமல் பார்க்கப் போய், அதற்குள்ளாக விழுந்தே விட்டான். கடம்பன், சாமர்த்தியகாரன், விழுந்தவன் இரண்டு கைகளையும், கீழே மேலே கொடுத்து, குட்டிக்கரணம் அடித்து, எழுந்து நின்றுவிட்டான். நெஞ்சு பதைபதைக்க எட்டி, எக்கிப் பார்த்தவர்கள், அவன் எழுந்துநின்றதும் சிரித்தேவிட்டார்கள்.

‘ கடம்பன் மேலே ஏறி வர கையக் கொடுங்கப்பா....’

‘ இங்கேயிருந்துக்கிட்டே எப்படியாம் கையக் கொடுக்கிறது, கீழே இறங்கி கொடுங்கப்பா...’

‘ யாரு இறங்குறதாம், யாரு கொடுக்கிறதாம்...?’

‘ நீ ஆம்பளதானே, நீயே கொடு...’

‘ ஊக்கூம், நா ஆம்பளதே. நா என்ன கடம்பன போல ஆம்பளயா...?’

‘ நா எறங்குறே..’

‘ நானும் எறங்குறே....’ இரண்டொரு பேர் இறங்கினார்கள். ஒருவர் நீட்டிக்கொண்டிருந்த கல்லைப் பிடிக்க, ஒருவர் கையை நீட்ட, தாங்கப் பிடிக்க,... இறங்கினார்கள். கடம்பன் மெல்ல, மெல்ல ஏறி மேலே மேலே வந்தான். ஒரு கையை கொடுத்து, மறு கை நீட்டி, எக்கிப் பிடித்து, மேலே ஏறி காலை வைப்பத்திற்குள் யாரோ ஒருவரின் பெரிய முடிச்சு, தவறி பள்ளத்திற்குள் விழுந்துவிட்டது. என்ன விழுந்ததென்று எட்டிப் பார்க்கப்போய், அதற்குள்ளாக ஒரு கூடை விழுந்துவிட்டது. கூடைக்குள், விடலைக்கோழிகள், சேவல்கள், கோழிகள், குஞ்சுகள்,...‘ கொய்யோ, முய்யோ....’என சத்தமிட்டன.

இத்தனை நேரம் இப்படியான சத்தம் சனங்களிடமிருந்தது. இப்பொழுது அவர்கள் கொண்டுவந்திருந்த கோழிக்குஞ்சுகளிடம் இருந்தன. சனங்களிடமிருந்த அதே கொக்கறிப்பு, கதறல், ஏக்கம், ஏமாற்றம், தவிப்புதான் கோழிகளிடமும் இருந்தன.

‘ யாரோடதுப்பா இது...’

‘ எம்புட்டுதே....’ கண்ணை கசக்கினாள் சீமந்தி.

‘ எப்படி விழுந்துச்சு...’ ‘ எட்டிப் பார்த்தே... தலை நழுவிருச்சு...’

‘ எட்டிப்பார்த்தே தலை நழுவிருச்சு...’ அவளைப் போல வாயைக்கோணி பழித்துக்காட்டினான் கடம்பன்.

‘, யாராவது இறங்கி எடுங்கப்பூ...’

‘ யாரு எறங்குறது..’

‘ கடம்பா நீதான் எறங்கணும்...’

‘ நானேவா,...’ இடுப்பில் சுற்றியிருந்து துண்டுத்துணியை அவிழ்த்து மேட்டில் வைத்துவிட்டு கோமணத்துணியை மேலும் இருக்கக் கட்டி, திரும்பவும் அதற்குள்ளாக இறங்கினான். அவன் கால் வைக்கும், கை வைக்கும் இடத்தில் மண் சரியவும், கற்கள் உருளவுமாக இருந்தன.

‘ அட மெல்லப்பா,பார்த்து,...’

அவன் மேலிருந்து கீழ் வாக்கில் ஒரு மலையிலிருந்து இறங்குவதைப்போலதான் இறங்கினான். அவன் எங்கே இறங்கினேன். அவன் காலை எடுத்து வைப்பதற்குள், அவனது காலடி மண் சரிய அவனை வழுக்கிக்கொண்டு கீழே, கீழே கொண்டுச் செல்வதாக இருந்தன.

கோழி சற்று மேட்டிலும், குஞ்சுகளும், ஒரு சேவலும் இன்னும் சற்று கீழ் சென்றிருந்தன. அவன் தாவி, கோழியைப் பிடித்து இடுப்பில் வைத்துக்கொண்டு, ஒரு கையை மேடு, முட்டுக்குக் கொடுத்து மெல்ல கீழே இறங்குவதாக இருந்தான்.

அவன் இடுப்பிலிருந்த கோழி சத்தமிடுவதற்கேற்ப, குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. மேலே, சற்றி நின்றுகொண்டிருந்த சனங்கள் ‘ உச்சே, உச்சே...’ என எதையும் விரட்டுவதைப்போல சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். கடம்பன் நிமிர்ந்து பார்த்தான். மேலே ஒரு பருந்து வட்டமிட்டபடி, கீழே, கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

பருந்தை நோக்கி நாலாபுறமும் கற்களை வீசினார்கள். பருந்து இறக்கையை விரித்து,மடக்கி, ஒரு குஞ்சை பிடித்துவிடும்படியாக கீழே இறங்கி, கால்களை நீட்டி, ஒரு குஞ்சை தூக்கிக்கொண்டு மேலே பறக்கையில் அத்தனை பேரின் நெஞ்சும் பதைபதைத்து விட்டது. இத்தனை தூரம் பாதுகாத்து திருவிதாங்கூர் சீமையில பொறந்த குஞ்ச இப்படி தொண்டைமான் சீமையில் பறிக்கொடுக்கிறோமே...’ நெஞ்சு கன்றது.

பருந்து மேலே இறக்கையை அடித்துக்கொண்டு மேலே மேலே வருகையில், கடம்பன் கையில் வைத்திருந்த கோழியை குஞ்சுகள் மொய்த்த இடத்திற்குள் எறிந்துவிட்டு, கால் கட்டைவிரலுக்கு மொத்தப் பலத்தையும் கொடுத்து, ஒரு எம்பு எம்பினான். அவன் தாவிய நேருக்கும், அவன் நீட்டிய கைக்கும் பருந்தின் இறக்கை அகப்பட்டது. இறக்கையைப் பிடித்தவனின் கைகள் தலைக்கு மேலாக இருக்க, பருந்து கோழிக்குஞ்சை விடுவித்து விட்டது.

பருந்து, இறக்கையை அடித்துக்கொண்டு உடம்பைத் திமிறிக்கொடுத்தது. கடம்பன் அதை விடுவதாக இல்லை. கோழிக்குஞ்சு கத்திக்கொண்டே தரையை நோக்கி செல்ல, கடம்பன் திமிறிய பருந்துடன் கீழே செல்வதாக இருந்தான்.
கடம்பன் கீழே குனிந்துபார்த்தான். கீழே ஒரு சேவலும், ஒரு பெட்டையும், இறக்கையை அடித்துக்கொண்டு, சுற்றிச்சுற்றி வந்து கொக்கரிப்பதாக இருந்தன. கடம்பன் ‘ உச்சோ, உச்சோ...’ என அதட்டிக்கொண்டே கீழே கீழே சென்றான். அவனது அதட்டலில் பெட்டை விலகிக்கொண்டது. சேவல் தலையை நீட்டி, உடம்பைக்குறுக்கி, கோரமிட்டபடி இருந்தது. கீழே, கீழே சென்றவன் ஒரு கல்லின் மீது காலை வைத்தான். கல் இடறிக்கொண்டு தரையிலிருந்து உதிர்ந்து சேவலின் கழுத்தில் விழுந்தது. கல் விழுந்த இடத்தில் கடம்பனின் கால் பதிந்தது. கூர்மையான கல் அது. கல்லின் தடம் சேவலின் கழுத்தில் பட, தலை உடம்பிலிருந்து துண்டாகி, முண்டம் மட்டும் துடித்தெழுந்தது.

தலை, வேறு முண்டம் வேறாககக் கிடந்த சேவலைப் பார்த்ததும் அவனது நெஞ்சு கனமென இருந்தது. கையில் வைத்திருந்த பருந்தின் தலையை ஒரு திருகுத் திருகி தலையை நோக்கி விட்டெறிந்துவிட்டு தலை துண்டிக்கப்பட்ட சேவலின் முண்டத்தை எடுத்தான். சேவல் இறக்கையை அடித்துக்கொண்டு, துள்ளுவதாக இருந்தது. இறக்கையை இரண்டு கைகளாலும் இறுகப்பிடித்து, மார்போடு அணைத்தான். சேவலின் இரத்தம் பீய்ச்சி அடித்து, சொட்டிடுவதாக இருந்தது. மறுகையால், சேவலின் தலையை எடுத்தான். சேவலின் கண்கள் அவனை ஒரு முறை விழித்துப் பார்த்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டது.

புதிதாக குடியேறுகிற இடத்தில் காவு கொடுப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட சேவல்தான் இது. இந்த இடத்தில் அதுவாகவே காவுக் கொடுத்துக்கொண்டதே, மக்களுக்குப் புரியாமல், ஒருவரையொருவருவர் பார்க்க, ஒன்றும் புரியாமல் விழிக்கவென இருந்தார்கள்.

‘ கடம்பா, காவுக்கென கொண்டு வந்த சேவல், இப்படியாகிவிட்டதே...’
‘ இங்கேயே குடியிருங்கனு சேவ சொல்லிட்டு போகதப்பா...’
‘ இந்த பள்ளத்திலேயே குடியிருக்கிறது...’
‘ இவ்ளோ காலம் மேட்டில இருந்தோ. கொஞ்ச நாளைக்கு பள்ளத்தில இருந்துதே பார்ப்போமே...’
இறக்கி வைத்திருந்த சுமை, முடிச்சு, கூடைகளை தலையில் ஏற்றிக்கொண்டு பள்ளத்திற்குள்ளாக இறங்கினார்கள். வட கிழக்கு வானம் மேக மூட்டத்துடன் இருண்டுகொண்டு வந்தது.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நல்ல பதிவு தோழி.. திருவாங்கூர் சீமையில் பொறந்த சேவலை தொண்டைமான் சீமையில் காவு கொடுக்குற மாதிரி ஆச்சே....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top