• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் யுத்தம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
பகுதி 1
சலனமற்ற நிலை மட்டுமல்ல
அமைதி
கோபமான மனநிலையின் பிரதிபலிப்பும்
அமைதி
இதைச் செய்யலாமா? அல்லது அதைச் செய்யலாமா ?
எனும் சங்கடத்தின் மனநிலையும்
அமைதி தான்
அடுத்து என்ன செய்வது என்று
ஆழ்ந்து சிந்திக்கும் மனநிலையும்
அமைதி தான்
என்ன பேசுவது என்று தெரியாத போதும்
அமைதி தான் கைகொடுக்கும்
என்ன நடந்தது என்று புரியாத போதும்
அமைதி தான் கைகொடுக்கும்


சென்னை
அழகான மாலைப் பொழுது…
மாலைப் பொழுது இதம் தரும் பொழுதாகும், வேலைக்குச் சென்று திரும்புபவர்களுக்கு சுகம் தரும் பொழுது (ஏனெனில் ரிலாக்ஸ் செய்வதற்கு...), பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு குதுகலமான பொழுது (ஏனெனில் தம் நண்பர்களுடன் விளையாடும் பொழுதல்லவா?), பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பொழுது (ஏனெனில் தன் கணவனும், குழந்தைகளும் திரும்பி வரும் பொழுதல்லவா?). இவ்வாறு இதமான இந்த மாலை பொழுதில், ஒரு வீட்டில் மட்டும் அமைதியே ஆட்சி செய்தது.
பணக்காரர்கள் மட்டும் வசிக்கக் கூடிய பகுதியில் இருந்தது அந்தப் பங்களா.
இள ரோஸ் (கிட்டதட்ட பேபி பிங்க்) நிறத்தில் அழகாய், அம்சமாய் அமைந்திருந்தது அந்த பங்களா. பார்ப்பவர்கள் அனைவருக்கும் மாளிகை போன்ற தோற்றத்தை தரும். ஒன்றுக்கு பதிலாக இரண்டு வாயில் காப்பாளர்கள் வாசல் கதவில் நின்று காவல் காத்தனர்.
உள்ளே சென்றால், ஒரு இன்னோவா, ஒரு டவேரா, ஒரு ஆடி நிறுத்தப்பட்டிருந்தது, அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது எப்பொழுதேனும் அரிதாக நடப்பது, ஏனென்றால் முக்கால்வாசி நேரம் யாரேனும் ஒருவர், தொழில் தொடர்பாக விடுப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இப்போது அனைவரும் ஆஜாராகி இருப்பதால்? ஏதேனும் விசேஷமோ? அல்லது எதுவும் பிரச்சனையாக கூட இருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். அந்த மாளிகைக்குள் நுழைந்தால் இடது புறம், ஒரு மெத்திருக்கையுடன் கூடிய வரவேற்பறையும், வலது புறம் திரும்பினால், அங்கேயும் வரவேற்பறை போன்ற தோற்றத்துடன் மெத்திருக்கை மற்றும் டீபாய் போடப்பட்டிருந்தது.
நடுவில் நேராக சென்றால், மாடிப்படிகள் வரும். அங்கும், பாதி படிக்கட்டிற்கு பின் இரண்டாக பிரியும். வலது புறம் தான் வீட்டு உறுப்பினர்கள் அமர்வார்கள், இடது புறம் விருந்தினர்களின் பக்கமாம். பணக்காரர்கள் என்றால், இப்படி தான் போலும். அதனால் நாம், வலது புறம் திரும்பி, குடும்ப உறுப்பினர்களை காணலாம்.
அங்கு முதலில், நாம் பார்க்கப்போவது அஞ்சலி பாட்டி, எல்லோரும் அஞ்சுமா என்று சொல்வார்கள். அவரும் அமைதியாய் உட்கார்ந்திருக்கிறார். ஆனால், ஏதோ கோபத்தில் அமைதியாய் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது.
அதன் பின் அவர் பக்கத்தில், சரஸ்வதி (சுருக்கமாய் நமக்கு சரஸ்) நமது அஞ்சுமாவின் மருமகள், அவரும் அமைதியாய் தான் அமர்ந்திருக்கிறார், ஆனால் சங்கடப்பட்டு இருப்பது போல் தெரிகிறது. மனதுக்குள், கோபம் கொள்வதா அல்லது சந்தோசப்படுவதா? என தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.
அதன் பின், சரஸின் கணவர் சாரங்கபாணி (நாம் ரங்கா என்று அழைக்கலாம்) அவரும் அமைதியாய் தான் இருக்கின்றார், ஆனால் அவரின் அமைதிக்கு அர்த்தம் இப்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அர்த்தம்.
அடுத்ததாய், சரஸ் மற்றும் ரங்கனின் மூத்த மகன் அவினாஷ் மற்றும் அவன் மனைவி ஆனந்தி. அவர்களும் அமைதியாய் தான் அமர்ந்திருக்கிறார்கள்.
ஆனந்தி தன் மாமியாரும், மாமியாருக்கு மாமியாரும் அமைதியாய் இருக்கின்றப்படியால், அவளும் அதையே பின்பற்றுகிறாள்.
அவினாஷ் இப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான். அதனால், அவனுக்கு விஷயம் ஆனந்தி மூலமாக தெரிவிக்கப்பட்டு, பெரியவர்களே அமைதியாய் இருக்கும் போது, நாம் அதை கலைக்க வேண்டாம், அவர்களே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று அமைதி காத்தான்.
நம் ரங்கனுக்கே, அவரின் தாய், அஞ்சுமா மூலமாக தான் விஷயம் தெரியும். ஆனாலும் அமைதியாய் யோசித்து முடித்தவர், "அம்மா அந்தப் பொண்ணு எங்க இருக்கா?" என தன் தாயிடம் கேட்டார்.
ஏற்கனவே கொதிப்பில் இருந்தவர், மகன் அவளைப் பற்றி கேட்கவும், அஞ்சுமா "மேல தான் இருக்கா, அவன் ரூம்ல, அதான் உன் பையன் பிடிச்ச கைய விடாம கூட்டிக்கிட்டுப் போனானே" என சிடு சிடுத்தார்.
யார் அந்த பெண்? இப்படி அனைவரின் அமைதிக்கும் காரணமாய் இருக்கும் அவளைப் பற்றி அறிய நமக்கெல்லாம் ஆர்வமாய் இருக்கின்றது. ஆனால், அதே சமயம் மேலே இருந்து யாரோ படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது. அனைவரும் நிமிர்ந்து பார்க்க, அவர்கள் வீட்டின் இளைய வாரிசு தான் இறங்கி வந்து கொண்டிருந்தான். அவன் பெயர் ஆகாஷ்.
அவனும் அமைதியாக தன் ஆறடி உயரத்துக்கு நிமிர்ந்து வந்து கொண்டிருந்தான். அதுநாள் வரை சாதுவாய் வலம் வந்தவன், இன்று செய்த காரியத்தினால், எல்லோரின் முறைப்புக்கும், கண்டிப்பான பார்வைக்கும் ஆளானான். எனினும், தன் கம்பீரத்தை விடாமல், அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தான்.
பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், இடது புறம் திரும்பி, தன் குடும்பத்தினரை பார்த்து, "ப்ளீஸ், யாரும் எதுவும் கேட்காதீர்கள். நாம் நாளை பேசலாம். அவளிடமும் தான்..." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தனது இன்னோவாவை எடுத்து கொண்டு, சென்று விட்டான்.
அங்கு ஆகாஷின் அறைக்குள், ஒரு சிலை என கட்டிலின் அருகில் அமர்ந்து கால் முட்டியில் தன் முகத்தை தாங்கி இருந்தாள் இருபத்து நான்கு வயது சஜ்னா.
இவளும் அமைதியாய் சோகமாய் தான் அமர்ந்திருந்தாள். சஜ்னா தன் மனதில் நினைத்து கொண்டிருந்தாள், ‘தன் வாழ்க்கையில் இன்று ஒரே நாளில் தான் எத்தனை திருப்பம்? வாழ்கையை விட ஒரு சிறந்த மர்ம நாவல் இல்லை, என்று எங்கோ, எப்போதோ படித்தது, நினைவில் இப்பொழுது தோன்றியது. எப்பொழுதும் போல் தான், தன் நாளின் துவக்கம் இன்று காலை வரை இருந்தது.’
வழக்கம் போல் காலை எழுந்து காலை கடன்களை முடித்து, குளித்து, வாசலில் கோலமிட்டு, தன் அம்மா கீதாவிற்கு உதவி விட்டு, தான் அலுவலகம் செல்வாள். அங்கு தன் வேலையை, முடித்து விட்டு, பேருந்தோ அல்லது ஆட்டோ பிடித்து, தன் வீட்டிற்கு வந்து விடுவாள். இது தான் அவள் தினசரி வழக்கம்.
இன்று காலை எழும் போது கூட தனக்கு, இன்று, இப்படி நிகழும் என்று தெரியாது. “நிகழ்ந்து விட்டதே சஜ்னா! அதற்கு சாட்சியாக தான் உன் கழுத்தில் தழைய தழைய தொங்குகிறதே” என்று மூளை சொன்னது.
அதன் பின், மூளையின் கட்டளைப்படி, அவள் கண்கள் குனிந்து தன் கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யத்தை பார்த்தது. மஞ்சளான சரடில். நடுவில் பொன்னினால் செய்த மாங்கல்யம், ஜொலித்தது. அதை பார்த்த சஜ்னாவுக்கு, அது தன்னை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது
 




SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
பகுதி 2

நித்தம் உன்னை நினைக்கிறேன்
நித்தம் உன்னை உணர்கிறேன்
நித்தம் உன்னை சுவாசிக்கிறேன்
நித்தம் உன்னை சிந்திக்கின்றேன்
அதனால் சித்தமானது என் கனவு


வாழ்க்கை தான் எத்தனை மர்மங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. எப்பொழுதும் போல் தான், இன்றும் காலை தன் அம்மாவிற்கு உதவி செய்து விட்டு அலுவலகம் கிளம்பினாள் சஜ்னா. ஆனால் பட்டுப் புடவையில் கிளம்பினாள்.
தன் அம்மாவிடம் முதல் நாள் வாங்கி கொடுத்த மல்லிகைப் பூவை தன் தலையில் சூட்ட சொல்லி விட்டு சாப்பாடு மேஜையில் அமர்ந்தாள்.
கீதா "பிரண்டு கல்யாணத்துக்கு தான போற அங்க போய் சாப்பிடலாம்ல? இவ்ளோ சீக்கிரம் ஏழுக்கே சாப்பிடனுமா?”
எப்பொழுதும் சஜ்னா அப்படி தான், வீட்டில் அம்மா செய்த சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவாள். வெளியே சாப்பிட மாட்டாள், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே, வெளியே அரிதாக சாப்பிடுவாள்.
சஜூ "அம்மா ஆபீஸ்ல வொர்க் இருக்குமா, நானே ஒன் ஹவர் தான் பெர்மிஷன் போடுறேன். இதுல கல்யாணத்துக்கு போய், பிரன்ட்ஸப் பார்த்து பேசுறதுக்கே நேரம் சரியாயிருக்கும், இதுல கூட்டத்துல நின்னு சாப்பிட லேட் ஆகிடும் மா ஆபீஸ்க்கு "
கீதா "ஏன்மா உன்னப் பார்த்துட்டு போன மாப்பிள்ள வீட்டுக்காரங்களுக்கு உன்ன பிடிச்சுடுச்சாம், நம்ம வீட்ல தான் நிச்சயம் வைக்கணும், உன்ட்ட கேட்டா பிடிக்கொடுக்காம பதில் சொல்ற, பாரு உன் பிரண்ட்ஸ்க்குலாம் கல்யாணம் முடியுது" என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்றவரை...
சஜூ "ஐயோ அம்மாஆ... இப்போ பேசற பேச்சா இது? ஒகே டைம் ஆச்சு , நா கிளம்பறேன் பை. அப்பாட்ட சொல்லிடு மா......." என்று சொல்லி கிளம்பி சென்றாள், தன் சாப்பாட்டு பாத்திரத்துடன்.
என்ன செய்ய? இவள் இப்படி தான் தன் அம்மா சமையல் மட்டும் தான் சாப்பிடுவாள், கல்லூரி படிக்கும் போதும் இப்படி தான் சஜ்னா. ஏனெனில் ஒரே ஒரு தோழி பானுவுடன் மட்டும் தான் தனியாக சாப்பிடுவாள், அவளும் இவளைப் பற்றி புரிந்து கொண்டதால் எதுவும் சொல்வது இல்லை. பானு முதன் முதலாக தன் சாப்பாட்டைக் கொடுத்து ருசிப் பார்க்க சொன்னதற்கே, பேருக்கு எண்ணி பத்து பருக்கைகளை சாபிட்டவள், அவ்வளவு தான் இவளும் விட்டுவிட்டாள்.
சஜ்னா தன் தோழியின் திருமணத்திற்கு சென்று, பானுவைத் தேடி கண்டுப்பிடித்து, அவள் பக்கத்திலேயே அமர்ந்து, போனில் பேசாத மிச்ச மீதி கதைகளைப் பேசினார்கள் தோழிகள் இருவரும்.
தன்னுடன் படித்த மற்ற தோழிகளுக்கு ஒரு சின்னச் சிரிப்பைக் கொடுத்து, அமர்ந்து இருந்தாள். அவளும் பானுவும் மணமக்களுக்கு பரிசைக் கொடுத்து விட்டு, சஜ்னா தன் அலுவலகத்துக்கு கிளம்பினாள். பானுவும் அவளுக்கு விடைக்கொடுத்து அனுப்பி விட்டு, தன் தோழிகளைப் பார்க்கச் சென்றாள்.
சஜ்னாவின் தந்தை வெற்றிவேல், ஒரு அரசு அதிகாரி, பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நம் சஜூ, அன்னை தந்தைக்கு ஒரே பெண், ஒரு அண்ணனும் உண்டு இவளுக்கு. அண்ணன் அருண் தற்சமயம் வெளிநாட்டில் யு எஸ்ஸில் பணிபுரிகிறான். பாசமான, அமைதியான குடும்பம். சஜ்னாவும் அமைதியானவள், பாசமானவள் தான்.... அதே போல கோபமானவளும் கூட...
சரியாக சஜ்னா தன் அலுவலகத்துக்குள் நுழைய மணி பத்து இருபது ஆனது, பத்து நிமிடம் இருந்தும் தன் இருக்கையில் அமர்ந்து, தன் பணிகளை செய்ய ஆயத்தமானாள்.
அவள் வேலை பார்ப்பது சர் பதிவாளர் அலுவலகத்தில். அவள் அப்பாவுடன் பணியாற்றிய நண்பர் தான், இந்த வேலையை சஜுவிற்கு வாங்கி தந்தார்.
எம்எஸ்ஸி படித்து முடித்து ஏன் வீட்டில் வெட்டியாக இருக்க வேண்டும், என்று அவள் அப்பாவும் அனுப்பி விட்டார். ஆனால் சஜுவிற்கு எம்பிஏ படித்து நிர்வாகப் பணி செய்ய தான் விருப்பம், அதற்கான வழிமுறையையும் ஆவலுடன் சேகரித்து கொண்டு இருக்கிறாள். அப்பாவுக்கு தெரியாமல் தான்!
அவளின் தந்தைக்கு, "பெண் பிள்ளைகளுக்கு எம்பிஏ எதுக்குமா? உனக்கு மாஸ்டர் டிகிரி தானே படிக்கணும் எம்எஸ்ஸி படி" என சேர்த்து விட்டார். இனிமேல் எம்பிஏ படிக்க வைக்கமாட்டார், என்று தான், தானே தன் உழைப்பின் மூலம் காசை சேகரித்து வந்தாள்.
சஜூ தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அலுவலகத்தில் இன்று கூட்டம் அதிகமாக தெரிந்தது, அவளுக்கு. ஆம், இப்பொழுது எல்லாம் மக்கள் நிலங்களை வாங்குவதிலும், விற்பதிலும் தான் அவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள். மற்றும் வீடுகளை வாங்குவதிலும் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அவளுக்கு, பத்திர விவரங்களை எல்லாம் கணினியில் ஏற்றும் பணி. வேலையில் மூழ்கி இருந்தவளுக்கு, ஒரு சந்தேகம் எழ, அதைத் தீர்த்து கொள்ளப் பதிவாளரை நோக்கி சென்றாள்.
ஏனென்றால் நேற்று திருமணம் செய்து கொண்ட ஜோடியின் பதிவில் ஒரு குளறுபடி, அதைக் கேட்பதற்கு தான் சென்றாள். அப்பொழுது கூட அவளுக்கு தெரியாது, தனக்கு இன்று... அதுவும் இன்னும் சில நிமிடங்களில் திருமணம் நடக்கும் என்று.
அவள் சென்ற நேரம், அங்கு மாலையும், அதன் அருகே இருவரும் நின்று இருந்தனர். அவள் அவரைப் பார்க்க போகலாமா வேண்டாமா? என்று முடிவு எடுப்பதற்குள், பதிவாளர் சண்முகம் அவளைப் பார்த்து "என்னம்மா?" என்று வினவ, அவளும் சென்று தன் சந்தேகத்தைச் சொல்ல, அவர் அதை சரி செய்து கொடுத்தார்.
அவள் "என்ன சார்? இன்றும் ஒரு திருமணமா?" என்று புருவம் சுருக்கி வினவ,
அவரோ "ஆமாம்மா, மாப்பிள்ளைப் பையன் ஏதோ பெரிய இடத்து பையன் போல, அவசர திருமணமாம்" என்று விளக்கிக் கொண்டு இருக்கும் வேளையிலேயே...
அரக்கப் பறக்கக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு இரண்டு இளைஞர்கள் வர, அதில் ஒருவன் "டேய், சீக்கிரம் எடுடா, வந்து விடப் போகிறார்கள்" என்று மற்றவனிடம் சொல்லிக் கொண்டே, அவன் கொடுத்த மாங்கல்யத்தை வாங்கி, சண்முகம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சஜ்னாவைத் திருப்பி, அவள் கழுத்தில் கட்டி விட்டான் அந்த ஒருவன்.
உங்களுக்கே தெரிந்திருக்குமே அந்த ஒருவன் நம் ஆகாஷ் என்று.
ஒரு சில நிமிடங்களில் நடந்து விட்ட இந்த நிகழ்வுகளின் தாக்கத்தை தொடர்ந்து, சண்முகம் தன் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார்.
ஆகாஷ் பின்னே வந்த நண்பன், "இவர் ஏன் எழுகிறார்?" என்று நினைத்து கொண்டு பெண்ணைப் பார்க்க, அவனுக்கு சகலமும் ஸ்தம்பித்து விட்டது.
பக்கத்தில் நின்று இருந்தவர்களுக்கு புரியாத நிலை, இவர்கள் எல்லோரையும் விட, இந்த நிகழ்வின் தலைவன் மற்றும் தலைவியின் நிலை???????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top