thazhaikani

 1. THAZHAI KANI

  இது தான் வாழ்வோ?

  "தினம் நூறு திருப்பங்கள் திரும்பிடும் பக்கமெங்கும்" "தித்திப்பாய் சில நொடிகள் தீக்கங்கின் மேல் பல பொழுதுகள்" "தேடல்கள் நிறைவேறிடும் முன்னே கூடுவிடுகிறது நரை" "நலிந்த தேகம் நலம் தொலைத்து நலமாய் முடிக்கிறது தன் வாழ்வை நானிலத்தில் மண் மூடி" "கண்மூடி திறந்திடும் நொடியில் காலனின் பிடியில்" "இது...
 2. THAZHAI KANI

  அபிநய அழகியே

 3. THAZHAI KANI

  உன் ஒற்றை விரலே

  “பற்றுக்கோலாய் உன் ஒற்றைவிரலே கதியென்று பத்துமாதம் சுமந்தவளை புறந்தள்ளி தோள் மீது தூக்கிவளர்த்தவரையும் தள்ளிநிறுத்தி நின் கரம் பற்றி இல்லறம் துவங்க அம்மி மிதித்து மெட்டி பூட்டிய பொற்பாதத்தோடு பிறந்த இடம் விட்டு புது அத்தியாயம் ஒன்றை தொடங்கிட புகுந்த வீட்டின் தலைவாசலில் என்னடியை...
 4. THAZHAI KANI

  மீள் வழி

  “மூடிய முகத்தில் விழியை மட்டும் பார்த்தேன் விழித்திதெழுந்திட முடியவில்லை மீன்விழி அவளில் மீள்வழி இல்லையாம்”
 5. THAZHAI KANI

  செந்நிற ரோஜாவே

  “மலர்ந்திருக்கும் உன்னில் மதிமயங்கி கையில் அள்ளிட அருகில் வந்தேன் என்னை தடுத்து நிறுத்திட உன் முட்களால் காயம் தந்தாய்” “காய்ந்து நீ போகும் முன் என் கார்குழலில் தஞ்சமடைந்திட நான் அழைத்தேன் முட்களில் தடுப்பணை நீ அமைத்தாய்” “ஏனோ? செந்திற ரோஜாவே காதலர்களின் கைகளில்...
 6. THAZHAI KANI

  செங்காந்தாள் பூவே

  "தென்றல் தீண்டிட என் தேகத்தோடு இழைந்தாய் என்னவோ என்று நான் பார்க்க என் முன்னே உன் முகமே செங்காந்தாள் பூவே" "செவ்வண்ணம் எவ்வண்ணம் கொண்டாயோ? உன்னை சிவக்கவைத்தவன் மழைத்துளி மன்னவனோ? விடை சொல்லடி வெட்க வண்ணம்கொண்ட செங்காந்தாள் பூவே"
 7. THAZHAI KANI

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

  “கவிதைகளில் என்னை கவர்ந்தவளே இந்நாள் நீ பூமிவந்த பொன்னாளோ” “கவிமகள் உன் கவியில் காதல் கொண்ட கனியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” “இதழோரம் குறுநகை ஏந்தி எந்நாளும் சூடிடுவாய் நீ வெற்றிவாகை எல்லாம் வல்ல ஈசன் உடன் இருப்பான் உன்னோடு எப்பொழுதும் பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கனி”
 8. THAZHAI KANI

  மயிலிறகோ

  "மயிலிறகோ உன் வரிகள் என்னை வருடிடும் உன் வரியில்" "என் வாழ்க்கையின் வடுக்கள் அனைத்தும் புள்ளியாய் மாறி தொலைவில் ஓடுதே" "வஞ்சி நெஞ்சில் பதியும் உன் வரிகளில் வாழ்ந்திடத்தான் ஆசை வாழ்நாள் முழுமைக்கும்" "இனிமையாய் நீ பேசிட எனை மறக்கிறேனே நானும் ஏன் மன்னவா?" "மயிலறகு போன்ற வார்த்தையில் என்னை...
 9. THAZHAI KANI

  அன்பு ஆபத்தானது

  "இமையோரம் இருக்கும் ஈரம் ஏனடி" "அறியாமை கொண்ட அகம் அழுகிறதோ? அன்பினை எதிர்பார்த்து" "ஏங்கி நிற்கும் அன்பு ஏமாற்றிடும் என்று அறியாது அழுகிறதே கண்கள் அறிந்துகொள்ளடி அனிச்சம் மலரே அன்பு ஆபத்தானது என்று"
 10. THAZHAI KANI

  நினைவேட்டினில்

  "நெற்றி வகிட்டில் நீ சூட்டிய குங்குமம் வீற்றிருக்க இதயம் முழுதும் இன்பத்தில் நிறைந்திருக்க உற்றாரின் வாழ்த்துக்கள் சூழ்ந்திருக்க அந்த ஓர் நொடியில் உன் கண்ணசைவில் வெட்கம் வந்திட நீங்காது உறைந்ததே புன்னகை என் உதட்டினில் மறக்காமல் பதிந்ததே அந்நிகழ்வு என் நினைவேட்டினில்"
 11. THAZHAI KANI

  என் மொழி

  “எரியும் தழல் என் மொழி எவன் எதிர்த்தாலும் எழுந்திடும் என் மொழி கிளையாய் வந்த மொழிகள் கீச்சிட்டு கத்தினும் சிலையாய் நிற்கும் என் அன்னையின் அழகிற்கு ஈடில்லை அவளை கொலை செய்ய துடித்திடும் மனிதனும் குற்றுயிராய் கிடக்கும் வேளையில் தன்னை அறியாமல் உதிர்க்கிறான் அன்னை என அவள் பெயரை...
 12. THAZHAI KANI

  இவன் மனிதனோ?

  "பால் மணம் மாறாவில்லை என அறிந்தும் பசித்த மிருகம் அது புசித்ததே பிஞ்சினை பச்சிளம் குழந்தையை பாலியல் வங்கொடுமை செய்தானே இவன் மனிதனோ?" "மனித உருவில் உலவிடும் மிருகமோ? மீண்டும் ஒரு கொடுமை வேண்டாம் இதுபோல் எனில் வீழ்த்திடுவோ இவ்விஷச்செடிகளை வாள்க்கொண்டே"
 13. THAZHAI KANI

  என்னில் நீ உன்னில் யாரோ?

  "என்னுள்ளே நீங்காமல் நிறைந்திருக்கும் மன்னவனே என் நெஞ்சத்தில் மட்டுமல்ல என் உதிரத்திலும் சுவாசத்திலும் சிறிதளவும் இடைவெளியின்றி செவ்வனே நிறைந்திருக்கிறாயே உன்னை மட்டும் எண்ணி நான் வாட உன் எண்ணத்தில் நிறைந்து உன் வாழ்வில் வானவில்லாய் வரும் வாழ்க்கைத்துணைப்பற்றி நீ எண்ணுவது யாதோ? என்னுள்ளே நீ...
 14. THAZHAI KANI

  மன்னிப்பு மடல்

  மரணவலிக்கு மருந்தாய் மன்னிப்பு மாறிடும் எனில் மறுகணமே மண்டியிடுகிறேன் மன்னிப்பை வேண்டியே செய்த தவறுக்காக
 15. THAZHAI KANI

  முதல் காதல்

  "முகம் அறியா முதல் காதல்" "கோடி உணர்வுகளை கும்மிருட்டிலிருந்து உணர்ந்திட்ட காதல்" "குரல் மட்டும் கேட்டு குத்துச்சண்டையிட்ட காதல் ஒன்பது திங்கள் ஒளிந்து விளையாடிய காதல்" "ஈருடல் ஓருயிராய் உதிரப்பிணைப்பில் உயிர் போகும் வழித்தந்து உள்ளங்கையில் மிதந்திட்டக்காதல்" "ஆயிரம் கைகளில்...
 16. THAZHAI KANI

  ஏனோ?

  "மரணமும் ஏனோ என்னை மறுக்கிறது" "அன்புடைய அப்பாவின் அரவணைப்பில் நான் சென்றுவிட்டால் இடைவிடாமல் என்னை துரத்தும் இன்னல்கள் இல்லாமல் ஆகிடும் என்பதாலோ?"
 17. THAZHAI KANI

  தூது போ மேகமே

  “வடிவம் மாறும் மேகக்கூட்டமே என் எண்ணம் யாவும் மன்னனிடத்தில் உரைக்க என் இதயவடிவம் கொள்ளடி என் இதயத்தில் இருக்கும் அவன் முகத்தை எடுத்தியம்பிடவே நீரோடை அருகில் அவனை அழைத்துச்செல்லடி நிரம்பி வழியும் நீரோடையில் நிறைந்திருக்கும் அவன் முகம் நீக்கவில்லை என் அகம் எனும் ரகசியத்தை...
 18. THAZHAI KANI

  சொல்லடி இயற்கையே

  “வானோடு உறவாடி ஊர்வலம் சென்றிடும் மேகமே உன் பிம்பம் அதை தன்னுள் பொதித்து பிரிவு துயரால் சலசலக்குது அந்த ஆறே பச்சைபுல்வெளியில் மெல்ல உன் கதிர்கள் பட்டிட வெட்கம் கொண்ட நுனிப்புல் தான் வண்ணம் மாறி ஜொலித்திடுதோ சொல்லடி இயற்கையே விதவிதமாய் ஈர்த்திடும் விந்தையதை?”
 19. THAZHAI KANI

  என் கிறுக்கலோ

  "காகிதத்தில் கிறுக்கலாய் ஏதோ எண்ணம் போல் வரைந்தேன் நேரம் செல்லவே என்ன கிறுக்கினேன் என்று பார்க்க இதயத்தில் இருக்கும் இனியவன் உன் முகம் ஓவியமாய் ஒளிருவது தகுமோ என் உயிரே?
 20. THAZHAI KANI

  இனிய இரவே

  இனிய இரவே உன் வருகைக்காக வானம் பார்க்கிறேன் பகல் முழுவதும் விழிமூடுகையில் விலகி இருக்கும் என் மன்னவன் முகம் என் மூடியவிழிக்குள் முன் வந்து நிற்கும் நொடிக்காக

Sponsored

Advertisements

Top