• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் "மயங்காதே மனமே" மில் மயங்கிய என் மனது??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அழகான அருமையான கதையில் மயங்கிய நம் மனம் உங்களின் விமர்சனத்தில் மேலும் கிரங்கி விட்டது... இனி தெளிவது சற்று சிரமமாக இருக்கும்....????????
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
“மயங்காதே மனமே” இப்போது கிண்டிலிலும்(Kindle) என்று முக நூலில் அழகியின் அறிவிப்பைக் கண்டவுடன், நம் தோழியின் கதை கிண்டிலிலா? என்ற சந்தோஷம் பனிச்சாரலாய் மனதில் தூவ, முதல் வேலையாக முழுநாவலாக கிண்டிலில் படித்து முடித்தேன் (ஏற்கனவே ஆன்கோயிங்லயும் படிச்சு முடிச்சது தான்.) கதையை படித்து முடித்ததும் எனக்குள் வந்த சந்தேகம் இதுதான். கதையில் எதைப்பார்த்து மயங்காதே மனமே என்று நம்மிடம் கூறினார் அழகி!

மெல்லிய மயிலிறகால் நம்மை தீண்டியது போல மென்மையான காதல் கதையைக் கொடுத்து அதைப்பார்த்து மயங்காதே மனமே என்கிறாரா? இல்லை கதை முழுவதும் நம் உயிரை உருக்குவது போல அங்கங்கே உரையாடல்களை வஞ்சமின்றி தூவியிருப்பாரே அதைப்பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?

இல்லையில்லை, நான் பெரிய அப்பாடக்கர், என் வாழ்க்கை துணை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து தான் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த அபி முதல் பார்வையிலேயே தன்னையறியாமல் கீத்தாஞ்சலி என்ற டீச்சரிடம் காதலில் விழுந்து கரையேறமுடியாமல் தவித்தானே அதைப்பார்த்து தான் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?

அந்த அப்பாடக்கரின் காதலை அந்த ஆசிரியை நிலவைக்காட்டி உனக்கும் எனக்கும் எட்டாத தூரம் என்று மறுப்பாளே அதைப்பார்த்து மயங்காதே என்றிருப்பாரா? இல்லை அதே நிலவைக்காட்டி பெண்ணவளிடம் காதலை ஒத்துக்கொள்ள வைப்பானே அபி, அந்த அழகில் நம்மை பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ? அழகி!

அதோடு விட்டாரா அம்மணி. ‘ஆன்டி ஹீரோ’ மித்ரனை தன் மாயாஜால எழுத்தால் ஹீரோக்கு ஒருபடி உயரத்தில் கொண்டு போய் நம் மனதில் நிறுத்தினாரே அதைக்கண்டு தான் மயங்காதே மனமே என்று சொன்னாரா? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி..

ஒருவேளை கீத்துவிற்கான அபியின் ‘அம்மாடி’ என்ற அழைப்பில் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
இல்லை அபியின் காதல்பேச்சுக்கு சப்ஸ்டிடுயூட் ஆன செல்பேசியின் காதல் கதையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? இல்லை தாமதமாக வந்தாலும் மித்ரனின் நெஞ்சில் பக்குவமாக பதிந்து போன தாமரையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி...

ஓ...அழகி கதையின் சூப்பர் ஹீரோவான ப்ளாக் ஆடியின் உலாவைக் கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாரோ? சிந்தித்து பார்த்தால் எதுவுமே சிந்தையில் சிக்கவில்லை தோழி. ஏனெனில் முழுக்கதையிலும் மயங்கி போனால் எதில் மயங்கினேன் என்று சொல்ல எப்படி இயலும்?

இப்படி ‘மயங்காதே மனமே’ என்று சொல்லி “மோகனப் புன்னகை “ சிந்தினால் மயங்குவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் எண்ணாதே தோழி...எழுத்துலகில் நீ இருக்கும் வரை எங்கள் மயக்கமும் தொடரும்...
@அழகி
Superr!!
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கதைக்கு மயங்காத மனமும் சுவியின் அருமையான விமர்சனத்தில் மயங்கிவிடுவார்கள். கண்ணியமான எழுத்துக்கு சொந்தக்காரர் அல்லவா அழகி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தங்கள் கதைகளில் அழகி.
நன்றி சித்ரா மா. அழகியின் எழுத்தைப் பற்றி ரொம்ப சரியாகச் சொன்னீங்கம்மா.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அச்சோ? விமர்சனமே எங்களை இப்படி மயக்குதே?? சீக்கிரம் போய் கதையை படிக்கணும். இவ்வளவு நாள் படிக்காம வேஸ்ட் பண்ணிட்டேன் போல.

அற்புதமான விமர்சனம் சகி ??? படிப்பவர்களையும் மயக்குகின்றது???
கண்டிப்பாக படிங்க யுவா:love:
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Hai Suvitha அழகியின் மயங்காதே மனமேயில் மயங்கியது போதாது .....:love:என உங்களின் விமர்சனத்திலும் மயங்கியதே என் மனமே .....:unsure::love:
முழு கதையையும் கவர் பண்ணியிருக்கிங்கப்பா wow super (y)
ஹாய் சீதா:love:
நன்றி பா:)
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அதுவா சுவி...
எஸ் எம் சைட்டில் இது மாதிரியான நண்பர்கள் கிடைப்பார்கள்.
நீ 'மயங்காதே மனமே' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட வார்த்தைகள் அவை.?????????
இந்த பதிலில் கூட என் மனம் மயங்கித்தான் போகிறது:love:
என் செய்வேன் தோழி;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top