• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் இமைக்குள்,'அழகியே '

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
அழகியே...

அட அன்ட்டிஹீரோ ஸ்டோரி யா...

வியப்பே உருவாய் போய் படித்தேன். இலங்கை அங்கே கதைக்களம்...
நாயகன் நாயகிக்கு அன்டிஹீரோவா...?
சரிதான்.
நாயகி அதுக்கு சரி நிகர்.

எவ்வித அலட்டலும் இல்லாமல் ஆழ்கடல் மேல் பயணிக்கும் கப்பல் என்றே கதையும் நகர கப்பல் உயர் அதிகாரியோ கடல் என்று.


கதைக்கான கரு என்னவோ ஓர் வீட்டை மையமாகக் கொண்டிருக்க,காதல் அங்கே வீற்றிருக்க, கதாபாத்திரங்கள் கொஞ்சமாய் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதற்கேட்ப கதை.

நாயகி, அவள் மாமன் மகன் மீதான காதல்...
பெற்றிட முன்னே பெற வழியில்லை...
பெற்ற பின்னே வாழ ?

அதற்கு தடையாய் இடையே அவர்கள் உறவுகளின் சிக்கல்....
மாமன் மகன் எதிர்பார்க்கும் காதல்...

அதை பின்னே எவ்வாறு தன் அத்தை மகளிடம் பெற்றான் என்பதே கதை.

இதில் எப்படி அவன் அன்ட்டிஹீரோ ஆனான். கதை படிக்காத்த்தான் புரியும்.

யாழ் தமிழ் அழகாய் அன்னை மகன் இடையே உரையாடல்கள் ரசித்தேன்...

நாயகனின்,
ஏய் பொண்ணே! ரொம்ப பிடிச்சது.

கதைக்கு கொஞ்சம் கலக்கலாய் captain டோமினிக் . 😍...
நாயகனுக்கு நட்பாய், நல் உள்ளம் கொண்ட நபராய் அறிமுகமாகும் சரவணன்...
நாயகிக்கென்று கொண்ட அவள் பண்புகள் அழகாய்...
நாயகன் அதற்கு ஈடாய்...

எப்போவும் கதையை நீட்டி நீண்டு செல்லாமல் அளவாய், கதை அழகாய், ஆழமாய் அர்த்தம் கொண்டு முடிவு கொடுத்து முடிப்பதே அழகியின் பண்பு...


அழகிக்கு வந்தது
கண்டதும் காதலா...
அழகன் அவன் பால் ஈத்ததா?
அன்னை வழி சொல் ஈரத்ததா?
கிறுக்கல் கை ஏடு தந்ததா?
காதலுக்கு எதிரியா? காதலிக்கு எதிரியா?

காதலால் காதல் கொண்டவனால் (நாயகன் தந்தை)காதல் பிரித்தவர் கொண்டு (குடும்பம்) காதலிக்கு (நாயகி) காதலன்(நாயகன் )எதிரி...


'அழகியே' அழகாய்...
வாழ்த்துக்கள் எழுத்தாளரே...

அன்புடன் இமையி...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top