• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கணவனை கையாள்வதில் மனைவியருக்கு சில வழிமுறைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
  • கணவன் எப்பொழுதுமே அன்பிற்கு அடிமையானவர்கள். கல்யாணம் ஆன புதிதில் கணவன் மீது அன்பு மழையைப் பொழியும் மனைவிமார்கள் போக போக அவர்களுக்கு போதுமான கவனிப்பை கொடுக்க தவறும் போது தான் பிரச்சனை வர துவங்குகிறது. அதே கவனிப்பை கொடுக்க முடியாவிட்டாலும் கணவனை கவனிப்பதில் அதிக முக்கயத்துவம் கொடுக்க முயற்சி எடுங்கள்.

  • கணவன்மார்களுக்கு எப்பொழுதுமே தங்களை hero-வாக மனைவிமார்கள் நினைக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆதலால் கணவன் முன்னிலையில் மற்ற ஆண்களை எப்பொழுதும் புகழாதீர்கள். அது அவர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணும். கணவன் தன்னை தாழ்த்தி கூறினாலும் கூட, "நீ தான் என் hero" என அடிக்கடி கூறிக்கொள்ளுங்கள். இது அவர்களை இன்னும் உற்சாகமாக இருக்க வைக்க உதவும்.

  • உங்கள் கணவர் அருகில் இருக்கும் போது நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆண்கள் எப்பொழுதும் நல்ல வாசனையே விரும்புகின்றனர்.

  • பெண்கள் எப்பொழுதும் அதிகமான வீட்டு வேளைகளில் ஈடுபடுபவர்கள். எவ்வளவு வேலைகள் இருப்பினும் கணவர் வீட்டிற்கு வரும் நேரத்தில் அதே பழைய nighty-யில் நிற்பதை தவிர்த்து, உடை மாற்றி எளிய புன்னகையுடன் வரவேற்று பாருங்கள். அன்று முழுவதும் உங்கள் கணவர் உங்களையே சுற்றி வருவார்.

  • வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க செல்லும் போது, உதாரணமாக, shopping mall, super market போன்றவற்றிற்கு செல்லும் பொழுது பொருட்களை நீங்களே சென்று எடுக்காமல் உங்கள் கணவரிடமே எடுத்துக் கேளுங்கள்.இது போன்ற செயல்கள் நீங்கள் உங்கள் கணவரை மட்டுமே சார்ந்து உள்ளீர்கள் என்பதை அவர்களுக்கு உணர வைக்க உதவும் . அது மட்டுமல்லாமல் உங்கள் கணவருக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர்கள் உணர்வார்கள். இது போன்ற செயல்கள் அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.

  • உங்கள் கணவர் உங்களுக்கு ஏதாவது ஒரு சிறிய உதவி செய்தாலும் அதற்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். அவ்வாறு நீங்கள் நன்றி சொல்வதனால் உங்கள் கணவர் உங்களுக்கு தேவையான சின்னச்சிறு உதவிகளை செய்ய ஆர்வம் கொள்வார். உங்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் மேலும் மேலும் பெற விரும்புவார்.

  • கணவனின் ஆசையை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருங்கள். உடல் சார்ந்த ஆசையாக இருந்தாலும் சரி, மற்ற தேவைகளாக இருந்தாலும் சரி அவற்றிற்கு போதுமான அளவு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை மிகுந்த மன ஒருமையோடு நிறைவேற்றி கொடுங்கள்.

  • "மௌனம்" தான் உங்களது மிகப் பெரிய ஆயுதம். உங்கள் இருவருக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது மௌனமாய் இருந்து விடுங்கள். உங்கள் கணவனுக்கு தேவையான வேலைகளைச் செய்து கொடுத்து விட்டும், மௌனமாய் இருந்து விடுங்கள். "என்ன இது! சத்தம் போட்டாலே மனசு ஆராது , இதுல மௌனமா இருக்கனமா"னு நீங்க கேக்குறது புரிகிறது. நீங்கள் பதிலுக்கு பதில் சண்டையிடும் போது அது பார்க்கும், கேட்கும் உங்கள் குழந்தை மனதளவில் பாதிக்கப்படுகிறது.அது மட்டுமல்ல, இருவரும் மாறி மாறி சண்டையிடும் போது அது இருவரும் பிரியும் அளவிற்கு கொண்டு செல்கிறது.ஆனால் நீங்கள் மௌனமாய் இருந்தீர்களானால் அந்த பிரச்சனையின் வாழ்நாள் அதிக பட்சம் 3 நாட்கள் மட்டுமே. சண்டையிடும் மனைவியைக் கூட ஆண்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் உங்களது மௌனம் அவர்களை உங்கள் முன் மண்டியிட வைக்கும்.

  • உங்கள் கணவர் mobile phone - ல் உள்ள contact - ல் ஏதாவது girl friend - ன் பெயர்கள் இருந்தால் உடனே அதிர்ச்சி ஆக வேண்டாம். சத்தமில்லாமல், அந்த contact- ன் நம்பர் 10 digit - ல் இருக்குமல்லவா? அதை 9 digit - ஆகவோ அல்லது 11 digit - ஆகவோ மாற்றி விடுங்கள். அப்படி நம்பரை சேர்ப்பதாகவோ நீக்குவதாகவோ இருந்தால் 10 நம்பரின் நடுவே சேர்க்கவோ நீக்கவோ செய்யுங்கள்.

  • வயது கோளாரின் காரணமாகவோ அல்லது இனக்கவர்ச்சியின் காரணமாகவோ எல்லா பெண்களுக்குமே பழைய காதல் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கத் தான் செய்யும். ஒன்று நீங்கள் சென்று காதலித்ததாக இருக்கும் அல்லது உங்களைத் தேடி வந்த காதலாக இருக்கும். அது எதுவாகினு்ம் கணவரிடம் ஒரு போதும் கூறிவிடாதீர்கள். அது உங்களது தற்போதைய வாழ்க்கையை நரகமாக்கி விடும். உணர்ச்சி வசப்பட்டுக்கூட உளறி விடாதீர்கள்.

  • ஒரு போதும் கணவனின் குறைகளை எவரிடமும் கூறாதீர்கள். மனிதர்களாகிய அனைவருமே நிறை , குறை இரண்டும் கலந்தவர்களே. முழுமைப் பெற்ற மனிதன் என்று உலகில் எவருமே கிடையாது. கணவனின் குறைகளை சீர்தூக்கி பார்க்கும் முன் உங்களது குறைகளை ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது உங்களது கணவனின் குறை உங்களுக்கு பொரிதாக தோன்றாது.

  • கணவன், மனைவி இருவருமே அவ்வப்போது sexual message - களை பரிமாறிக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் உங்கள் இருவருக்கிடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கும்.

  • கணவன், மனைவி இருவருக்கும் இடையே அதிக பிணக்குகள் ஏற்பட காரணம் குழந்தைகளை தந்தை கண்டிக்கும் போது அதில் தாய்மார்கள் குறுக்கிடுவதால் தான். எப்போழுதுமே உங்கள் கணவன் உங்கள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது குறுக்கிடாதீர்கள். உங்கள் குழந்தை மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறையும் பொறுப்பும் இருக்கிறதோ அதே அளவு இல்லை அதை விட ஒரு பங்கு அதிகமாகவே பொறுப்பும் அக்கறையும் உங்கள் கணவருக்கு இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

    எந்த தந்தையும் தன் குழந்தை தன்னை விட நன்றாக வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்கள் கண்டிக்கும் பொழுது "என் குழந்தைய குற சொல்லாதீங்க, என் புள்ள எது செஞ்ஞாலும் உங்களுக்கு குத்தம் தான், என் புள்ளைய எதுக்கு அடிக்குறீங்க" என்பன போன்ற வார்த்தைகளை குழந்தை முன்பு கணவனிடம் கூறாதீர்கள்.

    அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு தந்தை மீது இருக்கும் மரியாதை குறைவதற்கும், தான் தவறு செய்தாலும் தனக்கு வாதாட தாய் இருக்கிறார் என்ற எண்ணத்தில் உங்கள் குழந்தை தவறான வழிக்கு செல்லவும் நீங்களே காரணமாகி விடுகிறீர்கள். தந்தை கண்டிக்கிறார் அல்லது அடிக்கிறார் என்று உங்கள் குழந்தை உங்களிடம் கூறினாலும் ,"நீ தவறு செய்ததால் தானே உன்னை கண்டிக்குறாங்க, தவறு உன் மேல் தான் " என ஒரு போதும் உங்கள் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுங்கள். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் தன்னுடைய எல்லா ஆசைகளையும் ஒறுத்து வாழும் ஜீவன் உங்கள் கணவர் மட்டுமே.

  • அடுத்ததாக பெண்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சனை என்னவெனில், கணவன் வீட்டில் யாராவது ஒருவர் ஒழுங்காக சம்பாதிக்காதவராகவும், உங்கள் கணவரை எதிர்ப்பார்த்தவராகவும் இருப்பார். அவருக்கு கொடுப்பதால் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். நீங்கள் உங்கள் கணவரிடம் அந்த விஷயத்திற்காக சண்டையிடும் முன் ஒன்றை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.உதாரணமாக உங்கள் கணவர் உங்களுக்கு தெரிந்து கொடுத்தால் ரு.2000 கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சண்டையிடுவீர்கள் என தெரிந்து உங்களுக்கு தெரியாமல் கொடுக்க ஆரம்பித்தால் இரு மடங்காக கொடுக்க ஆரம்பித்து விடுவார். எனவே உங்கள் கணவர் உங்களிடம் வந்து இன்னார்க்கு இவ்வளவு தொகை கொடுக்கப் போகிறேன் எனக் கூறினால் "அப்படியா" என்று மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கணவர் உழைப்பை ஒருவர் உழைக்காமல் இருந்து சுரண்டி திண்பது உங்களுக்கு நிச்சயம் கோபத்தை வர வழைக்கத் தான் செய்யும். ஆனால் அவ்விடத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுவது சாலச் சிறந்தது கிடையாது. அவ்விடத்தில் அமைதியாக இருந்து உங்களுக்கு தெரிந்தே உங்கள் கணவர் கொடுக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு சிறிது சிறிதாக உங்கள் கணவர் கொடுக்கும் தொகையை குறைக்க திட்டமிடுங்கள். உடனே தடுக்க நினைத்தால் அது உங்களுக்கு எதிராக மாறிவிடும். எனவே சிறிது சிறிதாக உங்கள் கணவர் கொடுக்கும் தொகைக்கு செலவுகளை செய்ய வையுங்கள். உதாரணமாக, 5000 ரூ. கொடுக்கிறார் என்றால் 1000 ரூ. க்கு செலவு செய்ய வைத்து விட்டு 4000 ரூ. கொடுக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக உங்கள் கணவர் கொடுக்கும் தொகையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

  • கணவனும் மனைவியும் சேர்ந்து அவ்வபோது ஒன்றாக விளையாடுங்கள். அதுவும் பந்தயம் வைத்து விளையாட பழகிக் கொள்ளுங்கள். அதிலும் உங்கள் கணவன் அதில் ஜெயிக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் கணவன் ஜெயிப்பதில் தான் மனைவியின் வெற்றி உள்ளது. ஏனெனில் உங்கள் கணவனே உங்களது "ஹீரோ". அதுமட்டுமல்ல கணவன் வெற்றியடைந்த பிறகு,அதுவும் மனைவியை வெற்றிக் கொண்டு விட்டோம் என்றால் கணவன்மார்கள் அடையும் சந்தோஷமே தனி தான். அந்த சந்தோஷத்தை கணவனுக்கு கொடுத்து அதை கண்ணார கண்டு மகிழுங்கள். ஏற்கனவே கூறியது போல் கணவன் எப்பொழுதும் தன் மனைவி முன்பு hero-வாக இருக்கவே விரும்புகிறான். நீங்களும் அவர்களை hero - வாகவே இருக்க விடுங்கள்.

  • கணவன், மனைவிக்கிடையே சண்டைகள் வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடித்த, நீங்கள் காதலித்த விஷயங்களை ஒரு பேப்பரில் பட்டியலிடுங்கள். இருவரும் ஒற்றுமையாகும் வரை இவ்வாறு எழுதுங்கள். இரண்டு அல்லது மூன்றே நாட்களில் உங்கள் இருவருக்குமான பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையாவதை காணலாம்.

  • கணவனை மதிக்க வேண்டும், கணவன் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் கணவன் கூறும் எல்லாவற்றிற்கும் உடனே சம்மதிக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் கணவன் தவறான ஒரு வழியை தேர்ந்தெடுத்தால் அதற்கும் உடனே சம்மதம் சொல்லிவிடாதீர்கள். உதாரணமாக, உங்கள் கணவர் அளவுக்கு மீறிய கடனுக்கான வழியையோ அல்லது உங்கள் கடன் சுமையை அதிகரிக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்தால் உடனே உங்கள் கணவர் செய்யும் செய்கைகளுக்கு சம்மதம் தெரிவிப்பது போல் இருந்து விடாதீர்கள். அது தவறான வழி என்பதை சுட்டிக் காட்டவும் மறவாதீர்கள்.
    உங்கள் கணவர் தவறான முடிவை எடுக்காமல் பாதுகாப்பதும் உங்கள் மீதான கடமையாகும். அதே போன்று சண்டையிட்டு தான் உங்கள் கணவரை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கூறியது போல் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு உங்கள் கணவரை வழிக்கு கொண்டு வரலாம்.

    அதே போன்று எந்த ஒரு முடிவையும் உங்களது சம்மதம் இல்லாமல் எடுக்காத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

  • கணவன், மனைவி இருவரும் கல்யாணம் ஆன புதிதில் ஒன்றாக குளித்து இருப்பீர்கள். நாட்கள் செல்ல செல்ல கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருவரும் ஒன்றாக குளிப்பதை தவிர்த்து இருப்பீர்கள். அவ்வாறு அல்லாமல் வாரத்தில் ஒரு முறையாவது கணவன் , மனைவி இருவரும் ஒன்றாக குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது தான் கணவன் மனைவி இடையே அந்நியோநியம் அதிகரிக்கும்.

  • கணவன், மனைவி இருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு வாய் உணவேனும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டும். கணவன் மனைவி இருவருக்குமிடையே அன்பு நிலைத்திருக்க தினமும் உணவு ஊட்டும் வழக்கத்தை கையாளுங்கள். இந்த பழக்கத்தை கையாளும் போது கணவன், மனைவிக்கிடையே காதலை அதிகரிக்கிறது.
    இந்த பழக்கம் கணவன்,மனைவி இருவருக்குமிடையே அன்பை அதிகரித்து, பிணக்குகள் வருவதைக் குறைக்கிறது. அவ்வாறு பிணக்குகள் வந்தாலும், உடனே இருவரும் சமாதானம் ஆகிவிடும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஊட்டிவிடும் பழக்கம்.

    இருவரும் குழந்தைப் பெற்று அவர்களும் குழந்தைப் பெற்றுவிட்டாலும் கூட நீங்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க மறவாதீர்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பழக்கம்.










 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top