• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nalini sri. p

புதிய முகம்
Joined
Jan 1, 2019
Messages
6
Reaction score
36
Location
Salem
உள்ளம் – 3

நந்தினி உலகை விட்டு சென்று ஒரு மாதம் என்ற நிலையில் அத்தை சுபத்திரா மற்றும் அர்ஜுனின் தேறுதல்களால் ஓரளவிற்கு தான் அன்னை இறப்பிலிருந்து வெளிவந்த அபி யோசிக்க ஆரம்பித்தாள் அவள் முகம் எப்பொழுதும் ஒருவித யோசனையில் இருபதை கண்டு அர்ஜுனும் சுபத்திராவும் அவளிடம் பேச முடிவு செய்து அவளை நாடி சென்றனர்

தனது அறையில் யோசனையின் பிடியில் இருந்த அபியை கண்டு சுபத்திராவும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அவளை நெருங்கி அவளின் தோல் மீது கை வைக்க அதில் நிகழ்வுக்கு வந்தவள் இருவரையும் கேள்வியாக ஏறிட சுபத்திரா “அம்மு ஏன் எப்பவும் ஒருவித யோசனைலே இருக்க நந்தினி நம்மை விட்டு சென்றதில்லிருந்து இப்பவரை நீ கம்பனிக்கும் போகவில்லை அவ இல்லாதது நமக்கு பெரிய இழப்புதான் அதுவும் எனக்கு என்னுடைய உரியினும் மேலானவள் அதோடு எனக்கு வாழ்வளித்தவள் அர்ஜுனிர்க்கு அப்பா இல்லாத குறையை அவள்தான் தெரிய விடாமல் செய்தவள்

அவர் அவ்வாறு சொல்ல அம்மு அத்தை என்ன பேச்சு பேசுறிங்க வாழ்க்கை தந்தவங்க அது இது என்று அம்மா என்னிடம் சொல்லி இருகாங்க நீங்கலும் அச்சுவும்தான் அம்மாவிற்கு அடைக்கலம் அளித்தவர்கள் என்று அதனால் இப்படி இனி பேசாதீர்கள்

அது உன்னுடைய அம்மாவின் பெருதன்னை மா உண்மையில் சாக துனித்த என்னை மீட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் புகுத்தி இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் அனைவரும் மதிக்கும் படி செய்தவள் நந்தினிதான்

அர்ஜுன் “அம்மா என்ன சொல்றிங்க நீங்க சாக போனிங்களா”

ஆமா அர்ஜுன் உன்னுடைய அப்பா இறந்த பின்பு ரொம்ப கஷ்ட்டபட்டேன் உனக்கு ஒருவேளை சாப்பாடு கூட என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை அந்த நிலையை சரி செய்யவும் வழி தெரியாமல் உன்னையும் என்னோடு அழைத்து கொண்டு ரயிலில் விழுந்து சாக எண்ணி ரயிவே நிலையத்தை அடைந்து ரயில் வரும் பாதையில் நின்றேன் அப்பொழுது நந்தினி எங்கிருந்து என்னை பார்த்து வந்தால் என தெரியவில்லை வந்து என்னை தடுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் அதோடு விடாமல் என்ன காரியம் செய துணிந்தாய்

சுபத்திரா “என்னை எதற்கு தடுக்கிறாய் என்னால் என் மகனின் பசியை கூட ஆட்ற முடியவில்லை நான் இருந்து என்ன இல்லாமல் போனால் என்ன”

அதற்கு இந்த பிஞ்சு என்ன செய்வன் இவனையும் சாகடிக்க பார்க்கிற

நான் இல்லாமல் இவனை யார் பார்த்து கொள்வார்கள் அதனால் என்னுடனே இவனையும் கூட்டி செல்கிறேன்

முட்டாள் தனமாக பேசாதே சாவதற்கு துணிந்த நீ அதே போல் வாழவும் துணித்து இருக்க வேண்டும் என கூறி தன்னோடு வருமாறு அழைதால் அதன் பின் அவளுக்கு இங்கு யாரையும் தெரியவில்லை தன்னுடைய கை,காதுகளில் இருந்த நகையை அடமானம் வைத்து பிகவும் எளிமையானவர்கள் வசிக்கும் பகுதியில் யார் யாரிடமோ பேசி ஒரு வீடு பிடித்து எங்களையும் அவளுடன் தங்க வைத்து கொண்டாள்

அதன் பின் மீதி இருந்த பணத்தை கொண்டு சிறியதாக ஒரு காய்கறி கடை வைத்தால் அதை நானும் அவளும் பார்த்து கொண்டோம் நாங்கள் வசித்த பகுதியில் கடைகள் அதிகம் இல்லாததாலும் வேலைக்கு செய்பவர்கள் அதிகம் வசித்ததாலும் வியாபாரம் தொய்வின்றி சென்றது அதோடு வீட்டிற்க்கே சென்று கொடுக்கவும் செய்தோம் எல்லாம் அவளுடைய யோசனைதான் அங்கு இருந்த இரண்டு நாளில் அங்குள்ள நிலையை அயிந்து கடையை வத்துள்ளால்

அதன் பின் மூன்று மாதம் கழித்து வளுடைய வயிறு லேசாக வெளியே தெரிய ஆரம்பிக்கவும் என்ன என்று நான் கேட்டேன் அவளுக்கு கர்ப்ப காலத்தில் வரும் வந்தி மயக்கம் எதுவும் இல்லை அதனால் எனக்கு தெரியவில்லை நான் கேட்டதற்கு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தான் கருவில் இருக்கும் குழந்தைக்காக மட்டுமே தான் வாழ்வதாகவும் கூறினாள் ஆனால் அவளுடைய வாழ்க்கையை பற்றி எதுவும் கூறவில்லை

அதன் பின் வியாபாரம் நன்றாக செல்லவும் மேலும் கொஞ்சம் கடன் வாங்கி வேறு ஒரு இடத்தில் சிறிய கடை ஒன்று ஆரம்பித்தோம் எங்கள் வியாபாரம் பெருக பெருக நீயும் உன் அன்னை வயிற்றில் வளர்ந்து வந்தாய் நீ பிறந்த பிறகு அந்த மருத்துவமனையில் வைத்து தனது வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினால் அதோடு பணம் இல்லா ஒரே காரணத்திற்காக என்னை துரத்தினார்கள் எனது மகளையும் அவ்வாறு வளர விடமாட்டேன் அவள் பெறும் பணம் உடையவளாகவும் அதோடு குணம்உள்ளவளாகவும் வளரவேண்டும் அவ்வாறுதான் அவளை நான் வளர்ப்பேன் என்றாள்

நீ சிறிது வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கவும் முழுவீச்சில் பணம் சம்பாதிக்க இறங்கினாள் அதோடு வெறும் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த என்னை கல்லூரியில் சேர்த்து படிக்கவும் வைத்து செய்யும் தொழிலில் என்னையும் ஒரு பக்குதாரர் ஆக்கினாள் அதோடு அர்ஜுனையும் அவளது பொறுப்பில் எடுத்து கொண்டாள் இவ்வாறு அவள் உழைப்பில் உருவானது இந்த A&A இண்டஸ்ட்ரீஸ்

இதை கேட்ட அம்மு அர்ஜுன்னும் பெருமையாக உணர்ந்தனர் தாங்கள் நந்தினியின் வளர்ப்பு என்று ஆம் அர்ஜுனை வளர்த்தது அவர்தான் அவனுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றியதும் அவர்தான் அவன் உணரும் முன்பே அவனுடைய தேவை அறிந்து அதை செய்து விடுவார் அவன் மருத்துவம் பயின்றதுவும் அதுபோல்தான் அவனுக்கு மருத்துவ துறையில் ஆர்வம் இருப்பது கண்டு அவனை படிக்க வைத்ததோடு அவனுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டினார்

நந்தினி இறந்தது அம்முவின் அளவிற்கு அர்ஜுனையும் தாக்கினாலும் தான் உடைந்தால் அம்முவை தேட்டற முடியாது என தன்னை நிலை படுத்தி கொண்டான் அதே போல் அம்முவையும் தேற்றிவிட்டான் இதோ அவள் அன்னை இழப்பை விட்டு வெளியில் வந்து யோசிப்பதும் அவனால்தான்

சுபத்திரா சொல்லி முடிக்கவும் பெருமையாக உணர்ந்தவர்கள் பின் அதை விடுத்து மற்றும் ஒரு கேள்வி அவர்கள் உள்ளத்தை ஆட்கொண்டது இது அம்முவின் மனதில் முன்பே தோன்றி அவளை உறுத்தி கொண்டிருப்பதும் அந்த கேள்விதான் அர்ஜுனே அதை கேட்டான் தனது அம்மாவிடம்

அம்மா எனக்கு ஒரு கேள்வி “அத்தை இங்கு வந்த பின் மீண்டும் அங்கு போகவில்லையா அதோடு அத்தை கருவுற்றது தெரிந்தும் அவரை வெளியே அனுப்பி விட்டனரா”

நந்தினிக்கு முதலில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியாது ஆனால் அது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லது என சொன்னாள் அவளோடு குழந்தையையும் தவறாக பழி சொல்லவிட்டால் அவளால் தாங்க முடியாது என்றும் கூறி இருக்கிறாள்

நீ கேட்டாய் தானே மீண்டும் போகவில்லையா என நான் வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்தேன் இப்பொழுது உன்னுடைய கணவருக்கு உண்மை தெரிந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என அம்முவிற்கு ஒரு வயதிற்கும் போது ஆனால் நான் அதை செய்திருக்க கூடாது என காலம் கடந்து உணர்கிறேன்

அப்படி என்ன நடந்தது அத்தை என்றால் அம்மு

நான் வற்புறுத்த அவளும் சென்றாள் ரவியை காண ஆனால் அங்கோ “இவளை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு இவள் வேறு ஒருவனுடன் சென்று விட்டதாகவும் அதனால் தங்களுடைய குடும்ப மானம் போய் விட்டதாகவும் நாடகம் ஆடி நந்தினியின் அண்ணனை ரவியின் தங்கை சுமலவிர்க்கு கட்டிவைத்து விட்டனர் அதோடு ரவிக்கும் அடுத்த மூன்று மாதத்திலே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததோடு அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது

அங்கு சென்ற போது நந்தினி தன்னுடைய MDயை சந்தித்து உள்ளாள் அவர் முலமாக தெரிந்தது ரவிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த பெண் ரவியின் தொழிலில் பங்குதாரராக உள்ளவர் மகள் லஷ்மி என்றும் அவள் திருமணம் செய்தால் ரவியை மட்டுமே செய்து கொள்வேன் என பிடிவாதம் பிடித்து அவர் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் பயபுறுத்தியாதால் மகளின் மீது அதிக அன்பு கொண்ட அவளின் தந்தை நந்தினியின் அத்தையை சந்தித்து பேசி இருக்கிறார் அதனாலே நந்தினியை வெளியே அனுப்பி இருக்கிறார்கள் அதோடு ரவிக்கும் சிறிது அப்பெண்ணின் மீது ஈர்ப்பு இருந்துள்ளது என்றும் தெரியவந்தது

அதை அறிந்தது முதல் நந்தினி இன்னும் வாழ்க்கையின் மீது பிடிப்பற்று போனாள் தானே உயிரை போக்கி கொள்வது கூடாது என்று உனக்கு மற்றும் அர்ஜுனுக்காகவே வாழ்ந்து வந்தாள் அதனாலே நீங்கள் இருவரும் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளதால் தன்னுடைய சிகிச்சைக்கு ஒத்துகொள்ளவில்லை தற்கொலை செய்து கொள்வது கூடாது என நினைப்பவள் தனக்கு வந்த இருதய நோயை கடவுள் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதினாள் அதோடு அவள் உரியினும் மேலாக காதலை செலுத்தியவர் அவளுக்கு இளைத்த துரோகத்தை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை அது அவளின் மனதை அரித்து கொண்டே இருந்தது

இவற்றை கேட்ட அம்மு,அச்சுவின் மனமும் நந்தினியை எண்ணி மிகுந்த பிரம்மிப்பும்,அவரின் முடிவை நினைத்து வருத்தமும் கொண்டது

அம்மு “அத்தை அந்த MD இப்பொழுது எங்கு இருக்கிறார் அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா”

அவர் அவருடைய தொழிலோடு சேர்த்து நம்முடைய கம்பனியின் தமிழ்நாட்டின் செயல்பாடுகளை கவனித்து கொள்கிறார் நந்தினியின் இறப்பு சடங்கிற்கு கூட வந்திருந்தார் அப்பொழுது நீங்கள் இருவரும் மிகவும் மனம் உடைந்து காணபட்டதால் அவரை பார்க்கவில்லை

அம்மு “அவரை நான் பார்க்க வேண்டும் வர முடியுமா என கேளுங்கள்”

அச்சு “அவரை எதற்கு வர சொல்கிறாய்”

அவர் வரட்டும் சொல்கிறேன்

காதலில் கரையும்.............................

sorry for the delay friends and read this update tell your comments to me paa
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
நளினி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு பெண்ணின் வாழ்வை
அழிக்க இன்னொரு பெண்ணே துணிந்திருக்கிறாளே
அதற்கு மற்ற பெண்களும்
கணவனும் கூட்டுக் களவாணிகளா?
என்ன அராஜகம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்தவளின் கணவன் என்ன பொம்மையா?
அந்த லக்ஷ்மி கேட்டதும்
அவளோட கூமுட்டை அப்பா
வாங்கிக் கொடுத்திருக்கிறானே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நந்தினியின் அண்ணனை
ரவியின் தங்கை நிச்சயம்
மணமுடிப்பாள்ன்னு நான்
எதிர்பார்த்தேன்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சுயநலவாதிகள்
நந்தினியை அழித்து அவர்கள்
வரையில் எல்லாம் நடத்திக்
கொண்டார்கள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உன் தாய் நந்தினியை
இந்தளவு பாடுபடுத்திய
யாரையும் விடாதே,
அபிதாப் பெண்ணே
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
எந்த காலத்திலும் பெண் தான் பெண்க்கு எதிரி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top