• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 39(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 39

ஸாரி..... ஸாரி.... ஸாரி ப்ரெண்ட்ஸ்.... வழக்கம் போல எபி செம லேட். கோவிச்சிகாதீங்க....

அத்தியாயம் 40

“ மணி பதினொன்னு ஆகுது? இன்னும் தூங்கலையா சரா?”

“ இதோ இன்னும் கொஞ்சம் தான் இருக்கு சாச்சி.... சீக்கிரம் எழுதி முடிச்சிடுவோம்” சபூரா மைசராவிடம் கேட்ட கேள்விக்கு ரிதா பதில் கூறினாள்.

தன்னை நிமிர்ந்தும் பாராமல் எழுதுவது போல பாசாங்கு செய்யும் மகளை சில நொடிகள் பார்த்து விட்டு திரும்பி நடந்தார் சபூரா. பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் வழிய விட்டவர், தன்னறைக்கு சென்று படுத்தார். தன் மகள் தன்னை விட்டு விலகி போவது போல உணர்ந்த நொடி அவர் மனம் எங்கும் வலியின் சாயல்.

மைசரா திருச்சி சென்று வந்த இந்த ஒரு மாதத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருந்தன..... அவளிடமும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.....

ரமீஸ் – மிஸ்பா தம்பதி லண்டன் கிளம்பியிருந்தனர். பாஸ்போர்ட் வேலையாக சென்னை வந்தவர்களுக்கு ரகசிய விருந்து வைத்து தன் திருமணப் பரிசை கொடுத்திருந்தார் சபூரா.

மைசராவும் ரிதாவும் ரிஸ்வியின் பரிந்துரை படி M.Sc (APPLIED ARTS) மேற்படிப்பில் சேர்ந்திருந்தனர். துணியின் வகைகளையும், உற்பத்தி முறைகளையும் ஆர்வமாக கற்றுக் கொண்டிருந்தாள் நம் சரா.

ரிஸ்வி சென்னையில் தன் லட்சிய கடையை இனிதே திறந்திருந்தான். தன் புது முயற்சிக்காக விதவிதமான துணி வகைகளை வாங்க நாடு நாடாக பறந்து கொண்டிருந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக மைசரா சபூராவை திருச்சிக்கு வந்தே ஆக வேண்டும் என கூறி அதிர வைத்திருந்தாள். போகவே மாட்டேன் என்றவள் இப்போது அங்கே தான் நாம் வாழ வேண்டும் என வசனம் பேசுகிறாள். வீட்டை விட்டு வந்த காரணத்தை கேட்டு துளைக்கிறாள். குற்றத்தை நிருபிக்காமல் வெளியேறியது தவறு என சாடுகிறாள். சபூராவின் தங்கையான ஹாஜிராவிடம் விசாரணை செய்கிறாள்.

ஆனால்..... ஆனால்..... எல்லாவற்றுக்கும் பதில் சபூராவின் மௌனம் மட்டுமே....

மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் இருந்தும் பேசா மடந்தையாக மகள் முன் நிற்கிறார். தங்கையிடமும் எந்த உண்மைகளையும் கூற கூடாது என கட்டளையிட்டிருந்தார்.

அவளது ஒவ்வொரு முயற்சியும் தோற்று போக, தாயின் ஆயுதத்தையே சராவும் கையில் எடுத்துவிட்டாள். மௌனம்..... ஒரு மாதம் ஆகிறது அவள் தாயோடு பேசி.....

“இப்போது என்ன வந்துவிட்டது இவளுக்கு? ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறாள்? ஆடம்பரமான வாழ்க்கைக்கும், வசதிக்கும் ஆசைபடுபவள் இல்லையே என் மகள்.... குறையாத அன்பும், வற்றாத பாசத்தையும் நான் கொடுக்கவில்லையா? ஏன் அவள் மனம் அந்த வீட்டை நாடுகிறது?” மகளின் மாற்றத்தில் ஒரு புறம் தாய் மனம் துடிக்க,” மீண்டும் அந்த வீட்டில் என்னால் வாழ முடியுமா?.... அந்த வார்த்தைகளை என்னால் கேட்க முடியுமா?... அதுவும் என் மகள்கள் முன்.... அய்யோ என்னால் முடியவே முடியாது.” மறு புறம் சபூராவின் காயங்கள் வருடங்கள் கடந்தும் ஆறாமல் ரணமாய் வலித்தது.

ஆனாலும் மகளோடு சற்று மனம் திறந்து பேச வேண்டும், தன்னிலையை ஓரளவாவது விளக்க வேண்டும் என எண்ணியபடியே உறங்கி போனார் சபூரா.

காலை நேரம்.....

எல்லா வீடுகளை போலவே சபூராவின் வீடும் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது.

சபூரா சமையலறையில் சுழன்று கொண்டிருக்க, இளையவர்கள் இருவரும் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தனர். கண்ணாடி முன் நின்று முகத்திற்கு பவுடர் பூசிக் கொண்டிருந்தாள் சரா. அவளுக்கு பின்னால் நின்று ரிதா தலைவாரிக் கொண்டிருந்தாள்.

ரிதா, “ அந்த பவுடர இன்னும் கொஞ்சம் பூசிக்கோ. அப்போ தான் அழுது வீங்கின முகம் வெளியே தெரியாது.” என்றதும் அவளை திரும்பி முறைத்தாள் சரா.

“ உண்மைய தானே சொன்னேன். என்னை எதுக்கு முறைக்கிற. நைட் புல்லா நீ அழுதது எனக்கு தெரியாதா” என இவள் கண்ணை உருட்டவும் அவளது கண்கள் கலங்கியது.

“ ஏன்லா இப்படி நீயும் கஷ்டப்பட்டு சாச்சியையும் கஷ்டப்படுத்துற? போய் பேசு சரா” ஆதரவாய் அவள் தோளில் அழுத்தி கூறினாள்.

“ ம்ஹுகும்.... என் உம்மா மேல இருக்குற பழிய போக்காம நான் ஓயமாட்டேன் ரிதா. நீ வேணா பாரேன் அவங்க சீக்கிரமே இத பற்றி என்கிட்ட பேசுவாங்க” வேதனையில் முகம் சுருங்கினாலும் கண்கள் நம்பிக்கையாய் மின்னின.

“ அவங்க பேசும் போது பேசட்டும் சரா. போதும் சாச்சிய ரொம்ப கஷ்டப்படுதாத.... நீங்க ரெண்டு பேரும் பேசாம இருந்தா என்னால தாங்கமுடியல சரா.... ஏன்டா உன்னை திருச்சிக்கு கூட்டிட்டு போனோம் னு இருக்கு.” என ரிதா கண் கலங்கினாள்.

“ ப்ளீஸ்.... அழாத ரிதா...”

“ அப்போ நீ போய் சாச்சி கிட்ட பேசு”

மைசராவின் உறுதியை சில கண்ணீர் துளிகளில் உடைத்து விட்டாள் ரிதா.

“ சரி.... நா போய் பேசுறேன்... இப்போவே பேசுறேன்... போதுமா அழாத” என அவளை சமாதானம்படுத்தினாள்.

“ கிளம்பிட்டீங்களா பிள்ளைகளா மணியாச்சு.....” அறைபக்கம் குரல் கொடுத்தபடியே டிபன் பாக்ஸை மூவரின் பைகளில் திணித்து விட்டு புர்காவை அணிந்தார் சபூரா.

சார்ஜில் கிடந்த தன் அலைபேசியை எடுத்து எதேச்சையாக பார்க்க இரவே ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. மீண்டும் இளையவர்களுக்கு குரல் கொடுத்து விட்டு வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தவரின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றது. அதிர்ச்சியும் ஆத்திரமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவியது. நொடிகள் நிமிடமாகியும் இமைக்கவில்லை இமைகள்.

“ உம்மா....” ஒரு மாதத்திற்கு பின் அன்னையை அழைத்தபடி ஆசையாக அருகில் வந்து நின்ற மைசராவின் கன்னத்தில் இடியென இறங்கியது சபூராவின் கரம்.

“ இப்போ புரியுது நீ ஏன் திருச்சி போகணும் னு ஒத்த கால்ல நிற்குறே னு?” என்றவரின் கைகள் சராவை சராமாரியா அடிக்க துவங்கியது.

முதல் அடிக்கே விக்கித்து போனவள் அடுத்தடுத்த அடியில் அதிர்ந்து போனாள் சரா. நடப்பதை சற்றும் எதிர்பாராத ரிதா ஓடி வந்து தடுத்தாள்.

“ சாச்சி.... சாச்சி.... என்னாச்சு சாச்சி? அவள ஏன் இப்படி போட்டு அடிக்குறீங்க? ப்ளீஸ்.... விடுங்க சாச்சி...” அவரது அடியிலிருந்து மைசராவை விலக்கியவளின் முதுகிலும் சில அடிகள் விழுந்தது.

அவரிடமிருந்து மைசராவை பிரித்து அறைக்குள் தள்ளி பூட்டினாள் ரிதா.

“ அவள விடு.... அவள வெளியே விடு ரிதா... அவள கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது.” சபூரா முற்றிலுமாக நிதானத்தை இழந்திருந்தார்.

“ முதல்ல என்ன நடந்தது னு சொல்லுங்க சாச்சி.... ப்ளீஸ் இப்படி வந்து உட்காருங்க. ” அவரை ஆசுவாசபடுத்த முயன்றாள்.

“நா எப்படி சொல்லுவேன்? என்னான்னு சொல்லுவேன் ? உன்னை நம்பி தானே ரிதா அவள அனுப்பினேன். இப்படி ஒரு காரியத்தை அவ எப்படி செஞ்சா. நீயும் இதுக்கு உடந்தையா?” வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவருக்கு தான் இன்னும் காரணத்தை கூறவில்லை என்பது கூட உறைக்கவில்லை.

மைசரா வெளியே வரும் போது சபூரா அலைபேசியை பார்த்திருந்தது நினைவு வர, ரிதா ஓடிச்சென்று அவரது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

அவளுக்கே ஒரு நொடி மூச்சு நின்றுவிட்டது. அந்த அலைபேசியில் அவள் கண்டது ஒரு புகைப்படம்.... ரிஸ்வியும் மைசராவும் அருகருகேபடுத்து தூங்கி கொண்டிருக்கும் விபரீத படம்..... விபரீதம் தெரியாமல் இருவரும் உறங்கி கொண்டிருக்கும் படம்... கைகள் நடுங்க அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக அல்லவா திரிந்தார்கள்? எப்போது காதலித்தார்கள்? அப்படியே காதலித்திருந்தாலும் கூட இப்படி.... ஒரே படுக்கையில்.....” ரிதாவிற்கு இதை எப்படி எடுத்துக் கொள்ளுவதென்றே தெரியவில்லை. இருவருமே அவளின் அன்பிற்குரியர்கள். இருவரை பற்றியும் நன்றாக புரிந்தவள். இதை யார் அனுப்பியது என ஆராய்ந்தாள். புது எண்ணாக இருந்தது.

தாயின் அடியில் உடலை விட மனம் அதிகம் வலித்தது சராவுக்கு. என்ன நடந்தது.... என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. தாய் வெளியே இன்னும் கத்திக் கொண்டிருப்பதை கேட்டவள் எழுந்து சென்று கதவை தட்டினாள்.

“ அய்யோ இவ வேற...” என ரிதா தலையில் அடித்துக் கொள்ள, சபூரா தான் கதவை திறந்து உள்ளே சென்றார்.

“ எப்படி டி இப்படி ஒரு காரியம் செஞ்சே? எங்கிருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி” அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து உலுக்கினார்.

“ அவள விடுங்க சாச்சி.... என்ன நடந்ததுனே சொல்லாம அவள கேட்டா என்ன சொல்லுவா?”

“ என்ன நடந்ததுனு வேற இவளுக்கு சொல்லனுமா? ஏன் கூட படுத்தவளுக்கு தெரியாதா?” அமிலத்தில் தோய்த்த வார்த்தை ஒன்று வந்து விழ, குமரிகள் இருவருமே துடிதுடித்து போயினர்.

“ உம்மா....” அவரது ஒவ்வொரு அடியையும் காரணமே தெரியாமல் அமைதியாக வாங்கி கொண்டவள், இந்த வார்த்தையின் கனம் தாளாமல் அலறிவிட்டாள்.

“ ச்சீ.... இன்னொரு முறை என்னை அப்படி கூப்பிடாத.... அய்யோ.... உன்னை இவ்வளவு கேவலமானவளாவா வளர்த்து வைச்சிருக்கேன்.... நான் தோத்து போயிட்டேனே....மொத்தமா தோத்து போயிட்டேன்... என் இத்தனை வருஷ கண்ணியம், மானம் மரியாதை எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டாளே” வேதனை தாங்காமல் அரற்றியவர் அப்படியே கால்கள் மடங்கி தரையில் அமர்ந்துவிட்டார்.

மைசராவிற்கு தலையே சுற்றியது. என்னவாயிற்று என்பதை போல ரிதாவை பார்த்தாள். ரிதா சபூராவின் அலைபேசியை சங்கடமாய் அவளிடம் காண்பித்தாள்.

திருச்சி சென்று இறங்கிய இரவு தவறுதலாக ரிஸ்வியின் அறையில் சரா படுத்துறங்கிய போது எடுக்கப்பட்ட படம் அது என புரிந்தது.” இது எப்படி? “ என்பது போல் சராவின் புருவங்கள் யோசனையில் சுருங்கின. இந்த படத்தை ரிஸ்வியை தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது. அன்றைய நாள் அவள் மனத்திரையில் ஓடியது. துயில் கலைந்து அவள் விழிக்கும் போது அவன் தூங்கவில்லையே. அவன் போதையில் முத்தமிட வரும் போது தானே இவள் விழித்தாள். அதற்கு முன் போட்டோ எடுத்திருப்பானோ? ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது என தன்னை மிரட்டியவன் ஏன் போட்டோ எடுத்தான்? என அவள் மனம் குழம்பியது.

இன்னும் சபூரா ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்க,” ஏன் சாச்சி.... நம்ம சராவ பத்தி நமக்கு தெரியாதா? இது ஏதோ போட்டோ ஷாப் பண்ணினதா இருக்கும்” என யூகமாக ரிதா கூறவும்,

“ அப்படியும் இருக்குமோ?” என எண்ணியவரின் மனம் சற்றே நிதானித்தது.

புலம்பலை நிறுத்தி விட்டு,” அப்படியா சொல்ற ரிதா? அப்ப.... அப்ப இது உண்மையில்லையே.... அய்யோ... சராமா.... தங்கம்.... உன்னை சந்தேகபட்டுடேனே.... மன்னிச்சிடுமா... மன்னிச்சிடு சரா....” என சடுதியில் மாறி கெஞ்சினார் சபூரா.

ஆனால் மைசராவின் முகமோ தெளியவேயில்லை. அவள் மனம் முழுதும் ரிஸ்வியின் நினைவே ஆக்கிரமித்திருந்தது. அந்த போட்டோவ ஏன் எடுத்தான்? அவள் மனதில் இதே தான் ஓடிக் கொண்டிருந்தது.

மகளின் தெளியா முகத்தை கண்டவர், “ ஏன் சரா எதுவுமே பேச மாட்ருக? இதெல்லாம் பொய் தானே? சொல்லு சரா.... இது பொய்யான போட்டோ தானே.... உம்மா கிட்ட இது பொய் னு சொல்லு மா....” என அவளை உலுக்கினார். மைசரா சொல்லணா துயரத்தை முகத்தில் தேக்கி அன்னையை ஏறிட்டாள். அவரது கண்களை நோக்கும் சக்தி இல்லாமல் தலைகுனிந்தவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“ சரா.... ஏன் அழுற.... சாச்சி கிட்ட பொய் னு சொல்லு சரா....” ரிதா அவளை உந்த,

“ நீ அழுறத பார்த்த என் வயிற்றெல்லாம் கலங்குதே.... இப்போ சொல்ல போறியா இல்லையா சரா” என கத்தியவர் அவளது கரத்தை எடுத்து தன் தலை மீது வைத்து கொண்டு,” என் மேல சத்தியமா சொல்லு இந்த போட்டோ உண்மையா பொய்யா?” என வினவ

“ உண்மை தான் மா” தலைகுனிந்தே சரா கூற அப்படியே அமர்ந்துவிட்டார் சபூரா. ரிதாவும் அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

தன் இத்தனை வருட வாழ்க்கையை ஒற்றை வரியில் கொச்சைபடுத்தி விட்டு நிற்கும் மகளை நிமிர்ந்து பார்க்க கூட அறுவறுப்பாக தோன்றியது. அதுவும் யார் முகத்தில் முழிக்கவே கூடாது என வைராக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தராரோ அவளின் மகனோடு கூத்தடித்து வந்திருக்கும் மகளை என்ன செய்வது?

“ நான் இத நம்ப மாட்டேன் சரா. எனக்கு உன்னை பற்றியும் தெரியும் ரிஸ்வி மச்சானை பற்றியும் தெரியும். இது..... இது எப்படி நடந்தது?” என கேட்டாள் ரிதா.

“ அவள உன் பொறுப்புல தானே அனுப்பினேன் ரிதா. உனக்கு தெரியாம எப்படி நடந்திருக்கும்” என குற்றம் சாட்ட,

“ உம்மா.... அவளுக்கு இது தெரியாது மா. அவ அப்போ மாத்திரை போட்டு தூங்கிட்டு இருந்தா.” என சரா அவளுக்காக பரிந்து பேசினாள்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
சரா, ரிஸ்வி படம் எப்படி சரா போனுக்கு வந்தது, அதை பார்த்து சபூரா கோப படுவதும் அவளை அடிப்பதும் அவர்களை ரிதா சமாதான படுத்துவதும், இந்த வேலையை யார் செய்திருப்பா, மன்சூர்ரா இருக்குமோ?
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சரா, ரிஸ்வி படம் எப்படி சரா போனுக்கு வந்தது, அதை பார்த்து சபூரா கோப படுவதும் அவளை அடிப்பதும் அவர்களை ரிதா சமாதான படுத்துவதும், இந்த வேலையை யார் செய்திருப்பா, மன்சூர்ரா இருக்குமோ?
புகைப்படம் சபூரா போனுக்கு வந்திருக்கு.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
கண்டிப்பாக ரிஸ்வி இதை செய்து இருக்க மாட்டான், ஒருவேளை மன்சூர் வேலையோ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top