• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஜெயா's தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் Friends,

குட்டியோண்டு தேன் மழை ஆதித்த கரிகாலனுகாக... முயற்சித்து இருக்குறேன்.. படிச்சுடு comment சொல்லுங்க.. Friends..


நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.
ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.
வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

திரும்பிய கரிகலனை கண்ட முத்தழகனின் கண்களில் ரசனையும் பெருமையும் நிறைந்தது. அதை அறிந்த கரிகாலன் சிறு புன்னகையை சிந்தியவாறே, " உமது தமக்கை நந்தினி தேவி கூட என்னை இத்தனை ரசனையுடன் கண்டதில்லை முத்தழகா".

அதனை கேட்ட முத்தழகன் அப்பொழுது தான் சுயம் திரும்பியவன் கரிகாலனை அழைத்த காரணத்தை உணர்ந்து நண்பனை போலியாக முறைத்தவாறே, "யாம் தங்களை அழைத்ததும் எமது தமக்கை அளித்த குற்றபத்திரிக்கையை இளவரசரின் பார்வைக்கு தரவே ".

புன்னகை சிந்திய முகத்துடன் தமது தேவியின் குறும்பை அறிந்தவன்," குற்றம் தான் என்னவோ? சொல் முத்தழகா. இளவரசனின் கடமையை ஆற்ற ஆயத்தமாக உள்ளேன்". என்று கூறினான்.

முத்தழகன், " எமது தமக்கையின் பதி போர் முடிந்து ஒரு திங்கள் முடிந்தும் நாடு திரும்பவில்லையாம். மணாளனை காணமல் பசலை நோய் கண்டுள்ளாளாம். கண்ணாண கண்ணனை என்று காண்பேன் என்று ஏக்கத்தோடு உள்ளாளாம் ஆனால் அவளது பதியோ.. ' மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் வைத்து அவரது சரி பாதியை காண அவா இன்றி இருக்கிறாராம் என்று தூது அனுபியுள்ளார் இளவரசே" என்றான்.

புகாரினை கேட்ட கரிகாலனின் கண்களில் பிரிவின் ஏக்கமும் காதலும் வழிந்தது. அதை உணர்ந்த முத்தழகன் ," இளவரசே! " என்று அழைத்தான்.

கரிகாலன், " புரிகிறது முத்தழகா நாம் நாடு விட்டு வந்து பல திங்கள் ஆகிவிட்டது. போர் முடிந்தாலும் அதன் இழப்புகளை சரி செய்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான ஆயத்தங்களை செய்யவும் வேண்டியது அரசனின் கடமைதானே.. ஆதலால் வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை கொணரவே நாம் இந்த வனத்திற்கு வந்தோம். வந்த வேளையும் இனிதே முடிந்தது. நாடு திரும்ப ஆயத்தங்களை மேற் கொள்ள வேண்டியதுதான் அதற்குள் உமது தமக்கை தூது அனுப்பியுள்ளா?. என்றான்.

"ஆனால் இளவரசே எமது தமக்கை மட்டும் பிரிவு துயரில் வாடவில்லை அவளது பதியும் பிரிவில் தவிப்பதை யான் அறிவேன்" என்றான்.

கரிகாலன் புருவ முடிச்சுடன் அவனை காண முத்தழகனோ கேலி குரலில்.," பின்னே நேற்று இளைபாற மரத்தடியில் சிறிது நேரம் கண்ணயர்ந்த வேளையில் 'தேவி தேவி' என்று அரற்றியது யார் நண்பா? நிவீர் இல்லையோ? எனது கனவா? " என்று வினவினான்.

கரிகாலனோ அவனது கேள்வியில் நாண சிரிப்பை உதிர்த்தான்.

முத்தழகன், "ஆண்களின் நாணம் கூட அழகு என்று இந்த புலவர்களுக்கு உணர்த்த வேண்டும்" என்றான்.

முத்தழகனை போலியாக முறைத்தவாறே "நாட்டிற்கு திரும்பும் ஏற்பாடுகளை மேற் கொள் முத்தழகா "என்றான்.

இரு நாள்கள் பயணம் செய்து சூரியனார் உதிக்கும் நேரத்தில் நாடு திரும்பிய கரிகாலன் நேராக வைத்திய சாலை சென்று முதலில் தலைமை வைத்தியரிடம் வீரர்களை பற்றி அறிந்து மூலிகைகளை ஒப்படைத்து அரண்மனை திரும்பினான்.

அரண்மனையில் அரசரை சந்தித்து நாட்டு நலன் அறிந்து போர் பற்றி விவாதித்து தக்க தகவலை அறிந்து இளவரசனின் கடமையை முடிந்த பின்பே தன் சரிபாதியை காண அந்தி சாயும் நேரத்தில் அந்தபுரம் வந்தடைந்தான் கரிகாலன்.

ஆனால் மணாளனின்
மங்கையோஅந்தபுரத்தின் நந்தவனத்தில் குளிர் நிலவை ரசித்தாலும் சுடும். சூரியனின் . வெப்பத்தின் கனலோடு நின்றிருந்தாள்....
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
அந்தபுரத்தின் வாயிலில் நண்பனை எதிர் கொண்ட முத்தழகன், " இளவரசே போர் கவசம் ஏதும் அணியவில்லையா? என்றான்.

"எதற்கு ?" என்று வினவிய கரிகாலனிடம் "சேதாரம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்று தகவல் அறிந்தேன் அதான் நண்பனை எச்சரிக்கை பண்ணலாமே ..." என்று இழுத்து நிறுத்தினான்.

அவன் சொல் கேட்டு திகைத்து விழித்த கரிகாலன் தன் வசீகர புன்னகையை உதிர்த்து கண் சிமிட்டி சென்றான் தனது மங்கையை காண.

அந்தபுரத்தில் நுழைவு வாயில் காவலர்கள் இளவரசனின் வருகையை கோஷமிட்டனர் .

அப்பொழுதும் தனது சினத்தை துறந்து தனது பதியை வரவேற்க வாயில் புறம் செல்லாமல் அந்த தோட்டத்தில் வான் நிலவு க்கு துணையாக நின்றிருந்தாள் அவள் நந்தினி தேவி.

உள் நுழைந்தவனோ மங்கையை காணாமல் ஏமாற்றம் கொண்டான். தானும் உடனே மங்கையை காணச் செல்லாமல் நீராட தடாகத்திற்கு சென்றான்.

அழகிகள் உதவ ரோஜா இதழ்கள் மிதந்த அந்த குளத்தில் நீராடி பின்னர் நிதானமாக தனது மணையாட்டியை காண அவள் இருந்த தோட்டத்திற்கு விரைந்தான்.

தூரத்திலேயே அந்த வான் நிலவுக்கு போட்டியாக அழகுடன் மின்னும் பெண்ணவளின் பின்னழகை ரசித்த வண்ணம் மங்கையை நெருங்கியவனின் நாசியில் தாரகையின் கூந்தலில் சூடிய மலரின் மணத்தையும் பெண்ணவளின் மேனியில் கமழ்ந்த அத்தரின் மணத்தையும் நுகர்ந்தவன்.. மயக்கம் கொண்ட விழிகளுடன் பின்னிருந்து இடைவளைத்து மங்கையின் சங்கு கழுத்தினில் முகம் புதைத்து இதழ் பதித்தான்.

தனது பதியின் வருகையை.. விழி திருப்பாமலே.. அவனது காலடி சத்ததிலும் மேனியின் மணத்திலும் அறிந்த பெண்மையோ.. இந்த திடீர் அணைப்பை எதிர்பாரமல் தடுமாறி மாயவனின் கைகளும் இதழ்களும் செய்த ஜாலத்தில் மயங்கி நின்றாள்..
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
"தூதில் பசலை நோய் கண்டதாய் இருந்து உண்மைதான் காதலியே.. உனது இடை மிகவும் சிறுத்து விட்டது.. பார் எனது ஒற்றை கையில் உனது மொத்த இடையும் அடங்குகிறது " என்ற மன்னவனின் கூற்றை கேட்ட நந்தினி
நொடி பொழுது மயக்கதில் நின்றவள் சுயம் திரும்பினாள்...

காதல் கொண்ட விழிகளில் கனல் வீச.. மன்னவனிடம் இருந்து விலகினாள் பெண்...

ஆதியோ யுத்த களத்தை விட காதல் களம் கடும் போர்களம் போலவே என்று எண்ணினான் மனதிற்குள் தான்...

" இளவரசே அந்தபுரத்திற்கு வழி தவறி வந்தீரா?.. போர் பயிற்சி களம்.. பக்கத்து களனியில் உள்ளது தடம் மாறி நுழைந்து விட்டீர் அரசே... "

"தடம் மாறவில்லை காதலியே.. பெண் மஞ்சத்தை தேடியே யாம் வந்தோம்.. ஆனால் மஞ்சம் தான் கை சேராமல் வதைக்கிறது.. "

"இத்தனை திங்கள் நீங்கள் என்னை பிரிவால் வதைத்தீரே.. எம்மை காண அவா இருந்திருந்தால் போர் முடிந்தும் நாடு திரும்பாமல் இருப்பீரா? "

"போர் முடிந்தாலும் போர்க்கு பிறகான இழப்பீடுகளை களைந்தால் தானே.. நான் நிம்மதியாக இல்லறம் கலக்க முடியும்" வாள் வீச்சு மன்னனின் சொல் வீச்சு விளையாட்டில் பெண்ணவள் நாணம் கொண்டு திரும்பி கொண்டாள்..

குளிர் காற்றால் உடல் சிலிர்த்தவளை தனதுபுறமாக திருப்பி கண்களை மூடிய வண்ணம் மயக்கத்தில் இருந்தவளை ரசித்தான் ஆதித்தன்..

பிறை போன்ற நெற்றியில் அடங்காமல் காற்றில் ஆடிய பூனை முடிகளும், எள்ளு பூவினை ஒத்த நாசியினையும்.. பார்த்தும் முத்தமிட அழைத்த துடிக்கும் இதழினையும் கண்டவன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா காளையாக திமிறியது... கைகளை கொண்டு மாசுமறுவற்ற கன்னத்தினை வருட அதில் சுயம் பெற்றவள் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள். ..

அல்லி விழிகளை மலர்த்தி மணாளனை கண்டவள் கோபத்தினை தத்தெடுத்து விலகும் முன் அந்த மாய கண்ணணோ.. மென்னியவளின் பவழ இதழில் தனது அழுத்தமான இதழை பதித்து இருந்தான்... போர் வீரனின் மீசை மயிர்கள்.. பெண்ணவளின்.. மேலுதட்டை பதம் பார்க்க.. மன்னவனின் காந்த கண்களோ.. மங்கையின் கண்களை நாணம் கொள்ள செய்தது... நிலவுமகள் நாணி மேகத்தில் மறைந்தாள்...

போர்கால பிரிவின் துயரை ஒற்றை இதழ் அணைப்பில் தீர்ப்பவன் போல் இதழ் தேன் மழை பருகியவன் பேரழகியின் மூச்சுகாற்றுக்கு ஏங்கிய திணறலில் விடுவித்தான்...

மன்னவனின் அதிரடியில் சிவந்த பெண்மயில்.. தன்னை மறைத்து கொள்ள ஆணவனின் தோகை போன்ற பரந்த மார்பையே நாடினாள்...

தஞ்சம் புகுந்தவளை அணைத்து கைகளில் ஏந்தி மஞ்சத்தினை அடைந்தவன்.. கன்னியவளில் காதில் "கோபம் துறந்து மோகம் கொள்ளலாமா காதலியே.. " என்று கண் சிமிட்டினான்..

தாமரை மொக்கு போன்ற கைகளினால் தனது முகத்தினை மூடி சம்மதம் அளித்தாள் காரிகை.. அக்காரிகையை தம் மேல் படர செய்து ஆட் கொள்ள ஆரம்பித்தான்..

போர் களத்தில் மட்டுமல்ல மஞ்சத்திலும் பெண் மனதை வென்றான்.. அவ் வெற்றி வீரன்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top