• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
அகராதி பக்கம் 1

அஞ்சலி!

அந்தக் கல்லூரி வளாகம் வர்ணங்களால் நிரம்பி வழிந்தது. இளமை புதுமை என எங்கேயும் யுவன் யுவதிகளால் களை கட்டியது. விடுமுறை முடிந்து இன்றைக்கு தான் வகுப்புகள் தொடங்க இருப்பதால் அனைவரும் அவரவர் நண்பர் குலாமுடன் குழாவிக் கொண்டிருக்க அந்த இருவர் கூட்டணி மட்டும் ஏதோ மந்திராலோசனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.


ஒருவன் முகம் என்றென்றும் புன்னகையாக இருக்க இன்னொருவனோ பேய் அறைந்தவாறு நின்றிருந்தான்...

ஸ்மைலிங் பேஸ் பையன் முன்னால போய் பாத்தா சும்மா ஆறடி அம்சமா நிக்கிறான்! ப்பா..என்னா உயரம்? அபிஷேக் மாதிரி....
அசப்புல அப்படி இருந்தாலும் பையன் நம்ம தமிழ் முகம் தான்.... உத்துப் பாத்தா அட நம்ம திவா...
அதான் நம்ம திவ்யபிரபந்தன் @ திவா@ பிரபா @ அதியோட ஊஞ்சல் பார்ட்னர்...

முறைத்துக் கொண்டிருந்ததால் மற்றவன் அழகு இல்லைன்னு சொல்லவே முடியாது... அவனொரு விதமான அழகுன்னா இவன் ஒரு விதம்! (எத்தனை காலத்துக்கு தான்யா பொம்பளைப் பிள்ளைங்களை மட்டுமே வர்ணிச்சுட்டு இருப்பீங்க?! அதான் நான் என் டார்லிங்ஸ கொஞ்சிக்குறேன்)

இவனும் நல்ல உயரம் தான்... போட்டிருந்த பென்சில் பிட் வேறு அவனை இன்னும் உயரமாகக் காட்டியது. நான் கொஞ்சமே கொஞ்சம் அப்பாவியும் கூடன்னு அவன் ஸ்டைல் என ஏற்றி விட்டு இருந்த மூக்குக் கண்ணாடி சொல்லியது. இருந்தும் கள்ளன் என காட்டிக் கொடுத்தது கன்னியைக் களவாடும் கண்கள்...
நம்ம சாக்கி பாய் பேரு சூர்யா... அதெப்படி எனக்குத் தெரியும்னு கேட்டா என்னய்யா இது அவன் போட்ருக்க ஜீன்ஸ் பிராண்ட் வரைக்கும் பாக்குறேன் அவன் ஐடி கார்ட் பாத்து நேம் கண்டு பிடிக்கிறது கூடவா கஷ்டம்?

"என்னடா சன் ரைஸ்? முகற பேய் அறைஞ்ச கணக்கா இருக்கு?" என திவா கேட்க

அங்கே ஆரம்பித்தவன் தான்...


இன்னைக்கு காலேஜ் முத நாள் ஆச்சே நம்ம ஜூனியர் பொண்ணுங்களாவது அழகா எவளாச்சும் இருப்பாளான்னு பாப்போமேன்னு நம்ம பஸ் ஸ்டாப் கிட்ட குறுக்க நெடுக்கா நடந்துட்டு இருந்தேன்டா...

அப்போ வந்தாடா...

அதெப்படி மச்சான் எல்லா அழகான பொண்ணுங்களும் பஸ்லையே வருது? இந்த டாடிஸ்க்கு எல்லாம் பொறுப்பே இல்லை மச்சான்!

ஆஹ் அப்படியா மச்சான்?

ஹீ ஹீ இல்லை பிரபு....


ஈ... சகிக்கல மேல சொல்லு...

பின்னாலேயே போனேன்டா அவகிட்ட எப்படியாது பேசணும்னு. அவளைக் கூப்பிடலாம்னு நினைக்கும் போது தான் மச்சான் ஞாபகம் வந்துச்சு...

என்ன மச்சான்? நீ மாங்காடு மாரியாத்தாக்கு மௌன விரதம் இருக்கேன்னா?

ங்கொப்பன் மவனே இதுக்கு மேல எதுனா நக்கல் பண்ணுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன் டா...


சரி சொல்லி தொலை....
நான் கூப்பிடலாம்னு நினைக்கிறப்போ தான் யாரோ ஒருத்தி அஞ்சலின்னு கூப்பிட இவ என்னைப் பாக்க பின்ன என்ன ஒரே தம் தன தம் தன தான்...

அவ பேரும் அஞ்சலி தான் மச்சான்...


அஞ்சலி!

படத்துல வர்ற அந்த பேபி அஞ்சலி இல்லைடா! சரியான ரௌடி பேபி மச்சான் அவ...

அது உனக்கு எப்படி மச்சான் தெரியும்?

பார்க்க இம்புட்டு அழகா இருக்காளே போய் பேசி பாப்போம்னு ஹாய் தான் டா சொன்னேன்

அப்பறம்?

இன்னான்னு படு லோக்கலா ஆரம்பிச்சவ எங்க அப்பத்தாவக் கூட விட்டு வைக் கல டா!


கேட்டிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு! இருக்காதா பின்னே? அவள் தான் இவனின் பாச பட்டாசு ஆச்சே!!!

சரி நண்பன் வாயாலேயே கேட்போமே என அமைதியாக இருந்தவன் மேலே சொல்லு என சைகை செய்ய மற்றவன் தொடர்ந்தான்.

என்னைய கழுவி ஊத்துனத கூட விட்ருவேன்டா ஆனா கடைசில சொன்னா பாரு...

அப்படி என்ன எழவ டா சொன்னா?

அவ அல்ரெடி எங்கேஜ்ட்னு சொல்லிட்டாடா..

யாரோ அவ மாமாவாம் மாப்ள பேரு கூட என்னமோ சொன்னாளே...

எழிலமுதன்! சரியா மாப்ள?

மச்சான்!!! என அதிர்ச்சியில் கத்திய அவனின் வாயை அடைத்து இழுத்துக்கொண்டு நடந்தான் மற்றவன்....

எப்டிறா?

என்ன டா மணிரத்னம் பட வசனம் போல ஒரு வார்த்தைல பேசிட்டு இருக்க?

மிஸ்டர் திவ்யபிரபந்தன் இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

என்னடா மச்சான் மரியாதை எல்லாம் பலமா இருக்கு?

மண்டையே காயுது...எனக்கு என்னமோ உனக்கு அவளை முன்னமே தெரியும்னு தோணுது...

நண்பனின் முகத்தில் அப்படியொரு சிரிப்பைக் காணவும் சந்தோஷத்தில் கத்தியே விட்டான் மச்சான் இவ தான் நீ சொல்ற பார்பி பாப்பாவா?

அவளே தான்! அவளை எப்படிறா நான் மறந்தேன்? நம்ம டிக்ஷணரி கூட அவட்ட
குடுமி பிடி சண்டை போட்டு நம்மள மாட்டி விடுமே...

அவளே தான்...

எப்டிறா கண்டுபிடிச்ச?

என் பார்பியை எனக்கு அடையாளம் காட்ட ஆள் வேணுமா?

அவளுக்கு உன்னையத் தெரியுதா மச்சான்?


தெரிஞ்சு இருந்தா இந்த காலேஜே கதி கலங்குற அளவு சும்மா தெறிக்க விட்ருக்க மாட்டா என் ரௌடி பேபி? என மனதினுள்ளே நினைத்தவன் இல்லையென தலை அசைத்து நகர்ந்து விட்டான்.


பாப்பின்ஸ்! நல்லா வளந்துட்டடி... உன்னைப் பாப்பேன்னு நினைச்சேன் ஆனா இவ்வளவு சீக்கிரம் பாப்பேன்னு இந்த அதி கிறுக்கி சொல்லிருந்தாக் கூட நம்பியிருக்க மாட்டேன்.


என்ன அந்த குட்டி பிசாசு சத்தம் கேக்குது... கிறுக்கின்னது அங்க வரைக்குமா கேட்டுருச்சு?

உள்ளே வந்தவள் வேகமாக அவன் தலையில் நங்கென நாலு கொட்டு கொட்டி விட்டே அமர்ந்தாள்.

நீ எப்போ இருந்துடா என்கிட்ட இருந்து மறைக்க கத்துகிட்ட?

என்னடி?

அஞ்சுவை பாத்தியா?

சூர்யா சொன்னானா? இல்லை


அப்புறம்?

அஞ்சு!

என்னது?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கேப்பா ரொம்ப நாளா உங்களைக் காணோம், கார்த்திகா டியர்?
உடம்பு ஏதும் சரியில்லையா?
இல்லை வேலை அதிகமா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரவணக் கார்த்திகா டியர்
 




Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
எங்கேப்பா ரொம்ப நாளா உங்களைக் காணோம், கார்த்திகா டியர்?
உடம்பு ஏதும் சரியில்லையா?
இல்லை வேலை அதிகமா?
Yes maa too much of work pressure ini sekirama updates poduven
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top