Latest Episode அகராதி 5

#1
வேண்டாமென நீ மறுக்க மறுக்க உன்னை முத்தமிடத் துடிக்கும் என்னை என்ன சொல்ல? பித்தன் எனவா?

சண்டைக் கோழியாய் நீ சிலிர்த்து நிற்கும் நொடிகளில் கூட உன்னை அணைத்துக் கொள்ள நீளும் கைகளை வைத்துக் கொண்டு என்னடி செய்ய நானும்???

எட்டி நில்லுய்யான்னு நீ சொன்னாலும் கிட்ட நகருற என் கால எதைக் கொண்டுத் தான் கட்டி வைக்க???
அது சரி என கன்னத்தில் கை வைத்து முகவாய்க் கட்டையை நொடிக்கிறாய்....

வேண்டாம் என முகம் சிவக்கச் சொல்கிற உன்னை....

இதழ்களுக்குள் புதைத்த புன்னகையுடன் போலியாய் முறைக்கிற உன்னை....

உன்னை என்னடி செய்ய நான்???

!!!கயலுக்கு!!!
~எழிலன்....


View attachment 8867

முதல் முத்தம்!!!!

அவ்வுணர்வு வாய்க்காத வரைக்கும் இருக்கிற அதே கற்பனைகளில் தான் இருந்தான் எழிலும்.... என்னதான் பய எழிலாக இருந்தாலும் முத்தம் என்பது எல்லாம் அவனுக்கு கற்பனை மட்டுமே... நிஜத்தில் அவனும் வேணும்னு நினைத்தது இல்லை...நம்மாளு கேர்ள் பிரெண்ட்ஸ் லிஸ்ட் நீளம்ம்ம்ம்....

நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைங்க மக்களே... பயலுக்கு அம்புட்டுத் திறமை எல்லாம் இல்லை... நட்புன்னா நட்புங்கற வரையறைல இருப்பான்... அவனுக்கும் காதல் என்கிற உணர்வுக்கும் இந்தியா பாகிஸ்தான் பார்டர் போல ஒரு இடைவெளி இருந்துட்டே இருந்தது.... இவனும் போக மாட்டான் அதுவும் வராது.... சுதந்திர தினத்தன்னைக்கு மட்டும் திறக்கிற அந்த பார்டர் மாதிரி தான் காதல் உணர்வு என்னன்னு பய செத்த நேரம் யோசிப்பான்... அப்புறம் என்ன குப்புறப்படுத்துத் தூங்கிருவான்...😁😁😁😁

காதலே இப்படி இருக்கும் பட்சத்தில் நம்ம புள்ளைக்கு எங்க முத்தத்தில இருந்து மொத்தமும் தெரியப் போகுது???

நம்ம அதிய சொல்லுங்க படிச்ச புள்ள பவுசா இங்கிலீசுல படம் பாக்குதுன்னு நாலு பேரு சொல்லுவாய்ங்க மக்களே....ஆனா நம்ம திவாவுக்கு மட்டும் தான் தெரியும் சனியன் கிஸ்ஸிங் சீன விடாம ரசிக்குதுன்னு... போற போக்குல திவா மண்டையிலேயே நாலு அடி அடிச்சா தான் நம்ம அகராதி சாவகாசமா திரும்புவா... எருமை எருமை இரசனை கெட்டவன்... போடா வெண்ணைன்னு வித விதமா ரக ரகமா திட்டுனாத் தான் மனசு ஆறும் அவளுக்கு...

ஏண்டி விட்டா லேப்டாப் உள்ளுக்க போயிருவ போலயே...

அடேய் தீவெட்டி.... உன்னையும் என்னையும் மாதிரி 420யா என்ற ஆத்துக்காரும் இருப்பாருன்னு சொல்ல முடியுமோன்னோ??? அப்பிடி மட்டும் இருந்துட்டா நான் என்ன பண்ணுவேண்டா கொழந்தே??? என்பவளை என்ன செய்ய? தன்னைத் தானே நாலு திட்டு திட்டிக் கொண்டு நகர்வான் திவா...

ஆனாலும் அவள் சொன்ன மாதிரியே நடக்கும் என அவள் என்ன கனவா கண்டாள்???

அது என்னமோ அவனிடம் மட்டுமே அப்படி ஒரு உணர்வு தோன்ற படக்கென அவனை முத்தமிட்டு விட்டாள்... பின்பும் வருத்தம் எல்லாம் இல்லை...

மடையன் மட்டின்னு திட்டிட்டு இருந்தவளை சுவரோரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்...

என்னடா சிரிப்பு??

அவள் என்னடா எனக் கேட்டதும் ஒரு நொடி கண்களில் மின்னி மின்னி மறைந்த மின்மினிக்கு நம்ம மினி அடிமையாகிட்டா போல...

அதி..

என்னவென புருவம் ஏற்றி இறக்கி வினவியவளைக் கிட்டே வாவென அழைத்தான்...

ம்ம்ம்ம்... சீக்கிரம் சொல்லு... என அவசரப் படுத்தியவளை நிதானமாக இரசித்தான்...

எனக்காக அளவெடுத்துத் தச்சு விட்ட சட்டை கணக்கா இருக்கா....
நான் சாயத் தோள் கொடுக்கும் உயரம்...
என்னை முழுதாய் மூழ்கடிக்கிற விழிகள்....
என் வாசம் மட்டும் நுகரும் நாசி...
பஞ்சுமிட்டாய உருட்டி வச்ச மாதிரி தலைமுடி... சரியான சுருட்டை முடி...

ஆதி முதல் அந்தம் அவள் எனக்கே எனக்கானவள்...

அவளோ அவனை முறைத்தவாறே நின்றிருக்க கையைப் பிடித்து இழுத்து தன் முன்னே இன்னும் நெருக்கமாக நிறுத்திக் கொண்டான்...

அகராதி பிடிச்சவளே ஏண்டி அப்படி பண்ணின?
எப்படிப் பண்ணேன் ஏலியன் சொன்னா தான தெரியும் எனத் தெனாவட்டாகக் கூறியபடி நின்றவளை என்ன செய்யலாம்னு பார்த்துட்டு இருந்தவன் பட்டுன்னு ஒரு முத்தம் வச்சுட்டு நிமிர்ந்து பாத்தா நம்ம அதி ரதி கணக்கா கன்னம் சிவந்து நிக்கிது....

....எழிலனின் ஏகாதிபத்தியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது....
 

Find SM Tamil Novels on mobile

Latest Episodes

New comments

Mobile app for XenForo 2 by Appify
Top