• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
இன்று

அகராதி எழிலனின் இணையாள் ஆகி மாதம் ஒன்று ஆகிற்று!

அத்தனை குழப்பத்தில் இருந்த அதியா என்று வியக்கும் அளவிற்கு ஒரு முன்னேற்றம் நம்ம அகராதி முகத்துல... கொஞ்சமே கொஞ்சமா காதலும் எட்டிப் பாக்குதோ? என்ன தான் நடந்திருக்கும் இந்த ஒரு மாசத்துல?

உடனே ரீவைண்டு மோடுக்கு போக வேண்டாமே... கொஞ்சம் ஜாலி மோடுல இன்னைக்கு அதி வீட்டுக்கு எல்லாரும் என் கூட ஒரு விசிட் அடிங்களேன்!!!

மிஸ்டர் அண்ட் மிசஸ் எழிலன் எழுந்தாங்களோ இல்லையோ அவர்களின் செல்லப் புதல்வன் சுதன் தன்னுடைய இறகுப் பாதங்களை தரையில் பாவாமல் சத்தம் செய்யாது வருவது தெரிகிறது... அடடே குட்டிக்கு நடக்க வருகிறது போலவே... கோதை நாச்சியார் இருந்தாலே நண்பகல் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குபவள் இன்றா எழுந்திரிக்கப் போகிறாள்?

ஆனால் அதிசயம்! நம்ம அகராதி மேடம் ஒரு தட்டில் மூன்று கோப்பைகளை அடுக்கி எடுத்துக் கொண்டு அவளின் பிள்ளையையும் கையிலேந்த முயற்சிக்கும் வேலை அவளைத் தன்னோடு அனைத்து கையில் இருந்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டான் எழிலன்...

அவனை முறைக்கும் விதமாகக் இடுப்பில் கை வைத்து முறைத்தவளை அவள் இடையோடு கை கொடுத்து தன்னருகே நிற்க வைத்துக் கொண்டான்....

ஏலியன் கொஞ்சம் விடறியா காபி ஆறிடப் போகுது என்றவளை முறைக்க நினைத்தும் முடியாமல் சிரித்து விட்டான்...

அவனோடு சேர்ந்து சுதனும் தன்னுடைய பொக்கை வாயைக் காட்டி சிரிக்க அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது...

ஏண்டி எலி என்றதுமே அதி சீறிக் கொண்டு அவனை அடிக்க வந்தாள்

மேடம் மட்டும் என்னை ஏலியன்னு கூப்பிடுறீங்க நான் மட்டும் உன்னை அப்படிக் கூப்பிடக் கூடாதா என்றவனை போடா என பழிப்பு காட்டி விட்டு நகர்ந்தாள்.

சரி எலிக்குட்டி நான் கேட்க வந்ததை மறந்துட்டேன் பாரேன்...

என்னவென அவள் பார்வையால் வினவ, இந்த ரொமான்ஸ் அப்படின்னு ஒன்னு உன் அகராதில இல்லவே இல்லையா? பேருதான் அகராதி ஆனா எதுக்கும் அர்த்தம் தெரியலை என பேசிக் கொண்டே திரும்பி நடந்தவனைப் பின்தொடர்ந்தவள் மெல்லமாக அவன் கைகளைப் பற்றித் திருப்பி அவனோடு ஒன்றிக் கொண்டாள்...

வர வர ஏலியன் உனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி ஆகிருச்சு போல என்றவளை ஒரு நிமிடம் உற்று நோக்கியவன் அவள் கண்ணில் நிரம்பி நின்ற குறும்பில் சிரித்துக் கொண்டே என்னத்தடி மறந்தேன்?

நமக்கு ஒரு குட்டிப் பையன் இருக்கான்...

ம்ம்ம்... அப்புறம்...

குட்டிப் பையன் வளருறான்...

அவன் நடக்குறான் எழில்... என்றவளை இடைமறித்து அதி... என்ன சொல்ல வர்ற?

அவனை வச்சுக்கிட்டு இப்படிப் பண்ணாதன்னு சொல்ல வர்றேன் என்றவள் அவன் என்னவெனக் கேட்கும் முன்னமே அவனை ஆசை தீர அனைத்து முத்தமிட்டாள்... ஏய்! நில்லுடி கேடி என்றவனை பொருட்படுத்தாமல் ஓடியே போய் விட்டாள்...

அவனும் என்ன செய்வான் அவள் முத்தமிட்ட கன்னத்தை தடவிக் கொண்டவன் காயாத எச்சில் ஈரம் கண்டு கனவில்லை என உறுதிப் படுத்திக் கொண்டு தத்தித் தத்தி நடைபயின்று கொண்டிருந்த அவர்களின் புத்திரன் சுதனை அள்ளிக் கொண்டவன் அவனிடம் சற்று நேரம் விளையாடிக் கொண்டே பேச்சுக் கொடுத்தான்...

சுதன் கண்ணா... நீங்க எப்போ பேச ஆரம்பிப்பீங்க?

ஏன் அவனுக்கும் எலி எலின்னு கூப்பிட சொல்லிக் குடுக்க போறீங்களா மிஸ்டர் எழிலன் என்றவாறே வந்தாள் அவனின் மனையாள்...

உனக்கு என்னடி பொறாமை நானும் என் பையனுமா பேசிக்கிட்டு இருக்கோம் இல்லைடா கண்ணா? என்ற எழிலனுக்கு பதில் தரும் விதமாக தலையை ஆட்டி பொக்கை வாய் திறந்து சிரித்தான் அந்த வாண்டு...

அப்பனும் புள்ளையும் லூட்டி அடிக்கிறீங்களா? போங்கடா டேய் என நகர்ந்தவளையும் கையைப் பிடித்து தங்களுடன் அமர்த்திக் கொண்டான் அவன்

அவளுமே அத்தனை மகிழ்வாய் அந்த அப்பா பையன் பாசப் பிணைப்பைக் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்...

அவளுக்குள்ளே இருந்த அந்தக் கேள்வி அந்நேரம் கூட தவறாமல் எழுந்து நின்று உள்ளேன் அம்மா என ஆஜரானது....

சுதன் எழிலை அப்பாவா ஏத்துக்குவானா? சுதன் குழந்தை தான் என அவள் அறிவிற்குத் தெரிந்தாலும் மனதை சமாதனம் செய்வது என்பது அவளைப் பொறுத்த மட்டில் பெரிய காரியமாகவே இருந்தது....

நொடி நேரங்களில் ஒரு நூறு வண்ணங்கள் காட்டும் கலைடாஸ்கோப் கணக்கா மின்னுற முகம் ஏன் வாடிப் போச்சு? என்னாச்சு இவளுக்கு என அவளைப் பார்த்துக் கொண்டே மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் அவனை தவழ விட்டு அவன் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே எழுந்து வந்தான்....

எதுவும் பேசாது அவளருகே சென்று மாடிப்படியில் அமர்ந்து கொண்டான்... அவன் அருகினில் இருக்கிற நொடிகள் தலை தூக்கும் குறும்பு அப்பொழுதும் அவனை ஏமாற்றவில்லை...

அவன் தலைமுடியை அளைந்து கொண்டே அவளின் யோசனையைத் தொடர்ந்தவளை என்ன செய்யலாம் என நினைத்து வந்தவன் அவள் அளைந்து விளையாடியதில் உறங்கியே போனான்.... இதைப் பார்த்தா அவளுக்குப் பொறுக்குமா?

அவனின் கன்னத்தை நறுக்கெனக் கடித்து வைத்தவள் அவன் சுதாரிக்கும் முன் எழுந்து ஓடியே விட்டாள்... அவன் அடியே அகராதி பிடிச்சவளே என் கைல சிக்குன செத்தடி நீ என்று கத்தியது காதிலே விழாதது போல ஓடிட்டாளே நம்மாளு...

கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே எழுந்து சென்று சுதன் அருகினில் அமர்ந்தான்...

நீங்க எப்போடா பேச ஆரம்பிப்பீங்க? என அப்பொழுது கேட்ட அதே கேள்வியை அவன் கேட்டுக் கொண்டிருந்தான் தகப்பன்... அந்த வாண்டுக்கு என்ன புரிந்ததோ அவனைக் கண்டு கேலிப் புன்னகை ஒன்றை அள்ளிக் கொடுத்ததில் அக மலர்ந்து போனான் அவன்... அப்படியே அகராதி மினி வெர்சன் தான்டா நீ என நெட்டி முறித்துக் கொண்டான்...

அகராதி இப்பொழுதைக்குக் கண்களில் தட்டுப் படப் போவது இல்லை என்ற எண்ணத்தில் அவன் மனம் திறந்து பேச ஆரம்பித்தான் அவன் புதல்வனிடத்தில்... அவன் மனம் திறந்து பேசும் இருவரில் இந்தக் குட்டி வெல்லக்கட்டியும் ஒருத்தனாகிப் போனான்...

குட்டிக்கு பசிக்கும் இல்லை அம்மா கொண்டு வந்த பால் ஆறிருக்கும் நீங்க குடிச்சுட்டே இருப்பீங்களாம் அப்பா ஒரு காபி குடிச்சுட்டு வருவேனாம் நாம பேசலாம் என அவன் சொன்ன ஒவ்வொன்றுக்கும் கவனமாக தலையை ஆட்டி ஆட்டி சம்மதம் தந்தான் அவனின் குட்டிக் கண்ணன்...

அவனுக்கென எடுத்து ஆற வைத்த பாலை அவனிடம் குடுத்துக் குடிக்கச் செய்து விட்டு அவன் தனக்கென காபியைக் கலந்து எடுத்து விளையாடும் தன் மகனைப் பார்த்துக் கொண்டே குடித்தான் ...

அப்படியே அதி தான் அவன்... வளர வளர எப்படி இருப்பான் இவன்? என்னைப் போல இருப்பானோ? ச்ச என்ன யோசிக்கிறேன் நான்? அவன் உருவத்துல என்னைப் போல இல்லைன்னாலும் பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே என்னையும் அவளையும் தான் கொண்டிருப்பான் என பல்வேறு விதமாய் யோசித்தவன் பின்பே சுய நினைவிற்கு வந்தான்...

குட்டி இங்க வாங்க அப்பா கிட்ட வரீங்களா என்றதும் தத்தி தத்தி நடந்து வந்த சுதனைக் காணக் காணக் தெவிட்டவில்லை அவனுக்கு...

அவனை வாரி அணைத்தவன் சற்றே மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்... அந்த வாண்டும் தகப்பன் சொல்லும் தங்க மலை இரகசியம் தான் என்னவாய் இருக்கும் என கேட்க ஆரம்பித்தது...


அப்பா உங்கள முதல் முதலா என்னைக்குப் பார்த்தேன் தெரியுமா? இதை நான் உங்க அம்மா கிட்ட தான் கேட்டு இருக்கணும் ஆனா என்ன செய்ய உங்க அம்மா தான் அதுக்கான சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுக்கவே கூடாதுன்னு அவ நினைச்சாளா இல்லை அந்த ஆண்டவன் நினைச்சானான்னு தான் தெரியலைடா குட்டி....


அம்மா சரி அந்த ஆண்டவன் அப்படின்றது யாருன்னு கேக்குறியா? அந்த வாண்டும் ஆமென மேலும் கீழும் தலைய ஆட்டுவதை பார்ப்பதே கொள்ளை அழகாய் இருந்தது அவனுக்கு....

ஆண்டவன் வேற யாரும் இல்லைடா உங்க அதிம்மா பிரபு மாமா இருக்கான் இல்லை? அவங்கள மாறி தான் இருப்பாங்க... சில நேரம் நமக்கு என்ன தேவைன்னு நாம சொல்லாமலே செய்வாங்க... சில நேரம் நமக்கு என்ன வேண்டாம்னு கூட புரிய வைப்பாங்க... அவங்க நம்மள சந்தோசமா வைச்சுக்க தான் கொஞ்சமே கொஞ்சமா வருத்தப் பட வைப்பாங்க...

இப்பவுமே அப்பாக்கு தெரியலையேடா கண்ணா அந்த ஆண்டவன் உன்னை எங்க கிட்ட குடுத்தது எங்களுக்கான வரம் தான் ஆனா உனக்கு நாங்க எப்படின்னு நீ தான்டா கண்ணா சொல்லணும்...

ப்பா..... சுதனின் மழலை மொழி அத்தனை ஆனந்தத்தைத் தோற்றுவித்தது அவனுள்ளே...

ஆண்டவன் அவனுக்கு அளித்த வரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தான் எழிலன்!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சர்வா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சர்வா மகிழவன் டியர்
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top