• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
என் தகப்பனடா நீ!
என்னை பேச்சிழக்கச் செய்யும் பொழுதுகளில்!
எனை நெக்குருகச் செய்கின்ற நொடிகளில்!
அப்பன் அவன் வாய்மொழி என்றுமே மொழியற்ற மௌனம் என்றாகிப் போவதன் அர்த்தம் உணர வைக்கின்ற நொடிகளில்!
என் அப்பன் ஆறடியில் அடங்கிப் போனான் என்று நினைக்கிற பொழுது நூறடிக்கு விஸவரூபம் எடுக்கிறான் உன்னில் என்று நான் காண்கின்ற நொடிகளில்!

சுதனின் மழலையில் தன்னை மறந்து கவிதை கிறுக்கிக் கொண்டிருந்தான் எழிலன்.

மகனின் வாய்மொழி கேட்டு சுற்றம் மறந்து கட்டின மகராசியையும் மறந்து மகிழ்ந்து கொண்டிருந்தான் அகராதியின் அன்பாளன்!

சரி இவன் இன்னைக்குள்ள யாரையும் கண்டுக்க மாட்டான் நாம அகராதி என்ன செய்றான்னு பாக்கலாம்.

அவனைக் கடித்து விட்டு ஓடியவள் அதீத மகிழ்வில் தலையணையைக் கட்டிக் கொண்டு கண்ணயர்ந்து விட்டாள்(ஹிஹி நாங்கல்லாம் ஓவர் குதூகலமா இருந்தாலும் சரி கொந்தளிச்சாலும் சரி தூங்குடா கைப்புள்ள மோடுக்கு போயிருவோம்).
எழுந்து பார்த்தால்... அவனையும் காணோம் ....அவள் பெத்த சொத்தையும் காணோம்.

"என்ன பண்றான் ஏலியன்? ஒரு வேளை என்னைய விட்டுட்டு அப்பனும் புள்ளையுமா தனியா தின்னுட்டு இருக்காய்ங்களோ" என்றவாறே எண்ணமிட்டுக் கீழே சென்றவள் கண்களில் விழுந்தான்... சுற்றிலும் விளையாட்டுப் பொருட்களைப் பரப்பி அதன் நடுவே மெத்தையில் பிள்ளையைக் கடத்தி அவன் முகம் பார்த்து நொடிக்கு நூற்றம்பது முறை கொஞ்சிக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த அவளின் மணாளன்!

ஒரு நொடி அகமகிழ்ந்தே போனாள்.

"திவா தீர்க்கதரிசிடா நீ!... ஆறு மாதங்களுக்கு முன்பாக எழில் பற்றிய பேச்சு எழும் பொழுது அவன் சொன்ன வார்த்தைகள் அவள் நினைவில் நின்றாடியது....

"எழில் நிஜமாவே அழகுடா அஞ்சு... அவனை ஒப்பீட்டளவில் கூட யாரு கூடவும் நான் ஒப்பிட விரும்பல... அவனை அப்படி தராசு வைச்சு அளக்க முடியாதுன்னு இல்லை! அளக்க முடியலை என்னால... அவனுக்கு ஓகே சொல்லுன்னு நான் கேக்கவே வேணாம் நீயே பாரு... பாத்துட்டு சொல்லு"ன்னு அவன் சொல்லி இரண்டே நாளுல கண் முன்னால வந்து நின்னான்...
"ரெண்டே நிமிசத்துல என்னையும் என் புள்ளையையும் வாரி எடுத்துக்கிட்டு வந்துட்டான்!"


எழில் கிட்ட உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சோ?
அவளும் ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் சொல்ல வேண்டும் என நினைத்தாள் தான் எங்கே அவன் சொல்ல விட்டான்?!

அவள் "சுதன்?" என ஆரம்பித்தாலே... எலி! "எனக்கு சஸ்பென்ஸ், திரில்லர் எல்லாம் படிக்கிற பழக்கம் இல்லை... நீயே முடிவு என்னன்னு மட்டும் சொல்லிடேன்" என்பவனின் அதரங்கள் கேலிப் புன்னகையை மறைத்து வைத்திருப்பது கண்டு அவனை ரெண்டு அடி அடித்து விட்டு... "அவன் என் பையன்! போடா... என்று விட்டு ஓடி விடுவாள்.

இதைத் தான நானும் சொன்னேன்... "அவளுக்குப் பையன் அப்படின்னா எனக்கு யாராம்? சரியான கிறுக்கிடி நீ!!! என் காதல் கிறுக்கி உன்னை என்ன செய்ய?" என தனக்குள்ளே புலம்பியவாறே சென்று விடுவான்.

அவள் என்ன முயன்றும் அவனிடம் சுதன் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பினை எழில் அவளுக்குக் கொடுக்கவே இல்லை.
ஒரு வேலை அவனுக்குத் தெரிந்து இருக்குமோ? திவாவுக்கே தெரியாத இரகசியம் எப்படி அவனுக்குத் தெரியும்? அதுவும் சுதன் பத்தி? என்னய்யா அந்த சிதம்பர இரகசியம் அதுன்னு எல்லாரும் பல்லைக் கடிக்கிறது கேக்குது!!!

அவள் நடப்பிற்க்கு வந்தாலும் அவன் இன்னும் அவளைக் கவனித்த பாடில்லை...

"எழில்! எழில்! ஏடா ஏலியன்!" என அதி அவன் முதுகில் நாலு போடும் வரைக்கும் அவன் அவனுக்கான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

"பிசாசு... பிசாசு மாதிரியே பண்ணாதடி... என்றவன்... என்னா அடி?!! உன்கிட்ட எல்லாம் கொஞ்சம்... இல்லை...இல்லை... ரொம்பவே ஜாக்கிரதையா தான் இருக்கணும்..

நீ வாடா மகனே நாம போவோம், இவகிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?" என நகரப் போனவனை சட்டையோடு சேர்த்து இழுத்தவள்... "எப்படி? எப்படி? என் கூட மனுஷன் பேசுவானா? என்கிட்டே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமா?

ஏன் மிஸ்டர் ஏலியன்... என்னால உங்க கற்புக்கு ஆபத்து வந்துரும்னு பயப்படுறீங்களா? " எனக் கண்ணடித்தவளைக் கண்டு உதட்டிற்குள் பூட்டிப் போட்ட சிரிப்பு அவனையும் அறியாது வெளியேறியது...

பிள்ளையைத் தோளில் இட்டவாறே அவள் முன்னே வந்தவன் நுதல் மறைக்கும் அந்த கற்றைக் குழல் தனை ஒதுக்கித் தள்ளி மெதுவாக மிக மெதுவாக அவள் காதோரம் சொன்னான்...

"உன் அகம் தொட அக்னி சாட்சியாய் வேண்டி நின்று புறம் தொட்டு குங்குமத்தை இடும் நொடி நான் என்ன சொன்னேன் ஆதி?"

அந்நினைவினில் அவள் கண்களில் லேசான ஓர் சாரல் தூரி அவன் மேல் பட்டுத் தெறித்தது...

எழிலன் எனும் என் நாமம் மட்டும் எந்திக் கொள்ள நீ பெயற்பலகை இல்லையடி!
எழில் வதனம் மட்டும் சகிக்க நீ வனிதையல்ல!!!
இந்த எழிலன் வாழ்வுக்கு அர்த்தத்தைக் கற்பிக்கும் என் அகராதி நீ!!!
என்னை ஏற்றுக்கொள்வாயா உன் அகமுடையானாக???

அவன் கேட்டு முடித்த நொடி கையில் வைத்து இருந்த மாலை மாற்றிக் கொண்டு கண்ணீர் வழியச் சிரித்த அவள் அவன் முன் ஒரு நொடி வந்து போனாள்....

"நானே உணக்குன்னு ஆகிருச்சு... இதுல என்னடி கற்பு?!.. உப்புன்னுட்டு!!!... அவன் பேசியதில் சிரித்தவள் மெல்ல அவனை அவனை அனைத்து மெதுவாக ஆனால் அழுத்தமாக அவன் காதில் சொன்னாள்...

சுதன் என்னோட பையன் இல்லை ஏழில்!???

சொல்லி விட்டு அவள் நகர்ந்து விட்டாள். நகராது அவள் போன திக்கை வெறித்துப் பார்ப்பது அவன் முறையானது...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Sarva Magizhavan டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top