• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அகிலா கண்ணனின் "இரண்டல்ல ஒன்று"... வாசு என்ற வாசுதேவனுக்கு ஒரு கடிதம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

padhusbi

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
42
Reaction score
68
Location
chennai
ஹாய் தோழமைகளே,

மீண்டும் ஒரு கடிதத்தோடு வந்திருக்கிறேன்...
இம்முறை வாசு என்ற வாசுதேவனுக்காக...
கதை அகிலாகண்ணனின் @akila kannan “இரண்டல்ல ஒன்று...”

முந்தாநாள் தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன்...
நேற்று கதையை முடித்தேன்...
இன்று Ongoing ல் சேர்ந்துகொண்டேன்...

இப்படி கடந்த மூன்று நாட்களாக தான் இந்த வாசு கதாபாத்திரம் எனக்கு அறிமுகம்.
ஆனால் இந்த மூன்று நாட்களும் இவன் ஏன் இப்படி இருக்கிறான்? என்ற கேள்வி என்னுள் ஓராயிரம் முறை வந்து போயிற்று.அதன் விளைவே இந்த கடிதம்...

அன்புள்ள வாசுவிற்கு,

வணக்கம். எப்படி இருக்கிற வாசு...கண்டிப்பாக நீ சந்தோஷமாக இருக்க மாட்டன்னு தெரிந்து கொண்டே தான் இந்த கேள்வியை உன்னிடத்தில் கேட்கிறேன் நான்.

நீ எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? உன்னை அத்தான் என்று ஆசை மொழிக்கூறி அழைக்கும் மனைவி உன்னோடு இல்லாது, அவளின் பிறந்த வீட்டில் இருக்கும் போது, நீ எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் வாசு.

ஆனால் அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது நீ தான் என்று உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா வாசு...

உன் அன்பிலோ,காதலிலோ நான் என்றுமே குறை சொல்லப்போவது இல்லை வாசு.ஆனால் பவியின் ஆசைக்கணவனாக இருக்கும் போது ரெமோவாக இருக்கும் நீ, உத்தமி அம்மாவின் மகனாக ஆகும் போது மட்டும் அந்நியனாகப் மாறிப்போவது ஏனோ? வாசு. இது மட்டும் ஏனோ எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது வாசு.

நாம், நம் தாயின் சொல்லை நிராகரித்தால் அவருக்கு மனகஷ்டம் ஏற்படும் என்று நினைக்கும் நீ, ஏன் உன் மனைவிக்கு மட்டும் அந்த கஷ்டத்தை கொடுக்கிறாய்?

அவள், கல்யாணம் என்ற பந்தத்தால் தன் பெற்றோரை, கூடப் பிறந்த பிறப்பு இவர்களை எல்லாம் விட்டு உன்னை மட்டுமே நம்பி வந்த ஜீவனில்லையா? அவளுக்கு நீ எந்த சூழ்நிலை யிலும் கூட இருப்பேன் என்ற நம்பிக்கையை தரவேண்டாமா? அதைத் தர எது உன்னை தடுக்குது வாசு. உன் தாய் மீது நீ வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பா!

நீ, உன் தாய் மீது வைத்திருக்கும் அன்பை நான் குறை சொல்லவில்லை வாசு.
அதேபோல் உனக்கு கல்யாணம் முடிந்து விட்டது என்பதற்காக அவர்களை நட்டாற்றில் விட்டு விடு என்றும் நான் சொல்லவில்லை வாசு.
உன்னை நம்பி வந்தவளையும், அவள் உணர்வுகளையும் புரிந்து கொள் என்று தான் கூறுகிறேன்.

உன் அம்மா எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு செயல்படும் நீ, எதற்காக உன் மனைவி சொல்வதை கொஞ்சம் யோசித்து கூட பார்ப்பதில்லை.

அன்பிற்கும்,ஏமாளித்தனத்திற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு வாசு. நீ அன்பு என்று நினைக்கும் ஏமாளிதனத்தை உன் தாய் சமயோசிதமாக உபயோகித்து, உன்னோடான திருமணத்துக்கு பின்பும் நான் தான் என் மகனுக்கு எல்லாம், நீ ஒன்றுமே இல்லை என்று மறைமுகமாக உனக்கு தெரியாமல் உன் மனைவிக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறார்கள் வாசு.கண்டிப்பாக இது மன உளைச்சலைத் தான் தரும் உனது மனைவிக்கு.

அதன் விளைவு தான் இன்று நீ கூடவே இருந்தும் தனிமையை உணர்ந்து தகப்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.

என்னைக் கேட்டால் நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான். உத்தமி அம்மா சொல்லும் எல்லா விஷயங்களையும் கண்மூடித்தனமாக நம்பாதே. அதில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார். தவறாக இருக்கும் பட்சத்தில் நல்லவிதமாகவே இப்படி செய்வது தவறு என்று உன் தாய்க்கு எடுத்துக்கூறலாமே வாசு. நாம் சொல்லுவதை தன் மகன் அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தாலே அவர்களுடைய நடவடிக்கைகள் கண்டிப்பாக மாறும் வாசு.

"தம்பதியர் இருவரல்ல ஒருவரே." உன்னில் பாதியான உன்னவளின் வார்த்தைகளையும் செவிமடுத்து உன் வாழ்க்கை யை மீட்டெடுக்க என் வாழ்த்துகள் சகோதரா.

இப்படிக்கு ,
உன் வாழ்வில் அக்கறையுள்ள அன்பு சகோதரி,
சுவிதா.
super suvitha madam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top