• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 10 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
அத்தியாயம் - பத்து
வர்மா, கருணா இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது தான்
“கருணா , இன்னிக்கு மாணிக்கவேல் ஷிப்மெண்ட் இருக்கு இல்லை” என்று வினவினான் .
“எஸ் சர். எல்லா ஏற்பாடும் எப்போதும் போல பண்ணிட்டேன்” என்று கூறிவிட்டு ஜி. பி. எஸ் டிராக் லிங்க் எடுத்துக் கொடுக்க, அதைப் போனில் பார்த்தவன் சரி என்று அணைக்கப் போனவன் , மீண்டும் ஜி. பி. எஸ் ஆன் செய்துப் பார்க்க, ஏதோ சந்தேகம் ஏற்பட்டது .
“கருணா, மாணிக்கவேல் இந்த ஷிப்மெண்ட் எங்கே சேர்க்கச் சொல்லி இருக்கார்?” என்று வினவ ,
“அவரோட குடோன்லே தான். “ என்றான்.
“எப்போக் கொடுத்த மெசேஜ்?’
“இது நேற்று காலையில் ஷிப்மெண்ட் போர்ட் வந்த பிறகு தான்” எனவும்,
மெசேஜ் எப்போ வந்துது? எனக் கேட்டான் வர்மா.
“நேற்று மாலை” என்று கூறும்போதே கருணாவிற்கு புரிந்து விட்டது.
“யார் போனில் இருந்து?”
“அவரோட நம்பரில் இருந்துதான்” என வியர்த்தபடிக் கூறினான் கருணா.
“ஓ. தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா? சரி டிரைவர் கிட்டே அலர்ட் பண்ணு. நம்ம பேர் எங்கியும் வெளியில் வரக் கூடாது. அட்லீஸ்ட் இரண்டு நாட்கள் மட்டுமாவது அவனை வாய் திறக்காமல் வைக்க என்ன செய்ய முடியும் என்று பார் “என உத்தரவிட்டான்.
அத்தோடு “லெட் வீ மூவ் ஃப்ரம் ஹியர். அந்த இந்த சிம், ஃபோன் இரண்டையும் இங்கேயே தூக்கிப் போட்டு விடு. “ என்று விட்டு வண்டியை எடுக்கக் கூறினான்.
கருணா வண்டி ஒட்டிய படி கண்டெய்னர் டிரைவரைப் பிடிக்க முயற்சிக்க, நாளை சுடப்போகும் மீனுக்குத் தூண்டில் வீசினான் வர்மா.
அபர்ணாவின் டீம் கேளம்பாக்கம் சென்றுப் பார்த்தப் போது , வர்மா, கருணா இருவரும் தப்பி இருக்க அவர்கள் உபயோகித்த ஃபோன் மற்றும் சிம் இரண்டும் கீழேக் கிடந்தது.
டையர் மார்க் வைத்து வேன் டைப் வண்டி வந்து சென்று இருப்பதைக் கண்டுப்பிடித்து இருந்தனர். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாதப் போதும், சற்றுத் தள்ளிச் சென்று விசாரித்ததில் சினிமா சூட்டிங் வரும்போது வரும் வேன் வந்து சென்றதாகக் கூறினர். அப்படியென்றால் அது கேரவன் என்று யூகித்து யாருடையது என்ற கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவிட்டு இருந்தாள்.
மாறன் அந்தக் கண்டெயினர் பின் சென்று இருக்க, அது மாணிக்கவேல் குடோன் நோக்கி மட்டுமே செல்வதைக் கண்டான். அதைப் பின் தொடரவா? என்று யோசித்தவன், எதற்கும் போவோம் என்று சென்றான்.
அவன் மாணிக்கவேல் குடோன் அருகே செல்லும் போது வண்டி ஆக்சிடென்ட் ஆவது போல இருக்கே, மாறன் வேகமாக அருகே சென்றான். அங்கே டிரைவர் மயங்கி விழுந்து இருக்க, உடனே ஆம்புலன்ஸ் அழைத்தான். கையோடு அபர்ணாவிற்கும் அழைத்துக் கூறினான்.
உடனே அவள் ஸ்பாட்டிற்கு வருவதாகக் கூற, மறுத்த மாறன் அவளை டிரைவரைப் பேச வைக்க ஹாஸ்பிடல் செல்லக் கூறிவிட்டு, கண்டெய்னரை ஒட்டிச் செல்ல டிரைவர் அனுப்பி வைக்கக் கூறினான்.
அதன்படி டிரைவர் ஏற்பாடு செய்து விட்டு நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்றாள்.
அவள் எண்ணியது போல டிரைவர் நடிக்கத் தான் செய்து இருந்தான். ஆனால் கருணா ஏற்கனவே டிரைவர் செல்லும் ஹாஸ்பிடலை அவன் மொபைல் ஜி. பி. எஸ் கொண்டு டிரேஸ் செய்து இருந்தவன், டிரைவர் ஹாஸ்பிடல் உள்ளே நுழையவும், அங்கிருந்த தலைமை டாக்டரை கரெக்ட் செய்து இரண்டு நாட்களா ஐ. சி. யு வில் வைக்குமாறு கூறிவிட்டான்.
அவரும் அதேப் போல் கூற, அபர்ணாவிற்கு நம்பிக்கை இல்லை என்றாலும், ஹாஸ்பிடல் ப்ரொசீஜர் மீற முடியாமல் வெளியில் கான்ஸ்டபிள் இரண்டு பேரை நிறுத்தி விட்டுச் சென்று விட்டாள்
மறுநாள் காலையில் அந்தக் கருணாகரன் அட்ரஸ் சென்று விசாரிக்க, அதில் அவர் வெளியூர் சென்று இருப்பதாகவும், இரு தினங்களில் வந்துவிடுவார் எனவும் அந்த ஹவுஸ் ஓனர் கூறினார்.
கருணாகரனோடு யார் யார் இருக்கிறார்கள் என்று வினவ, அவர் மட்டும் தான் தங்கி இருப்பதாகக் கூறினார்கள்.
அவரின் அங்க அடையாளங்கள் பற்றிக் கேட்க, அவரால் நார்மல் மனிதன் போல உயரம், கலர் என்று தான் கூற முடிந்ததே தவிர தனி அடையாளங்கள் எதுவும் கூற முடியவில்லை.
அதற்கு பின் அவர் எப்போது வந்தாலும் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கும்படி கூற, ஏன் என்ன விஷயம் என்று கேட்டனர்.
ஒன்றுமில்லை சிறு விசாரணை தான் என்று அவர்களிடம் கூறிவிட்டுச் சென்றாள்.
பின் ஆர். கே. எம் ஹாஸ்பிடல் அட்மினிடம் அனுமதி வாங்கி விட்டு அவரைப் பார்க்கச் சென்றாள்.
அவர் அறையில் சந்தித்தவள்,
“சர், அந்த ஹோமில் இருக்கும் பெண்ணிற்கு கொடுத்த மருந்துகள் விவரம் வேண்டும். அதில் ஒருவேளை எதும் ஃபால்ட் இருக்கலாம் என்று கவர்ன்மெண்ட் டாக்டர்ஸ் கூறுகிறார்கள்” என்றாள்.
“இல்லை மேடம். அதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுக்கு மருந்து சப்ளை செய்வது எல்லாமே டிரஸ்ட்டின் மெம்பர் ஒருவர் தான். அதுவும் எல்லாமே இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சர்டிபிகேட் கொடுத்த மருந்துங்கள் மட்டும் தான் கொடுக்கிறோம். “
“ஓகே. உங்களுக்குத் தெரியாமல் நடந்து இருக்கலாம் அல்லது இறந்து போன உங்க டீன் மட்டுமே இதற்கு காரணமாவும் இருக்கலாம் “
“இல்லை மேடம். நீங்க சொல்றதை என்னால் நம்ப முடியவில்லை. “
“சரி. அந்தப் பெண்ணிற்கு கொடுத்தப் பிரிஸ்கிரிப்ஷன் இங்கே தான் இருக்கு என்று ஹோமில் கூறினார்கள். அதை எடுத்துக் கொடுங்கள். “
“அது எப்படி இருக்கும் மேடம் ? பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அவங்க எப்படி மருந்து வாங்கிக்க முடியும்?”
இந்தக் கேள்வி உங்கள் டாக்டரிடம் கேட்கவேண்டியது. ஆனால் அவர் இல்லாதாதல் பதிலை ஹோம் நிர்வாகி கூறினார். அங்கே இருப்பது எல்லாமே ஸ்பெஷல் கேட்டகரி என்பதால் , ஒவ்வொருவரின் கேஸ் ஹிஸ்டரியும் தனியாகத் தானே வைத்து இருப்பதாகக் கூறி இருக்கிறார் உங்கள் டீன்”
“சரி. எங்கள் ஃபைல் ஆபிசரிடம் கேட்கிறேன் “ என்று அவரை அழைத்தார். வந்தவரிடம் அப்படி ஒரு ஃபைல் செக்ஷன் நம்மிடம் இருக்கிறதா என்று வினவ, அந்த ஆசிரமம் சம்பந்தப்பட்ட அனைத்துமே சிஸ்டமில் மெயின்டய்ன் செய்வதாகவும் அதன் ஆபரேஷன் அனைத்துமே டீன் ரேகை வைத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.
அதைக் கேட்டு அட்மினே சிறிது ஷாக் ஆகி விட்டார். தற்போது என்ன செய்வது என்பது போல பார்க்க, தங்கள் சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட் ஆள் ஒருவரை அழைத்து அந்தப் பர்டிகுலர் செட் ஆஃப் ஃபைல்ஸ் மட்டும் தனியாக எடுத்துக் கொடுக்கக் கூறினாள் அபர்ணா.
இரண்டு மணி நேரம் அவர் வேலை செய்துக் கொண்டிருக்க, அதற்குள் அவள் ஹாஸ்பிடல் சுற்றிப்பார்த்து விட்டு வந்தாள். அவளுக்குச் சில சந்தேகங்கள் பார்மசி பகுதியில் இருக்க, அதை அட்மினிடம் விசாரித்தாள்.
அவர் கூறிய விஷயங்கள் அவளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல் தான் இருந்தது.
அந்த ஹாக்கர் அவளிடம் அந்த ஃபைல்ஸ் எடுத்துக் கொடுக்க அந்தப் பெண்ணிற்கு கொடுத்த மருந்தைப் பற்றிக் கேட்டாள்.
அதைப் படித்துப் பார்த்த அட்மின் முகம் கலங்கிப் போய் இருந்தது.
“என்ன ஆச்சு சர்?” என்று அபர்ணா வினவ,
கண்களில் நீர் வர “அந்தப் பெண்ணிற்கு கொடுத்த மருந்து இதயப் பிரச்சினை இருப்பவர்களுக்குக் கொடுக்கும் மருந்து. அதிலும் போன உயிரைத் திருப்பிக் கொண்டு வரக் கொடுப்பது. இதை ஹாஸ்பிடலில் முழுக் கண்காணிப்பு இருக்கும் போது மட்டுமே கொடுக்க வேண்டும். அதிலும் இந்த மருந்து முறையான அனுமதி இல்லாமல் நம் சேல்ஸ் பீப்பிள் கொடுக்கும் மாதிரி மருந்து மட்டுமே. இதைக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் உயிரிழப்பு தான்” என்று கூற,
“ப்ளடி ..” என்று திட்டிய அபர்ணா, “இப்போ இந்த ஹாஸ்பிடல் சீஸ் செய்து உங்களை எல்லாம் அரெஸ்ட் பண்ணட்டுமா?” எனக் கேட்டாள்.
“அது யாராலும் முடியாது. அப்படி அரெஸ்ட் செய்வது என்றால் செத்துப் போன அந்த மாணிக்க வேலைத் தான் அரெஸ்ட் செய்யணும்” என்றார் அட்மின்.
“ஏன்?”
“இந்த மாதிரி டெஸ்டிங் மருந்துகளைத் தங்கள் காப்பகத்தில் உள்ளவர்கள் மீது பரிசோதிப்பத்தில் தனக்கு உடன்பாடு என்று எழுதிக் கையெழுத்து போட்டிருக்கிறார். அதிலும் ஒவ்வொருத்தர் பேரிலும் தனியாக எழுதி இருக்கிறார். அனேகமாக அங்கே உறுப்பினர் சேர்க்கை நடந்தவுடன் இங்கே இந்த அக்ரீமன்ட்டும் ரெடி ஆகி விடும் போல் இருக்கு”
“.ஓ. இதை எப்படி உங்கள் யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்கிறார்”
அந்த ஸ்டாஃப்பைப் பார்க்க, “இங்கே மருந்து சப்ளை செய்யும் கம்பெனி ஆட்கள் வரும்போது தான் இந்த மாதிரி அடீஷன் எல்லாம் நடக்கும். அப்போது டாக்டர் , மாணிக்கவேல் , அந்த மருந்து கம்பெனி ஆள் மூன்று பேர் மட்டுமே இருப்பார்கள். மாஸ்டரில் அவர்கள் கிரியேட் செய்தவுடன் , அந்த ஃபைலில் மருந்துகள் அட் செய்வது மட்டுமே என் வேலை. அதிலும் சில மருந்துகள் புரியாமல் இருக்கும்போது அதை டாக்டரே ஏற்றி விடுவார். “ என்றார்.
“நல்லா இருக்கு உங்கள் சேவை?” என்று கோபத்துடன் கூறியவள், அந்த மருந்து கம்பெனி பேர் சொல்லுங்க “ என்றாள்.
அதை அவர்கள் கூற, இருவரையும் முறைத்து விட்டு நேராக அஷோக் வர்மாவைச் சந்திக்கச் சென்றாள்.
அவரிடத்தில் நடந்ததைக் கூற , அவருக்கும் கடும் ஆத்திரம் வந்தது.
பின் “இப்போ என்ன செய்யலாம்ன்னு இருக்க அபர்ணா ? “ என வினவினார்.
“அந்த மெடிசின் ஃபேக்டரி ஓனர் கைது பண்ணனும். அந்த ஃபேக்டரி சீல் பண்ணனும்”
“அதுக்கு ஆதாரம் எங்கே இருக்கு?
“ஏன் சர் ? அந்தப் பெண்ணோட மெடிக்கல் ஃபைல் இருக்கே. “
“அந்த அட்மின் சொன்னது மாதிரி அதற்கு அரெஸ்ட் பண்ணனும் என்றால் அந்த மாணிக்கவேல் தான் அரெஸ்ட் ஆகணும். “
“ஏன் சர்? இந்த மாதிரி அனுமதி இல்லாத மாத்திரைகள் கொடுப்பது சட்டப்படிக் குற்றம் தானே”
“அவர்கள் மாத்திரை ஹாஸ்பிடலுக்கு சப்ளை பண்ணலையே? ரிசர்ச்லே இருக்கு . அதை டாக்டர் கொடுத்தது தப்புன்னு அவன் ஈசியா வெளியில் வந்துடுவான்”
“ஓ. இப்போ என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவளுக்கு
“ஏன் சர் அவன் பண்ணினத் தப்பிற்கு தானே அரெஸ்ட் பண்ண முடியாது. உன் உயிரைக் காப்பாத்திக்க அரெஸ்ட் ஆகிக்கோ என்றால்?”
“புரியலை அபர்ணா”
“எனக்குத் தெரிஞ்சு வரிசையா நடந்தக் கொலைகளின் முடிவு இந்த மருந்து கம்பெனி ஓனரிடம் தான் முடியும்ன்னு தோணுது. “
“எப்படிச் சொல்றே?
செத்துப் போன மூணு பேருக்கும் உள்ள லிங்க் , அந்த ஹோம் அண்ட் சமூக சேவை தான். இதுக்குக் காரணம் அந்த மருந்து கம்பெனியின் தவறான மருந்துகள் தான். இது உண்மையோ பொய்யோ இதைச் சொல்லி அவனை அரெஸ்ட் செய்தால் , இறந்து போவதை விட ஜெயிலுக்குப் போவது மேல் என்று என்ன மாட்டானா?” என்று கூறினாள்.
“ம். நீ சொல்றது சரியாத் தான் தோணுது. ஆனால் இதை ஒத்துக் கொள்வானா என்பது சந்தேகம் தான்” என்றவர், சற்று நேரம் யோசித்தார்.
அபர்ணாவின் தந்தை தற்போது அரசாங்க தலைமை வக்கீல் என்பதால் அவரிடமே இதைக் குறித்து ஆலோசனையும் கேட்டார். அவரும் ஒத்துக் கொள்வது கடினம் தான் என்று கூற , வேறு என்ன வழி என்று யோசித்தார்கள்.
அபர்ணா ஒரு வழிக் கண்டவளாக “நான் சில போலீஸ்சுடன் அந்த மருந்து கம்பெனி ஓனரை பின் தொடர்கிறேன். எப்படியும் அந்த சீரியல் கொலைகாரன் கையில் அவன் மாட்டுவான் . அப்போது இருவரையும் அரெஸ்ட் செய்து விடலாம். அந்த கில்லர் வாக்குமூலமே இவனின் மேல் கேஸ் போட வாய்ப்பாக இருக்கும் “
“நல்ல ஐடியா தான். ஆனால் ரிஸ்க் அதிகமகா இருக்கும்”
“ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி எனக்கு” என,
“அபி “ என முறைத்தார் அஷோக். இந்தக் கேஸ் விஷயமாக இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கவே கேலி, கிண்டல் சாத்தியமாகியது.
“விளையாட்டு இல்லை அபி இது .ரெண்டு பேரும் மோசமானவங்க தான். இதில் ரெண்டு பேரும் உன்னை அட்டாக் பண்ண வாய்ப்பு இருக்கு” என்றார்
“தெரியும் மாமா. ஆனால் இதுதான் போலீஸ் வேலைன்னுத் தெரிஞ்சு தானே சேர்ந்தோம். பிறகு என்ன பயம்? அத்தோடு நானும் கவனமாகவே இருக்கிறேன்” என்றாள் அபி.
அபர்ணாவின் திட்டப்படி அந்த மருந்து கம்பெனி ஓனரைப் பின் தொடர, இடையில் அந்தக் கண்டெய்னர் டிரைவர் பற்றியும் விசாரித்துக் கொண்டாள். அவன் கண் முழிக்கவில்லை என்றே கூறினார்கள்.
அதற்குள் மாறன் அந்த கண்டெய்னரில் உள்ள பொருட்கள் பற்றித் தனியாக விசாரிக்க, உள்ளே கற்கண்டு, கற்பூரம் என்ற பெயரில் ஏகப்பட்ட பொருட்கள் இருந்தது. அதில் அவனுக்குச் சந்தேகம் ஏற்பட , தன் பெரியப்பாவிடம் ரகசியாமகப் பேசி , கஸ்டம்ஸ் அதிகாரிகளை வரவழைத்தான்.
அவர்கள் பொருட்களை செக் செய்ய, உள்ளே எக்கச்சக்க மருந்துகள் தயாரிப்பு நிறுவனம், தேதி எதுவும் போடாமல் இருந்தது. அதைக் கொண்டு மாணிக்கவேல் எக்ஸ்போர்ட் ஏஜென்ஸி சீல் சோதனை செய்ய, அங்கு எந்த விதமான சட்ட விரோதாப் பொருட்களும் கிடைக்கப் பெறவில்லை.
இப்போது என்ன செய்ய என்பதுப் போல யோசிக்க, அபர்ணாவின் ஆலோசனைப் படி அந்த பப்பிலியோ கம்பெனியைப் பற்றி விசாரித்தனர்.
அதன் உரிமையாளர்கள் யார் என்றுப் பார்க்க ரிஷி வர்மன், கருணாகரன் என்று இருக்கவும் அஷோக், மாறன் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாறன் அதை அபர்ணாவிடம் கூறப் போகத் தடுத்தார் அஷோக் வர்மா.
ஏன் என்பதுப் போல பார்க்கக்
“இப்போது அவள் கவனம் முழுதும் அந்த மருந்தக் கம்பெனி ஓனரிடம் மட்டும் இருக்கட்டும். அவள் சந்தேகப்படுவது சரி என்றால் அந்த சீரியல் கில்லர் ரிஷி, கரணாக இருக்கலாம்” என்று கூற அதில் இன்னும் அதிர்ச்சி அடைந்தான் மாறன்.
இவர்கள் எல்லோரும் உரிய நேரத்திற்காக காத்து இருக்க, வர்மா, கருணா இருவரும் அந்த நேரத்தை உருவாக்கினார்கள்.
அன்று இரவு அந்த ஓனரை கரணை ரிசர்வ் ஃபாரஸ்ட் அருகே வரச் சொல்லியிருக்க, அவரைப் பின் தொடர்ந்த அபர்ணா தன் டீம் அனைவருக்கும் லைவ் லொகேஷன் ஷேர் செய்து அனைவரையும் அங்கே வர உத்தரவிட்டாள்.
ரிஷி, கரண் என்று தெரிந்தப் பின்பு மாறன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
ஆளுக்கு ஒரு பக்கம் வந்து கரணை காட்டுப்பகுதியில் சேர, காரில் இருந்து இறங்கிய மருந்து கம்பெனி ஓனர் ,
“வர்மா சர் ? நீங்களா என்னை வரச் சொன்னீங்க?” என்று கேட்டார்.
“ஆம். “
“நீங்க என்னிடம் நேரடியாகவேப் பேசியிருக்கலாமே. எதற்கு டீல் பேசுவது போல ஆள் அனுப்பி இருந்தீர்கள். “
“நான் கார்னர் செய்த அத்தனை பேரையும் அவர்களின் வீக்னஸ் வைத்தே மடக்கினேன். உன்னிடம் மட்டும் தான் டீல் பேசினேன். ஏன் என்றால் நீ டீல் என்ற வாரத்தைக்கு மட்டுமே அடங்குபவன் என்பது தெரியும்”
“இதில் என்ன தவறு இருக்கிறது? உனக்கு ஒரு பொருள் விற்க வேண்டும் என்றால் அதில் ஆதாயம் இல்லாமலா என்னிடம் டீல் பேசுகிறாய். ?”
“எதற்கு வேண்டும் என்றாலும் டீல் பேசுவாயா? ஒரு உயிரின் மதிப்புத் தெரியுமா உனக்கு? எத்தனைப் பேரின் உயிரை இத்தனை வருடத்தில் எடுத்து இருக்கிறாய்? “
“ஹ . எனக்கு அது தேவை இல்லை. அவன் மருந்து விற்க வேண்டும் என்றான். எனக்குத் தெரிந்த டாக்டரிடம் பேசினேன். அவர் ஒத்துக் கொண்டார். அவரிடமும் டீல், வெளிநாட்டு மறுத்து கம்பெனியிடமும் டீல்/ இது தான் என் பாலிசி”
“ஓ. அவை எல்லாம் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்று தெரியாதா?”
“தெரியுமே. அதனால் தான் எனக்கு அதிக பர்சென்டேஜ் டீல். விற்காத பொருளை வித்துக் கொடுத்தால் அவனுக்கு நஷ்டத்திலும் லாபம். “
நீ அது மட்டுமே செய்தாய்? எத்தனைக் குழந்தைகளை பரிசோதனை எலியாக்கி இருக்கிறாய் என்று தெரியுமா?” என வினவ
“அதில் தான் நான் உச்சபட்ச லாபம் அடைந்தேன்” என்றான் அந்த ஓனர்.
“அந்த உச்ச பட்சத்திற்கு தான் இப்போது மேலோகம் சென்று உச்சயத்தை அடையப் போகிறாய் “ என வர்மா கூற,
“இதற்கு எல்லாம் நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா? அவர்கள் மூவரும் இறந்த போதே இது எனக்கான குறி என்று உணர்ந்து கொண்டேன். அப்போதே என் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டேன்” என்று கூறி தன் ஃபோன் எடுத்துப் பார்க்க , அதில் சிக்னல் இல்லாமல் இருந்தது.
அதைக் கண்டு அந்த ஓனர் முகம் மாற, கருணா
“என்ன சர்? ஃபோன் வேலை செய்யலையா ? இந்தக் காட்டின் ஆரம்பத்திலேயே ஜாமர் வைத்து விட்டுத் தான் வந்து இருக்கிறோம்” என்றான்.
“சரி. நீ புத்திசாலி தான் ஒத்துக் கொள்கிறேன். சொல் உன் டீல் என்ன? “
“பாருடா , இப்பவும் டீல் பேசற? உன் உயிர் தான் எங்களுக்கு ஒரே டீல்” என்றபடி துப்பாக்கியை எடுக்க, அப்போது ஹான்ஸ்ஆப் என்ற குரல் கேட்டது.
அபர்ணா வெளியே வர தாங்கள் மூவரும் ரவுண்ட்அப் செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்தான் ரிஷி என்கிற ரிஷிவர்மன்.
அபர்ணா அவன் ரிஷி வர்மன் என்பதைக் கண்டு சற்று வேதனையுடனே அருகில் வர , அவளின் மனம் தன் புறம் சிறிது இளகியிருப்பதை உணர்ந்தவனாக ,
“நீயும் என்னைக் கண்டுக் கொண்டாயா இளமாறா “ என சட்டென்று அபர்ணா திரும்பிப் பார்த்தாள்.
அதில் அவளின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்து, அவளை அருகில் இழுத்து நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்.
பின் சுற்றியுள்ள எல்லோரையும் பார்த்து “எல்லோரும் துப்பாக்கியைக் கீழே போடுங்க” என, எல்லோரும் அதேப் போல செய்தனர். எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டாலும் அபர்ணா அவனைக் கண்டு பயப்படாமல் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தாள்.
ரிஷி அபர்ணாவைப் பிடித்தப் படி அவளின் துப்பாக்கியை வைத்தே அந்த மருந்து கம்பெனி ஓனரைக் குறிப் பார்க்க, அந்த நிமிடத்தில் ரிஷிவர்மனின் காலில் ஓங்கி மிதித்தால் அபர்ணா.
அதில் அவன் வலி தாங்காமல் டிரிக்கரை அழுத்தி விட, ஓனர் நெற்றிக்கு வைத்தக் குறி தவறி அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.
அதைப் பார்த்த ரிஷி
“அவனின் கேடு கேட்ட மூளைக்குக் கூறி வைத்தேன். ஆனால் இரக்கமே இல்லாத நெஞ்சில் குண்டுப் பாய்ந்து விட்டது. இறைவனே எழுதியத் தீர்ப்பு” என்று கூறினான்.
அவன் கால் மடங்கிய நேரம் அபர்ணா துப்பாக்கியைப் பறித்து இருக்க, மீண்டும் ஹாண்ட்ஸ்ஆப் என்றாள்.
“கவலைப்படாதீங்க மேடம். நீங்க சொல்லலை என்றாலும் நானே சரணடைந்து இருப்பேன்” என்று கூற, அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல், இன்ஸ்பெக்டரை வைத்து இருவரையும் கைது செய்யக் கூறினாள்.
அப்போது இளமாறனும் அங்கே வர அவனைக் கண்டதும் புன்னகைத்தான்.

-தொடரும் -
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top